Posts

Showing posts from June, 2018

ஜெய் ஹிந்த...ராகவபிரியன்

போர்க்களங்களையே பார்த்திராத  நிகழ்கால நினைவு வெளிகளை விளையாட்டுத் திடலின் உக்கிரங்களும் வக்கிரங்களும் பெரிதும் ஆக்கிரமிக்கின்றன..குறிப்பாக பள்ளிக்கூடங்களையும் அதன் அதீத அழுத்தத்தையும் மெல்ல வெளியேற்றி இலகுவாகலம் என்று கல்லூரிகளில்  நுழையக் காத்திருக்கும் இளைஞர் சமுதாயம்  கடந்து வந்திருக்கும் காத்திரமான வருடங்களை இன்னும் கடினமாக்கி அதிக அழுத்த வன்முறைக்கு உட்படுத்தும் களம் புகுத்தும் கல்வியெனும் மாய நிகழ்ச்சூழலில்.. விளையாட்டுத் திடலின் வன்முறைகளும் வக்கிரங்களும்..செயற்கையாய்க் காட்டப்படும் சாகசங்களும்.. சின்னத் திரையில் தன் அழுத்தங்களை துடைத்து விட்டு எடையிறக்கிய மனப்பான்மையை வலிந்து பெறுகிற வடிகாலாய் மாற்றப்பட்டிருக்கிறது...அதைத் தேடிய தொலைதூர ஒட்டம் தானாகவே கொடியசைத்துத் தொடங்கிக்கொள்கிறது...தொழில் நுட்ப வளர்ச்சியென்ற பெயரில் ஒரு வயது குழந்தையிடம் எங்கிருந்தோ அதன் தாய் இதோ வந்துவிடுகிறேன் என்று பதிவு செய்த குரல்தகவல் தர...அது பொய்யென்றறியாப் பேதை மகவு தன் தளிர் நடையில் காண்போரிடமெல்லாம் தன் அம்மாவின் சுயமிப் புகைப்படம் காட்டும் கைபேசியை இப்படியும் அப்படியும் காட்டித் த...

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: WORLD CUP

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: WORLD CUP : The game has unfurled the flags of harmony The flame on the stadiums up flared in hegemony The ball of peace is kept at the centre The cap...

WORLD CUP

Image
The game has unfurled the flags of harmony The flame on the stadiums up flared in hegemony The ball of peace is kept at the centre The captains putting their legs on the thunder.. centre forwarding nations are ready to kick just for thy nation's selfish economic picks Red yellow green cards are with UN's soul At last UN's whistle will blow on a peaceful goal.. When the goal keeper is wearing a beard or turban If his colour is black or brown or belonging to mountain The ball may be kicked with extra vigorous tempers Watching children in the stands may urinate on pampers.. Our humble prayerful request for the heavy weight powers Kindly play the game in humane submissive showers.. Our defending poor nations are holding as fullbacks.. Fearing the centre right and left halfs pulling their socks.. Don't strive hard to defeat any [atom]ball less nation With thou daunting power game in unrealistic reason Let us clap our hands and open the wings of pigeons over the wo...

நீணிலையைக் கடத்தல்..

Image
நீ குறுக்கிடுகிறாய்... மண்ணுருண்டையை உருட்டும் வண்டென இருசக்கர வாகனம் உருட்டுகையில்தான் என் நீணெறியில் நீ குறுக்கிடுகிறாய்... உருண்டோடும் உருண்டையை தவ்வித்தவ்விப் பிடிக்கையில் நீ மட்டுமல்ல... கட்டெறும்புக் கூட்டெமென கட்டுப்பாடற்ற கனரக வாகனங்கள்... உடல் தூக்கி இறக்கிச்செல்லும் பச்சைப் புழுக்கூட்ட பள்ளிக் குழந்தைகள்.. அசோகர் நட்டுவைத்து இன்றுவரை தப்பிப்பிழைத்திருக்கும் மரத்திலிருந்து உதிர்ந்த நீண்மையிலை... பண்பாட்டின் நீணிதியாய் கொலுசணிந்த கால்களுடன் காவிரி மணல் சாக்குகளில் சுமந்து கடக்கும் தஞ்சைப் பெண்டிர்.. இவர்களுடனும்தான் நீயும்... இதன் மேலெல்லாமும் உன் மீதும் மோதாமல் பிரபல வீடடையும் வரை கவி நீணிலையைக் கடத்தல் அததனைச் சுலபமல்ல... இருந்தாலும் மண்ணுருண்டையில் விழும் ஒரு துளி மழைச்சொட்டிற்காகத்தான் அதைக் கெட்டிப்படுத்தி இன்னும் கடிதுருட்ட இந்த வண்டின் பயணம் நீரூபமெதிர்த்துத் தொடரும்... ராகவபிரியன்