ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்.. பாகம் 6/15
நேற்று இறந்த இலைஇன்று மண்ணாகவில்லை
மற்றும்அது உதிர்ந்து பின் அதே இடத்தில் அதே வடிவில்
உயிர்தெழுதலைக் காட்டுவதை ஒப்புக்கொள்ள மாட்டான்
அறிவு ஜீவித அண்ணன்...
மரத்தின் இரகசியமான வேர் மொழியில்
வெட்டிப் புதைத்தவை துளிர்ப்பைக் கொண்டிருக்க
ஆழத்தில் புதைந்த ஆற்றல்கள்
என்றோ ஒரு நாள் எரிமலை துவாரத்துவழி
நெருப்பாய் பிறப்பதை எந்த அண்ணனாலும்
பரிசோதனைக் கூடங்களில் நிரூபிக்க வியலாது..
ஆறு கடலில் தன் இறுதி மரணக் குளியலை முடித்து
துளித்துளியாய் வானில் எழுந்து தலை துவட்டுவதைத்தான்
என் அண்ணன் மழையெனும் முட்டாள் எனச் சொல்கிறான்..
ஆனால் அது மறுமையின் இன்னொரு புரிதல் துளியென
புலம்பிக்கொண்டிருக்கிறான் ஒரு முட்டாள்..
மறுமையின் நிஜத்தை அமைதி மார்க்கத்தார்
எல்லோரும் ஒரு நாள் வந்த இடத்திற்குச்
திரும்பிச் செல்ல வேண்டிய நாள் உண்டு என்பதை
ஒப்புக் கொள்ளும் அந்த அதிபுத்திமான்
தமிழகம் மீண்டும் தேசீயத்திற்கு திரும்பும்
என்பதை ஒப்புக் கொள்வதில்லை..
கல்லறையின் அமைதிக்குள் ஷேக்ஸ்பியர் புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டிருக்கிறார் என அவன் தான் எழுதினான்..
அவருக்கு முன்பே சிலுவையிலிருந்து மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்ததை மறுமை இல்லையென மறுக்க
அந்த புத்திமானின் எழுத்திற்கு தெம்பும் திராணியும்
இல்லையென்பதுதான் பிரபஞ்சப் பேரவவலம்..
இயற்கை எந்த மதத்தின் மொழியிலும் பதில் சொல்வதில்லை.
இயற்கையை பேரண்டத்தின் முட்டாள் எனக் கூவும்
அதி புத்திசாலியின் பின்னால்
ஒரு கூட்டம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பான்..
ஆனால் நிஜம்மாகவே அவன் பின்னால்
ஒரு கோவிலோ மசூதியோ தேவாலயமோ இந்த மண்ணில்
உயிர்தெழுந்து கொண்டே இருப்பதை
அவனால் ஒப்பவியலாது...
போகட்டும்..
அவைகளை கட்டி எழுப்பிக் கொண்டிருப்பவர்களின் முட்டாள்தனத்தை
அவன் பெருந்தன்மையோடு தினமும் மன்னித்துவிடுகிறான் என
கடப்பாட்டு எறும்புகளும் கரையான்களை விரட்டிவிட்டு
பட்டாவின்றி புற்றாக்கிரமிக்கும் பாம்புகளும் அறியும்..
உலகத்தின் ஒரே ஒரு புத்திமானுக்குத் தெரியும்..
விதையை உடைத்தது மறுமை துளிர்த்தெழும்..
இலைகளின் நிலையாமையை உதிர்த்து
ஒரு ஆன்ம விருட்ச்சம் மீண்டும் உயிர்த்தெழும்... என..
மொழியின் கதவை சதா தட்டிக் கொண்டிருக்கும்
இம்மையின் முட்டாள்கள்
விஸ்வரூபம் காணும் முன்
மூன்று கதவங்களின் திறப்பைத் தரிசித்தாக வேண்டும்..
அதைத்தான் பாரம் சுமந்தவன்
இளைப்பாறியே ஆகவேண்டுமென
இன்னொருவன் உரத்துக் கூவுகிறான்..
அந்த புத்திசாலி திறக்க வேண்டிய கதவங்கள்..
இருளுக்குள் புதைந்த கர்ம விதை புரளும்
தோண்டப்படாத மண் கதவம்..
அநியாய இலைகள் உதிர்ந்து பின்
நீதி ஒளி அடைத்திருக்கும் பின் கதவம்.
முட்டாள் தனம் அழுகி துர்நாற்றம் வீசும்
மனப்புண்ணிற்கு களிம்பு பூச
காய்ந்துதிர்ந்த ஆன்ம வெளிச்சம் அடைபட்டிருக்கும்
இந்து கோவில்களின் பொன் வேய்ந்த புனிதக் கதவுகள்.
ஆனால்
அந்த மூன்று கதவுகளுக்குப் பின்னாலும் இருள் மட்டுமே இருக்கும்..
முட்டாள் வால்நட்சத்திரங்கள் தங்கள் ஒளியை உதிர்த்துவிடுவதை
அவன் கேலி செய்கிறான்..
ஆயிரமாயிரம் ஒளியாண்டுகளாய் ஆன்மீக நட்சத்திரங்களின்
ஒளி அதிபுத்திமானின் இமை திறக்கும் அளவிற்கு
வலுவற்றவைகள் தான்..
என்ன செய்வது...
திருட்டுப் பூனைகள் திருஷ்ட்டிப் பூசணியை கட்டும்
முட்டாள் வீடுகளில் கூட மூஞ்சூருகளைத் தேடித் திரியும்
புத்திசாலிகள் என்பதை இம்மையில்
அந்த அதிபுத்திமான் அங்கீகரிப்பதே இல்லை..
ராகவபிரியன்...
Comments
Post a Comment