எனது இந்தியாவில்

என் இந்துக் கடவுள்களின் கண்ணியம்

காப்பாற்றப்படவேண்டுமென

கனவு காண்கிறேன்..
என் வீட்டு முற்றத்திலோ
திண்ணையிலோ இல்லை
புழற்கடையிலோ
மூன்று வேளை சந்தியா வந்தனம்
செய்ய வேண்டுமென்பதும்
என் கனவு..
அடர் போக்குவரத்து நெரிசலில்
நான் மாத்யானிகம் செய்ய வேண்டும்...
விமான ஓடுதளத்தில் விமானம் இறங்குகையில்
சாயம் சந்தியா வந்தனம் செய்கையில்
விமானம் வானிலேயே தாமதித்து
வட்டமிட வேண்டும்..
அதை
இந்த சூடோ செக்கூல போலிக் கண்கள்
செய்வதறியாது பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும்..
இந்தக் கனவை,
என் விதியை என் உள்ளமும் என் பிறப்பும்
என் சனாதனமும்
நித்தமும் வேண்டுகின்றன..
என் பாரத அன்னை நாடே
நீ கடந்துவந்த அவமானங்களோடும்
உன்னைத் துண்டாடிய
தீவிர அமைதி மார்கத்தோடும்
இன்னமும் உன் தேசீய கீதத்தை
தாய் வணக்கத்தை
உதாசீனம் செய்கையில்
அனலென கொதிக்கும் மனதோடும்..
இந்த மண்ணின் ஒரு துளியாகிய நான்..
என் கனவை
உன்னிடம் மனம் திறந்து கொட்ட வேண்டும்..
உன் மடியில்
உன் மேல் ஒடும் நதிகளில்
ஒரு குமிழென பிறந்தேன்.
சடுதி நான் உடைவதற்குள்
என் கனவை
உன்னிடம் சொல்லிவிடுகிறேன்..
உன் திருவிழாக்களில்
எனக்கும் வாழ்த்துக்கள் வரவேண்டும்..
காவிரியிலிருந்து புறப்பட்ட காற்று
என் அக்ரஹாரங்களை சுற்றி
திருப்பி விடப் படாமல்
வீசப்படவேண்டும்..
என் கோவில் இடங்களை
இந்துமத நம்பிக்கையற்றவர்கள்
ஆள்வதோ ஆக்கிரமிப்பதோ கூடாது..
எங்கள் ஆலயங்களின்
வளமையும் ஆபரணங்களும் பிரதிமைகளும்
உற்சவங்களும் உற்சவ மூர்த்தங்களும் உருக்கப்பட்டுவிடக்கூடாது..
அற நிலையத் துறை
எல்லா மத வழிபாட்டுத் தளங்களையும்
ஆளுகைக்கு உட்படுத்த வேண்டுமென்பதும்
என் கனவு தான்...
என் அன்னை நாடே
உன்னுடன் பேச
இதிகாசங்களையும்
இன்னபிற தொன்மங்களையும்
நீ கடந்து வந்த இருண்ட காலங்களையும்
உன்னைக் கொள்ளையடித்துச் சென்ற
எதிரிகள் விட்டுச் சென்ற பீரங்கிகளையும்
நம் மக்களைப் பிளவு படுத்திய
சாதி வேற்றுமை நரித்தனத்தின்
மிச்சங்களையும்
எடுத்து வந்திருக்கிறேன்..
ஆனால்
என் அன்னை நாடே
நீ உன்னுடைய
பரந்த நிலப்பரப்பைக் காட்டிலும்
பன்மடங்கு
அகண்ட மனம் கொண்டவள்..
உன்னுடைய
நீண்ட வரலாற்றின்
ஆயுளைக் காட்டிலும்
நித்யமானவள்..
ஒரு நாள்
உன் செவிப்பறையில்
என் கனவுகளின் சப்த ஸ்வரங்கள்
மோதித் திறந்து உட் செல்லும்..
அந்த
நனவின் இசை நடனத்திற்கு
ஆடல் வல்லான்
தன் தோடுடைய செவியிலிருந்து
என் கனவை
தன் வலது பாதமுயர்த்தி
மீண்டணிய வேண்டும்..
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog