மத் தெளடோ... சிறுகதை.. அவர்கள் எங்களூருக்கு அருகில் கூடாரத்தில் தங்கியிருந்தார்கள். அதாவது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மீந்திருக்கும் ஆயிரம் வயதுடைய ஆலமரத்தடியில் இருக்கும் கூடாரத்தில். அந்த கூடாரத்துப் பையன் ஒருவன் இப்போது என் வீட்டு வாசலில் நின்றிருந்தான்.. க்யா பாய்...தும்க்கு க்யா வோணா... என இந்தியில் பண்டிட் பரீட்சையில் அகில உலக அளவில் முதல் மார்க் வாங்கியவன் போல் கேட்டேன்.. சார்.. எனக்கு நல்லா தமிழ் வரும் சார். எங்க குடும்பம் தமிழ் நாட்டுக்கு வந்து பத்து வருஷம் ஆச்சு சார். அவன் சொன்னதும் சட் டென இமயமலையின் பனிப்பாறை உடைந்து டன் கணக்கில் தேங்கியிருந்த அசடு எண்ணெய் முகத்தில் வழியத் தொடங்கியது. துடைத்துக் கொண்டேன்... பார்த்தா இந்திக்காரன் மாதிரி இருக்கப்பா அதான் இந்தியில கேட்டேன்.. சரி உனக்கு என்ன வேணும் அதச் சொல்லு.. சார்.. நாங்க யாதவங்க.. கோணார் சாதின்னு இங்க எல்லோரும் சொல்றாங்க.. உங்க வீட்டு மாட்ட காலையில அவுத்துட்டுப் போய் மேய்ச்சுட்டு சாயங்காலம் கொல்லையில கட்டிடறேன் சார். மாசம் ஆயிரம் ரூபா குடுங்க சார் போதும்.. இந்த ஊர்ல பத்து கோணார் வூட்டு மாடுங்கள தர்றதா சொல்லிருக்காங்க....
Posts
Showing posts from August, 2026
ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்.. பாகம் 6/14 அவன் ஒரு சட்டகத்திற்காக அலைந்து கொண்டிருக்கிறான்.. அவன் சட்டகத்தில் ஆணி அடிக்கும் திறமையின் மெச்சுதல்கள் தரும் இன்பத்தை முகத்திலிருந்து நிரந்தரமாக மறைக்கும் வித்தையறிந்தவன்.. பரவாயில்லை.. மற்றும் சட்டக ஆணி அறையும் நுட்பமறிந்த மேதை என அவனைக் காட்டிக் கொடுக்கும் முகச் சாயலை மன்னித்துவிடுவோம்.. மென்பொருள் விற்கும் கடைவீதிகளில் அலைந்து களைத்த அவனின் கால்களில் கூட வன்மம் இப்போது கூரிய தோல் ஆணியென முளைத்திருக்கிறது. வன்பொருள் கடையின் வலிமை மிக்க ஆணியொன்றால் ஓங்கி அடித்து உள்ளிறக்குகையில் பிளக்கும் சட்டகப் பிளாச்சுகளின் பிரளய ஓசை தரும் சுயபுல்லரிப்பில் அவன் லயித்திருக்கிறான். தன் இம்மையின் பயன் நிறைவுற்றதென இறுமாந்து களைத்திருப்பவனிடம் சூடான தேனீர் ஒன்றை யாராவது வாங்கிக் கொடுத்தால் உலகம் மகிழும்.. மரச் சட்டகங்களுக்குள் தற்புகழ் மேதைமையைப் புதைத்த நெகிஷி விளம்பர மென்துணியை பொருத்தி வீதியின் முச்சந்திகளில் காட்சிப் படுத்தும் சட்டகங்களில் வன்பொருள் ஆணிகொண்டு அறைவதில் வல்லவன் அவன்.. புகழற்ற ஏழை ஆணி அறையும் நிபுணர்கள் எவராவது சட்டகங்களுக்குள் கண்...
கயிலை காண்... சிறுகதை.. அந்த நபருக்கு நாற்பது வயதிருக்கும். வசீகரமான சிரிப்பை நிரந்தரமாக அணிந்திருக்கும் முகம். எவரையும் எளிதில் எதற்கும் சம்மதிக்க வைக்கும் ஆற்றல் தெறிக்கும் கண்கள். அவரைப் பார்த்தால் முகவரி விசாரிப்பவராகவோ இல்லை ஏதேனும் காப்பீட்டு முகவராகவோ தெரியவில்லை.. முழுக்கை சட்டை. இறுக பிடிக்காமலும் தொள தொளவென இல்லாமலும் யானைக்காலடி இல்லாமலும் சீராக இடுப்பிலிருந்து கால் வரை ஒரே அளவில் பெட்டி போட்ட சுவடு தெரியும் முழுக்கால்சராய் அணிந்திருந்தார். சட்டையை கால்சராய்க்குள் செருகி சுறுசுறுப்பை வெளிக்காட்டும் தோற்றமுடன் அவர் என் வீட்டு வாசலில் இதோ நிற்கிறார். சார் உள்ள வரலாமா... அவரின் குரலின் பணிவும் இனிமையும் வித்தியாசமாக இருந்தது.. வாங்க... உட்காருங்க.. நீங்க... என இழுத்தேன். அவர் திண்ணையில் வந்தமர்ந்தார். சார நீங்க எங்கயாவது போகனுங்களா.. அவர் கேட்டதும் சற்று கோபம் என்னைப் பிடித்து தள்ளிவிட்டு முன் வந்து நின்றது.. எதுக்கு கேக்கறீங்க.. நீங்க யாருன்னு சொல்லுங்க மொதல்ல.. நான் எங்கயும் போகல.. அப்புடியே போகறதா இருந்தாலும் அதை ஏன் உங்ககிட்ட சொல்லனும்.. அதில்ல சார்.. கோவிச்சுக்காதீங...
பயணம் என்பது விதிக்கப்பட்டிருக்க வேண்டும். நகர்தல் என்பதை பயணமெனும் கூறுக்குள் அடுக்குதல் பிரயத்தனங்களை தோற்கச் செய்யும். பயணம் எல்லா உயிர்களுக்குமானது. பயணங்களில் எதையெதையோ கண்கள் பார்க்கும். ஆனால் மனம் சில முக்கியமானவற்றைத் தரிசிக்கும். தரிசனம் என்பது நகராத ஜடப் பொருளையோ இல்லை நகரவியலாமல் கட்டப்பட்ட உயிர் பொருள் ஒன்றையோ காண்பதல்ல. கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கும்.. நெடுந்தொலைவு பயணம் செய்து உயர்ந்த மலைச் சிகரங்களையோ அருவிகளையோ தரிசனம் செய்வதற்குமான வேறுபாடுகள் புரிதலுக்கு அப்பாற்பட்டவை. வெளிக் கண்களுக்கான தரிசனமும் உள் நோக்கிய தரிசனமும் வெவ்வேறானவை. மிருகக் காட்சி இடங்களில் தரிசிக்கும் மிருக வாழ்விற்கும்.. காடுகளில் தரிசிக்கும் மிருக வாழ்விற்குமான நுண்ணிய நகர்வுகளைத் தரிசிக்கவே நிறைய பயணங்கள் தேவைப்படுகிறது. எவ்வளவு தொலைவும் எவ்வளவு வேகமும் நிறைந்த பயணமென்றாலும் தரிசனப் போதாமையை வாழ் நாள் முழுவதும் சுமந்து திரிந்தாக வேண்டும்.. கூட்டாக பயணித்தால் தரிசனங்கள் பெரும்பாலும் கிட்டுவதில்லை. தனியாகப் பயணிக்கையில் தரிசனப் பெளர்ணமி மேகங்களுக்குள் மறையாமல் ஒளிர்வதைக் காணமுடியும்.. இதைத் தான...
ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6/13 நம் வாழ்வை மிருகங்களாக்கினாய் நீ நாம் இப்போது காடுகளில் திரிகிறோம்.. பள்ளிக் கூடத்தில் என் வேட்டையின் அறிவின் மானொன்றை நீ கவ்வியிழுக்கிறாய்.. எனக்கு முன் உதித்த உன் பற்கள் மட்டும் ஏன் அதீத கூராய் உன் தாடையின் தசைகளில் பிறப்பெடுத்திருக்கிறது.. மீனும் ஆமையும் பன்றியும் ஏன் நாயும் கூட கடவுளின் முகமென மாறும்.. ஆயினும் கரடிமுகக் கடவுளெனும் உன் சுயப்பிகடனத்தால் பற்றிய நம் வாழ்வின் காட்டுத்தீயை வானிலிருந்து கொட்டும் நீரெதுவினாலும் அணைக்கவியலவில்லை.. உன் தம்பித் தேனீக்கள் சேகரித்து சேமித்த தேனடைகளை கலைக்கும் உன் மிருக குணம் வாழ்வின் காடுகளெங்கும் எதைச் சிதைக்க அலைகிறது? காடுகளின் கயமையைப் போர்த்தியிருக்கும் மிருகங்களுக்கான அப்பனின் சரணாலயத்தின் உனக்கு மட்டுமான பாதுகாப்பைத் திருடிக்கொண்ட நீ உன்னை சிங்கமென சொல்லிக்கொள்கிறாய்.. கரடியும் சிறுத்தைகளும் இன்னபிற மிருகங்களும் பசித்தால் ஊருக்குள் இரவில் புகுவது நியாயம்.. ஆனால் வாழ்வின் பகலிலேயே இரை தேடி அலையும் நீ சரணாலயத்திலிருந்து தப்பி மானுஷ மன வீதிகளில் அநியாயமாய்அலையத் ...
வரலெட்சுமி விரதம் குடும்ப வழக்கமில்லை என சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அனைவரும் பணக்காரர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். சிலர் வயதானவர்களைக் கண்டால் வெறுப்பார்கள். அவர்களின் இளமை நிரந்தரமென நினைத்துக் கொண்டிருப்பார்கள். பணக்காரர்களும் அப்படித்தான். பணம் நிரந்தரமென ஆணவம் கொண்டு ஏழைகளை அலட்சியப் படுத்துவார்கள்.. பணக் கோட்டைக்குள் திருடர்கள் உடும்பின் இடுப்பில் கயிறு கட்டிக்கூட எவ்வளவு உயரமான மதில் சுவரையும் தாண்டி உள்ளே குதித்து கஜானாவைக் காலிசெய்துவிடும் அபாயம் எப்போதும் உண்டு. பத்ரஸ்ரவஸ் எனும் அரசன் ஆகச் சிறந்த அரங்க பக்தன். ஆனால் அவனின் மனைவி அதாவது ராஜமாதா நித்ய இளமையோடிருந்தாள். பணத் திமிரும் இளமைத் திமிரும் பார்வையைக் குடுடாக்கக் கூடியது. இதைக் கவனித்த அரங்கன் மஹாலெக்ஷ்மியை ஒரு மூதாட்டியின் வேடத்துடன் அரண்மனைக்கு அனுப்புகிறான். ராஜமாதாவிற்கு பணமும் இளமையும் பார்வையை மறைத்ததால் மஹாலெக்ஷ்மியை அடையாளம் காணவியலவில்லை. அருவருப்புடன் தன்னைக் காண வந்த நிதியரசியை விரட்டிவிடுகிறாள். முதுமையை சகிக்கவியலாமல் சிலர் செய்யும் அநீதி தொடங்கிய நாள்தான் அன்று. அந்த ராஜமாதாவின் மகள்...
தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்...7 விழுப்புரத்தின் ஆரியபவன் தேசிய நெடுஞ்சாலையோரம் சற்று கூனிக்குறுகியே நிற்பது போலிருக்கும். விழுப்புரம் எனும் ஊர் ஆன்மீகப் புனிதத்தை இன்றளவும் தமிழகமெங்கும் வீசிக்கொண்டிருக்கச் செய்யும் அற்புதங்கள் நிகழ்த்திய மஹாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதரித்த ஊர். ஆனால் திராவிடம் எனும் பெயர் ஆரிய எனும் பெயரின் விரோதத்தை ஊற்றி முளையிலேயே பட்டுப்போகச் செய்யப்பட்ட பெயர். அப்பெயர் தாங்கிய எந்த நிறுவனமும் இப்போது தலைகுனிந்தே நிற்பதை இத்தலைமுறையினர் காணக்கூடும். தேனீரின் தயாரிப்பு முறைமைகளின் தாழ்வாரங்களின் பண்டைய பாறாங்கற்கள் பெயர்க்கப்பட்டு பளிங்குக் கற்கள் பொருத்தப்பட்டிருப்பதால் மொய்க்கும் ஈக்களின் கால்கள் வழுக்கும் என்பதாலோ இல்லை சிறகுகள் சிக்கிக் கொள்ளும் என்பதாலோ ஆரியபவனின் தொன்ம தேய்மானமற்ற தேனீர் தயாரிக்கும் தாழ்வாரங்களில் ஈயற்ற சுகாதார சுகந்தம் மகிழுந்துக்களை நிறுத்திவிடச் செய்துவிடுவது நிகழ் நகரும் தமிழ் மாந்தர்களை நின்று போகச் செய்யும் கலாச்சார உத்தி.. அப்படியான பார்வை வேகத்தடையில் ஏறி இறங்கிய மகிழுந்துவின் மீள்ம உ...
ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6/12 என் பிறப்பிற்கு முன்பே அனைத்தும் இருந்திருக்கின்றன.. ஆனால் எனக்குத் தெரியவில்லை அவைகள் எப்போதிலிருந்து பிறப்பெடுத்தன என.. மலைகள் ஆறுகள் கடல் மரம் புழுக்கள் பறவைகள் கோவில்கள் குளங்கள் மேலும் அதில் சலனம் உண்டாக்க எறியப்பட்ட கற்கள் எல்லாமும் எல்லாமும் தான் என் பிறப்பிற்கு முன்பே இருந்திருக்கின்றன.. நான் பிறந்த உடன் அழுதிருக்கிறேன்.. அதனால் என் பிறப்பிற்கு முன் அமைதியிருந்திருக்கிறது.. நான் அழுதவுடன் அம்மா பாடியிருக்கிறார்கள் ஆமாம் தாலாட்டும் இருந்திருக்கிறது.. அம்மா சிறுகரண்டியில் பாலூட்டியிருக்கிறார்கள்.. அதற்கு முன்பே அண்ணுக்காக வாங்கிய வெள்ளிப் பாலோடை இருந்திருக்கிறது.. நான் நடைபயிலும் முன்பே நடைவண்டியிருந்திருக்கிறது.. அப்போது தான் உணர்ந்தேன் எனக்கு முன் அண்ணன் இருக்கிறானென.. என் வாயிலிருந்து பேச்சுக்கள் பிறக்கத் தொடங்கின.. அண்ணன் எனக்கு முன்பே பேசிவிட்டான் எனச் சொன்னார்கள்.. எனது சொல்லுக்கும் செயலுக்கும் முன்பே அனைத்தும் இருந்திருக்கின்றன.. திடீரென முதுகில் ஒரு கத்தி பாய்ந்தது.. உலோக காலத்திலிருந்தே முதுகில் கத்தி செருகுவதும் இரு...
கடந்த இரண்டு மாதங்களாக திருச்சியில் இல்லை. மீண்டும் காஞ்சிக்கு வருவதற்காக பேரூர்ந்து அட்டவனையை கைபேசியில் தேடுவது கொடுமை. கூகுளில் தேடுவதைத் தவிர வேறு கவனமீர்க்கும் செய்திகள் வந்துவிடுகிறது. இன்றைய ரியலிஸம் இது. ரியலிசத்திற்கும் சர்ரியலிஸத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என சி. சு. செல்லப்பா பதிவு செய்திருக்கிறார். ஒருவழியாய் நகரப்பேரூர்ந்து வழி சத்திரம் பேரூர்ந்து நிலையம் வந்தாகிவிட்டது. காலை ஒன்பது மணிக்கே வெயில் உக்கிரம் காட்டியது. வெயில் ரியலிஸமெனில் உக்கிரம் சர்ரியலிஸமென மனம் சொன்னது. சரி சர்ரியலிஸத்திற்கு அமித நடப்பியல் எனும் வார்த்தை பொருத்தமற்றதென சிசுசெ சொன்னது பொறிதட்டியது. அக்கண அடர்வில் பத்மா கபே ஹோட்டலுக்குள் நுழையவியலவில்லை. சட்டையிலும் சுரிதாரிலும் மூவர்ணக் கொடியின் துணுக்கு அணிந்தவர்கள் துளியுண்டிக்காக வரிசையில் நிற்கிறார்கள். காஞ்சி செல்ல பஞ்சப்பூர் செல்ல வேண்டுமாம். மத்திய பேரூந்து நிலையத்தைப் பெயர்த்தி பத்து கி.மீ தொலைவில் வைத்துவிட்டார்களாம். நாங்கள் மூத்தக் குடிமக்கள் பெயர்த்தியைக் காண புறப்பட்டுவிட்டோம். ரியலிஸம்..அதாவது நடப்பியல் உண்மை. திருச்சி சந்திப்பு ...
கச்சி வரதனும் காலப் பனவனும்..1 அரங்கன் தன் திவ்ய திருத்தலங்களுக்கு பக்தர்களை அழைத்துக் கொண்டே இருக்கிறான். அழைப்பு என்பது மானுட வருகைக்கான மரியாதை. உறவுகளுக்கான அழைப்பு விடுத்தல் அவர்களுக்கான மரியாதையின் பங்கை பங்கமின்றி வழங்குதல். அழைப்பை பெற்ற மானுடம் வருகை புரிந்து வாழ்த்துவதோ இல்லை வேறு கடமையாற்றுதலோ பிரதிமரியாதையின் புகுபதிகை. ஆனால் திருத்தலங்களுக்கான அரங்கனின் தெய்வீக அழைப்பு தங்கத் தாம்பாளத்தில் வெற்றிலைப் பாக்கு பழம் பணம் வைத்துத் தரப்படுவதில்லை. காலச் சுழற்சியில் மானுடக் கால் இடறுகையில் தெய்வத்தின் அழைப்பு தரப்படுவதை உணர்கிறான். உடனே அங்கு சென்று தன் வணக்கங்களையோ இல்லை தனக்கு விதிக்கப்பட்ட புனித கடமைகளையோ நிறைவேற்றுகிறான். திருப்பதி மற்றும் ஏனைய திருத்தலங்களுக்கு அன்றாடம் கூட்டம் கூட்டமாய் வருகை தரும் மானுடங்களின் கைகளில் அரங்கனின் அழைப்பிதழ் அருவ வடிவில் இருப்பதைக் காண இயலும். இந்தப் பனவனுக்கும் காஞ்சியின் வரதனெனும் திரு நாமம் கொண்ட அரங்கனின் அழைப்பிதழ் அனுப்பட்டிருக்கிறது. அதுவும் ஐம்பதாண்டுகளாய் அவனால் வாசிக்கப்படாமலே வாழ்வின் கால மாடத்தின் ஒரு மூலையில் கிடந்திருக்கி...
உடல் நிலை சரியில்லை எனில் மருத்துவ மனை செல்ல வேண்டுமெனும் மையவாதம் நேற்று மனதில் முரண்பாடுகளைச் சமைத்தது. மருத்துவமனைகள் நேர்மையாக செயல்பட்ட நவீன சமூகவியல் உடைக்கப்பட்டு அப்படியான விழுமியங்கள் பணக்கட்டுகளோடு விழுங்கப்பட்ட பின் நவீன இருததலியல் காலமிது. நாம் செயலற்றவர்களாகி செயற்கை நுண்ணறிவின் தயவில் வாழத் தொடங்கிவிட்டோம்.. நிகழில் கற்பனைக்கும் நிஜத்திற்கும் இடையிலான அகவய இடைவெளிகளின் மீது பாய்ச்சப்பட்ட வெளிச்சம் மங்கத் தொடங்கிவிட்டது. மருத்துவ மனை சென்றால் உடல் நிலைத் தொய்விற்கான காரணிகள் உண்மைத் தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் சோதிக்கப்படுமா எனும் சந்தேகம் கார்ப்பரேட் மயமான பின் மருத்துவ அமைப்பியல் வாதக்கருத்து மீன்களை தூண்டிலின்றியே ஒவ்வொன்றாக சிந்தனைத் தரையில் தூக்கி வீசியபடியே இருக்கிறது.. துடிதுடிக்கும் மீன் வாதங்களை வீண் வாதங்களென புறந்தள்ள பின் நவீன மருத்துவ இயலில் அனுமதித்தல் இயலவில்லை.. உடல் நிலை சரியில்லாத நிலையில் உதவியாளர் ஒருவருடன் வரும் நோயாளிக்கு முன்னுரிமை தரும் மருத்துவ தர்க்க வரலாறு தோற்றுப்போன இக்காலகட்டத்தில் தனியொரு நோயாளியாய் தன் காலில் தானே நடந்து மருத்...