Posts

Showing posts from May, 2023
Image
  கஸ்தூரி ரெங்கன் வீசும் கல்யாண வ்யஜ்னம்...1 அதிகாரம் நோக்கிய நகர்வில் காலில் தட்டுப்படும் எதையும் உதைக்க அல்லது அப்புறப்படுத்த எவரும் தவறுவதில்லை...அறம் உட்பட...தர்மம் நியாயங்கள், நீதி, நேர்மை என அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டுத்தான் அதிகாரத்தை அனுபவிக்க முடிகிறது... அதிகாரத்தை அடைந்தவன் தனக்கான உலகம் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறான்...அவனின் ஆழ்மனம் அதிகாரத் துய்ப்பினால் கிடைத்தை அல்லது கிடைக்கப்போகும் இன்பத்தை நோக்கியே அவனை நகர்த்துகிறது...அவ்வாறான நகர்வில் அவன் அதை தனது உள ஆற்றலாக நம்பத்தொடங்குகிறான்...இங்கே நம்பிக்கை என்பதும் நிஜம் என்பதும் வேறுபடுவதை அதிகார போதை ஆட்டத்தில் இருப்பவனால் உணர்ந்து கொள்ள இயலாமல் போகிறது... குடும்ப அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்கு நோக்கிய ஒருவனின் நகர்வு அவனின் ஆழ்மனதில் மூன்று எண்ணங்களை உருவாக்குகிறது...அவனின் தீய எண்ணங்களுடன் செயலும் இயைந்து போவதென்பது காலத்தின் மாபெரும் துயரம்...முதலாவதாக அவன் தான் மூத்தவன் என்பதால் அதிகாரம் அவனிடம் கொடுக்கப்படவேண்டுமென்பது கட்டாயமாகிறதென நம்புகிறான்...அப்படியான அவனின் எண்ணம் அவனுள் அகங்காரத்தை விதைக்கிறது...அகங்க...
Ragavapriyan s books could be viewed by clicking the following address  https://www.amazon.com/author/ragavapriyanthejeswi
Image
  அறுபத்து நான்கு வயது கன்னிசாமியின் சபரி அனுபவம்…14 பகவதி அம்மன் ஆகச் சாதாரண கேரளத்தின் ஜரிகை வேய்ந்த வெள்ளைப் பட்டுப் புடவை உடுத்தியிருக்க வேண்டும்…அம்மனைச் சுற்றி அவ்வளவு பிரகாசம்…அதையும் மீறிய அம்மனின் முகத்தின் புன்னகை அ அ யை மெல்ல எழ வைத்தது…இப்போது அம்மன் சைகை செய்கிறாள்…அப்படியே இருக்கும் படி…அ அ பதில் சொல்ல உதடுகளை அசைக்க முயற்சிக்கிறான்…சுற்றி இருப்பவைகளை நகர்பனவற்றை கவனிக்க நினைத்து கண் விழியை சுழற்ற முயற்சிக்கிறான்…பார்வை அப்படியே அம்மன் மேல் அசையாமல் பதிந்து கிடக்கிறது…அம்மனின் புன்னகை மெல்ல உயர்ந்து சிரிப்பாக வெடித்து உச்சம் தொடுகிறது…அம்மன் அப்படிச் சிரிக்கிறாள்…மிகுந்த சிரமப்பட்டு உதடு குவித்து அம்மனிடம் பேச முயற்சிக்கிறான்… குருசாமி அ அ யை அசைத்து எழுப்ப…திடுக்கென எழுந்து பேந்தப் பேந்த முழிக்க…ஏன் சாமி என்னவோ கத்தினீங்க…என்று அவர் கேட்டவுடன்…அ அ க்கு வெட்கமாகப் போயிற்று…இதை…ஆற்றுக்கால் பகவதி அம்மன் தரிசனம் தந்ததை… சொன்னால் இவர் நம்புவாரா…என சில நொடிகள் யோசித்தவன்…சொல்லிவிடுவோம்…என முடிவெடுத்தான்… சாமி இந்தக் கோவிலோட பகவதி அம்மன் இப்ப கனவுல வந்தாங்க…பயந்து போயிட்டேன...
 யானை வண்டி -------------------- வாழ்வின் வண்டிப் பயணத்திற்கான பாதைகள் தூர்ந்து கிடக்கின்றன... வறுமையானையுடனான என் நடையின்  ஓசை நிறுத்தமொன்றில் பிச்சைக் காரனொருவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்... குறுக்கிட்ட வண்டிகளிலெல்லாம் கூட்டம் வழிய விளிம்பில் தொங்கிய மனிதக் காலின் உதைபட்டு யானை உருண்டு கிடக்கிறது... ஆதியின் குளிர்ந்த  வளமைமிகு பனிமலையில் எஸ்கிமோ வண்டிகளை இழுத்த பனி நாய்கள் சுற்றி நின்று குரைக்க என் யானை ஓடத்துவங்குகிறது... கைவிடப்பட்ட மாட்டு வண்டிகளின் நுகத்தடியும் சக்கரங்களும் யானை வண்டிக்குப் பொருந்திப் போவதில்லை... ஏழு குதிரை பூட்டிய சூரிய வண்டி என் யானையைக் கண்டு பண மலையின் பின் பக்கம் ஒளியத் துவங்குகிறது...  என் வறுமையானையுடனான தேசிய நெடுஞ்சாலைப் பயணத்தில் சாலையோர உணவகங்கள் மூடிக் கிடக்கின்றன... சாலையின் மையத்தடுப்பில் அபூர்வமாய் பூத்திருந்த ஒற்றை ரோஜாவையும் யாரோ பறித்துச் சென்றுவிட்டார்கள்... வறுமை யானையைப் பூட்டி காலத்தை வெல்லும் வேகத்தில் என்னை ஏற்றிச் செல்லும் வண்டியைச் செய்ய முடிந்த தச்சனைத் தெரிந்தவர்கள் முகவரி தாருங்கள்... பயப்படாதீர்கள் யானை ஒன்றும் ச...
Image
  யானைப் பார்வை ----------------------- வறுமையானை இன்னும் காண்பதற்கான அரிய செல்வங்களுக்காக அவ்வப்போது இமை சுருக்கிக் கொள்ளும்... தொலைக் காட்சிகளில் காட்டப்படும் சத்து உணவின் பிரும்மாண்ட உருண்டைகளுக்கான அதன் நிஜ தும்பிக்கைத் துழாவல் வாழ்வு வானத்தில் சுற்றும் ஒவ்வொரு கோள்களையும் தொட்டுத் திரும்பும்.... தங்கச் சங்கிலியில் தான் கட்டப்பட்டிருப்பதான பிரமை போதையில் நான்கு கால்களும் தரையில் பாவாமல் அப்படிக் குதித்துப் பார்க்கும்... செழிப்புக் கரும்பைச் சுமந்து செல்லும் வாகனங்களை மறிக்கும் போராட்டங்களுக்கான அதன் மன ஒத்திகையின் மத நீர் காய்ந்துவிட்டதாவென தும்பிக்கைத் தூக்கி ஒருமுறை தடவிப் பார்க்கும்... யானை கைவீசி நீர் அடித்து உருண்டும் புரண்டும் குளிப்பதற்கான ஆர்பரித்தோடும் நதியொன்றையும் அது இது நாள் வரை பார்த்ததேயில்லை... அது கட்டிக் கிடக்கும் கொட்டாரம் வரை வந்து செல்லும் பணச் சிங்கங்களின் வளம் கொழிக்கும் காடு காட்டுவதான பொய்கள் அதன் இமைகளில் விழுந்து பார்வையை மறைப்பதுதான் இந்த யுகத்தின் மாபெரும் யானைச்சோக அவலம்... வளமை தேடியலையும் என் யானைக்கு கிட்டப் பார்வைதான்... அதன் பார்வை கிடக்கட்டும...