இலக்கிய வலதுசாரிகள்...1 ஒரு முறை திருவாரூர் வருகை தந்த கோமல் அவர்களிடம் பத்து நிமிடம் பேசுவதற்கான வாய்ப்பைமைந்தது அரங்கனின் செயல். அப்போது இந்த அரங்கனடிமை ஆங்கிலத்தில் ஒரு சில கவிதைகளை தப்பும் தவறுமாக எழுதியிருந்ததை அவரிடம் காட்ட நேர்ந்தது. சுற்றி நிறைய கூட்டம் வேறு சூழ்ந்து இருந்தது. எல்லோரும் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனது ஒரு ஆங்கில ஆக்கத்தை மேலோட்டமாகப் படித்தவர் [ இவனின் கையெழுத்தைக்கூட சுலபமாக படித்துவிட்டது வியப்புதான்] உடனேயே இப்படிச் சொன்னார். தம்பி உங்கள் வார்த்தைகள் ஆழம் நிறைந்தவை ஆனால் அதை அழகாக அடுக்க ஆங்கில இலக்கணமும் இலக்கியமும் இன்னமும் கொஞ்சம் அதிகமாகத் தெரியவேண்டும். நீங்கள் நிறைய படியுங்கள். கா.சி.வேங்கடரமணி என்பவர் உங்கள் தந்தை தேஜஸ்வி போல ஒரு அய்யர் தான். அவர் தேசபக்தன் கந்தன் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அதைப் படித்துவிட்டு சுபமங்களாவிற்கு ஒரு கட்டுரை கொடுங்கள். இன்னொன்றும் சொல்கிறேன்... அவர் இந்திய ஆங்கிலத்தில் நாவல் எழுதிய இரண்டாவது இந்தியர் என்றார். முதலாவது யார் எனத் தெரியுமா எனக்கேட்டு சுற்றி இருந்தவர்களைப் பார்த்தார். அடியார்க்கு நல்லான் ...
Posts
Not the moon of language, nor the clouds of poems.. But all the beauty of literature sky is empty now. A great void of nothingness of human reality thinking is flowing like a hurricane in this era of Artificial Intelligence ... Now, one could throw a comet into the literary sky whose tail will be burning eternally... Now one could wake up a sleeping sun there by lighting a matchstick.... Now one could make a poetry moon circling behind a shining moon in the same orbit... Now, Lo!!! One could rearrange the order of literary stars jumping their designated places in the literary history sky. Alas, now anyone could bring the best surrealistic writing without reading anything... Today, one could put his postmodernistic photo image with the image of linear Tagore and non-linear Bharathi . This day, a cat can fly in the realistic sky, and the tiger can sleep in the naturalistic hut-oven One day, Artificial Intelligence will be believed as a persuasive one, and real intelligence will...
ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 5 கொதிக்கும் குழந்தை விழுமியங்கள்… இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்னான பள்ளிக் காலையில் குழந்தை உறக்கத்தை உள்ளங்கைக்குள் பிடித்துக்கொள்கிறாள்.. உறங்கும் உள்ளங்கை உறக்கம் குளிக்கிறது.. சீருடை அணிகிறது… உணவு உட்கொள்கிறது…. ஆனால் தன் காலையின் இன்னமும் திறக்காத விழிக்கதவுகளை உள்ளங்கைக்குள் பூட்டி வைத்துக்கொள்கிறது… மடங்கிய விரலுக்குள்ளான உறக்கமிழந்த விழிகள் பார்வை முஷ்ட்டியை உயர்த்துகையில் மண்டியிடுகின்றன மழலையர் பள்ளிகள்… மழலையர் பள்ளிகள் குழந்தை உறக்கத்தின் துரோக வெளிகள்.. அங்கிருக்கும் வகுப்பறைச் சப்தங்கள் குழந்தை கும்பகர்ணனை எழுப்பும் ஆனை மிதித்து ஆடும் அலப்பறைகள்... தினமும் பள்ளியின் வகுப்பறையில் தொலைந்து போன மீதி உறக்கத்தைத் தேடுகிறாள் குழந்தை.. சற்றே கண் அயர்ந்த வகுப்பறை கரும்பலகையில் அது எழுத்துக்களாயும் வடிவங்களாயும் தூங்கி தூங்கி அவள் மீதே வழிகிறது சீலீரென தெளிக்கப்படும் உள்ளங்கை நீரென... குழந்தையின் மீந்த உறக்கம் வகுப்பு வானில் மேகங்களாய் மிதக்கத் தொடங்குகிறது.. அதனுள் ஊர்ந்து வரும...
உலகக் கவிகளின் உயிர்தேன் உன் உள்ளங்கையில். உலக இலக்கியம் என்பதை எந்த அளவுகோல் மூலம் உணர்வது ?தமிழ் இலக்கியம் இந்திய இலக்கியம் உலக இலக்கியம் என்பனவற்றின் வேற்றுமை நிறங்கள் தான் என்ன?. தமிழிலக்கியம் இந்திய இலக்கியத் தரவரிசையில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது? உலக இலக்கியத்தர வரிசையில் இந்திய இலக்கியம் ஏன் இடமின்றித் தவிக்கிறது? உலகத்தின் ஆயிரமாயிர மொழிகளில் தனது தாய்மொழியை மட்டும் முன் நிறுத்தி ஏனைய மொழிகளை உதைத்து வெளித்தள்ளும் நிகழ் தமிய இலக்கியக் களத்தில் எப்படி களமாடுதல் சாத்தியம். ஆதி தமிழின் திருமூலரும் ஒளவையும் வள்ளுவனும் பாரதியும் பதியவைத்த இலக்கிய பாரிஜாத மரம் தனது பூக்களை மேலைத் தேய இலக்கியக் களத்திற்கல்லவா சாய்ந்து கொட்டிக்கொண்டிருக்கிறது.. இன்றைய இலக்கியத்திற்கான நோபல் பெற்ற லோஸ்லா கார்ஸ்ன ஹோர்ஹாய் 1985 ல் தான் எழுதத்துவங்கியிருக்கிறார். உலகத்தின் அழிவுப் பாதையில் தான் நடந்து கொண்டிருப்பதாக அறைகூவல் விடுக்கிறார். நமது தமிழ் இலக்கிய சொற் சிக்கனத்தை உடைத்துச் சுக்கு நூறாக்கி ஆயிரமாயிர வார்த்தைகள் கோர்த்த ஒற்றை வாக்கியத்தை உரத்துச் சொல்லிக்கொண்ட...
ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள் பாகம் 5 2. கையசைக்கும் பள்ளி வாகனம் பள்ளி வாகனம் தன் முதல் குழந்தையை ஏற்றிக்கொள்கையில் அதுவரை தூங்கிய பாயை சுருட்டவியலாமல் உறுமத்தொடங்கும். இப்போதே புறப்பட்டால் தான் ஒன்பது மணிக்குள் அத்தனை மழலைப் பூக்களையும் அள்ளிவந்து வகுப்பறையில் கொட்டவியலுமென்பதால் ஒரு முறை உடலசைத்து நெட்டி முறிக்கும்... பள்ளி வாகனம் தன் பொருளீட்டும் சக்தியை விட பிள்ளைகளைச் சுமப்பதில் பெருமை கொள்வதால் கனம் கூடி அவ்வப்போது நடை தடுமாறி வேகமிழந்து நெடுஞ்சாலைகளில் கூட நடந்தே செல்லும்.. தினமும் பிள்ளைகளின் நகரும் வீடாகி விடுகிறது பள்ளி வாகனம்.. அதனால் தான் வாகனம் கடந்தபின்னும் பிள்ளை வாசம் வழித்தடமெங்கும் மணம் வீசுகிறது... மாலையில் ஓய்ந்து களைத்த மழலைகளுடன் வீடடைய புறப்படுகையில் கசங்கிய சீருடையும் தளர்ந்த கழுத்துப்பட்டையுமாய் அசைந்தாடி வரும் வாகனம் குழந்தைமையை தேக்கிக்கொண்டு குழந்தைகளை மட்டும் இறக்கிவிட்டு கையசைக்கும்... அன்றாடம் குழந்தைக் கால்கள் பட்டு புனிதமாய் பளபளக்கும் வாகனத் தரைத்தளத்தில் பாய் விரித்துப் படுப்பதில்லை அதன் ஓட்டுனர்....
ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்…பாகம் 5 1. பள்ளிக் கூரை தொடும் பெதும்பையின் ஊதும்பைகள் அந்தப் பள்ளி வளாகத்தின் கதவில் நெகிழித் துணியின் வண்ண வடிவமைப்பில் சந்தனப் பேழையொன்று குழந்தைகளை உள்வரச் சொல்லி பவ்யமாய் நீள்கிறது அன்புத்தாயின் கரமுடன்.. பெற்றோரும் குழந்தைகளும் அலுவலக அறையில் தொங்கும் வண்ண ஊதும்பைகளில் ஈர்ப்புடன் சட் டென தாவி ஏறி தங்களை நிரப்பிக்கொள்கிறார்கள்.. அவர்களையும் மீறி அவர்களுடனும் குழந்தையுடனும் மேலெழுகிறது வண்ண வண்ண நம்பிக்கை வளிக்கூடுகள்.. தாயின் கரமென வாஞ்சையுடன் நீளும் பள்ளியின் கை நகங்களெங்கும் அப்பியிருக்கும் சாயமிழந்து மூடிக்கிடக்கும் மூலதன கட்டணப் பூச்சுகளைச் சுட்டிக் காட்டுகிறாள் முன் மழலையர் வகுப்பில் சேரப்போகும் மழலைப் பெதும்பை. பற்கள் உதிர்ந்த வயோதிக பொக்கைவாய்ச் சிரிப்புடன் கோட்டோவியக் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுக்கள் வரையப்பெற்ற சுவரில் காந்தி அவருக்கான அத்தனை உயரத்தில் இன்னமும் கருப்பு வெள்ளையில் வெகுளியாகத்தான் தொங்கிக்கொண்டிருக்கிறார். ...
ஸ்ரீஸ்துதி...4 இருப்பிடவியல் எனும் பதம் பல உள்ளார்ந்த அர்த்த மாயைகளைக் கொண்டது. வாழ்விற்கான இருப்பிடமும் அதன் முகவரியும் அன்றாட அவசியத் தேவையாகிப் போனது மறுக்கவியலாதது. விடியலில் இருந்து நீளும் கால அலைச்சலில் சிக்கி சிதறத்தொடங்கிய வாழ்வியல் கூறுகள் பொறுக்கப்பட்டு குவித்தோ மறுசீரமைத்தோ கட்டுகளாக்கியோ அடுக்கி வைத்தாக வேண்டிய இடம் இருப்பிடம். இருப்பிடவியல் வளமையின் பிரதிபலிப்பெனவும் காணக் கிடைப்பது மானுட ஏற்றத்தாழ்வின் காணல் நீர்க் காட்சிகள்..எனில் இருப்பிட அவசியத்தின் தீவிரத் தன்மை அதன் வெப்பமாணியின் முட்களை உயர்த்திக்கொண்டே இருப்பதைக் காணலாம். இருப்பிடத்திற்கான மானுடத் தேடலை பயன்படுத்தி மண் துண்டாடப்படுவது சகிப்பின் கோடுகளை குறுக்கும் நெடுக்குமாக மாற்றியமைத்து கேலிக்குரியதாக்கிவிட்டது. இருப்பிடத் தேடலில் வாழ்வைத் தொலைபவர்கள் சில துயரத்தின் வண்ணக் கொடிகள் துண்டாடப்பட்ட மண்ணில் பறப்பதைக் கண்டிப்பாக கண்டிருப்பார்கள். மண் என்பது மானுட வாழ்வியலின் வளமைக்கான மூலப்பொருள். இருப்பிடம் குடக்கூலி வடிவில் இருந்தால் ஆழ்மனதில் இனம்புரியா குடைச்சல் ஒன்று கூராயுதத்தால் நொட...