Posts

Showing posts from July, 2021
Image
  தனி மனித மனம் தனக்கிழைக்கப்பட்ட அல்லது தான் அனுபவித்த துன்ப நிகழ்வுகளை மறப்பதற்கே முயல்கிறது...சமுதாய பொதுமன எண்ண ஓட்டங்களிலும் அதை ஒற்றியே துன்ப நிகழ்வுகளோ அல்லது வெறுக்கத்தக்க நிகழ்வுகளோ வரலாற்றில் பதியப்பட்டிருந்தால்... அதை மறக்கவோ அல்லது சிந்தனையிலிருந்து வலிந்து அகற்றவோ நிகழ் சமுதாய அதிகார அரசியலமைப்புகளால் நுட்பமாகக் கற்றுத்தரப்படுகின்றன... மதம் சார்ந்த தாக்குதல்கள் இந்திய துணைக் கண்டமெங்கும் அழிக்க முடியாத வரலாற்று துன்ப எச்சங்களை விட்டுச் சென்றிருக்கின்றன...எனினும் துன்பம் தந்த நிகழ்வைக் கொண்டாட்டமாய் அல்லது வணங்கத்தக்க நிகழ்வாய் மாற்றியமைத்துவிட்டால் ஒரு சில நூற்றாண்டுகள் கடந்த சமுதாய மாந்தர்கள் ...தங்கள் வாழ்வின் நெடும் பயண எண்ணங்களில் அந்நிகழ்வைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களாகவோ அல்லது நசுக்கப்பட்டவர்களாகவோ வாழ்ந்து முடிந்துவிடுவார்கள்... இது அரசியலின் அதிகாரத்திற்கான அவசிய கருவியாக பயன்பட்டதை மறுப்பதற்கு இடமில்லை...வரலாற்றின் கணக்குப் புத்தகத்தில் இஸ்லாமிய அரசர்களால் சிதைக்கப்பட்ட கோவில்கள் கணக்கில் அடங்காதவை...ஏன் கோவில்கள் அழிக்கப்படவேண்டுமென்ற சிந்தனையை இன்ற...
Image
  வேகமெனும் பூச்சி உன்னுள் எப்படி திடீரென உருக்கொள்கிறது? விரிக்க முடியாத வாழ்வின் சாலையில் ஏன் அதிவேகம் கூட்டி அப்படிச் செல்கிறது? சாலையை அகலப்படுத்துதல் சரளைகளை கொட்டி சமனித்தல் தார் உருக்கி ஊற்றி சக்கர நகர்விற்காக தயார் செய்தல் உன் ஆன்மா பார்த்திராதா குருட்டுச் செயல்களா...? உன் சக்கரங்களை சுழலச் செய்வதில் குழப்பமற்றிருக்கிறாயா... உன் ஆணவமோ அறிவோ கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறதா...? உன் அனுபவமும் தியாகமும் வேகமாணியில் படிப்படியாய் மேலெழும்பி உச்சம் தொட்டிருக்கிறதா? இதெதுவும் இல்லாத ஒரு பூச்சியை நீயாக உருவாக்கி சாலையில் பறக்க விட்டிருக்கிறாய்? பார் இப்போது சாலையில் பயனிப்போரின் பார்வையில் ஆகச் சிறிய பூச்சியாய்....நீ ராகவபிரியன்
Image
 காலத்தின் ஆற்றங்கரையில் நிற்கிறேன்- குதித்தோடும் நினைவு வெள்ளெமென பெருகி நுரைத்து நகர்ந்தபடியிருக்கிறது- துணி துவைக்கும் சப்தங்களை சதா எழுப்பும் சங்கீதா... மெளனமான மீனொன்றாக காலைக் கவ்வுகிறாள்... கொரோணாவின் அலைகளில் அவள் மரணம் என் சப்தங்களை துவைத்தெடுக்கிறது.... சப்தமின்றி அந்த மீன் நகர்ந்து செல்ல... நதி விரைந்து கொண்டேயிருக்கிறது... சந்தியா வந்தனம் செய்யும் சடகோபனின் அர்க்கியங்கள் மேலேறி மிதக்கின்றன... விண்ணை நோக்கி  துளித்துளியாய் புறப்பட்டு என் கண்ணின் வழியே  பெருமழையாய் நதியில் இறங்குகிறது... மழை ஆற்றில் விழும் சப்தம் கோவிந்தம் தர்பயாமி.... என ஒரு துவக்காய் என்னைத் தள்ளிக் கொண்டே செல்கிறது... காலைக் கவ்விய அந்த சடகோபமீனின் உடலெங்கும் நாமங்கள் வழுக்கு கின்றன... கொரோணாவின் இரண்டாம் அலையின் நுரை ஆற்றுப் படிகளில் அப்பிக்கிடக்கிறது.... கால நதியின் சுழித்தோடும் மரணங்கள் மிதந்து கொண்டிருக்கும் மேற்பரப்பிலிருந்து திடீரென ஒரு மீன் துள்ளி வெளிவந்து  கரைந்து  நீந்தத்தொடங்க.... படியில் கிடத்திய துண்டை மீண்டும் தோளில் போர்த்தி குளிக்காமல் திரும்புகிறேன்... அணிச்சையாய் த...