Posts

Showing posts from June, 2023
Image
  பின் நவீன பிற்போக்கு சிறப்புச் சிறுகதைகள்… 4…பரிணாமம் ராம்பாபு மனைவியுடன் புத்தம் புதிய கேஸ் ஸ்டவ் வாங்கத்தான் மங்கள் அண்ட் மங்கள் வந்திருக்கிறான்…எம் அண்ட் எம் திருச்சியில் மிகப்பெரிய ஷோரூம்…அதில் கிடைக்காத பொருள்களே இல்லை…அறுபதைக் கடந்து முப்பத்தைந்தாண்டு மணவாழ்வை கண்ட ராம்பாபுவிற்கு புதிய கேஸ் அடுப்பு வாங்க மனமில்லை…பழைய முப்பத்து நான்கு ஆண்டுகளாய் உபயோகத்தில் இருக்கும் அடுப்பை மாற்றிக் கொள்ளவும் மனமில்லை…மனைவியின் பிடிவாதத்தால் தான் இதோ வந்திருக்கிறான்…பழைய அடுப்பு புழுதி படிந்து பரணில் கிடத்தப்படுவதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை… விதவிதமான இரண்டு பர்ணர் மூன்று நான்கு பர்ணர்கள் என வித்தியாசமான டிசைன்களில் அடுப்புகளை விற்பனைப் பெண் அழகான தமிழாங்கிலத்தில் விவரிக்க விவரிக்க மனைவியின் கண்கள் அவ்வளவு பெரிதாக ஆர்வம் காட்டின…இது போன்ற ஆர்வத்தை அவன் மனைவியின் கண்களில் பார்த்ததே இல்லை… ஏன் ராம்பாபுவின் அம்மா முதன் முதலில் சுடுமண் அடுப்பொன்றை கிராமத்துச் சந்தையில் ஐம்பதாண்டுகளுக்கு முன் வாங்கும் போது கூட இவ்வளவு ஆர்வத்தைக் காட்டவில்லை… ராம்பாபுவும் அண்ணனும் ரயில்வே லயண் கரை...
Image
  யானை விழா ------------------ விழாவிற்கான வாழ்வின் திடலெங்கும் யுகங்களாய் மண்டியிருக்கும் எருக்கஞ்செடிகளினூடே அலைந்து கொண்டிருக்கிறது வறுமை யானை... புதர் அகற்றுகையில் ஆக்ரோஷமாய் துரத்தும் யானை வெளியேற்றிய கழிவெச்சங்கள் அள்ளப்பட முடியாத துர் நாற்றமென சுழன்றடிக்கிறது... தொடர் கடன் வேட்டுகளிலும் தற்காலிகமாய் தருவித்த வளமை கும்கிகளின் தந்தத் தாக்குதல்களிலும் அடிபணிய மறுத்து பிளிறியபடி இங்குமங்கும் பயந்தோடிய பயங்கர யானை என் குடிசைக்குள் புகுந்து வெளியேற மறுக்கிறது... விழாவில் சீர் தட்டேந்தி வர தயாராகவிருந்த செயற்கையழகு தேவதைகள் யானையைச் சுமந்து வருகையில் வேடிக்கைப் பார்க்கும் கூட்டங்களும் சொந்தங்களும் ஓடி ஒளிந்து கொள்ளுவதைக் காண கண்கோடி வேண்டும்... விழாவின் வாசலில் வறுமையானையை ஆடாமல் எப்படி நிறுத்தி வைப்பதெனும் திட்டத்திற்கான மந்திரி சபைக் கூட்டம் இன்னும் முடியவேவில்லை... கெட்டி மேள மங்கலப் பொழுதில் பயங்கரமாய் தும்பிக்கைத் தூக்கி அது பிளிறித் தொலைக்காமல் இருக்க வேண்டும்... பரிமாறப் பட்ட பாயச்சத்தில் இல்லாத முந்திரியென மிதக்கும் அவ்வானையை அள்ளிய கரண்டி உடைந்து போனதால் சொந்தங்களுக்கிடையே...
Image
  பின் நவீன பிற்போக்கு சிறப்புச் சிறுகதைகள்… 3.நரம்பியல் ----------------------- ராம்பாபு அவனின் அண்ணன் மற்றும் அண்ணன் மகன் மூவரும் மஹாத்மா காந்தி மெடிக்கல் காலேஜில் அண்ணன் மகனுக்கு எம்பிபிஎஸ் சீட் டிற்காக அதன் டீனை சந்திக்கக் காத்திருக்கிறார்கள்…அப்போதெல்லாம் நீட் தேர்வு கிடையாது…ப்ளஸ் டூ மார்க் மட்டும் தான்…இருந்தாலும் அண்ணன் மகனுக்கு போதிய கட் ஆப் இல்லை…அவர்கள் முற்படுத்தப்பட்ட ஜாதி என்பதால் ஒப்பன் காம்பெடிஷன் சீட் கண்டிப்பாக கிடைக்காது…மேனேஜ்மெண்ட கோட்டாவில் ஒரு சீட் கேட்டுப் பார்க்கத்தான் இப்போது காத்திருக்கிறார்கள்… அருகிருந்த நரம்பிலை மரத்தின் சிகப்பு இலைகள் உதிர்ந்து ஒன்றிரண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் வராண்டாவில் மெல்ல காற்றில் ஊர்ந்து காலின் பின்பக்கம் சேர்ந்து கொண்டது…ராம்பாபு ஒரு இலையை எடுத்து அதன் சிவந்த நரம்புகளை மெல்ல பிய்க்கத் தொடங்கினான்…ஊரிலிருந்து காலையில் புறப்பட்டு இதோ இலை பிய்க்கும் இந்த நொடிவரை அண்ணன் மெளனமாகவே தலை குனிந்து அமர்ந்திருக்கிறான்… அண்ணனின் மனைவி அதாவது அண்ணி நல்ல வேலையில் இருக்கிறார்கள்…கை நிறைய சம்பளம்…அண்ணன் குடும்பத்தின் மூத்தவன் என்பதால் தனத...
Image
  மண்டியிடும் மாகளிறு ------------------------------ மண்டியிடச் சொல்லும் பொழுதுகளில் யானைவலிகள் கூர் அங்குச பாய்ச்சல்களென அதன் மத்தகமெங்கும் ஞாபகங்களாய் செருகிக் கிடக்கும்... மண்டியிட்ட கால்களின் வழி மிதித்தும் சாகாத வறுமை ஆமைகள் மெல்ல ஊர்ந்து இலக்கு நோக்கி ஓய்வின்றி மேலேறிக் கொண்டிருக்கும்... வளமையின் கானகத்தில் வேர் பலாவை எத்தி உதைத்துண்ட சுதந்திர பசியாறல் காதோரத்தில் நெருப்பெறும்புகளென ஊறிக்கொண்டிருக்கையில்... சோளப் பொறியென வீசப் பட்ட மட்டையை நுகர மறுத்து தும்பிக்கையால் தன்னையே தாக்கிக் கொண்டிருக்கும்... எந்நேரமும் மானுடத்தை நசுக்கும் சக்தி வறுமை யானையின் முட்டிகளில் இருப்பதறியாமல் மிதித்தேறும் ஆணவத்தின் ஆயுள் அன்றிலிருந்துதான் குறையத் தொடங்கும்... கடவுளுக்கான புனித நீர் தாங்கி வரத்தான் அந்த வறுமை வேழம் எப்போதாவது மண்டியிடும்.. முதுகிலேறிய பின் தோகைவிரித்தாட நினைத்தால் பீலிகளை பிய்தெறிய ஒருபோதும் தயங்குவதில்லை அது... பாலைப் புயலெனினும் மண்டியிட்டு முகம் புதைத்துக் கொள்ளும் கோழை ஒட்டகமல்ல... இது வலிய வேழம்... வறுமையை திணித்து மண்டியிட வைத்த ஏமாற்று அரசியலை மிதித்து நசுக்கும் நாள...