கடந்த ஓராண்டாய் பண்டிகைகள் கொண்டாடும் இவனதும் இவனது குடும்பத்தினமானதுமான தொடர் சங்கிலி அறுபட்டுக் கிடந்தது..மீண்டும் அதைக் கோர்க்கும் புதிய தொடக்கத்திற்கான... புதிய வாழ்வின் அறுபடலற்ற மகிழ்வின் வளமையின் மீள் வருகைக்கான... அதீத காலத்தின் முடிவற்ற தேடல் வாழ்வு... இந்த காஞ்சியின் எல்லையற்ற பிரபஞ்சப் பெருவெளியில் இன்றைய காலையில் புத்தம் புதிதாய் மீள் தொடக்கத்தை பிள்ளையார் சுழி போட்டு இயக்க வைத்தது..

விநாயகர் வழிபாடு என்பது வெறும் பூஜை விதிகளின் நேர் கோடுகளுக்குள் பயணிக்கும் மரபு சார்ந்த அவசியம் மட்டுமல்ல; அது மனித இருப்பின், இந்தப் பிரபஞ்சத்தின் மற்றும் சம்ஸ்கிருதம் தந்த ஆதி தமிழ் மொழியின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஒரு குறியீட்டியல் களம் என திரித்து பரப்புரைக்கப்படுவதை மாற்றத்திற்குள்ளாக்க வேண்டிய கட்டாயம் எனும் எண்ணம் இவனை எழுப்பியது.. பின்நவீன தமிழக வினாயக வழிபாடு மரபார்ந்த ஆன்மீகத்தை அதன் மையத் தன்மையிலிருந்து விடுவித்து பிரியாணி விற்கவும் அன்னிய மத ஊடுறுவல் உத்தியைப் புகுத்தவுமான கயமையை வேரறுக்கும் கடமை முன்கால் வைத்தால் இவனால் முன் வைத்த காலை பின் வைக்கவியலவில்லை...
பண்டைய வினாயக சதுர்த்தி தினங்களில் கிராமங்களில் குயவர்கள் வினாய அச்சில் ஒவ்வொரு வீட்டிற்கும் களிமண் வினாயகரை காலையிலேயே கொணர்ந்து தருவார்கள்.. வினாயக உருவ வழிபாட்டு மையம் திராவிட நாத்திக புகுத்துதல்களால் கட்டுடைக்கப்படு தெரு ஓரங்களில் களிமண் குவிக்கப்பட்டு வினாயக அச்சில் உருவாகும் வினாயகனை பலகையிலோ இல்லை தாம்பாளத்திலோ பயபக்தியுடன் கொணர்ந்து கிழக்கு நோக்கி வைக்கும் கலாச்சாரம் புகுத்தப்பட்டது.. மையமின்னை உடைபடுகையில் அதன் பெயரை பின் நவீன யுகம் பன்மைத்துவ எழுச்சியென பசப்புவதை புரிதலுக்கு உட்படுத்துதல் சிரமம்.. ஆனால் பன்மைத்துவமும் பின் நவீனத்துவமும் எந்தவொரு ஒற்றை மையத்தையும் நிஜமாய் நிராகரிக்கிறது என்பதை இன்றைய காஞ்சியின் வீதிகளில் காணுதல் சாத்தியமானது.. பத்து அடி இடைவெளியில் களிமண் குவியலுக்கு இடையில் அச்சு ஒன்றுடன் ஒரு குயவ இளைஞன் அமர்ந்திருக்கிறான்.. அடுத்ததாக பிஓபி வண்ண வண்ண வினாயகர்கள் நெகிழி உறைக்குள் வடிவ பன்மைகளுடன் நெகிழிக் குடைகள்.. நெகிழி அருகம் புல் மற்றும் நெகிழி உதிரிப் பூக்கள் சூழ இன்னொரு சீசன் வியாபாரம்.. அடுத்ததாக காய்ந்த களிமண் வினாயகர்கள் வண்ணம் தீட்டப்பட்டு குவியலாக கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.. இங்கே வினாய தத்துவமும் பின் நவீன யுகத்தின் மையமின்மையை ஒரு சில சத நாத்திகப் புகுத்தலுடன் நெகிழித் தன்மை பூசப்பட்டு பிரகடனப்படுத்துகிறது.
வினாயகன் கணபதி எனும் பெயர் கொண்டவர்.. அதாவது கணங்கள்.. வாழ்வின் விதிக்கப்பட்ட கணங்கள் உருவகப்படுத்தப்பட்டு அதற்கு அதிபதியாய் நியமிக்கப்பட்டவர்.. அதாவது அவரே தொடக்கமாகவும் அவரே முடிவாகவும் இருக்கும் அதே வேளையில், எந்தவொரு குறிப்பிட்ட வடிவத்திற்குள்ளும் அவரை ஒடுக்கி சிறுக்க வைத்தலும் கடினம்.. அவரை மஞ்சள் பொடி, களிமண், வெள்ளெருக்கு வேர், கருங்கல், சர்க்கரை என எதில் வேண்டுமானாலும் ஆவாகனம் செய்தால் அவர் தன் விஸ்வரூப நெடிய வடிவத்தைச் சுருக்கி பூஜாதளத்தில் கால்மடித்து அமர்ந்து கொள்வார் என்பது நிரூபணமான உண்மை.. ஆனால் உருவ சுருக்குதல் என்பது நிஜ வடிவங்களின் புனிதத்தன்மையை சிதைக்காமல் பிரபஞ்சத்தின் எல்லா அணுக்களிலும் நீக்கமற நிறைந்துள்ள பிரம்மத்தை சமனப்படுத்தும் தத்துவம்.. இதுவே நம் ஆன்மீக கலாச்சார உயர்வின் உடைக்கவியலா சுரண்டவியலா பிரதிமை..
வினாயகன் எல்லோருக்குமானவன்.. எவ்விடத்திலும் இருப்பவன்.. தடைகளை நீக்கி சனாதன தர்மத்தை உயிர்த்திருக்க வைக்க ஒவ்வொரு ஆற்றங்கரையிலும் வீதிமுனைகளிலும் வீட்டு வாசல்களிலும் ஏன் அலுவலக வரவேற்பறைகளிலும் புல் பூண்டுகளிலும் மாக்கல் கூழாங்கள் என எல்லா திடப்பொருள்களிலும் ஆதிமுதல்வனாக அமர வைக்கப்படுவதை இன்னும் ஆயிரமாயிர ஆண்டுகாலம் எந்த போலி மதச்சார்பின்மை ஆட்சியாளர்களாலும் அசைத்துக்கூட பார்க்கவியலாது. வினாயகன் உயர்நிலை தாழ்நிலை வளமை ஏழ்மை எனும் இருண்மைகளை உடைத்து எளிய களிமண்ணிலும் அமர்ந்து மோதகம் சாப்பிடும் குறியீட்டு விளையாட்டைத் தொடர்ந்து கொண்டே இருப்பான்.. மனித உடல், யானை முகம், பெருவயிறு, ஒற்றைத் தந்தம், எலி வாகனம் என முரண்பட்ட குறியீடுகளை ஒன்றிணைத்து நாத்திக கயமைக்கு அன்னிய மத மாற்றத்திற்கு துணைபோகும் அயோக்கியத் தனத்திற்கு ஆப்புமணி அடிப்பவன் வினாயகன்..
சதுர்த்தி பூஜைக்காக இவன் வினாயகன் முன் அமர்கிறான்.. பெயர்த்திகள் புத்தாடை அணிந்து அர்ச்சனை புட்பங்களுடன் தயாராக இருக்கிறார்கள்.. ஆனால் பூஜைக்கான வெண்கல மணி எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.. பூஜைக்கான மணியோசை என்பது துர்புத்தியுடன் மதத்தைக் கேலி செய்யும்.. நம் கலாச்சாரத்தை துண்டிக்க சதா முயன்று கொண்டிருக்கும் நடு நிலை பேசும் அயோக்கியத்தனத்திற்கான ஆப்புமணியோசை.. என்பதால் உடனே கைபேசியில் மணியோசையை ஒலிக்கச் செய்து.. சங்கல்பத்துடன் துவக்கம் நிகழ்ந்தது..
மீள் ஆன்மீகத் துவக்கம் என்பது மிகவும் ஆழமான ஒரு பின் நவீனத்துவ ஆன்மீகப் புரிதல் தேவைப்படும் அவசியத்தின் மீள் மலர்தலுக்கான முஸ்தீபுகள் என்பதை மறுக்கவியலாது. அதிலும் வினாயக சதுர்த்தியிலிருந்து ஆரம்பம்பமாகும் ஹேரம்ப கணபதிக்கான பூஜை.. மண்ணிலிருந்து வினாயக உருவத்தை உருவாக்கி, அதற்கு சந்தனம் குங்குமம் வஸ்திரம் இன்னபிற ஆன்மீக அலங்காரங்கள் செய்து இறுதியில் மோதகம் இனிப்புகள் நெய்வேத்யம் செய்து காக்கைக்கு அன்னமிட்டு பிறகு பசியாறி மறு நாள் புனர்பூஜை நிறைவு செய்து அந்த புனித மண்வினாயகனை மீண்டும் உருவமற்ற பிரபஞ்சப் பெருவெளியில் கரைத்து விடுவது என்பது நம் துண்டாடப்பட்ட கலாச்சாரத்தை அதன் போலி பன்மைத்துவத்தை சிதைக்கும் ரவுடியிஸத்தை அதன் அத்தனை பரிமாணங்களோடும் முறத்தால் அடித்துத்துரத்தி... மீண்டும் ஒற்றை மையத்தை அதன் தேசீய வடிவ மாறுதல் சிதைவின்றி கட்டமைக்கும் நிகழ்வை கொண்டாடுவது பின் நவீன காலத்தின் தவிர்க்கவியலா ஆன்மீக அவசியக் கடமையாகிறது..
பூஜை நிறைவேறி கற்பூரம் காட்டி கண்ணில் ஒத்திக்கொண்டு மனமுருகி அந்த மங்கள வினாயகனை மனதாற நினைத்து நன்றி சொல்கையில் ஒவ்வொரு ஆன்மீக தமிழ் மண்ணின் இதயமும் தன்னுள் இருக்கும் மூலாதார ஆற்றலைக் கண்டடையும் ஒரு ஆன்மீக அவசிய தவிர்க்கவியலா தவிக்கக் கூடா பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த நிம்மதியைப் பெறுவது நிச்சயம்..
புஷ்பங்களை வினாயகன் காலடியில் தூவி சாஷ்ட்டாங்கமாக வணங்கி எழுகிறான்.. அவனின் உள்ளுக்குள் ஒரு ஆன்மீக புத்தெழுச்சி ஒரு புதிய சக்தி பிறப்பதை உணர்கிறான்.. வினாயகன் களிமண்ணிலிருந்து தன் சிறிய உருவத்தை பெரிதாக்கிக் கொண்டே செல்கிறார்.. அவர் ஒவ்வொரு அணுவாகத் தாவுவதைக் காண முடிகிறது.. அவர் எல்லாவற்றிலும் இருக்கிறார், அதே நேரத்தில் எதற்குள்ளும் அடங்காமல் எல்லாவற்றையும் கடந்து நிற்கிறார் என்பதையும் அவனால் நிராகரிக்க இயலவில்லை...
ஹேரம்ப கணபதி திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்.

Comments

Popular posts from this blog