Posts

Showing posts from 2018
Image
புராணங்களைச் சுற்றிவளைத்து மேற்கோள் காட்டி நண்பர்களை திணறவைக்காமல் நேரிடையாகவே வணக்கம் சொல்லிவிடுகிறேன்...அனைத்து நண்பர்களுக்கும் திருவாதிரை திருநாள் வாழ்த்துகள்... மாடத்துளான் அலன் மண்டபத்தான் அலன் கூடத்துளான் அலன் கோயில் உள்ளான் அலன் வேடத்துளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில் மூடத்துளே நின்று முத்தி தந்தானே / திருமந்திரம் இறைவன் கோவிலிலோ மண்டபத்திலோ போட்டிருக்கும் வேடத்திலோ இல்லை. மாறாக புறவெளியின் பால் கூறுபோட்டு கல் நட்டு தன் பெயர் பதிக்கும் ..இன்னபிற அகவெளியின் மாயைகளுக்குள் அஸ்திவாரம் இடும்.. வேட்கைகளை விட்டவர்களின் உள்ளத்திலே சிவமயமாகிய அரங்கன் காட்சிதருவான் எங்கிறார் திருமூலர்... தரிசனம் என்பது அகவயமானது..திசைகளோ நிறங்களோ உருவமோ அற்றது..தாமாக நிகழ்வது..வலிந்து நிகழ்த்திக்காட்டப்படுவதல்ல.. திருமந்திரத்தை ஊன்றிக் கற்றவர்கட்கு உருவ வழிபாடு தேவையற்றதென்பது புரியும்..உருவமற்ற இறைவன் சிவமாகவும் அரங்கனாகவும் மனித பக்தி மனம் வேண்டியபடியான வேண்டிய திருக்கோலமாகவும் தென்படலாம்..அவ்வாறான பார்வையில் படும் உருவமற்ற அருவ தரிசனம் ஆனந்த வானில் நிகழும் மத்தாப்பு விளையாட்டை நமக்குக் ...

ragavapriyan rocks..

Image
Ragavapriyan rocking the world literary scene like Gaja..My sincere thanks to Respected Madam Editor...with Namaskars..to all my friends well wishers literary lovers and my followers and readers...the world over...anban..ragavapriyan

திருவெள்ளறை திருக்கோவில்

Image
தென்திசை தவிர மூன்று திசைகளில் கோபுரம் என்றுதான் எழுந்திடும் என்பதோர் கேள்வியுண்டு யாரிடம் திருப்பணியை எம்பெருமான் ஒப்படைத்து பாரினை வியக்கவைப்பார்.. புதிர் நிறை திருவரங்கம்.... [ராகவபிரியன்] என்று எழுதவைத்த எம்பெருமான் திருவரங்கன் கடந்த ஒரு வார காலமாக திருவெள்ளறை வரவேண்டும்..வந்தென்னைச் சேவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டபடியே இருக்கும் ஒரு தவிப்பை உணர்ந்த வண்ணமிருந்தேன்..இன்று எந்தத் திட்டமிடலும் இன்றி எனது சகதர்மினியுடன் திருவெள்ளறை சென்று புண்டீரீகாஷப் பெருமாளையும் தாயாரையும் தரிசிக்கும் பேறு பெற்றேன்... ஆதி திருவெள்ளறை...அடுத்து திருபைஞ்சீலி..ஜோதி ஆனைக்கா..கிளி காட்டிய திருவரங்கம்...என்ற ஒரு தொன்மையான வட்டார வழக்கு நிலவுகிறது... சிபிச்சோழன் காலத்தில் வெண்மையான மலைமீது கட்டப்பட்ட பேரதிசயக் கோவில் இது வென்று வரலாறு கூறுகிறது...மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் எட்டாம் நூற்றாண்டின் சோழர்களால் விரிவுபடுத்தப்பட்ட கோவில்... தற்போது அதன் பாதியில் விடுபட்டு சிதைந்திருக்கும் ராஜகோபுரத்திற்கான திருப்பணிகளை கோவையைச் சேர்ந்த அன்பர் ஒருவர் தனியொருவராக முன்னெடுத்துச் செய்துகொண்டிருக்...
Image
நிவாரணம் ஏந்தி புறப்படுகிறதென் ஊர்தி.. யானை கட்டிப் போரடித்த எம் தஞ்சைவயல் வெளிகளுக்குள் நுழைகிறேன்.. கை நிறைய சிதறிக் கிடக்கும் தென்னங்குரும்பைகளை நீட்டும் பிஞ்சுக்கைகளுக்கான நிவாரணமெதுவென அறியாது அதிர்கிறேன்.. சாய்ந்து கிடக்கும் மின் கம்பிகளில் லாகவகமாக நடனமிட்டு சரிந்த குடிசையின் மண்சுவர் மாடத்திலிருந்து கல்லாங்காய் ஆட்டத்திற்கான கூழாங்கற்களைச் சேகரிக்கிறாள்.. சின்னத் தமிழச்சி.. அவைகளைக்குட்டையில் குளிப்பாட்டி வாரியணைத்து ஈரப்பாவாடைக்குள் பத்திரப்படுத்தி பளீரெனச் சிரிக்கிறாள்.. கூழாங்கற்களை கூட்டாஞ்சோறின் ஆவியில் அவித்து காயவைக்கக்கோரும் அவளின் கைகளில் அந்தக் கூழாங்கற்களில் கூட்டஞ்சோற்றின் வாசம் கொணரும் உடனடி நிவாரணமறியேன்.. வரப்புச் சண்டையில் பெரியப்பா மாமரத்தில் வீசியெறிந்த நடைவண்டியுடனும் பறவைக்கூடுகளுடனும் தலையாட்டிப் பேசிக்கொண்டிருந்தவள்.. அம்மாமரம் சாய்ந்து குட்டைக்குள் மிதக்கவிட்ட அவளின் மிச்ச நடைகளை அந்த மிதிவண்டியை கூடடைய வந்த பறவைகளின் மீந்த சிறகுகளை அணிற்கடித்தப் பழங்களை.. எப்படி நிவாரணமாய் மீட்டுத்தருவதென தவித்துக்கொண்டிருக்கிறேன்.. ஊர்தியை விட்டிறங்கியவன்...

கிரக்கி யானை

Image
புறக்கணிப்பின் வலி உணர்ந்தவர்கள் அதன் பாதிப்பால் தங்களையே புறக்கணிப்பிற்குள்ளாக்கிக் கொள்பவர்கள் இலக்கியப் பொறாமையின் பிரதிபலிப்புகளெனின் அதை நிறுவுதல் கடினமல்ல..ஒரு பதிவின் தீவிரத்தையும் தாக்கத்தையும் ஒரு ஆகச் சிறந்த படைப்பின் வீச்சுடனும் விஸ்தீரனத்துடனும் ஒப்பிடுதல் ஒவ்வாமையின் அரிப்பிற்கு உள்ளாக்கி மனச் சொரிதலை உருவாக்கும் வல்லமையுள்ளது..பதிவு என்பது நோக்கங்கள் அற்றது..அதற்கான விருப்பங்களும் கருத்துக்களும் விளம்பர உத்தியின் கூறுகளைச் சுமந்து வலுவிழந்துவிடும்..ஒரு தனித்துவம ான படைப்பின் பிறப்பு இலக்கிய விடியலின் வரவை ஒரு சேவலின் அறைகூவலிலோ கிழக்கின் சிவப்பு நிற ஒளி நுழைவின் அதிர்வுகளிலோ ஒரு மனிதப் பிறப்பின் அத்தனை ஆவல்களின் பிம்பமென்றோ எண்ணங்களின் எல்லைகளையும் தாண்டி மாறுதல்களை உருவாக்க வல்லது..அதுபோன்றதொரு படைப்பை முக நூலில் வெறும் பெயரைப் பார்த்துவிட்டு விருப்பக்குறி கூட இடாமல் கடந்து போகும் போது எனக்கு தென் ஆப்பிரிக்கக் கவிஞர் ..அந்த நாட்டின் தேசிய கீதத்தைத் தந்த 58 வயது வரையே வாழ்ந்து தெனாப்பிரிக்க தொன்ம இலக்கியத்தை ஆங்கிலக் கலப்பற்ற ஆதிமொழியில் எழுதி உரை நடையின் வர்ணனைகளை விலக...

சிதறிக்கிடக்கும் தோல்விகள்..ராகவபிரியன்

Image
உன் மாநாட்டிற்கான ஆயத்த வேலைகளின் கடல் நடுவே உருக் கொள்கிறது ஒரு புயல்.. அதன் மைய மாயக் கண்களுக்குள் வெற்றியைத் தேடுகிறாய்..இப்போதே.. உன் வியர்வைகளை உயர்ந்த வண்ணத் தட்டிகளாய் வழியெங்கும் அமைத்த நீ துவக்குகளற்ற நாவாயாய் அலைகளால் தடுமாறிக்கொண்டிருக்கிறாய்.. புயல் ஒரு குடையென உன் மீது கவிழத் தொடங்குகிறது.. மாநாட்டுப் பந்தலில் நீ நிற்கக்கூட அனுமதிக்கப்படபோவதில்லை யெனினும் அதன் முகூர்த்தப் பந்தல்காலென உன்னைப் புதைத்துக் கொண்டிருக்கிறாய்.. புயலின் மெல்லிய ஈரக் காற்று உன் மீதான வண்ணங்களை அழிக்கத் தொடங்குகிறது.. உனக்குத் தரப்பட்ட தேனீர்க் காகிதக் கோப்பையை வியர்வையால் கழுவி வைத்திருக்கிறாய்.. அதன் மீது நீ எழுதப் போகும் வரலாற்றின் வரிகள் மாநாட்டின் முழக்கங்களாய் மாறுமெனும் உன் கனவில் தீ மூட்டப்பட்டிருக்கிறது.. காய்த்த உன் கைகளில் தட்டியேந்தி வறுமையின் கொடியேந்தி ஏமாற்றுக் காரர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறாய்.. மாநாடு தொடங்க புயல் அதன் கைகளை தட்டி உன்னை எச்சரிக்கிறது.. திரும்பிப் பார்க்கிறாய்.... மாநாட்டுப் பந்தல் அதன் அலங்காரங்களுடன் வானில் துளித் துளியாக தூக்கியெறியப் பட்டுக்கொண்டிருக்கிறத...
Image
மனிதன் மன அதிர்வுகளின் பால் கால் பதித்து தள்ளாடியபடி சில செயல்களைச் செய்கிறான்...அவனைப் பொறுத்தவரை அதிர்வுகளின் பிரக்ஞ்சையும் தாக்கமும் அதன் விளைவுகளும் அவனை பாதிக்கும் வரை.. அவன் அறிவிலியாகவே இருக்கிறான்..மனிதனின் முதன்மையான இயல்பு அடுத்தவனுடன் தன்னை ஒப்பிட்டுக்கொள்வதுதான்..சில ஒவ்வாத ஒப்பீடுகளால் அவன் தன்னை உயர்ந்தவனாகவும் பலமுள்ளவனாகவும் தான் வெறுப்பவன் தன் முன்னே மண்டியிட்டுக் கதறுவதாகவும் கற்பனை செய்தபடியிருக்கிறான்..கற்பனையை நிஜமாக்கும் பொழுதின் கடினங்களில் மனிதம் இறந் து போவதைக் காணலாம்...தனி மனிதன் தன் ஆச்சார்யனை அருகிலிருந்தும் அடையாளம் காணமுடியாமல் தவிக்கிறான்..அந்தத் தவிப்பின் அதிர்வுகளால் தள்ளாடியபடி அந்த ஆச்சார்யனை அடியாள் வைத்து அடிக்கவும் தயங்காத இயல்பை ..அந்த ஆச்சார்யனின் தவப்பொருட்களை திருட்டுத்தனமாக அடைய நினைக்கும் ஒவ்வாத தீய மனப்பாங்கின் அசுர இயல்பை பிறிதொரு நாளில் உணர்வதை ஞானமெனக் காண்கிறான்..அவன் அதை அடைவதற்குண்டான நெடிய பயணத்தில் சில நேரங்களில் தன்னையே தொலைத்ததை அறியாமல் பிணமாய் கனத்துப்போகிறான்..அப்படியான ஒரு மனிதனை அரங்கன் ஆட்கொண்டு மனிதனாக்குவான் என்ற அசைக்கம...
Image
வாழ்வு என்பது பிறத்தலும் குழந்தைமையும் உழைப்பும் இன்ப துன்பங்களும் மூப்பும் இறத்தலும் எனும் நம் நம்பிக்கைகளை தகர்த்து அது முடிவற்ற போராட்டம்..ஒருவேளை முடிவின் விளிம்பில் வெற்றி என்பது நிச்சயமில்லை எனும் போதில் செல்லும் ஒவ்வொரு நொடியும் எதிர்கொள்ளும் தோட்டாக்களும் பிணங்களும் இடிபாடுகளும் இழப்புகளும் போராட்டப்பாதையை எழுத்தை நோக்கி ஒரு ஆறுதலுக்காகவாவது ஒருவரை திருப்ப முடியும்..எழுத்தின் மூலமும் போராட முடியும்...எழுத்து கண்டிப்பாக எழுந்து நிற்கச்செய்யும்..அப்படிப்பட்ட கற்பனைகளு க்கும் எட்டாத ஒரு கொடுஞ்சூழலில் ஐஎஸ் ஐஎஸ் தீவிர வாதிகளால் தனது தாயும் ஆறு சகோதரர்களும் தன் கண்முன்னால் கொல்லப்பட்டும்..தான் பாலியல் அடிமையாக கொடூரமான வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டும் அத்தனை கொடுமைகளையும் எதிர்கொண்டு தைரியமாக தப்பி வந்து லண்டனில் ஒரு மனித உரிமைப் போராளியும் தோழியுமான சட்டப்பணிகளைத் தொழிலாகக் கொண்ட அமோல் கொலோனியிடம் அடைக்கலம் தேடி தஞ்சம் புகுகிறாள் நாடியா மூரட்...2018 ன் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நிஜமான புரட்சிப்பெண்... அவரின் கடைசீப் பெண்குழந்தை[THE LAST GIRL] என்ற புத்தகம் படிப்பவர் கண்களில் க...
Image
இரவு யாசகனின் மோதிர விரல் -------------------------------------------------- எனது அட்சயபாத்திரத்தில் அன்னமிடுபவர்களின் மோதிரங்கள் எனக்குப் பிடிக்கும்.. பொற்கொல்லனின் சின்ன உளியின் சப்தங்களை பொன் உருகி கெட்டியாகும் நிமிடங்களை கண்ணுள் கொணர்ந்து திளைப்பேன்.. சில விரல்களின் உலோகங்கள் நெகிழிச் சுழுவுகள் ஓலை மோதிரங்கள் மிட்டாய் மோதிர குழந்தை விரல்கள் கூட மிக மிக எனக்குப் பிடித்திருந்திருக்கிறது.. என் அன்ன பாத்திரத்தில் தற்செயலாக விழுந்த அந்த மோதிரம் என் பிச்சைக்குத் தடையாகிப் போனது.. இப்போதெல்லாம் இரவு யாசகம் மோதிர வெளிச்சத்தில் இளைத்துப்போக.. இரவுப் பசிதாங்காமல் மோதிரத்தின் உரிமை விரலிடம் விரைந்து சென்றேன்... பெற்றுக்கொண்ட அன்னை இதை அடகில் இட்டால் தான் இன்று அன்னம் எங்களுக்கு என்றாள்... தவறாமல் இரவு யாசகம் வரவும் கட்டளையிட்டாள்.. என் அட்சைய பாத்திரங்களெங்கும் பொற்கொல்லனின் உளிச் சப்தம் ஏனோ தாளம் தப்பி கேட்டுக் கொண்டேயிருக்கிறது.. ராகவபிரியன்
Image
சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பவன் ஒருபோதும் தனது முதல் கவிதையை எழுதிவிடமுடியாது என்றெழுதிய உம்பர்ட் ஈகோ இரண்டே இரண்டு கவிதைகள் தான் எழுதியிருக்கிறார்..வாழ் நாள் முழுதும் இரண்டு இடங்களில் மாறி மாறி வசித்த ஈகோ ஏறக்குறைய எழுபதாயிரம் புத்தகங்களைச் சேமித்திருக்கிறார்...கத்தோலிக்க வழிபாட்டு முறையையும் கடவுளின் இருப்பையும் கடுமையாகச் சாடிய ஈகோ புனைவுலகின் மீதும் தீராத கோபம் கொண்டிருந்தது வரலாறு..எலியட்டிலிருந்து இன்றைய நவீன கவிஞர்களின் கவிதைகளை சதா குறை கூறிக்கொண்டிருந்த ஈகோ எந்தக்  கவிதையையும் கவிதையென ஏற்றுக்கொள்ளவில்லை..நீங்கள் ஏன் கவிதையையும் கடவுளையும் நம்ப மறுக்கிறீர்கள் என்று தொடர்ந்து கேள்வியெழுப்பியவர்களை ..எல்லாக் கவிஞர்களுமே மோசமான கவிதையைத்தான் எழுதுகிறார்கள்..அதைவிட மோசமானவர்கள் அதை வெளியிடுகிறார்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவரைக் காப்பாற்ற எந்தச் சர்ச்சும் முன்வரவில்லை...குழந்தை இலக்கியத்தில் ஓரளவு வெற்றிபெற்ற ஈகோ தனது ஈகோவை விட்டுக் கொடுக்கமுடியாத்தால்..ஆகச் சிறந்த நாவலான...ரோஜா என்பது பெயர்...என்பதை இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படைப்பாக கொடையளித்திருந்தும்..எந்த உலக...
Image
இன்றைய தமிழ் இலக்கியத்தின் செலுத்துவாரற்ற பயணம் செல்லும் திசையெல்லாம் கிடைக்கும் உபயோகித்து தூக்கியெறியும் உடையொன்றை வாங்கி அணிந்து கொள்கிறது...புதுப்பொலிவுடன் ஈர்க்கும் அது அடுத்த உடைகிடைக்கும் வரை அழுக்காகி கசங்கி இலக்கிய பிம்பத்தின் மரியாதையைக் குறைத்து மதிப்பிடச் செய்துவிடுகிறது...ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த தமிழிலக்கியம் இதுவரை பெற்றது ஒரே ஒரு ஞானபீடம்தான்..[சரி..இரண்டு என்றே வைத்துக்கொள்வோம்]இந்திய மொழியிலக்கியங்களில் பதினைந்தாம் நூற்றாண்டில் தான் முதல் இலக்கியப் பிரதி கிட ைத்தாகச் சொல்லிக்கொள்ளும் ஒடிய [odia]..இலக்கியம் இதுவரை நான்கு ஞானபீடங்களைப் பெற்றுவிட்டது.. பாண்டா எனும் ஆதிகுடிமக்களைப் பார்ப்பதற்கே பயந்து நடுங்கும் ஒரியாவில்..அவர்களைப்பற்றி எழுதி உலகின் கவனத்தைக் கவர்ந்தவர் . 2011 ல் ஞானபீடப் பரிசு பெற்ற ஒடிய எழுத்தாளுமை...வைணவ குலத்தைச் சேர்ந்த பிரதீபா ரே...அவர்கள்...நிறைய நாவல்கள் ...சிறுகதைகள் ..கட்டுரைகள் எழுதியிருந்தாலும் அவரின் கவிதைகள் அவ்வளவாகப் பேசப்படவில்லை.. ஆதிகவி சரளாதாஸு[ஆண் கவிஞர்...ராமாயணம் மஹா பாரதம் இரண்டையும் ஒடிய மொழியில் பாடியிருப்பவர்]க்குப் பிறகு அ...
Image
O vinayaka Thou head was snatched just for guarding the Nirvana of your mother by your own father.. Spiritual powers were restored to thee o vinayaka by reincarnation with an Elephant's head.. O vinayaka mere illusions of you may dispel the fear.. and Thy mere name may remove the obstacles of life.. Thy ivory gored writings of Mahabharath had given the name and fame to Thee... as the first ghost writer ever.. The mud made Thou idols simply remove the worldly attachments and when immersed in rivers canals or tanks Life's rehearsals too immersed in Thee.. forthwith o vinayak.. Thou tiny travel animal [Mousihka] before entering inside an unknown hole simply deserted Thee O vinayak and Thou postures under the peepal tree is an art of waiting... or enlightenment.. Thy devotees are simply going for immersion.. Because of extreme devotion.. But Thy path is obstructed.. Let the devotees immerse themselves into thee O vinayak.. Let the obstacles in the path of immersion...
Image
The day usually dawn with hatred.. Ten of my brothers and sisters had their own wishes.. when an iota of indifference or frustration fallen on them they usually tumble on me like mounting of wagons during an accident of a goods train.. That was the chisel that shaped me. That was the teacher who taught me.. That was the tailor who dressed me That was the I still coming out of me.. I was hanging on a thread for a bread I was walking on a rope for a lesson I was living on a bush full of thorns and that was that.. Now people are praising me focusing the moon light on me.. My brothers and sisters arefighting between them in praise of me.. When i enter into the house all are standing like the audience including the judge who had risen up when accused Mahathma entered the court room during freedom struggle.. But i require only love and affection I require a place on a remote corner of my house where i could sleep.. I require a dawn without any dust.. and let me brush my teeth...
Image
ஒரு பெளர்ணமியைத் திருடத் திட்டமிட்டேன்.. என் கைகளைக் கொஞ்சம் நீட்டி வானம் தொட்டேன்.. கிரணங்கள் வழிந்து மறைவிடம் தெரிய பயம் நடுக்கம் தந்தது... இரண்டு கைகளாலும் சேர்த்துப்பிடித்து சட்டைக்குள் வைத்துக்கொண்டேன் ஓர் நாள் போதும்.. அன்று யாராலும் நிலாச்சோறு சாப்பிட முடியாது... கிணறுகளை எட்டிப்பார்த்து வாளியில் நிலாவை அள்ள முடியாது.. அல்லி மலர்கள் மலரும் வேலையை ஒரு நாள் ஒத்திப்போடுவதைக் காணலாம்.. கருக்கலில் காவிரிக்கரையில் மலம் கழிக்க வருபவர்கள் புதர்கள் தேடியலைய வேண்டிய தில்லை. நிமித்தக் காரன் தலைச்சன் பிள்ளைமண்டையோட்டை பயமின்றி தோண்டியெடுக்கலாம்.. சுவர் தாண்டி சின்ன வீட்டின் சுவரேறிக் குதிக்கையில் முண்டாசுக்காண துண்டு தேவையில்லை.. ஒரே ஒரு நாள் மட்டும் அந்தப் பெளர்ணமி என்னோடு இருந்துவிட்டுப் போகட்டுமே.. அட என்ன இது... என் சட்டைப் பைக்குள் யாரோ கையை விடுகிறார்கள்.... நீட்டிய கையை எப்படிச் சுருக்குவது...? ராகவபிரியன்
Image
தொம்பங்கூத்தாடியின் சின்ன மகள் கம்பியிலாடும் குழந்தை வித்தகி... எதிர் ரொட்டிக்கடையின் அன்ன தாதா அவளின் பசிக்கு கைத்தட்டல் மட்டுமே காசில்லாமல் தருவார்... அவளின் சம நிலைக் கம்பில் கவனம் கம்பியில் கால்களை இறுக்க.. பசி வயிறை இறுக்கிப் பிடிக்கும்.. அப்பாவின் சில்லரைத் தட்டும் அம்மாவின் மேளத் தட்டும் அவளின் வயிற்றுக் கம்பியில் பசியின் நடனத்தை தாள நயத்துடன் ஆடச் செய்யும்.. நடன முத்திரையின் மின்னல் வேகம் கூடிக் கூட.. ரொட்டிக் கடையின் வாட்டிய ரொட்டியை ஈட்டி முனையில் நர்த்தனக் கொள்ளையாய் எடுத்துக்கொள்வாள்.. ஓடியேறிக் கம்பியில் நடக்கும் வித்தகிப் பசிக்கு வித்தையே உணவு.. திருடி திருடியென அன்ன தாதா அறை கூவல்விடுக்க... குழந்தை உதட்டோர ரொட்டித்துகள்கள் திருட்டின் சாட்சியா..? பசியின் சாட்சியா...? தரையில் நின்றே யாரும் சொல்லலாம்.. ராகவபிரியன்

Mokkumbu Melanai

Image
கடந்த இரண்டு நாட்களாக மனம் அமைதிகொள்ள மறுக்கிறது..பிக்காசோ வரைந்த செவ்வியல் அமைதி ஓவியமொன்றை யாரோ சேதப்படுத்திவிட்டால் வரும் அமைதியின்மையைப் போன்றதது.....வார்த்தைகளில்லை என்னிடம் ...எனினும் சர்.ஆர்தர் காட்டன் அவர்களால் கட்டப்பட்ட முக்கொம்புவின் மேலணை இடிந்து கிடக்கையில் அவரின் அணைகட்ட பயன் படுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகள் [இன்னமும் தவ்லேஸ்வரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது]...வேலையாட்கள்..பிரிடிஷ் அரசாங்கத்தின் பாராமுகம்..ஒத்துழைப்பின்மை போன்று ஒரு நெடிய வரலாறு கா விரியின் அலைகளில் ஒரு பிளாஸ்டிக் குடுவையைப்போல் என் மனமெங்கும் அலைகழிக்கப்படுகிறது..எலமனூரிலிருந்து ஒரு கிலோமீட்டரில் தான் திருப்பறாய்த்துறை...அங்கிருக்கும் விவேகானந்தா ஆரம்பப்பள்ளியில் 1969 ல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது...பரிசிலில் காவிரியைக் கடந்து முக்கொம்பு செல்வோம்...அங்கிருந்துதான் கொள்ளிடத்தின் மேல் அப்போது அணைப்பாலம்[ காட்டன் அவர்களால் கட்டப்பட்டது..] இருந்தது...அதன் மேல் எத்தனையோ முறை நடந்திருக்கிறோம்...பழியாய்க்கிடந்திருக்கிறோம்...பாலத்தின் அடியில் மெல்ல கதவுமீறி சில்லென்று விழும் காவிரியில் வெகு நே...

Pseudo secularism

Image
இந்துமதம் சார்ந்த நம்பிக்கைகளால் புண்படுவதென்பது இந்து மதத்திற்கு வாடிக்கையான ஒன்றுதான்...அதனால்தான் அது இன்னமும் அசைக்க முடியாமல் கெட்டிப்பட்டுக்கொண்டே இருக்கிறது...வேற்று மதங்களில் இதுபோன்ற சகிப்புத் தன்மையைப் பார்ப்பது கடினம்...இப்போது மட்டுமல்ல...எப்போதுமே ஒரு கவிஞரோ எழுத்தாளரோ பிரபலமாக வேண்டுமென்றால் மதம் சார்ந்த நம்பிக்கைகளை புண்படுத்தி எழுதினால் பணமும் புகழும் எளிதில் கிடைத்துவிடுகிறது..சாலமன் ருஸ்டியும் தஸ்லிமா நஸ்‌ரீனும்...ஒரு மதத்தை அதன் மூடநம்பிக்கைகளை எழுத்தில் வட ித்துவிட்டு பட்ட பாடுகள் நாமறிவோம்...ஆனால் இந்து மதத்தைப்பற்றி அதன் மூட நம்பிக்கைகளைப்பற்றி அதிகமாக கவலைப்படும் எழுத்தாளர்களோ கவிகளோ...அதே நிலைப்பாட்டை மற்ற மதங்களின் மூட நம்பிக்கைக்களில் மீதும் சடங்குகளின் மீதும் எடுக்கிறார்களா என்ற கேள்விக்கான பதில் ஒரு கேலியான புன்சிரிப்பை அவர்களின் இதழ்களிலேயே கொணரும் என்பதுதான் நிஜம்..பெண் எனும் படைப்பின் ரகசியங்கள் அந்த பிரம்மனுக்கே புதிராகும்...பெண்ணிய எழுத்தாளர்கள் கூட அவர்களின் உடற்கூறுகளை பட்டவர்த்தனமாக பொதுவெளியில் எழுதத் தயங்கும் கருத்தியல்களை இந்துப் பெண் தெய்வங்களி...

Reader Doctor

Image
வாசக மருத்துவனின் அனுமதிச் சீட்டுடன் அமர்ந்திருக்கிறேன்.. நீ வருகிறாய்... உன் நீண்ட கழுத்தின் நீளநீலம் வளைத்து எதையோ கொத்துகிறாய்.. மேலெழும்பி இடதில் பார்க்கிறாய்.. பிறகு வலது பக்கம்.. கழுத்து வளைத்து மேல் நோக்க உன் கர்வக் கொண்டை சற்று தாழ்கிறது.. இடதில் ஒரு பலகையில் வரிசையில் வரவும் என்றிருக்கிறது... வலதிலோ ஒரு குழந்தைப்படம் வாய்பொத்தி பேசாதே என்றெழுதிய எழுத்தின் மேல் நிர்வாணமாய் அமர்ந்திருக்கிறது.. உன் மேல் நோக்கிய பார்வையில் நான் தெரிந்திருக்கலாம்... கடைசீயில் சென்றமர உனக்கு மனதில்லை.. நீ உந்தியேறக்கூடிய உயரமான எழுபத்தைந்தடியை சிலிர்ப்பிய சிறகடித்து அடைகிறாய்.. உயரமான நிறையவர்கள் ஏற்கனவே வரிசையில் இருக்கிறார்கள். அமைதியின்மையால் உன் தோகையில் உன் காலே சிக்க.. ஒரு காலால் சிறகு கோதுகிறாய்.. அதை மயிலாட்டம் என்று மருத்துவப் பதிவேட்டில் எதற்கு பதிவிடச் சொல்கிறாய்.. உன் பறக்கும் தூரமான முன்னூறு அடிகளை தத்தித் தத்தி முன்னூறு தடவை எடுத்து வைக்கிறாய்.. கோபங்களுக்கு ஒருபோதும் முன்னுரிமையில்லை.. அனுமதிச் சீட்டு தீர்ந்து போனதால் வாய்விட்டு அகவுகிறாய்... எனக்கு முன்னான நோயாளியை நன்கறிந்த மருத்...

star and ear studs ...

RAGAVAPRIYAN THEJASWI’s poem Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) It was the sleep of a little girl dwelling in the hut upon the banks of Kav eri salvaged from the sandy muddy earth In wakeful nights with her star-friend upon the sand and rarely in the river water She would play, sleeping. Caution: River Cauvery is Flooding Tonight in the classroom of the nearby government school She would read lessons with her friend But heer sleep and hut might be going round and round in the all too massive current of the river. Ammaayee… While feeding the motherless little girl and her star-friend the smell of the wet field mixed with the Kaveri water would taste so delicious. Today’s wage for planting crops Ammaayee would receive tomorrow. For buying star-studs tonight itself the child was walking along Sky, the bazaar street with her dear friend. He who was fixing the ears with studs in the thin square-cardboards to the stars saying ‘thirty rupees, The little s...

floating as hippopotamus

RAGAVAPRIYAN THEJASWI’s poem Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) Can’t contain the floods of Vayanaadu in the dry and parched agricultural f ields of ours. Wandering atop the mountain peaks as elephants all over God’s Land The Rain. Caught in the elephant-trunks of rain the areca-trees and all vegetation go scattering. The highways paved along its trail and the hutments are stamped and crushed by the battalion of rain-tusker Unable to preserve the heavy imprints of rain-tusker We are going to leave it into the sea To float as hippopotamus The Kerala elephants are always giants Of them while bringing some with the help of Kumki Losing them in Kabini or Krishnarajasagar asking for their little ones We have been begging our neighbouring States for the past several years. That screams for alms go on reverberating all over the firmament of Tamil Nadu as summer-thunder unbearable. Alas _ A post-modern tusker losing its way keeps wandering all ov...

The time and shadow

யாருடைய காலச்சுடுசொல்லும் மத்தகமேறாதபடி முறக் காதுகளை அசைத்துக்கொண்டிருக்கிறது ஆனை.. பிணைத்தப் பாராட்டின் சங்கிலிகளை இழுத்திழுத்து அசைத்தபடி ஓசையெழுப்பி அலட்சியமாய் கால்மாற்றி கால் ஊன்றி பாராட்டடிமையில்லையென அவ்வப்போது மண்டியிட்டும் அற்ப மனிதனைவிட உயரெமென அசைச்சொல்லில் ஆடியபடி நான்கு அடி வெண்பாவாய் திகைப்பூட்டுகிறது ஆனை.. முகப்பட்டாமோ முதுகுப்பட்டோ தானே இறைத்துக்கொண்ட புழுதி மண்ணோ அதற்குச் சொந்தமில்லையென்பதை வாய் திறந்து வாங்கும் சோற்றுக் கவளங்களுக்காக குருடர்கள் தடவும் ஸ்பரிசங்களை பொருட்படுத்தாத நின்று தூங்கும் சாகசம் காட்டும் ஆனை.. ஆணைகளுக்குக் கட்டுப்படும் ஆனை ஆணையிடுவதாயிருந்தால் முதலையின் வாயில் கால் மாட்டிக் கதறியிருந்திருக்க வாய்ப்பேதுமில்லை... அகப்பட்டுவிட்ட ஆனை ஒரு சொல்லொணாத்துயரின் காலப்பிம்பம்.. ராகவபிரியன்

i remain

Image
The rain elephant wades through our God's own country.. with its fullest strength breaking all 26 dam's elementary.. The elephant is so angry and waving the trunk in frown. the disaster is true and the elephant is growing on and on.. what a neo-modernist poet could do except to faint on seeing the elephant growing as big as a giant Before he drench his words huts and poetic roads in rain Taken a selfie and posted it in smile in the facebook..i remain... Ragavapriyan

கு[எ]றும்புகள்

எங்கள் கொல்லைப்புறத்தின் துளசி மண்டிக்கிடந்த கிணற்றடியைத்தான் தளமாக்கினோம்... அது ஈரமாகவே இருக்கும்... பல்துலக்கிய எச்சில்கள் குளித்துக் காய்ந்த சோப்பு நுரைகள்.. கொடித் துணிகளின் ஈரச் சொட்டுக்கள்.. சேந்துவாளியின் தாம்புக் கயிறு.. கன்னத்தில் கைவைத்து யோசித்தபடியிருக்கும் எங்கள் வீட்டுப்பூனை.. மைபூச பயன்பட்ட தூரிகை.. இத்தனையும் இன்று மதியம் காணோம்.. காவிரிக்காண வழிபாட்டில் அனைவரும் சென்றுவிட... கொல்லை காய்ந்து கிடந்தது... நிலவின் தரை காட்டும் புகைப்படமாய்.. நான்கு கட்டெறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாய்.. வளைந்தும் கலைந்தும் சேர்ந்தும் தளம் முழுவதும் அலைந்துகொண்டிருந்தன.. கண்டிப்பாக எதையோ தேடியலைகின்றன... நொடிப்போதும் தாமதிக்காமல் நேற்றிரவு நான் எழுதியிருந்த பின் நவீன கவிதைக் காகிதத்தை ஓடிச் சென்று அவைகளின் வழியில் வைத்தேன்.. சட் டென்று திரும்பிய எறும்புகள் காணாமல் போயிருந்தன... ராகவபிரியன்

post modernism..2

Image
பின் நவீனம் என்றொரு ------------------------------------ பைசாசம்.. ------------------ எவ்வளவு தான் அறிவார்ந்த பிரபலமான காத்திரமான படைப்பெனினும் அதை பலமுறை படித்தாலோ மீண்டும் மீண்டும் படிக்க நேர்ந்தாலோ ஒருவிதமான அலுப்பை இலக்கிய நுகர்வோர்களால் தவிர்க்கமுடியாது...புதுக் கவிதையிலிருந்து நவீனக் கவிதைக்கு இயற்றமிழ் தாவியபோது எழுந்த அதிர்வின் கணங்கள் இன்னமும் உணரப்படுகின்றன...நவீனம் என்றால் இக்கணமென்றும் சொல்லலாம்...பின் நவீனமெனில் இக்கணத்தின் விளிம்புகளில் அமர்ந்து ஆழமறியா வெளியொன்றில் குதிக்கத் தயாராவதெனவும் கொள்ளலாம்...புதுக் கவிதையிலிருந்து நவீனத்தை வேறுபடுத்தும் காரணிகளின் அடுக்குகளில் அழுக்குகள் தேங்கிக்கிடப்பதால்...புத்தம் புதியதொரு வடிவமைப்பை இயற்றமிழ் அணிய வேண்டிய காலம் இதென அறியக்கூடலாம்...அதன் பொருட்டு ஆழமறியாமல் கண்மூடித்தனமான குதித்தல் பைசாசத்தின் குணமாகும்...காரணிகளின் அழுக்குகளைக் களைய மயிற்பீலிகளைக்கொண்டு வருடிக்கொண்டிருத்தல் நவீனக் கவிதையை வருத்துவதாகவே முடியும்... இந்த முன்னெடுத்தலின் கிறுக்கல்களில் நுழைந்து வெளிவந்த பைசாசத்தின் தனித்துவ தத்துவ வெளியின் நடனமொன்றை உங்கள்...

Neo modernist Tamil poetry

Image
வரலாறுகளை அழகாக கவிதைகளில் செதுக்கிச் சென்றவர்கள்..நம் முன்னோர்கள்...அலெக்சாண்டரின் படையெடுப்பால் பயந்த நம் அரசர்கள் சேமித்தச் செல்வங்களை பெட்டிகளில் அடைத்து ஆறுகளின் நடுவில் அறையமைத்து அதனுள் பாதுகாத்தவர்கள்...அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை  அருமையான  கலிப்பா வாய் அமைத்துவிட்டு அந்த ஓலைச் சுவடியை அரும்பெரும் செல்வமாய் விட்டுச் சென்ற பூட்டன்....அந்தப் பாடல் இத்தனையாண்டுகள் உயிர்த்திருக்குமென கனவு கூடக் கண்டிருக்கமாட்டான்...புதைக்கப்பட்ட செல்வங்கள் புகழ் அனைத்தும் ஆற்றில் அடித்துச் ச ெல்லப்பட்டிருக்க...கவிதையொன்று காலம் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது...இன்னும் வாழும்... அது போன்ற நீண்ட மரபுடைய நம் கவிதை இப்போது பின் நவீன யுகம் நோக்கிய உலகளாவிய வீச்சை தமிழ் மண்ணில் பாய்ச்சத் தொடங்கிவிட்டது...அந்தப் பாய்ச்சலின் பாதிப்பால் ஒரு சின்ன பின் நவீன முயற்சி... வாடுபு வருத்திடும் பாலை நிலமென புகுந்தோம்.. பாலையின் நெடுந்தொலைவென அரிதினும் அரிது நம் பிணைப்பு.. மணல் குன்றுகளில் நம் நினைவுக் காற்று மோதிச் செதுக்கிய சிற்பங்கள் துணிக்கடை பொம்மைகளென உணர்வின்றிச் சிரிக்கும்.. காற்றின் சிறகெங்கும் ம...

வெளிச்சம் மட்டுமே மிச்சம்

Image
எனக்கு ஒரு கார் தயாராக வேண்டும்.. அதில் பூ வேலைப்பாடுகள் செய்திருக்க வேண்டும்.. செயற்கைப் பூக்கள் நிறம் மங்கிப்போகலாம்... இயற்கைப்பூக்களை மெல்லிய உணர்வுகளால் ஒரு மயிலிறகு கோர்த்த அரைவட்டமாய் வண்ணமாய் அலங்கரித்திருக்க வேண்டும்... எதிரே வாத்தியக் காரர்கள் இலக்கியம் வாசிக்கவேண்டும்.. அந்தச் சப்தத்தில் சர்ப்பங்கள் பூக்களிலிருந்து வெளிவரவேண்டும்... யாரோ ஒருவர் எனக்கு ஒரு மலர் கிரீடம் சூட்டுகிறார்... பதட்டத்துடன் கழற்றினால் அது ஒரு கவிதை... அருகிலிருந்த பூவேலைப்பாட்டுக் கைவினைஞர் அதை வாங்கி அணிந்துகொண்டார்... மிகவும் பொருத்தமாக இருந்தது அவருக்கு... எனக்குச் சூட்டிய மாலைகளின் ரோஜாக்கள் என் எதிர்க்கவிதைக்காரர்களின் வாசல்களில் உதிர்ந்தன... பூ நாகங்கள் என் காரில் என் இருத்தலைச் சுற்றிப் பின்னிக்கொண்டன இப்போது நான் காரில் ஏறி அமர்ந்தாக வேண்டும்... யார்யாரோ கைபேசிகளில் என்னைப் படம் பிடிக்க பின்னால் இருந்த அரைவட்ட மயில்தோகை வெட்கமுடன் தலைகவிழ்ந்திருந்தது.. என் மீதும் கார்மீதும் வெளிச்சம் பாய்ச்சியபடியிருந்தனர் என் ஆசான் கவிகள்.. அவர்கள் ஏந்தி வரும் விளக்குக் கம்பத்தைச் சுற்றி மல்லிகைக் கொடி படர்வத...

பாரதி கவிதா வேள்வி...டிசம்பர் 1982

அது சூலை 1982..சிக்கல்கள் நிறைந்த ஒரு அனாதையான இருபத்து மூன்று வயது வேலையற்ற பட்டதாரி இளைஞனின் பட்டினி இழையை தொட்டுப்பார்க்கும் ஆவல் நிறைந்த காலை..தான் யாரெனும் கேள்வி வலையொன்றை எப்போதோ அவன் தனக்குள்ளும் வெளியுலகிலும் பின்னிக்கொண்டிருந்த விடிந்து வெகு நேரமாகியும் காலைபசியின்னும் தீர்ந்திராத வறுமையின் உக்கிர நிமிடங்களில் மிகவும் அழகான வசீகரமான கையெழுத்தில் ஒரு அஞ்சல் அட்டை..அவனை பாரதி நூற்றாண்டு விழாவில் ..அங்கு கவியோகி சுத்தானந்த பாரதி தலைமையேற்கும் கவியரங்கில் கலந்து கொள்ள அழைத்துக்கொண்டிருந்தது..அந்த அட்டை அன்று அவனுள் ஏற்படுத்தியிருந்த அதிர்வுகள் இன்றும் கூட அவனால் வார்த்தைகளில் சொல்லமுடியாதவை..அன்று அவனால் நம்பமுடியாமல் தான் இருந்தது...அந்த வசீகரக் கையெழுத்திற்கு சொந்தக் காரர்..கவிஞர் இளசை அருணா.... ஒன்றிரண்டு படைப்புகள் மட்டுமே சில நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளியாகியிருந்த அப்பெயரறியாச் சிறுவனின் இலக்கியப் பயணத்தைத் துவக்கப் போகுமிடம் எட்டயபுரத்தின் பாரதி ஓடிவிளையாடிய வீட்டின் வாசல் படிகள் என்றால் அது காலம் நிச்சயத்த கடவு என்பதைத் தவிர வேறென்ன...? அதை நினைத்து நினைத்து...