Posts

Showing posts from 2019
Image
எனக்குத் தெரியும் நீங்கள் என்னை விரும்புகிறீர்களென்று.. தொய்வற்ற பதிவுகளுக்கான உங்கள் கண்கள் தேடித் தேடி அலுத்த கடைசீ நொடிகளில் என் பதிவுகளைப் படிக்க நேர்வதால் விருப்பமோ கருத்தோ இடும் உங்கள் விரல் பூக்கள் உதிர்ந்து அயர்ந்திருக்கக் கூடும்.. நான் அறிவேன்.. என் எழுத்துக்களுக்கான வான இருட்டில் என்னை இனம் காண அயராது நோக்கும் உங்கள் இலக்கியத் தர பார்வை உயரங்களில் திடீரென எரி கல்லாய் சறுக்கி விடுகிறேன்.. என்னைப் படிக்கத் துடிக்கும் உங்கள் இதயத்தின் சீரான சப்தங்கள் பார்வைக்கு வழிகாட்டும் திசை மாணிக்காக சற்றே நின்று புறப்படும்.. அதையும் அறிந்ததால் நான் சொல்வேன்.. கொஞ்சம் அமேசான் கிண்டிலுக்குச் செல்லுங்கள்.. ஆங்கிலமும் தமிழும் அதன் அதிதீவிர இலக்கிய மின்னல்களும் அடங்கிய எரிகல் விழுந்துவிடாத என் வானத்தை தெளிவாகப் பார்க்கலாம்.. ராகவபிரியன்
Image
I know my dear friends you all like me.. your tired eyes and finger flowers have fallen to naught on reaching my post.. Dear friends I know when your eyes staring at my sky i had fallen as a meteor in your vision's literary screen Dear friends The train sounds of your heart beats simply stopped on a station without any literary signal.. Friends ... Don't be frightened Browse Amazon.in.. Amazon.com and all Amazon sites.. My literary works blossom with a green signal and from the window of your running train you could see the amazing sky of literary mine.. Ragavapriyan Thejeswi
Image
ஒரு பனவனின் பால்ய நினைவுகள்.. எனது பட்டப்படிப்பு இரண்டு வருட இடைவெளிக்குப் பின் 1981ல் முதல் வகுப்புத் தேர்ச்சியுடன் முடிவடைந்தது..வேலை பார்த்துச் சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம்..சென்னை சென்றேன்..எனது உறவினர் தண்ணீர் மேல் நடக்கும் வித்தையை அறிந்தவனால் தான் வாழ்வின் தடங்களில் சொந்தக் கால்கொண்டு நடக்க முடியும் என்றார்...நான் என்னை முதுகலைவணிகவியலில் சேர்த்து விடச் சொன்னேன்..இரண்டு வருடங்கள் அதற்காகும் செல்வுகளையும் எனது பராமரிப்பிற்கான செலவுகளையும் கணக்கிட்டு..ஒரு புது உத்தியைக் கண்டு பிடித்தார்..ஒரு ஆடிட்டரிடம் என்னை ஆர்டிகிள்ட் கிளார்க்காகச் சேர்த்துவிட்டார்.. அங்கே நடந்த கொடுமைகளை..ஒரு ஏழை ஆடிட்டராகும் கனவைக் காணக்கூடாதென்ற உண்மையை உங்களுக்கு அடுத்தடுத்தப் பதிவுகளில் சொல்கிறேன்..மீண்டும் திருவாரூர் வந்தேன்..விடிந்தால் என் வீட்டார் பேசப்போகும்.. வேலையற்ற பட்டதாரியின் மேல் வீசப்போகும் வார்த்தை கணைகளுக்குப் பயந்து ஓசி ரயில் ஏறி தஞ்சை வந்துவிடுவேன்..தஞ்சை பேருந்து நிறுத்தப் புத்தகக் கடையில் சில சமயம் தஞ்சை பிரகாஷ் இருப்பார்...தம்பி சாப்பிட்டாயா...எனக் கேட்கும் அவரின் குரல் இன்னமுன் ...
Image
வாழைப்பட்டைகள் வேய்ந்த மலையாளக் குடையினடியில் குடியிருப்பதாகிப்போனது அவளின் வாழ்வு.. தூறல் தூவிக்கொண்டிருக்கும் விதியின் சிகப்பு நாளொன்றில் மகிழ்ந்துவில் குழந்தை மகளை கணவனிடம் விட்டுவிட்டு போட்டித் தேர்வின் கணிணித் திரையில் கேள்விகளுக்காகக் காத்திருக்கையில் நூலேணியொன்றின் படிகள் அறுந்துவிழுவதைக் காண்கிறாள்.. அப்பாவிடம் எதையெதையோ கேட்கப் போகும் மகளின் ஈர உள்ளாடையை கணவனால் மாற்றிவிட முடியுமாவென யோசிக்கும் பொழுதுகளில் வெள்ளைக் காகம் ஒன்று வெண் திரையில் அலகால் குழந்தையை அப்படியே தூக்கியது.. இந்திய ஜனாதிபதி கோவிந்தன் கோவிந்த் ராம் நாத் ராம்னாத் கோவிந்த் என்ற விடைகளில் எது சரியானதெனும் மன யாசிப்பில் குழந்தையின் அழுகுரல் தொட்டில் அவள் முன்னே எழுவதும் விழுவதுமாயிருந்தது.. தேர்வு முடியும் முன் வெளியேறும் அனுமதியில்லையெனும் போதில் கற்பாறைகளில் அவளின் மகிழுந்துவை தலை குப்புற ஓட்டிக்கொண்டிருந்தான் கணவன்.. எங்கிருந்தோ அவளின் ஜன்னலின் அருகில் குரங்கொன்று எட்டிப் பார்க்க.. அதனின் மடிகவ்விய குட்டியை அது தவற விட்டது அறிந்து கோவிந்தா என அலறினாள்.. அருகிருந்த தேர்வெழுதும் சகபோட்டியாளப் பெண...
Image
ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்..1+2 ஆன்மீக அனுபவங்களைப் பற்றிய பொதுமதிப்பீடுகள் எதுவாக இருந்தாலும் சுயமதிப்பீடு நேர்மையாக இருந்தால் அரங்கனை கண்டிப்பாக உணரமுடியும்..அரங்கனை அனுதினமும் தியானிப்பவனுடன் அரங்கன் தொடர்ந்து அவனின் மனதுள் சயனித்திருப்பது நிஜம்..பகவான் அர்ஜுனனுடன் யுத்த களத்தில் கூடவே இருந்தும் அர்ஜுனனால் பகவானை முழுவதும் உணரமுடியவில்லை..அர்ஜுனன் பகவானைப் பார்த்துக் கேட்கிறான்... கதம் வித்யாம்ஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந் கேஷூ கேஷூ ச பாவே ஷூ சிந்த்யோஸி பகவந்தம்யா..!! அரங்கா..நான் உன்னையே சிந்தித்துக்கொண்டிருக்கையில் நீ எந்த உருவில் என்னுடன் இருக்கிறாய் என்பதை அறியமுடியாமல் தவிக்கிறேன்..உன் உருவங்களில் ஒன்றையாவது எனக்குக் காட்டித்தரமாட்டாயா...? இது அர்ஜூனனுடைய கேள்வியென்றாலும் கடந்த ஐம்பது வருடங்களாக என் மனதிலும்...எத்தனையோ நூற்றாண்டுகளாக உங்கள் மனதிலும் உள்ள கேள்விதான்..இன்று கும்பகோணம் அருகில் உள்ள கருவளர்சேரி கோவிலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் எனது ஓய்வு வாழ்வின் திட்டமிடாத பணிகளின் திணிக்கப்பட்ட அமைப்பியல் வாழ்வின் மிச்சங்களில் ஒன்றாகிப்போனது...தட்பவெட்ப நிலை...
Image
தலை குனிந்தவர்களின் குளக்கரையில் அமர்ந்திருக்கிறேன்.. தாழ்வு மனப்பான்மையும் சம்மட்டியடித் தோல்விகளும் என்னை நீந்தச் சொல்லி வற்புறுத்துகின்றன.. மிதக்கும் அழுகிய ஏச்சுக்களின் தென்னம்பழமொன்றின் வாடையில் அடைத்துக்கொள்கிறது வீரம் தொலைத்த மூச்சு.. மெல்ல அறிவு பொய்த்துப்போன அவல உடைகளைக் களைகிறேன்.. முழுதுமாய்த் தோற்றவனின் உடல் நடுக்கம் பாதங்களின் ஊன்று மண்ணைப் பறிக்கத் தொடங்க.. வழுக்கிக் குளத்தில் விழுகிறேன்.. தலைகுனிந்தவர்களின் குளத்தில் நீந்தத் தெரிந்தால் நீர்பரப்பின் மேல் தலை நிமிர்ந்தே இருக்கும்... ராகவபிரியன்
amazon.com/author/ragavapriyanthejeswi
Image
தொடர் வண்டிகள் கால் நீவிக்கொள்ளும் நிலையங்களில் தான் அவசர அசுரனின் உருவம் காணமுடியும்.. கழிப்பறையற்ற கிராம வீட்டின் காவிரிக் கரை பட்டதாரியின் காலை நரகலை மிதித்த குளிக்காத கால்கள் படித்துறையில் இறங்கும் நொண்டல்அவசரம்.. காலைப் பசிக்கான பொட்டலங்களை சுற்றி இருக்கும் முடியாத நூல் அவசரம்.. புதிதாக வாங்கிய பயணப்பெட்டியின் சக்கரங்களைச் சுழல விடாத சுமையான வாழ்வின் போதாக் கால பொம்மையவசரம்.. கண்ணற்ற ஒருவனின் அருமையான  ராகத்துடன் ஒட்டத்துடிக்கும் வண்டி புறப்படும் முன்னான அலுமினிய லோட்டாவின் தப்பான தாள அவசரம்.. இத்தனையையும் கால் நீவியபடியே கவனித்துக் கொண்டிருக்கிறது புறப்படத் தயாரான தொடர் வண்டியும்.. சில  அருமையான  புத்தகங்களையும் தினசரிகளையும் அழகாக மாட்டிக்கொண்டு ஒரு வாசக முகமாவது தன் முகம் காணாதா என ஏங்கியபடியேகால் நீவிக் காத்திருக்கும் வண்டியினதும் விற்பனையாளனதுமான வசீகர அமைதி முகங்களும்.. அவசர அசுரனின் திருப்தியான பார்வை ஏப்பத்தை வெளியிட்டபடியே புறப்பட்டது வண்டி... ராகவபிரியன்
Image
இரண்டு நாட்களுக்கு முன்பு எனது மகிழுந்துவில் திருக்கோவிலூர் செல்லும் வழியில் பெரம்பலூர் கடந்த சில தொலைவில் உடும்பு ஒன்று தேசிய நெடுஞ்சாலையை வலமிருந்து இடமாக லாவகமாக கடந்து செல்கையில் எனது மகிழுந்துவின் சக்கரத்தில் சிக்கிய சப்தம் கேட்டது...கண்டிப்பாக உயிர் தப்பி அதன் மறுவாழ்விடம் சேர்ந்திருக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு பின் நவீன கவிதை உங்களுக்காக...அன்பன்..ராகவபிரியன் உடும்புப் பிடியாய் சில படிமங்கள் என் சுவற்றின் மேல் சில பூச்சிகளுக்காக காத்திருக்கின்றன.. அதன் முதுகில் கயிறு கட்டி கோட்டைச் சுவர் மேல் ஏறிவிட எத்தனிக்கிறேன்.. அதை வேட்டையாட அதன் இறைச்சியால் வயிற்று வலி போக்கிக்கொள்ள ஈட்டியுடன் சில அறிவு ஜீவிகள் சுவரோரம் எக்காலமும் காத்திருக்கிறார்கள்.. அதன் தோல் வேய்ந்த இசை மேளச் சப்தம் பற்றிக் கொண்டு உலக நாடுகளின் நடனச் சுவர்களில் தத்தியேறியவர்களை அறிவேன்.. ஏதோ ஒரு பொந்தில் பதுங்கிக் கிடக்கும் உடும்பு பின் நவீன தேசீய நெடுஞ்சாலையை வாலாட்டியபடி பம்மிக் கடக்க பயண வெளி அதிரும்.. எனது பயணப் பார்வைகளில் இதுவரை சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு உடும்பு உடல் கூட படிமமாய் படுத்தியத...
Image
மனித வாழ்வின் காய்கறி வாங்கும் செயல் வகைமையென்பது தனித்துவமானது..அதுவும் ஒரு மழை நாளில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாங்கும் செயல் வகைமை சிந்திக்க வைக்கும் வல்லமையுடையது.. ஒரு காய்கறிப் புலத்தினுள் கொம்புடைய மாடுகள் சேற்றில் அனாயாசமாய்ச் சுற்றி வந்து அதற்கான காய்கறித் தீவனங்களுக்கான உத்தியைக் கட்டமைக்கும் நேர்த்தியை நனைந்தபடியே ரசித்தபடி எனது வாடிக்கைக்காய்கறி கடையில் நிரூபிக்கப்பட்ட புரிதல் உள்ள விற்பனை நுட்பமறிந்த பெண்மணியிடம்.. உருளை என்னா வெல...என்று கேட்டேன்.. இன்னா சாமி..தாடி சுருள் சுரூளா அழகாகீது..இன்னா வெசயம்... அவள் விலை இன்னும் சொல்லவில்லை... அத வுடும்மா..உருளை என்னா வெல அதச் சொல்லு... ம்...வழக்காமன வெல தான் சாமி..மழ கொட்டு கொட்டுன்னு கொட்டுது..காய வித்து ராங்கா வெல சொல்லி காசு கொட்டப்போவுதாக்கும்..எத்துனை கிலோ..சொல்லியவாறே உருளைக் கிழங்குகளை தராசில் அள்ளிப் போட்டாள்... ஆமா...கிலோவாங்குறாங்க...ஒரு அரை கிலோ போதும்... சாமி...நீ எப்பப் பாறு எதோ தலையில கொம்பு மொளச்சா மாதிரி தான் பேசுவ...குடுக்கற காச குடு சாமி...பொறவு..உங்கிட்ட ஒன்னு கேக்கனும்..கோவ...
Image
கொட்டித் தீர்த்த கோர காலை மழையின் கொடூரக் கரங்களில் இருந்து என் மகிழுந்துவை தண்ணீர் படாமல் காப்பாற்றமுடியவில்லை.. துருவேறிப் போன பொருளாதாரக் குறியீடாய் நாளைய பட்டறையில் தேயப்போகிறது அது.. சாமான்ய பொதுஜனனாய் பர்கேப்பிட்டா இன் கம்மிற்கும் ரெப்போ ரேட்டிற்கும் வளர்ந்து வரும் வளர்ந்து கொண்டிருக்கும் வளர்ந்தே தீரும் என்ற சொற்றொடர்களின் இழைகளின் அறுந்துவிழாத ஆங்கில வார்த்தைகளின் கம்பி நடனமும் புரியாமல் மழையையும் மகிழுந்துவையும் பார்த்தபடியிருக்கிறேன்.. சுர்ஜித்தை வெளிக்கொணர நடத்தப்படும் பிரயத்தனங்களும் பொருளாதாரத்தின் வளர்ச்சிவிகிதத்தை ஏழு சதமாய் உயர்த்தப்போகும் விந்தை நாடகத்தையும் அறியாத வருணன் மகிழுந்துவின் மேல் குதித்துக் குதித்து விளையாடிக்கொண்டிருக்கிறான்.. இறக்குமதிகளுக்கான சந்தையின் ஏற்றமோ இறக்கமோ புரியாமல் வெங்காயத்திற்கு விலைபேசியபடி கொச்சைத் தமிழில் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறாள் மனைவி.. ஆறாய் பெருகி ஓடும் மழையின் சாலை வாய்க்காலில் நனைந்தபடியே என் கவிதை நோட்டின் பக்கங்களைக் கிழித்து கப்பல் விட்டுக் கொண்டிருக்கிறாள்.. மகள்... இந்தியப் பொருளாதாரமாய் மழை ஓய்ந்த வீட்டின...
Image
ஒரு பனவனின் பால்ய நினைவுகளில் தீபாவளி...1 நினைவுகள் என்பது பாதுகாக்கப்படவேண்டியவை...எல்லா நினைவுகளும் அல்ல..சில நமக்குப் பாடம் கற்றுத்தந்திருக்கும்..அப்படியான நினைவுகள் நாம் மறைந்த பின்னும் ஆன்மாவாய் சில காலம் உயிர்த்திருக்கும் என உப நிடதங்கள் கூறுகின்றன..சீனாவில் தொங்கும் சவப்பெட்டி என்ற மரத்தாலான மேலதிக கனமுடைய பெட்டி ஆகப்பெரும் உயரத்தில் 2500 ஆண்டுகளாய்த் தொங்கிக்கொண்டிருப்பதாகப் படித்திருக்கிறேன்.. கோவில்கள் நமது முன்னோர்களின் நினைவுகளை அவ்வப்போது தூண்டியபடியே இருக்கின்றன..நமது பண்பாடும் கலாச்சாரமும் சில நினைவுகளின் மீட்சியென்பதறிவோம்..அது போழ்து எனது வயது எட்டு என நினைக்கிறேன்..என் நினைவிலிருக்கும் முதல் தீபாவளி...கணவனை சிறுவயதிலேயே இழந்த என் அத்தையும்..எங்களின் தாய்தந்தையற்ற பெரியப்பாவின் பெண்..என் அக்காள் தங்கமும் நாங்கள் உடன்பிறந்தோர் அப்போது ஐந்து குழந்தைகளும் இருக்க...மத்திய அரசு ஊழியரான எனது தந்தை உடல் நிலையற்ற நிலையில் ஏறக்குறைய ஓராண்டாய் வேலைக்குச் செல்லாமல் வறுமையை விலைகொடுத்து வாங்கி எங்களிடம் விற்பனை செய்திருந்த நேரம்.. என் அப்பாவின் நிறுவனத்தில் கடன் வழங்கும் ச...
Image
செவித்துறண்டியால் காதுகுடையும் சித்திக்கு குழந்தையின் பட்டாம்பூச்சியின் பின்னான ஓட்டம் சொன்னாலும் புரிவதில்லை.. பட்டாம்பூச்சியை கணுக்கையில் படிமமாய்க் கிடத்திப் பேசும் குழந்தை மொழி அம்மாவைத் தவிர யாருக்காவது புரியுமா என்ன..? பட்டாம் பூச்சிகளை பெரும் பறவைகள் உண்பதில்லையாம்.. அம்மா எனும் வானம் தவிர வேறெங்கும் பாசத்தின் வண்ணங்கள் கிடைப்பதில்லையாம்.. தீபாவளி வண்ண உடைக்கான சேர்த்தி வலையல்கள் பட்டாம் பூச்சியின் படிமத்தை மறைத்தால் குழந்தையால் பேச முடியாதாம்.. வலையல் வேண்டாமென சொன்னக் குழந்தையை செவித்துறண்டியால் குத்தியபடியே சித்தி அழும் குழந்தையின் கைவலிக்க வலையல் அடுக்குகிறாள்.. அந்தச் சின்னக் கையிலிருந்த படிமப்பூச்சி ஆழ்துளை கிணற்றுக்குள் தன் உணர்விழைகளால் குழந்தையைத் தேடிக்கொண்டிருக்க.. வலிக்கும் கைவலையல்களை ஒவ்வொன்றாய்த் தள்ளி இடைவெளியில்லாமல்.. தன் தலைமைப் பட்டாம் பூச்சியிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்..குழந்தை.. மத்தாப்புக் கொளுத்தினால் கை சுட்டுவிட்டாதாம்.. வண்ணம் மங்கிப்போக வாய்ப்பிருக்கிறதாம்... குழந்தையின் அன்பில் கையில் மத்தாப்பூவாய் சிறகடிக்கிறது படிமத்தட்டான்....
Image
ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்... சில நிகழ்வுகள் மானுடம் நிகழ்த்தியதாகக் கொண்டாலும் அதன் தூரத்து இயக்குக் கருவி ஆண்டவனிடம் இருப்பதை ஆன்மபலம் பொருந்திய ஞானக்கண் காட்டிக் கொடுத்துவிடும்..அத்தகைய ஞானக்கண் அன்பே சிவமாக உருவம் கொண்ட ஆதிசிவனின் முகத்தில் இருப்பதை அறிவோம்.. சிவ ஞான போதம் அதை இப்படிக் கூறுகிறது.. தொண்டர்கள் தாமும் வானோர் தொழும் திருமேனி தாமும் அண்டரும் கண்டிலாத அண்ணலே என வணங்கி வெண்சரளங்கள் சிந்த விழி மொழி குளற மெய்யே கண்டுகொண்டு இருப்பர் ஞானக் கடல் அமுது அருந்தினோரே.. ஒரு பக்தியின் வெளி சிவமயமாய் மாறுகிறது...அங்கே சின்ன திடலொன்று உருவாக சிவம் சிவனென்று உறங்கத் தொடங்குகிறது..இருபுற நிழலில் திடல் குளிர சிவபக்தர்கள் சிவமென்றறியாமல் தாமும் உறங்குவதைக் காண உவகையெழும்பும் முகம்..அம்முகம் கண்டு சிவ ஞானக் கண் திறக்கும்..திடலும் உவகையும் ஆணவமும் எரிந்து சாம்பலாகிவிடும்... இருளாது அன்றி இலது..எவையும் ஏகப் பொருளாகி நிற்கும் பொருள் என்று சித்தாந்த அட்டகம் பேசுகிறது... உறங்கும் திடலின் சிவ நிழலென அறியாமல் மகிழுந்துவை நிறுத்த...சிவன் மனித உருவின் ஆணவமென உருவெடுத்து...இடம் தனதென...
Image
இந்த வருட தீபாவளி இல்லாத வெளியொன்றைத் திறக்கிறேன்.. அப்பெருவெளியின் படிமப்படிகளின் மேல் கிடக்கும் வீதியோரக் கடைகளின் சதுரமற்ற செவ்வகமற்ற மிதியடியை மிதித்தே உள்ளேகுகிறேன்.. விடியாத இரவொன்றிலிருந்து நீளும் மத்தாப்புச் சிதறல்கள் மன வெளியெங்கும் வெறுப்பேற்றிச் சுற்றுகின்றன.. முதிராத மனமகிழ்வின் அறைகளைத் திறப்பதற்கான சாவி தேடியலைந்த அவ்வெளியெங்கும் என் வெற்றுக் கால்களில் அப்பிக்கிடக்கிறது சோகத்தின் சேறு.. முகம் கவிழ்ந்த கூடடையும் பறவைக்காலென நுனிப் பாதம் பட்ட பழைய சாக்கின் மிதியடி ஸ்பரிசம் எம் மண்ணின் வாசமென மனம் நிறைக்க.. ஏதுமற்ற என் பணப்பையில் நிரம்பித் ததும்புகிறது வெளியிடமுடியாத அன்பு... ராகவபிரியன்
Image
என் பிரதியிலிருந்து நான் விலகிவிட்டேன்.. ஒரு படைப்பின் அந்தம் இன்னொரு பிரதிக்கான ஆதியென அறிவேன்.. பிரதியிலிருக்கும் ஆய்வுப் பார்வை எனதல்ல.. இப்போது என் மொழியியல் கண்கள் குருடாகிக் கிடக்கிறது.. பிரதியை நீங்கள் கிழித்துப்போடுங்கள்.. என் மொழி அதைப் பார்க்கப்போவதில்லை.. என் பிரதியிலிருக்கும் பூணூல் உங்களால் அறுத்தெறியப்படவில்லை.. என் மார்பில் இருப்பது நேற்று மாற்றப்பட்ட புதுப்பூணூல்.. சூழலியல் அமைப்பியல் கோட்டாட்டுவியல்.. மிகு நுட்பவியல் நுண் தளவியல் புன்னாக்குவியல் எனச் சொல்லிவந்து இறுதியில் என் பிரதியை பூணூலியலில் முடிப்பீர்கள்.. பூணூலின் பிரம்ம முடிச்சவிழ்ப்பவனின் முடிச்சவிக்கியியல் பிரம்மப் படைப்பாளியறிவான்.. அகம் பிரம்மாஸ்மி.. என் பிரதியிலிருந்து அவிழ்த்தெறியப்பட்ட பூணூலில் இருந்து நான் விலகிவிட்டேன்.. என் மார்பின் பூணூல் என்னை விட்டு விலகுவதுமில்லை.. நான் கைவிடப்படுவதுமில்லை.. இன்னொரு படைப்பிற்கான ஆதி முகத்தைப் படைக்கும் படைப்பியலின் நுட்பங்களோடு கையிலிருக்கும் மணிமாலையை உருட்டத்தொடங்குகிறான்.. பூணூல் அணிந்த பிரம்மச் சித்தன்.. ராகவபிரியன்
Image
தொன்னூறுகளில் யூகோஸ்லோவியா என்ற ஐரோப்பாவின் ஆகப்பெரிய நாடு சிதறுருகிறது..நாடு துண்டாடப்படுகையில் இனப்படுகொலைகள் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறதெனச் சொன்ன..பின்னாளில் செர்பியா மற்றும் யுகோஸ்லாவியா எனப் பிரிக்கப்பட்ட நாடுகளின் அரசுகளுக்குத் தலைமைதாங்கிய அதிபர் சொலோபோடன் மிலோசோவிக்..அகண்ட உலக நீதிமன்றத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார்...பாஸ்னிய போர் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான கொடுரங்களைச் சந்தித்த யுத்தமென வரலாறு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கி அதில் குருதி எழுத்துக்க ளால் அதைப் பதிந்து வைத்திருக்கிறது..அவருக்கான குற்றச்சாட்டுகளை பொய்யென நிரூபிக்க அவர் தனக்கான வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் வாதாடிக்கொண்டிருக்கிறார்..அவரின் கம்யூனிஸ வளர்ப்பும் சிந்தனைகளும் அவரிடம் பாசாங்கற்ற எந்தவித பயமுமற்ற மன நிலையைத் தந்திருந்ததால்..சிறையிலிருந்தவாறே தன்மீதான வழக்குகளை துச்சமென மதித்து நேர்கொண்டிருந்த ஒரு நாளில் சிறைச் சாலையில் மரணமுறுகிறார்..அவரின் இறுதிச் சடங்கில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஹாண்ட்கி கலந்துகொண்டு இரங்கற்பா வாசிக்கிறார்..ஒரு போர்க்குற்றவாளியை ..அதுவும் கம்...
Image
ஒரு பின் நவீன மழைக் கவிதை...மழைக் கவிதை எழுதாதவன் கவிஞனாய் இருக்க முடியாது...என்ன நான் சொல்றது.. மேலொன்றும் கீழொன்றுமான இரண்டு மழைத்துளிகளை விட்டு வைத்திருக்கிறது என் வீட்டிற்கு வந்து போன மழை.. கீழிருக்கும் மழைத்துளி காயும் வரை பார்த்திருக்கிறேன்.. கொஞ்சமும் பொறுமையற்ற மேலிருக்கும் அத்துளி அன்னாந்த என் முகத்தில் விழுந்து தெறிக்கிறது.. கீழே அதுவரை உருண்டுகொண்டிருந்ததுதுளியல்ல.. மேலே மழை பொறுமையற்றிருக்க.. கீழே துளியற்றதாய் உருள்வது ..மழையல்ல.. ஒரு மாநதியின் சுருக்கம்.. பூமியின் மேல் மழை..எனில் மழையின் கீழ் தான் பூமி.. பூமியின் வீட்டிற்குத்தான் வந்து வந்து திரும்புகிறது மழை.. ராகவபிரியன்
Image
எழுதும் திறனும் அதைத் தாண்டிய அனுபவமும் அதையும் வரலாறாய் மாற்றத்தக்க எழுச்சிமிகு எழுத்தாற்றலும் அபரிமிதமாய் வாய்க்கப்பெற்ற எழுத்தாளுமை 2018ற்கான நோபல் இலக்கியப் பரிசை வென்ற போலந்தின் ஓல்கா டொக்ரகொசா.. போலந்தின் மக்கள் சோவியத் ஸ்டாலினிடமும்..கம்யூனிஸ அடக்குமுறையிடமும்..பொருளாதர நிரந்தரமற்ற வாழ்வுமுறையிடமும்..அத்தகைய பொருளாதார அடக்குமுறைமையைச் செயலாக்கிய ஸ்டாலின் என்ற இரும்புக்கை மாயாவி மறையும் வரையும் பட்ட துன்பங்கள் வரலாற்றின் சிகப்புப் பக்கங்களில் காணக்கிடைக்கின்றன..கம்யூனி ஸத்தின் பொருந்தாக பிற்போக்குக் கொள்கைகளால் உலகளாவிய அளவில் அதன் வீழ்ச்சியை நாம் தற்சூழலில் கண்ணுறுவது போல போலந்தும் 1953றிற்குப் பிறகு கண்ணுற்றது..ஓல்கா என்ற பிறவி எழுத்தாளுமை 1962ல் போலந்தின் ஒரு குக்கிராமத்தில் பிறக்கிறது..அது பிறந்த நாளில் தான் திடீரென போலந்தின் உணப்பண்டங்களுக்கான விலை நிர்ணயக் கோணம் வித்தியாசமாய் சோவியத் ருஷ்யாவால் பார்க்கப்பட்டு... பன்மடங்கு விலையுயர்வு திணிக்கப்பட்டது..மெல்ல நடைவண்டியைத் தள்ளியபடி வீதியில் அடியெடுத்துவைத்த சின்னஞ்சிறு ஓல்கா ரொட்டித் துண்டிற்காக தங்களது வீட்டையே விற்றுவிட்...
Image
ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்.. காண்டீபத்தை வீசியெறிந்து யுத்தம் செய்ய மறுத்த பார்த்தனைப் பார்த்து பகவான்..யுத்தம் செய்தாக வேண்டிய கட்டாயத்தை...அதன் நியாயங்களை..அருமையாக எடுத்துரைக்கிறார்...யுத்தம் என்பதன் காரணமே..நியாயங்களை வெற்றி கொள்ளவைப்பதற்கான செயல் என்பதை அரங்கன் கீதையில் சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளையில்..பார்த்தனின் யுத்தம் செய்ய பயப்படும் தன்மையை அலித் தன்மை என்று சொல்வது ஆச்சர்யங்களைத் தருகிறது.. க்லைப்யம்மா ஸ்மகம: பார்த நைதத்த்வய்யுப்பத் யதே க்ஷூத்ரம் ஹ்ருதயதெளர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப! இங்கே அரங்கன் அர்ஜுனனிடம்..இழிந்த உள்ளம் என்பதை அலியின் தன்மையாகக் கூறுவது கூர்ந்து நோக்கத்தக்கது.. அல்லூருக்கு வந்த முதல் நாள் அன்றே..அரங்கனை என்னிடத்தில் தவறாகக் கூறியது..அது அரங்கன் காதில் விழும் என்பதை உணராத அறியாமை..ப்ராமணன் என்றால் ஒரு சில அடையாளங்கள் வேண்டும் என்ற..அந்த அடையாளங்களைத் தாங்காத நிஜம்மான ப்ராமணனை மறைமுகமாக மனக்காயமுறுத்தும் திமிர் நிறை செயல்கள்..அரங்க பக்தியை சந்தேகமுறுதல் போன்ற சில ஒவ்வாமைகளை அரங்கன் எனக்குக் காட்டிக் கொடுக்க..நான் அரங்கனிடம்.."அரங...
Image
The words are conveniently blocked out The sentences are totally blotted out The meanings are hidden inside miseries As understood by the literary treasuries Every time a writer like me writes and writes about the souls of millions dying in poverty lurid lights An ocean of poetry prose in pseudo neo modernism by the popular stricken literary giants prism simply swallowing the realism by their selfish..selfi ism To reach the audience and the readers To reach their attention and their radarsAn ordinary poet like me should dance Dance and dance along the lines of chance.. O poet ..O poetry...O prose..O writer.. Do not get carried for e'er Thou time will come will definitely come.. To the literary world a poet has come.. To the literary world a poet has come.. Ragavapriyan Thejeswi
Image
புனிதத்தின் வாசம் அடைக்கப்பட்ட பொடியொன்றை ஆன்ம மனதின் கூம்புவடிவ சிறு கூண்டில் அடைக்கிறேன்.. தூபக் காலில் கவிழ்க்கப்பட்ட கூம்பின் முனையில் பிரபந்தச் சப்தமெழுப்ப முனை பற்றி வாசப் புகை நடனமிடத் தொடங்கியது.. புகையின் கோட்டோவியங்களில் உச்சிரவஸை சுட்டு வீழ்த்தினான் ஒரு கடவுள் மறுப்பாளன்.. அவன் கவிஞனாம் வேறு.. கடவுள் படங்களென மாட்டப்பட்டிருந்த குதிரை லாயமொன்றின் வாசலில் தூபப் புகை சூழும் இடமற்ற செயற்கை அடர்வில் மனமகிழுந்துவை நிறுத்த முடியாமல் இங்கும் அங்குமாய் திருப்புகிறேன்.. பாதையில் நிறுத்தப்பட்ட மகிழுந்துவின் ஓட்டுனராய் பொடி அடைக்கப்படும் கூண்டுக்குள் சுருங்கிக் கொண்டுஒரு [ச்]சு வாசமற்ற வாசனாய்த் தவிக்கிறேன்.. படங்களில் மாட்டப்பட்ட குதிரைகளை அவிழ்த்துவிடுங்கள்.. மகிழுந்துவைக் கொஞ்சம் அவ்விடத்தில் நிறுத்திக் கொள்கிறேன்... ராகவபிரியன்
Image
ஒரு பனவனின் பால்ய நினைவுகள்... குடும்பம் சமூகம் வெளிவட்டாரம் வாழ்வின் அயராத உழைப்பால் பெற்ற வெற்றியின் மீதான பொறாமை..அதனால் அருகிலிருப்போர் மறைமுகமாக நற்பெயருக்கு விளைவிக்கும் களங்கம்.. இவையெல்லாம் உள்மனதில் தோற்றுவிக்கும் நெருக்கடி நிலையின் தாக்குதல்களால் சில பால்ய நினைவுகளைப் பதிவுசெய்ய வேண்டியதாகிறது.. திருப்பறாய்த்துறையில் ஒரு மார்கழி மாதத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து திருப்பாவையை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன்...விடிந்தால் அதை ஒப்புவிக்கும் போட்டியில் வென்றால் ஒரு வெள்ளிக்காசும் ஒரு டம்ளர் ராகிமால்ட்டும் கிடைக்கும்..ஆழ்ந்து புத்தகத்தில் மூழ்கி பின் கண்மூடி வரிகளை மீளுருக்கொணரும் வேளை உஸ் எனும் சத்தம் கேட்க.. கண் திறந்தால் ஒரு நல்ல பாம்பு படமெடுத்து இங்கும் அங்கும் தலையைத் திருப்பியபடியிருக்கிறது..நொடியில் ஓட்டமாய்க்கீழிறங்கி சப்தமிட யாராரோ மாடியேறித் தேடுகிறார்கள்..பாம்பு கண்ணில் படவேயில்லை.. நிசப்தங்களுடனான ஒரு நள்ளிரவின் ஆழ்ந்த உறக்கம்...திருவாரூரின் தொடர்வண்டித் தொழிலாளர் குடியிருப்பில் ஆடிமாதக் காற்று கொணர்ந்து வீசிய குப்பைகள் குவிந்து கிடந்து...வினோத சப்தமெழுப்பிய...
Image
ஒரு கோவிலின் கோபுர பொம்மைகளில் வாக்கு வானம் கவிந்திருக்கிறது.. அவ்வப்போது காணாமல் போய் மீண்டும் குதித்துக் கொத்தும் கருப்பு இறகு ஊர்க் குருவிகள் இரண்டு தொடமுடியாத வானத்தில் பறந்து பார்க்கிறது... பொம்மைப் பழங்களை மூக்கால் உடைக்க முடியாமல் அருகில் பிய்ந்து பறக்கும் கருப்பும் சிவப்புமான கொடிக்கம்பத்தில் அமர்ந்து இங்கும் அங்கும் பார்த்து செம்மாந்து போகும்.. இதோ கோவிலின் கீழே காய்ந்த வாழைப்பழத்தின் எச்சங்கள் மேலே சுற்றிக்கிடக்கும் பூணூலின் மிச்சங்கள்.. வாக்குப் பசி வெட்கமறியாதது... வசிப்பது கோபுரவானமெனினும் பூணூலைக் கொத்துவதெனின் புல்லரிக்கும் குருவிகளுக்கு.. கொத்தும் நொடிகளில் இலக்கியம் பற்றி கத்தவும் செய்யும்.. பூணூலைக் கொத்தி விசிறும் மூக்கின் வீச்சுக்களில் கோபுர வானம் சுருங்கிப் போனதாய்.. உடைந்து விட்டதாய்.. இறுமாப்புடன் இறகு கோதும்.. பூணூல் அணிந்த அதிகாரத்திடம் பொட்டுக் கடலைகளுக்காக சிறுகு சுருக்கி சின்னதாய் தத்தி வேடிக்கை காட்டி விட்டத்தில் எதையோ தேடியலைந்ததை மறந்து.. அதிகார வாக்கு வானத்திற்காக இப்போது கோவில்களில் கடவுள் இருக்கிறாரென கூச்சல் போடுகின்றன.. கோபுர பொம...
Image
ஒரு குமுட்டி அடுப்பின் குழிக்குள் நிரப்பப்படும் கரித்துண்டுகளென வார்த்தைகள் கருத்து உள்ளங்கைகளில் ஒட்டிக்கொள்கின்றன.. பற்ற வைத்த நெருப்பை விசிறிரும் போதை விசிறிகளின் தடுமாற்ற நடனம் வார்த்தைத் துண்டுகளில் ஒட்டாமல் புகையாகி சன்னதாய் புறப்படுகின்றன... விசிறியை விட்டெறிந்துவிட்டு ஊத முயல்கையில் முயலோடும் வரப்புகளில் கரித்துண்டுகள் நீண்டு முளைத்து விடுகின்றன.. பற்றிவிடாத நெருப்பொன்றை குமுட்டிக்குள்ளிருந்து கிளப்பமுடியாத நிஜம் உணர்ந்து மண்ணெண்ணைப் போத்தலை பிரபஞ்சமெங்கும் தேடித்தேயும் பார்வைக் கால்கள்.. செந்தணல் முளைத்த இதயப் பரப்பெங்கும் நான் ரொட்டி சுட்டு மீந்த வார்த்தைகளில் தான் அப்பளம் ஒன்றை பின் நவீனமென கத்திக்கொண்டிருக்கும் கழுதையொன்று சுட்டுப்பார்க்கிறது.. ராகவபிரியன்
Image
இறைமை என்பது உணரப்படவேண்டும்..அவ்வாறான இறையுணர்வு ஒவ்வொருவரிலும் இருக்கிறதென அறிவோம்..இறைமையை இறையுணர்வை சோதிப்பதும் சோதனைக்குள்ளாக்குவதும் அதன் நிஜத்தன்மையை சந்தேகிக்கும் செயல்பாடுகளும் தவிர்க்கவொன்னா இழப்புகளை ஏற்படுத்திவிடுமென திருமூலர் சொல்கிறார்.. தூய்மை .(1). அருளூண் சுருக்கம் பொறை செவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை காமங் களவு கொலையெனக் காண்பவை நேமியீ ரைந்து நியமத்தனாமே . அதுபோன்ற இறையுணர்வை அரங்கன் அருளியிருப்பது நம்பமுடியாத ஒன்றாகவே எப்போழ்தும் இருக்கிறது..அதுபோழ்து இந்தச் சிறுவன் ஆறாம் வகுப்புப் படிக்கிறான்..திருப்பறாய்த்துறை விவேகானந்த உயர் நிலைப்பள்ளியில்..அவனின் வகுப்பில் காலாண்டுத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் வெளியிட இந்தச் சிறுவன் எல்லாப்பாடங்களிலும் முதலாக வருகிறான்..அது மட்டுமல்ல..அதுவரையிலான அப்பள்ளியின் ஆறாம் வகுப்பு வரலாற்றில் கணிதத்தில் அவன் நூறுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியதை அறிவித்த ஆசான் அச்சிறுவனை அவனின் இருப்பிட உட்காரும் பலகையின் மீதேறி நிற்கவும்..சக மாணவர்களைக்கொண்டு கைத்தட்டவும் பணிக்கிறார்.. மாலையில் அவன் வகுப்புத் தோழன் ஒருவன் அவனுடன் சண்டையிடு...
Image
பின் நவீனம் என்பது நவீனத்தை மறுப்பதோ மறப்பதோ இல்லை..ஆயிரமாயிரமாண்டுகளாய் புரையோடிப்போன இலக்கியம் பற்றிய பார்வைக்குறைபாடுகளை நீக்கி..சரியான பார்வையை சமுதாயத்தின் தற்போதைய நிஜத்தை வண்ணங்கள் கலக்காத பார்வையில் புது வகைமையில் தருவதே என்பது எனது தனிப்பட்ட பார்வை...இதற்காக எனது கட்சியை வலுப்படுத்த நான் எந்த இலக்கிய நீதி மன்றத்திலும் சட்ட நிபுணர்களைக் கொண்டு வாதிடப்போவதில்லை..எனது தரப்பு சாட்சியாக அட்லாண்டிக் ஆர்டிக் இந்து மஹா சமுத்திரம் மற்றும் ஏனைய கடலலை கல் வீசிக்கொண்டிருக்கும் ந ாடுகளின் புகழ்பெற்ற இலக்கியப் பெயர்களை நிறுத்தப்போவதில்லை... சங்க இலக்கியப் பாடல்கள் நிறைய பின் நவீனச் சிந்தனைகளைக் கொண்டிருந்தது..பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒரு பாடலில்.." பிரிதல் வல்லியர் இது நத் துறந்தோர்.."என்று...ஒரு வரியை அனாயாசமாக வீசிச் செல்கிறார்..தோழி தலைவியிடம் உன் கூந்தலில் உறங்கிய தலைவன் ஒரு நாளும் உன்னை மறந்தாலும் அந்த உறக்கத்தை மறப்பதில்லை என்று சொல்கிறார்... பக்தி இலக்கியத்தில் திருமழிசையாழ்வார்...விடம்பயின்ற பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே...என அரங்கனைப் பாடுகிறார்...பாம்பிடம் விடமி...