Posts

Showing posts from April, 2026
Image
  கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்று பராரி வளாகமுனி என எல்லோரும் அழைக்கிறார்கள்.. தங்களின் குழப்பங்களுக்கு மனப்பிறழ்வுகளுக்கு தீர்வு வேண்டி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கினார்கள்.. வாழ்வின் அலைச்சல் எப்போது முடியுமென்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் இருந்தது.. அப்படித்தான் பாணபாண்டியும்  அலைந்து திரிந்து அன்று தேடிக் கண்டுபிடித்து அவர் முன் விழுந்து வணங்கினான்.. கைகட்டி வாய்பொத்தி பவ்யமாய் அவர் முன் நின்று கொண்டிருந்தான்.. ஐந்து தலை நாக பிரதிமையை குளிப்பாட்டி இல்லை இல்லை அபிஷேகங்கள் செய்து கொண்டிருந்தார் பராரிமுனி... தாமிர கிண்டியிலிருந்து ஒரு உத்தரணி தண்ணீரை நாகத்தின் மேல் ஊற்றுவார். பிறகு எழுந்து சென்றுவிடுவார். கோவிலை ஒருதரம் சுற்றி வருவார்.. மீண்டும் அபிஷேகத்தைத் தொடர்வார் பராரி வளாக முனி... அன்று முனி இவன் பக்கம் திரும்பவே இல்லை..  பாணபாண்டி மனதளவில் குழம்பிப் போய் இருக்கிறான். வாழ்வின் யதார்த்தங்கள் பதார்த்தங்களுடன் ஒத்து வராத ஒருவித ப்ராஹ்மெண்டேஷன் மன நிலையில் இரு...
Image
  தமிழ் மண்ணின் பேசும் மொழி பல உட்பிரிவுகளைக் கொண்டது. சென்னைத் தமிழ் நெல்லைத் தமிழ் கொங்கு தமிழ் தஞ்சைத் தமிழ் என இன்னமும் பிராந்திய பிரிவுப் பெயருடன் மரனமற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறது.. பிரிவு எனும் சொல் இங்கே பேசும் மொழியைச் சொல்கிறதே தவிர மானுட வாழ்வியலையோ இல்லை அது சார்ந்த வேறெந்த பிரிவுகளையோ செப்பவில்லை.. இந்த மண்ணின் மானுட வாழ்வியலோடு இலக்கியத்தையும் எவ்வித பிரிவுகளுமற்று தன்னோடு இணைத்த தனித்த வாழ்வுமுறைமையைக் கொண்டிருந்தவர்கள் தான் பண்டைய மதராஸ் ராஜதானியெனும் தக்கான பீடபூமி மாந்தர்கள்.. அப்படியான தென்னிந்திய தமிழ் மக்களின் கலாச்சார மொழிபற்றுடன் கூடிய ஒற்றுமை வாழ்வியலை சிதைக்க வந்தவன் தான் ஆங்கிலேயன். 1856 வரை இந்தத் தமிழ் மண்ணில் ஆங்கில வழி பயிற்றுப் பள்ளிகள் பரவலாக காணப்படவே இல்லை. தொழில் சார்ந்த பிரிவுகளுக்கு சாதீய பிரிவுகளென பெயரிட்டு ஊதிப் பெரிதாக்கி மக்களைப் பிளவு படுத்தி ஆட்சியதிகாரத்தை அன்று தக்க வைத்து கொண்டான் ஆங்கிலேயன். அதே உத்தியைப் பயன்படுத்தி இன்று தமிழ் மொழியின் பேச்சு வழக்கின் பிரிவுகளை உள் வாங்கி மக்களையும் பிளவுபடுத்தி இன்னமும் ஒன்றுபட்டுவிடாமல் பார்...
Image
                                       Soon on Print.. For copies contact whatsup...9442536901...
Image
  ராகவபிரியனின் நகைச்சுவைக் கதைகள் விரைவில் புஸ்தகா மூலம் அச்சில்.. முன் பதிவு செய்வோர் இப்போதே ரூ 500/  9442536901 எனும் எண்ணிற்கு அனுப்பி விவரங்களை முகவரியுடன் இதே எண் வாட்ஸப்பில் அனுப்பினால் விரைவில் ஏற்கனவே அச்சில் வெளிவந்த ராகவபிரியனின்  மேலும் சில புத்தகங்களுடன் உங்களுக்கு வந்து சேரும்.. நன்றியும் அன்பும்...உங்கள் ராகவபிரியன்
Image
  வெப்ப நாட்களின் கொடுமை சொற்களை மீறிச் சுடுகிறது..  ஆவிபறக்கும் சாலையில் ஒருவன் உடலை வதைத்து கைவண்டியையும் வாழ்வையும் இன்னமும் இழுத்துக்கொண்டிருக்கிறான்.. புங்க மரத்தடி திப்பி நிழலில் சில ஆவினங்கள் அசைபோட்டபடி இளைப்பாறுகின்றன.. அவற்றின் மேல் உதிர்கின்றன வெம்பி வதங்கிய நூற்றாண்டு கால சந்தைச் சருகுகளும் பூக்களும்.. ஆவின வெளிமூச்சு வெப்பப் புகையில் கோடை மானுட மேதைமையின் வடிவம் காட்டுவதை நுண்ணிய பார்வையில் காணவியலும் அப்போதில் காய்ந்து வெடித்த மருத வயல்களில் முண்டாசு சுற்றியபடி                      வாழ்வாதார மந்தைகளை ஒழுங்குபடுத்தும் மேய்ப்பர் சிறுவர்கள்     கைக்கம்புடன் கோடைவெப்பத்தை ஒழுங்கு செய்ய ஓடத்துவக்கம் நடந்தேறுகிறது... ஆங்கே வெடித்துச் சிதறும் மூங்கில் அரிசிகளை உருவியெறிந்த                எழுத்தின் காலவெப்பத்தின் முதுகில் பச்சை மூங்கிலால்  பளாரென                        விளாச நினைக்கிறான் தானணிந்த மக...
Image
  கோடையிடி அதைப் பதிவு செய்யத்தான் அவன் கைபேசியுடன் நடக்கத் தொடங்கினான்.. நிஜம்மான ஒன்றை இயற்கையின் சப்தமிடும் சக்தியை தூரத்துச் சப்தத்தின் துல்லியத்தை பதிவு செய்தே ஆகவேண்டும் அவனுக்கு.. அவனால் எட்டவியலா உயரத்தில் மேகங்கள் மோதிக்கொள்ளத் துவங்கின.. கைபேசியைத் திறந்தான்.. மின்சக்தி குறைவாய் இருப்பதைச் சொல்லியதது.. ஓடினான்.. போதை உந்தித் தள்ளிய வேகமுடன்.. ஆங்கொரு அரசாங்க மதுபாணக்கடையொன்றின் மின்னூட்ட அமைப்பானில் மின்னூட்டியை பாங்கெனச்செருகினான்.. அங்கே மின்சார வினியோகம் தடைபட்டிருந்தது.. இடியோசை கடகடவென ஒலிகூட்டி தன் உறுமலைத் தொடங்கியது.. விருட்டென கைபேசியை உருவியவன் ஒலிப்பதிவு பொத்தானை அழுத்தினான்.. கைபேசி இறந்து நெடுநேரம் கடந்திருந்தது.. இறந்த காலத்தின் கைபேசியுடன் அவனுக்கு முன்னான உலத்தின் இடியோசையுடன் கைகுலுக்க இல்லை இல்லை கோடையிடியைப் பதிவு செய்ய.... காத்திருக்கிறான்.. இன்னமும் மதுபானக் கடையில் யுகங்களைக் கடந்தும்.. ராகவபிரியன்
Image
  மனிதரோ மிருகங்களோ  உலவவியலாத வனாந்தரங்களை விழைகிறதென் மனம்.. பறவையோ விமானமோ  செயற்கை இயற்கை கோள்களோ வேறெந்த வானுறுப்புகளோ அற்ற வெளியில் நடக்கச் சொல்கிறது என் பாதங்கள்.. நதியும் கடலும் குளியலறைகளும் நீரூற்றுகளும் மழையும்  பொழிபனித்துளியும் அற்ற இன்னபிற நீரெனும் எதுவுமற்ற  இடங்களில் தான்  குளிக்கத் துணிகிறது  இப்பாழும் வேர்க்குமுடல்.. விடுதிகளோ வீடோ விருந்தோம்பலோ  வீதி உணவகங்களோ விழாக்கால அன்ன தானங்களோ அற்ற ஊரொன்றில் தான் அதீதமாக பசிக்கிறதெனக்கு.. ஆனாலும்  சுடுகாடுகளோ இடுகாடுகளோ  அற்ற இடங்களில் மரணிக்கவேண்டாமெனச் சொல்லும் மனச்சொல்லின் பொருள் மட்டும் புரியவில்லையெனக்கு.. ராகவபிரியன்