Posts

Showing posts from August, 2022
Image
  அம்பாஸிடாரும் அளவற்ற புகையும்... -------------------------------------------------- கிருஷ்ணயருக்கு சென்னை செல்ல வேண்டும்...அதுவும் அவருடைய அம்பாஸடார் காரில்...அவர் தான் ஓட்டுவாராம்... மாமி பங்கஜம் தோள் பட்டையில் மோவாயை இடித்து இதுடித்துச் சொன்ன தகவல் மாமிக்கு சென்னை செல்ல பிடிக்க வில்லை என்றே எல்லோரும் எடுத்துக் கொண்டார்கள்... விஷயம் அதுவல்ல....மாமா வண்டி ஓட்டும் போது மாமி ஜிபிஎஸ் ல் ரூட் பார்த்துச் சொல்ல வேண்டும்...ரைட்ல திரும்புங்கோ...என்று சட் டென சொன்னால் ஒரு சடர்ன் ப்ரேக் போட்டு நிறுத்துவார்...சீட் பெல்ட் போட ஸங்கோஜப்படும் மாமி டேஸ் போர்டில் தலை மோதி நெற்றி வீங்கி விடும்...சொல்லாமல் விட்டாலோ மண்டு மண்டு ஒரு புண்ணாக்கு லேடிய என்னோட தலையில் கட்டிப்புட்டான் ஒங்க அப்பன் னு கத்துவார்....அதான்... மாமி அப்பவே பியுசி பெயில்...இருந்தாலும் பொண்ணு கத்துக் குடுத்த மொபைல் ஒர்க்கிங் வைச்சுண்டு அப்பப்போ புத்தூர் அக்ரஹாரத்து வாசல்ல ஜெர்க் குடுத்துண்டிருப்பாள்... வேற வழியில்ல...மாமா வண்டிய கிளப்பி ஹார்ன் அடிச்சுண்டே இருக்கார்...ரெங்கநாதா காப்பாத்துடா என்று சொல்லியவாரே ஒரு பயம் கலந்த புன்னகை ...