முக நூலில் காணப்படும் தேவதாசிகளைப் பற்றிய பதிவுகள் அதிர்வைத் தருகின்றன.. தற்கால பின் நவீன வாழ்வியலின் நாகரீக மாற்றங்கள் குடும்ப அமைப்பியல் முறைமையை சிதைக்க முயல்வதைக் காணமுடிகிறது.. திருமணம் தாண்டிய உறவிற்கு வரலாற்றில் மட்டுமல்ல நிகழ் நடப்பியலிலும் மரியாதை கிடைக்கப்போவதில்லை..
வரலாறு என்பது கடந்த காலத்தின் புகைப்படம் அல்ல.. நிகழ்காலம் கடந்த காலத்திற்கு அளிக்கும் ஒரு மறுவாசிப்பு. அந்த வகையில் தேவரடியார் மரபை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வெறும் பண்பாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் பூடகமாக முன் வைக்கும் வெண்ணிலா மற்றும் ஜெமோவை கண்டித்தாக வேண்டும்..
தேவரடியார் மரபில் கலை இருந்தது.. இசை இருந்தது.. நடனம் இருந்தது... கோயில் சடங்கு இருந்தது என்பதெல்லாம் சிந்தனை அவலத்தை சந்தனம் பூசி மறைக்கப்பார்க்கும் கயமை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.. சில காலகட்டங்களில் தேவரடியார்களுக்கு பொருளாதார வளமும் சமூகச் செல்வாக்கும் இருந்திருக்கின்றன. தவனேஷ் எனும் வரலாற்று ஆய்வர்..அவர்களை வெறும் கோயில் நடனக் கலைஞர்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் அடக்க முடியாது என்று பேசுகிறார்.. அவர்கள் கலைஞர்கள் அரண்மனைச் சூழலின் பங்கேற்பாளர்கள் சமூகச் சடங்குகளின் செயற்பாட்டாளர்கள் எனப் பல அடையாள அட்டைகளை அந்த பரிதாபத்துக்குரியவர்களின் கழுத்தில் தொங்கவிடுவது வரலாற்றுத் திரிபு மட்டுமல்ல ஆய்வியல் குற்றமும் கூட.
ஆடல்மகள் என அழைக்கப்பட்ட மணிமேகலை துறவறம் பூண்டதை இப்படிப் பேசுகிறான் கவிப்பாட்டன் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன்.
"மாபெரும் கணிகையர் கோலம் கொள்ளாள்;
கோலக் கூந்தல் குவளை சூடாள்;
தாலப் புல்லின் தவாஅ நோன்பினள்;
அறவணன் அடிகள் அருளறம் கேட்டும்,
துறவணி பூண்ட தொல்நெறி படர்ந்தனள்;
மணிமே கலைதன் வான்துயர் கூரக்கணிகையர் கோலம் காணா தாக!"
பண்டைய இலக்கியங்களைச் சரியாகப் படிக்காமல் கலையின் வரலாற்றை மீட்டெடுப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு தொலைந்த அவமான மரபை மீளுருவாக்கம் செய்ய முயல்பவர்களின் ஈனச் செயலை முறியடித்தே ஆகவேண்டும்..
ஒரு இணைய இதழ் ஆண் விபச்சாரியை குடும்பப் பெண் ஒருவர் வீட்டிற்கு அழைத்து வந்து தனது பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்வதாக புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் எழுதிய சிறுகதை ஒன்றை பிரசுரித்திருந்தது..
இந்து மத தொன்மையான புனித ஆன்மீக நெறிமாறா கூட்டுக் குடும்ப வாழ்வியலைச் சிதைத்தால் மட்டுமே மத மாற்றுதல் சுலபமாகும் எனும் தீய எண்ணம் இப்படியான நிகழ்வுகளை கட்டமைப்பது கண்டனத்திற்குரியது.. அவர்கள் தீயசக்தியின் பின்புலம் தரும் பலத்தால் இப்படி செயல்படுகிறார்கள்.. அவர்களின் எண்ணம் ஒரு போதும் உருவம் கொள்ளாது.. மாறாக கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல தேவரடியாரை மீளுருவாக்கம் செய்ய நினைப்பவர்கள் தான் அப்படியானவர்களாக இருக்குமோ எனும் எண்ணம் தான் மக்கள் மனதில் உருவாகும்...
தீய சக்தியின் தூண்டுதலால் நிகழ்த்தப்படும் இப்படியான வரலாற்று இலக்கிய திரித்துக் கூற்றுக் கூத்தாடிகளின் கால்களை அவர்களின் கால்களுக்கு சதங்கை கட்டும் முன்னே வெட்டி வீழ்த்தி விட வேண்டும்.. அப்போது தான் முத்துலெட்சுமி ரெட்டி போன்றவர்களின் தொண்டுக்கான வரலாற்று மரியாதை மீட்டெடுக்கப்படும்..
ராகவபிரியன்
Comments
Post a Comment