Posts

Showing posts from November, 2018

திருவெள்ளறை திருக்கோவில்

Image
தென்திசை தவிர மூன்று திசைகளில் கோபுரம் என்றுதான் எழுந்திடும் என்பதோர் கேள்வியுண்டு யாரிடம் திருப்பணியை எம்பெருமான் ஒப்படைத்து பாரினை வியக்கவைப்பார்.. புதிர் நிறை திருவரங்கம்.... [ராகவபிரியன்] என்று எழுதவைத்த எம்பெருமான் திருவரங்கன் கடந்த ஒரு வார காலமாக திருவெள்ளறை வரவேண்டும்..வந்தென்னைச் சேவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டபடியே இருக்கும் ஒரு தவிப்பை உணர்ந்த வண்ணமிருந்தேன்..இன்று எந்தத் திட்டமிடலும் இன்றி எனது சகதர்மினியுடன் திருவெள்ளறை சென்று புண்டீரீகாஷப் பெருமாளையும் தாயாரையும் தரிசிக்கும் பேறு பெற்றேன்... ஆதி திருவெள்ளறை...அடுத்து திருபைஞ்சீலி..ஜோதி ஆனைக்கா..கிளி காட்டிய திருவரங்கம்...என்ற ஒரு தொன்மையான வட்டார வழக்கு நிலவுகிறது... சிபிச்சோழன் காலத்தில் வெண்மையான மலைமீது கட்டப்பட்ட பேரதிசயக் கோவில் இது வென்று வரலாறு கூறுகிறது...மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் எட்டாம் நூற்றாண்டின் சோழர்களால் விரிவுபடுத்தப்பட்ட கோவில்... தற்போது அதன் பாதியில் விடுபட்டு சிதைந்திருக்கும் ராஜகோபுரத்திற்கான திருப்பணிகளை கோவையைச் சேர்ந்த அன்பர் ஒருவர் தனியொருவராக முன்னெடுத்துச் செய்துகொண்டிருக்...
Image
நிவாரணம் ஏந்தி புறப்படுகிறதென் ஊர்தி.. யானை கட்டிப் போரடித்த எம் தஞ்சைவயல் வெளிகளுக்குள் நுழைகிறேன்.. கை நிறைய சிதறிக் கிடக்கும் தென்னங்குரும்பைகளை நீட்டும் பிஞ்சுக்கைகளுக்கான நிவாரணமெதுவென அறியாது அதிர்கிறேன்.. சாய்ந்து கிடக்கும் மின் கம்பிகளில் லாகவகமாக நடனமிட்டு சரிந்த குடிசையின் மண்சுவர் மாடத்திலிருந்து கல்லாங்காய் ஆட்டத்திற்கான கூழாங்கற்களைச் சேகரிக்கிறாள்.. சின்னத் தமிழச்சி.. அவைகளைக்குட்டையில் குளிப்பாட்டி வாரியணைத்து ஈரப்பாவாடைக்குள் பத்திரப்படுத்தி பளீரெனச் சிரிக்கிறாள்.. கூழாங்கற்களை கூட்டாஞ்சோறின் ஆவியில் அவித்து காயவைக்கக்கோரும் அவளின் கைகளில் அந்தக் கூழாங்கற்களில் கூட்டஞ்சோற்றின் வாசம் கொணரும் உடனடி நிவாரணமறியேன்.. வரப்புச் சண்டையில் பெரியப்பா மாமரத்தில் வீசியெறிந்த நடைவண்டியுடனும் பறவைக்கூடுகளுடனும் தலையாட்டிப் பேசிக்கொண்டிருந்தவள்.. அம்மாமரம் சாய்ந்து குட்டைக்குள் மிதக்கவிட்ட அவளின் மிச்ச நடைகளை அந்த மிதிவண்டியை கூடடைய வந்த பறவைகளின் மீந்த சிறகுகளை அணிற்கடித்தப் பழங்களை.. எப்படி நிவாரணமாய் மீட்டுத்தருவதென தவித்துக்கொண்டிருக்கிறேன்.. ஊர்தியை விட்டிறங்கியவன்...

கிரக்கி யானை

Image
புறக்கணிப்பின் வலி உணர்ந்தவர்கள் அதன் பாதிப்பால் தங்களையே புறக்கணிப்பிற்குள்ளாக்கிக் கொள்பவர்கள் இலக்கியப் பொறாமையின் பிரதிபலிப்புகளெனின் அதை நிறுவுதல் கடினமல்ல..ஒரு பதிவின் தீவிரத்தையும் தாக்கத்தையும் ஒரு ஆகச் சிறந்த படைப்பின் வீச்சுடனும் விஸ்தீரனத்துடனும் ஒப்பிடுதல் ஒவ்வாமையின் அரிப்பிற்கு உள்ளாக்கி மனச் சொரிதலை உருவாக்கும் வல்லமையுள்ளது..பதிவு என்பது நோக்கங்கள் அற்றது..அதற்கான விருப்பங்களும் கருத்துக்களும் விளம்பர உத்தியின் கூறுகளைச் சுமந்து வலுவிழந்துவிடும்..ஒரு தனித்துவம ான படைப்பின் பிறப்பு இலக்கிய விடியலின் வரவை ஒரு சேவலின் அறைகூவலிலோ கிழக்கின் சிவப்பு நிற ஒளி நுழைவின் அதிர்வுகளிலோ ஒரு மனிதப் பிறப்பின் அத்தனை ஆவல்களின் பிம்பமென்றோ எண்ணங்களின் எல்லைகளையும் தாண்டி மாறுதல்களை உருவாக்க வல்லது..அதுபோன்றதொரு படைப்பை முக நூலில் வெறும் பெயரைப் பார்த்துவிட்டு விருப்பக்குறி கூட இடாமல் கடந்து போகும் போது எனக்கு தென் ஆப்பிரிக்கக் கவிஞர் ..அந்த நாட்டின் தேசிய கீதத்தைத் தந்த 58 வயது வரையே வாழ்ந்து தெனாப்பிரிக்க தொன்ம இலக்கியத்தை ஆங்கிலக் கலப்பற்ற ஆதிமொழியில் எழுதி உரை நடையின் வர்ணனைகளை விலக...