Posts

Showing posts from October, 2018

சிதறிக்கிடக்கும் தோல்விகள்..ராகவபிரியன்

Image
உன் மாநாட்டிற்கான ஆயத்த வேலைகளின் கடல் நடுவே உருக் கொள்கிறது ஒரு புயல்.. அதன் மைய மாயக் கண்களுக்குள் வெற்றியைத் தேடுகிறாய்..இப்போதே.. உன் வியர்வைகளை உயர்ந்த வண்ணத் தட்டிகளாய் வழியெங்கும் அமைத்த நீ துவக்குகளற்ற நாவாயாய் அலைகளால் தடுமாறிக்கொண்டிருக்கிறாய்.. புயல் ஒரு குடையென உன் மீது கவிழத் தொடங்குகிறது.. மாநாட்டுப் பந்தலில் நீ நிற்கக்கூட அனுமதிக்கப்படபோவதில்லை யெனினும் அதன் முகூர்த்தப் பந்தல்காலென உன்னைப் புதைத்துக் கொண்டிருக்கிறாய்.. புயலின் மெல்லிய ஈரக் காற்று உன் மீதான வண்ணங்களை அழிக்கத் தொடங்குகிறது.. உனக்குத் தரப்பட்ட தேனீர்க் காகிதக் கோப்பையை வியர்வையால் கழுவி வைத்திருக்கிறாய்.. அதன் மீது நீ எழுதப் போகும் வரலாற்றின் வரிகள் மாநாட்டின் முழக்கங்களாய் மாறுமெனும் உன் கனவில் தீ மூட்டப்பட்டிருக்கிறது.. காய்த்த உன் கைகளில் தட்டியேந்தி வறுமையின் கொடியேந்தி ஏமாற்றுக் காரர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறாய்.. மாநாடு தொடங்க புயல் அதன் கைகளை தட்டி உன்னை எச்சரிக்கிறது.. திரும்பிப் பார்க்கிறாய்.... மாநாட்டுப் பந்தல் அதன் அலங்காரங்களுடன் வானில் துளித் துளியாக தூக்கியெறியப் பட்டுக்கொண்டிருக்கிறத...
Image
மனிதன் மன அதிர்வுகளின் பால் கால் பதித்து தள்ளாடியபடி சில செயல்களைச் செய்கிறான்...அவனைப் பொறுத்தவரை அதிர்வுகளின் பிரக்ஞ்சையும் தாக்கமும் அதன் விளைவுகளும் அவனை பாதிக்கும் வரை.. அவன் அறிவிலியாகவே இருக்கிறான்..மனிதனின் முதன்மையான இயல்பு அடுத்தவனுடன் தன்னை ஒப்பிட்டுக்கொள்வதுதான்..சில ஒவ்வாத ஒப்பீடுகளால் அவன் தன்னை உயர்ந்தவனாகவும் பலமுள்ளவனாகவும் தான் வெறுப்பவன் தன் முன்னே மண்டியிட்டுக் கதறுவதாகவும் கற்பனை செய்தபடியிருக்கிறான்..கற்பனையை நிஜமாக்கும் பொழுதின் கடினங்களில் மனிதம் இறந் து போவதைக் காணலாம்...தனி மனிதன் தன் ஆச்சார்யனை அருகிலிருந்தும் அடையாளம் காணமுடியாமல் தவிக்கிறான்..அந்தத் தவிப்பின் அதிர்வுகளால் தள்ளாடியபடி அந்த ஆச்சார்யனை அடியாள் வைத்து அடிக்கவும் தயங்காத இயல்பை ..அந்த ஆச்சார்யனின் தவப்பொருட்களை திருட்டுத்தனமாக அடைய நினைக்கும் ஒவ்வாத தீய மனப்பாங்கின் அசுர இயல்பை பிறிதொரு நாளில் உணர்வதை ஞானமெனக் காண்கிறான்..அவன் அதை அடைவதற்குண்டான நெடிய பயணத்தில் சில நேரங்களில் தன்னையே தொலைத்ததை அறியாமல் பிணமாய் கனத்துப்போகிறான்..அப்படியான ஒரு மனிதனை அரங்கன் ஆட்கொண்டு மனிதனாக்குவான் என்ற அசைக்கம...
Image
வாழ்வு என்பது பிறத்தலும் குழந்தைமையும் உழைப்பும் இன்ப துன்பங்களும் மூப்பும் இறத்தலும் எனும் நம் நம்பிக்கைகளை தகர்த்து அது முடிவற்ற போராட்டம்..ஒருவேளை முடிவின் விளிம்பில் வெற்றி என்பது நிச்சயமில்லை எனும் போதில் செல்லும் ஒவ்வொரு நொடியும் எதிர்கொள்ளும் தோட்டாக்களும் பிணங்களும் இடிபாடுகளும் இழப்புகளும் போராட்டப்பாதையை எழுத்தை நோக்கி ஒரு ஆறுதலுக்காகவாவது ஒருவரை திருப்ப முடியும்..எழுத்தின் மூலமும் போராட முடியும்...எழுத்து கண்டிப்பாக எழுந்து நிற்கச்செய்யும்..அப்படிப்பட்ட கற்பனைகளு க்கும் எட்டாத ஒரு கொடுஞ்சூழலில் ஐஎஸ் ஐஎஸ் தீவிர வாதிகளால் தனது தாயும் ஆறு சகோதரர்களும் தன் கண்முன்னால் கொல்லப்பட்டும்..தான் பாலியல் அடிமையாக கொடூரமான வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டும் அத்தனை கொடுமைகளையும் எதிர்கொண்டு தைரியமாக தப்பி வந்து லண்டனில் ஒரு மனித உரிமைப் போராளியும் தோழியுமான சட்டப்பணிகளைத் தொழிலாகக் கொண்ட அமோல் கொலோனியிடம் அடைக்கலம் தேடி தஞ்சம் புகுகிறாள் நாடியா மூரட்...2018 ன் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நிஜமான புரட்சிப்பெண்... அவரின் கடைசீப் பெண்குழந்தை[THE LAST GIRL] என்ற புத்தகம் படிப்பவர் கண்களில் க...
Image
இரவு யாசகனின் மோதிர விரல் -------------------------------------------------- எனது அட்சயபாத்திரத்தில் அன்னமிடுபவர்களின் மோதிரங்கள் எனக்குப் பிடிக்கும்.. பொற்கொல்லனின் சின்ன உளியின் சப்தங்களை பொன் உருகி கெட்டியாகும் நிமிடங்களை கண்ணுள் கொணர்ந்து திளைப்பேன்.. சில விரல்களின் உலோகங்கள் நெகிழிச் சுழுவுகள் ஓலை மோதிரங்கள் மிட்டாய் மோதிர குழந்தை விரல்கள் கூட மிக மிக எனக்குப் பிடித்திருந்திருக்கிறது.. என் அன்ன பாத்திரத்தில் தற்செயலாக விழுந்த அந்த மோதிரம் என் பிச்சைக்குத் தடையாகிப் போனது.. இப்போதெல்லாம் இரவு யாசகம் மோதிர வெளிச்சத்தில் இளைத்துப்போக.. இரவுப் பசிதாங்காமல் மோதிரத்தின் உரிமை விரலிடம் விரைந்து சென்றேன்... பெற்றுக்கொண்ட அன்னை இதை அடகில் இட்டால் தான் இன்று அன்னம் எங்களுக்கு என்றாள்... தவறாமல் இரவு யாசகம் வரவும் கட்டளையிட்டாள்.. என் அட்சைய பாத்திரங்களெங்கும் பொற்கொல்லனின் உளிச் சப்தம் ஏனோ தாளம் தப்பி கேட்டுக் கொண்டேயிருக்கிறது.. ராகவபிரியன்