Posts

Showing posts from October, 2025
Image
இலக்கிய வலதுசாரிகள்...4 படைப்பிலக்கியம் என்பதும் ஏற்கனவே படைக்கப்பட்ட இலக்கியத்தின் பிழைகளை திருத்தி சரியாக படைப்பதும் இலக்கியச் சேவைதான். படைக்கப்பட்டு புகழ்பெற்ற ஒரு இலக்கியத்தில் வலிந்து திணிக்கப்பட்ட பிழைகளை எடுத்துச் சொல்லும் திறன் இலக்கிய படைப்பாற்றல் திறனுக்குச் சற்றும் இளைத்தது அல்ல. படைக்கப்பட்ட நிஜ இலக்கியம் இதுவாகத்தான் இருத்தல் வேண்டும் எனச் சொல்லும் சிந்தனை ஆய்வு படைப்பாற்றல் இலக்கிய படைப்பெனவே கருதுதல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துவிடும். தமிழிலக்கியத்தில் வள்ளுவர் வலதுசாரி இலக்கியப் பிதாமகர் என்பதை எவராலும் மறுதலிக்க இயலாது. அவரின் ஒரு திருக்குறளை பிற்காலங்களில் தவறாக திரித்து கடவுள் மறுப்புச் சிந்தனையை புகுத்திய இலக்கிய மொள்ளமாறித்தனத்தம் ஆங்கிலேயரின் கைக்கூலி உதவியுடன் அரங்கேறியிருக்க வேண்டும். அப்படியான கீழ்தரமான இலக்கிய திரிபு வேலையொன்றை தைரியமாக அம்பலப்படுத்திய பெருமை வலதுசாரி இலக்கியத்தின் புகழ்பெற்ற இருபதாம் நூற்றாண்டில் நேதாஜி எனும் வாரஇதழ் நடத்திய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களையே சாரும். ஒரு உதாரணம் தருகிறேன். மதிப்புமிகு வீரம் மிக்க தேவர் திருமக...
Image
அவையடக்கம் பற்றிய ஒரு பழைய கவிதையை வாசிக்க நேர்ந்தது. வாழ்க்கையின் தன்நிலையிலிருந்து மானுடம் தன்னை முற்றாக விலகியிருக்கச் செய்தல் கடினம். சபையின் கைத்தட்டல்கள் ஒன்று கூடி தான் எதையோ சாதித்துவிட்ட எண்ணங்களை சேறாகிய இதய மண்ணில் விதைத்துவிட நேரலாம். வாழ்வின் சக மானுட செயல்பாடுகளில் கடுகளவு விஞ்சி நிற்கும் ஒரு சிறிய சாதனையே தான் எனும் அகம்பாவத்தை மனித மனதிற்குள் விதைத்து விட இயலும். அது அறிவார்ந்த சபையில் மெல்ல இதயச் சேறிலிருந்து துளிர்த்து வார்த்தைகளிலோ இல்லை உடல் மொழியிலோ தன் ஆணவத் துளிர்களை அசைத்துக் காட்டிவிடும். அப்படியான அகங்கார வெளிப்பாட்டைத் தவிர்த்தல் கடினம். அது தொடர்ந்த பயிற்சியினாலும் யோகத்தாலும் தான் சாத்தியப்படும். இதைத்தான் ஒரு பண்டைய விருத்தப் பாடல் இப்படிச் சொல்கிறது... உற்றதொகை நான்கு இலக்கத்து ஐம்பதின் ஆயிரம் என்று உரைத்தவட மொழி வேற்பின் ஒரு கடுகின் அளவில் பெற்றிடும் அங்கிசம் நூற்றில் ஒரு பங்கின் பொருளைப் பேர் உலகில்.........................................என்றே வெற்றி நெறி செந்தமிழை உணர்ந்து அருளும் பெரியோர் வீற்றிருக்கும் சபைதனில் யான் விளம்பியபுன் ...
Image
ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 5 ஓடித்து வீசப்பட்ட ஆங்கிலேய சட்டம் எழுதிய கையிலிருந்து போலி மதச்சார்பின்மை எனும் வெட்டி வீசிய கூரிய நகம் மீண்டும் முளைத்து குழந்தைகளின்மகிழ்வு முகத்தைக் கீறத்தொடங்கியிருக்கிறது. கவிதை வார்த்தை சுடு செங்கற்களால் இலக்கிய அதிகாரம் அடுக்கி சமாதிகளைப் பூசும் கொத்தன் ஒருவன் பிணத்தின் கழற்றவியலா வைர மோதிரமொன்றை உருவி அணிந்து கொண்டு தன் மட்டைத் திராவல் கருவியை தூர வீசியெறிகிறான். மாளிகைகளைக் கட்ட அவனின் கைகளுக்கு நீளம் போதாததால் சமாதிகளைக் கட்டிவிட்டு விரல்களுக்கு மோதிரம் தேடி துழாவிக்கொண்டிருக்கிறான். அவன் வீசியெறிந்த திராவல் கருவி குழந்தைகளின் தீபாவளி உடையணியும் சுதந்திரத்தை பறிக்க சதா எதையாவது தேய்த்துக்கொண்டிருக்கும் கண்ணீர் குழைத்த சிமெண்டெடுத்து சமாதி கட்டும் தொழிலறிந்த விரல்களற்ற அதிகாரகக் கொத்தனின் காலடியில் போய் விழுகிறது. விரல்களற்ற முகவருடல் அன்பை மூளைவரை எடுத்துச் செல்வதில்லை. வெற்று உள்ளங்கையில் சிக்கிய அதிகாரம் நிலைக்காமல் வழுக்கி விழத்தான் செய்யும். மழலைகளின் மகிழ்ச்சியை பிடுங்கித் தின்றபின் அமரும் அதிகாரக் கொத்தனின் அரியணையின் சலவைக் கற...
Image
  To get the e.books and paper packs of Ragavapriyan Thejeswi kindly contact Pustaka.in
Image
  வலதுசாரி இலக்கியம் 3 ஏறக்குறைய பல நூற்றாண்டுகளான சமூக அவலங்களுக்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட ஒரு பிரிவினர் பரிதாபத்திற்குரியவர்கள் தானே. ஆங்கிலேயர்களால் திரித்து எழுதப்பட்ட இந்திய தமிழக வரலாற்றில் இடதுசாரி எழுத்து எனும் அதிகாரமிக்க வலிமையான கையால் அப்பிரிவினரின் கழுத்தை இன்னமும் இறுக்கி அழுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதோ எப்போது வேண்டுமானாலும் அப்பிரிவு தன் துளிர்த்தலை நிறுத்தி புதைந்து போகலாம். ஆனால் அது மீண்டும் துளிர்த்தே தீரும் என்பது காலத்தின் வரம். இருந்தாலும் 1959 ம் ஆண்டு திருச்சியில் பிறந்த எஸ்.எம். நடேச சாஸ்திரி எனும் வலிமை மிக்க எழுத்தாளார் பதினெட்டு மொழிகள் அறிந்த பன்மொழி கலைமாமணி. பதினெட்டும் இந்திய மொழிகள் தான். மொழியறிவென்பது எத்தனை தடுப்பணைகள் கட்டினாலும் மாரிக்காலத்து வெள்ளத்தில் அணை தாண்டி சமயத்தில் அணை உடைத்துப் பாயும் ஆற்றல் கொண்டது. அவர் அறிந்திருந்த ஆங்கிலம் மட்டுமே அன்னிய மொழி. அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் நிறைய எழுதிக் குவித்திருக்கிறார். இந்தியும் அறிந்திருக்கிறார். ஆனால் இந்தி மொழியில் அவர் எழுதியிருக்கிறாரா எனும் தரவுகள் கி...
Image
வாசிப்பியல் என்பது பல அ டுக்குகளைக் கொண்டது. பள்ளிப் புத்தகங்களை வாசித்து மனதில் அடுக்கிக் கொள்வது வாழ்வின் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிடுவது வாடிக்கை. இதில் வேடிக்கை என்னவெனில் தேர்வு தவிர வேறொன்றிற்கும் உதவாத சில புழுதி படிந்தஅடுக்குகளை களைவதென்பது அத்தனைச் சுலபமும் அல்ல. வாழ்வியலின் மூச்சற்றுத் தவித்து சுவாசித்தே ஆக வேண்டிய பொழுதுகளில் அவ்வடுக்குகளின் புழுதி சுவாசப்பைக்குள் சென்று சில நேரம் நம் வாழ்வை முடிவுக்கும் கொண்டு வந்துவிடுவது தான் மாபெரும் துயரம். நீட் என்பது எத்துனை மாணவர்களின் இலக்குகளை தகர்த்துவிட்டது. போகட்டும். ஒரு சில மார்க்ஸிய பொருளாதார குறியீடுகளான தனி நபர் வருமான உச்சவரம்பையும் தனி நபரின் வரவு செலவு விகித்தாச்சாரங்களையும் கல்லூரிப் பாடங்களென இளமையின் ஆண்டுகளை செலவழித்து அடுக்கடுக்காக அடுக்கியிருந்தாலும் நம் வாழ்வின் கடன் சுமை அழுத்துகையில் செல்லரித்த அப்பாடப்புத்தக வாசிப்புத் தரவுகள் எவ்விதத்திலும் உபயோகப்படுவதில்லை. இனி உபயோகப்படப் போவதுமில்லை. ஆனால் இலக்கிய வாசிப்பென்பது நமக்கு வரலாறு அறிவியல் வாழ்வியல் பொருளாதாரவியல் சிந்தனைச் செறிவியல் உளவியல் சார்ந்த சமூக அணுக...
Image
கவிஞனை காலம் எப்படியாவது காப்பாற்றிவிடும். எப்படி என்று கேட்பவர்களுக்காக இதைச் சொல்லியாக வேண்டும். கவிஞனின் மூச்சு கவிதை. மனிதனின் சுவாசம் காற்று. மனிதனுக்கு மரணம் நிச்சயம். காற்றிற்கு மரணமில்லை. கவிஞன் நிச்சயம் ஒரு நாள் அமரனாகக்கூடும். ஆனால் கவிதைக்கு மரணமில்லை. அப்படியான மரணமில்லா பெருவாழ்வு கொண்ட காலத்தால் அழிக்கவியலா கவிதைகளை தொகுத்து அதன் மேல் எனக்கு எந்தப் புகாருமில்லை என்ற தலைப்பிட்டு சமகால கவியாளுமை அருமை நண்பர் அய்யப்ப மாதவன் இந்த ஏழைக் கவிஞனையும் அவனின் ஒரு கவிதையையாவது மரணமின்றி வாழ்ந்தாக வேண்டுமெனும் நல் உள்ளத்தாலும் காலத்தின் தொடர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஒரு அரிய இலக்கிய சேவையென கருதி ஒரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.  இரண்டு நாட்களுக்கு முன் இந்தத் தகவலை கைபேசியில் அழைத்து கவி அய்யப்ப மாதவன் அவர்கள் சொல்லியபோது அவரது மின்னும் அன்பு மின்னலில் தாக்குண்டு சிறுது நேரம் செயலற்றுப் போனேன். செயலற்றுப் போதல் என்பது மரணத்திற்கான முதற் பாடம் அல்லவா. ஒரு நாள் உங்கள் ராகவபிரியன் மரணித்துக் கிடக்கலாம். ஆனால் அவனின் இத்தொகுப்பில் இடம் பெற்ற ஒரு கவிதையை காலத்தால் அழியாமல்...
Image
  ஸ்ரீஸ்துதி 5 ஆன்மீகம் மனிதனை மனம் எனும் அந்தராத்மாவில் அரங்கனை துயில் கொள்ள வைக்கும் கலையை அனுபவம் மூலம் கற்றுத்தருகிறது. ஆனால் மனிதன் தனது கர்வத்தால் தானே அரங்கன் எனும் கடவுளின் சக்திகள் கொண்டவனாக மனதில் கர்வம் கொள்கிறான். அதனால் ஆன்மீகக் கலையை அலட்சியம் செய்கிறான். அவனின் செய்கைப்பாடுகள் உலக நிலையற்ற இன்பகளுடன் ஒட்டியிருக்கும் ஒட்டுப்பண்புகளால் சுயத்தை இழக்கச் செய்வது சகிக்கவியலாதது. மானுட அகமும் அவனின் புறமும் பள்ளத்தாக்குகளும் அதைச் சுற்றியிருக்கும் சிகரங்களும்   என கட்டி எழுப்பிய சிறைக்குள்ளாகவே சுற்றி வருவது அவனின் ஆன்மீக அறிதலுக்கான முடக்கப் பாயை விரித்து வைக்கிறது. முதலில் வேகமாக சுற்றுபவன் களைத்து சுழற்சியின் வட்டத்தைச் சுருக்கிக்கொண்டு பின்பு முடக்குப் பாயில் முடங்கிவிடுகிறான்.   ஆத்ம உபனிஷத்தில் மனிதனின் சுயம் மூன்று நிலைகளாக துண்டாடப்பட்டிருப்பதின் யதார்த்தத்தை உணர வைக்கிறது. உள் சுயம் என்பதும் வெளி சுயம் என்பதும் இரண்டையும் மீறிய அவனிடத்தே உள்ள உயர்ந்த உயர்வுச் சுயம் என்பதையும் மானுடன் தன் வாழ்வியல் கூறுகளில் அடையாளம் கண்டு தன்னைச் செப்பனிட்டுக்கொள்ள ...
Image
  முதலில் நீங்கள் யாரென்று கேட்பார்கள். அடுத்ததாக உங்களுக்கு இலக்கியம் தெரியுமா என்று வினவுவார்கள். பிறகு உங்கள் எழுத்தில் வாசிப்பனுவம் கூட கிட்டவில்லை என்பார்கள். நீங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பீர்கள். உங்களுக்கான லைக் விழாமல் இலக்கிய அதிகாரத்தால் அரசியல் செய்வார்கள். நீங்கள் அப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தால் உங்கள் எழுத்தில் எழுத்துப் பிழைகள் நிறைய தெரிகிறதென்பார்கள். உங்கள் எழுத்து நகல் என்று நகைப்பார்கள். அதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்தால் உங்களை மீண்டும் யார் என்று கேட்பார்கள். திடீரென நீங்கள் ஏதாவதொரு விருது வாங்கிவிடுவீர்கள். அது உங்கள் எழுத்திற்கு தரப்படவில்லை சிபாரிசால் கிடைத்தது என்பார்கள். அதையும் மீறி நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள். ஒரு நாள் நீங்கள் தமிழுக்கு நோபல் கொண்டு வந்து விடுவீர்கள். ராகவபிரியன்
Image
  இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக்கொண்டிருக்கிறது.. சட் டென ஒரு நொடி ஒளிர்ந்த வானிலிருந்து மகிழ்ச்சி ஆதவனும் மலர்ச்சி நிலவனும் வானவெடிகளாய் வெடித்து ஒளிநட்சத்திரங்களென கோடிகளில் சிதறி வானத்தின் ஓரமெங்கும் ஒளிந்து கொள்வதைப் பார்க்கிறேன்... என் வீட்டின் வாசல்களில் வீதியின் பட்டாசுக் குப்பைகள் ஒன்றோடொன்று உருத்திரண்டு தகர்க்கவியலா தேக்குக் கதவுகளென எழுந்து தழுவியபடி என் வெளியேறலைப் பூட்டுகிறது.. புது ஆடைகளுடன் கந்தர்வர்கள் என் வானின் திரையரங்கு முன் வரிசையில் நின்று என் கேளிக்கைக்கான அனுமதிச் சீட்டை கிழித்தெறிந்துவிட்டு அப்படிச் சிரிக்கிறார்கள் சரவெடியென... என்ன செய்வேன்..? ஒவ்வொரு ஆண்டும் அரங்கனுக்கு புது ஆடை தராமல் என் தீபாவளியின் மத்தாப்புகள் கொளுத்தப்பட்டதில்லை.. இந்த தீபாவளியில் என் மனவானின் பாற்கடல் ஆரவார அலைகளின்றி இன்னமும் எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது.. அரங்கனும் அரங்க நாயகியும் ஏன் ஆதிசேடனும் கூட புத்தாடை அணியாமல் பட்டாசு கொளுத்தாமல் வெற்றிலை சுருண்டு மிதக்...
Image
  இலக்கிய வலதுசாரிகள்...3 அது எண்பதுகளின் தொடக்க காலம். வடபை இலக்கிய நண்பர்கள் வட்டம் விரிவடைந்து தனது விட்டத்தை நீட்டிக்கொண்டிருந்தது. சிற்றிதழ்கள் எனினும் ஜனரஞ்சக இதழ்கள் என்றாலும் தீவிர விமர்சன தாக்குதலுக்கு உள்ளாகி அந்த வட்டத்திற்குள் பிய்த்து குப்பைகளாய் வீசப்பட்டுக்கிடக்கும். அப்படியான இலக்கிய விமர்சன தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் பெரும்பாலும் பிராமண எழுத்தாளர்களே..தி.ஜா.ரா முதல் சுஜாதா வரை அன்று எங்கள் வட்டத்திற்குள் கிழித்தெறியப்படாத பிராமண எழுத்தாளர்களே இல்லை.. உதாரணத்திற்கு ஒரே ஒரு நாவல் இடைவெளி எழுதிய சம்பத் எனும் சம்பத் நாராயணன் அய்யங்கார் என்பதால் பட்ட இலக்கிய பாடுகளைச் சொல்லி மாளாது. இடைவெளி நாவல் தமிழிலக்கிய கிளாஸிக் வரிசையில் சேர்க்கப்படவேண்டிய நாவல். அது மரணம் பற்றிய எண்ணப்படிமங்களை ப்ராய்டிய மனோதத்துவ ஆய்வுகளையும் விட ஆகச் சிறப்புடன் தமிழில் தன்னகத்தே கொண்டிருந்த நாவல். குறைவான வடிவெனினும் அதன் வாமன விஸ்வரூபத்தை இன்னமும் வேறெந்த தமிழிலக்கிய புதினங்களாலும் எட்டிப்பிடிக்க இயலவில்லை என்பதுதான் காலம் அழிக்கவியாலா நிஜம். சம்பத் நாராயணன் அய்யங்கார் என்பதால் அவரது படைப்பு...
Image
  நேற்றைய எனது நகைச்சுவைக்கான பதிவை வாசகர்கள் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள் என நினைக்கவில்லை...ஒரு சிலர் நீங்கள் ஜெயமோகனுக்கும் சீனியர் என்பதற்கான ஆதாரங்களை பதிவேற்றுங்கள்...இல்லையேல் ஞானக் கூத்தன் கவிதையான அம்மாவின் பொய்கள் ல் வரும் இனி பொய்க்கு எங்கே போவேன்....எனச் சொல்லி சமாளித்துவிடுங்கள் என மறைமுகமாக எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கத் தொடங்கிவிட்டார்கள்... அன்பு வாசக இலக்கியப் பங்காளிகளே இலக்கிய ரத்தத்தின் ரத்தமான வாசக உடன் பிறப்புக்களே...ஆன்மீக வாசக அன்பு நெஞ்சங்களே... வாழ்வின் கொடிய இளமையின் திசையறியா கானகத்தில் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த பொழுதுகளில்...வறுமையெனும் விஷக் கதண்டுகள் என்னைத் துரத்தித் துரத்திக் கொட்டிக்கொண்டிருந்தன...அப்போதெல்லாம் திருவாரூர் மற்றும் வடபை இலக்கிய நண்பர்கள் கவிஞர் நிறைமகிழ்னன்... நீரை அத்திப்பூ...இந்திரஜித்...அம்பி நாகராஜன்..சிந்து பாஸ்கர்...சரவணத் தமிழன்...அடியார்க்கு நல்லான்...ராஜகுரு...இன்னும் எனது ஆசிரியர்கள் கவிஞர் பேராசிரியர் கண்ணன்...போன்றவர்கள் இலக்கியப் புகை போட்டு கதண்டுகளை மயக்கமுறச் செய்து ஒரு சில எனது கவிதைகளை பத்...
Image
  My Tamil article translated into english by AI Literary Right-Wingers... I By Ragavapriyan It was by the grace of Lord Arangan that I once had the rare privilege of meeting the distinguished writer Komal during his visit to Thiruvarur . I was granted barely ten minutes to speak with him — yet those minutes have lingered in my memory ever since. At that time, this humble devotee of Arangan had written a few poems in English — awkwardly and imperfectly, as beginners often do. Amid the crowd surrounding him, I somehow managed to show him a few of my verses. To my surprise, he took one of them, glanced through it attentively, and — to my greater astonishment — managed to decipher my handwriting with ease! After a brief pause, he said with characteristic warmth and candour: “Brother, your words have depth. But to arrange them beautifully, you must learn a little more of English grammar and literature. Read abundantly.” He then went on to say, “ K. C. Venkataramani — like your fathe...