Posts

Showing posts from November, 2025
Image
  ஸ்ரீஸ்துதி 6.   இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும் அமைப்பியல் தத்துவங்களை உள்ளடக்கியது. கடும் புயல் வேள்வி நெருப்பை ஊதி வளர்க்க அதில் நம்பிக்கை நெய்யை ஊற்றச் செய்யும் அணுகுமுறையைக் காட்டும் தெய்வீகப் பார்வை அது. இருண்ட வாழ்வின் வானத்தில் தீராது கொட்டும் அடர் மழையின் காலம் ஆகச் சிறியதெனச் சொல்லியபடி மேகம் மறைத்த ஆதவன் தரும் வெளிச்ச காலம் வெகு தொலைவில் இல்லை எனக் காட்டும் இயங்கியல் பார்வை இது. ஆதவனுக்கான ஹவிஸ்களை சமர்ப்பிக்கும் வேள்வித் தத்துவ கோட்பாடு புயலின் துயரை நொடியில் துடைக்கும் வல்லமை உடையது. அழிக்க வேண்டியதை அழித்து உருவாக்க வேண்டியதை புதிதாக உருவாக்குவது தான் இந்து ஆன்மீகத்தின் புயற்கோட்பாட்டுப் பார்வை. வேள்விகளில் சமர்ப்பிக்கப்படும் ஹவிஸ்கள் மானுட உளவியல் கோட்பாட்டுடன் ஒத்திசைவை தருவது இந்து ஆன்மீகத் தத்துவத்தின் கூடுதல் மரபியல் செயல்பாடெனில் அதுதான் நிஜம்.   ஆதவன் மானுட புத்தியின் குறியீடு. வேள்வியின் அக்னி ஆசைகளின் வெளிப்பாடு. சமித்துக்கள் ஆன்மாவை ஆசைகளாக்கி வேள்வியில் ச...
Image
  சில ரகசியமான விடயங்களை பொதுவெளியில் பதிவு செய்வது எதன் பொருட்டென புரியவில்லை. இருந்தாலும் வரலாற்றில் ஒரு சாமான்யனின் பெயரை செதுக்குவது அவசியம் என்பதால் தான் இந்த ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கிறது. அது 1975 ல் இருந்து 1977 வரையிலான இந்திய கண்டத்தின் அவசர நிலை காலம். ஒரு சாமான்ய ஏழை ஒரு வேளை உணவிற்காக தமிழகத்தை விட்டு கர்நாடகாவில் பதினாறு வயதிலேயே கூலியாய் உழைக்க நேர்ந்த காலம். இரும்புத் தாது சுரங்கங்களில் இரும்பு போல்டர் கற்களை சிறு சிறு ஜல்லிக் கற்கலாக உடைக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு லாரியில் அழைத்துச் செல்வார்கள். அடர்ந்த காடு சூழ்ந்த வேகக்காற்று வீசிக்கொண்டிருக்கும் பள்ளத் தாக்குகள். வெடி வைத்து தகர்க்கப்பட்ட இரும்புத் தாது போல்டர்கள். இரவு எப்போது மீண்டும் ஹோஸ்பேட்டில் கொண்டு விடுவார்கள் என்பது எவருக்கும் அறியாத ஒன்று. சுத்தியல் பிடித்து தோலுரிந்த கைகளால் காய்ந்த சோள ரொட்டியைப் பிய்த்து வெறும் மிளகாய் மட்டும் உப்பு சேர்த்து அரைத்த கூழில் தோய்த்து உண்ணுதல் என்பது அந்த சாமான்யனுக்கு அப்போது விதிக்கப்பட்டிருந்தது. ஓய்வு கிடைத்த ஒன்றிரண்டு இரவுகளில் ஒரு சில நேரம் அவனுடனான சக ...
Image
  விழா காணுதல் என்பது ஒருவித கலை. கண்களால் காணவேண்டியவையும் மனதால் காணவேண்டியவையும் திருவிழாக்களில் கொட்டிக் கிடக்கும். குழந்தைகள் முதல் வாழ்வின் இறுதி நாளில் உள்ளோர் வரை திருவிழாவிற்கு சென்று வருவது நமது மரபு. திருவிழாவில் எந்த வயதில் எதைக் காண்கிறோம் அல்லது எதைப் பார்க்க கண்களை பழக்க வேண்டும் என்பது ஆன்மீகப் பள்ளியின் பாடத் திட்டத்தில் உள்ளது. அந்தப் பாடத் திட்டங்களை அற்புதமாக போதிக்கும் ஆன்மீகப் பல்கலைக் கழகங்கள் தான் நமது திருவிழாக்கள். அப்படியான விழாபல்கலைக்கழகங்கள் ஏறக்குறைய தினம்தோறும் காஞ்சியில் தன் வகுப்பறைகளை விரித்து பாடங்களை ஜீவனுடன் போதிப்பது சிறப்பு. அவ்வகுப்பறையில் காணும் கலையை நேர்த்தி மிகு கூர்மையாக்கிக் கொள்ள போதிக்கும் பாடம் ஒன்றைப் பற்றித் தான் இங்கே பதிவு செய்தாக வேண்டும். ஓவ்வொரு கார்த்திகை ஞாயிறு இரவிலும் கச்சியின் சபேசனுக்கு தெப்போற்சவம். காஞ்சியின் பேரூர்ந்து நிலையம் தொடங்கி அடர்ந்த போக்குவரத்து நெரிசல் மிகு வீதியெங்கும் சாலையோரக் கடைகள் பாதி வீதியில் பாடங்களை போதித்துக் கொண்டிருந்தன. உள்ளூர் வாசிகள் தங்கள் குழந்தைகளுடன் ஒவ்வொரு கடையிலும் கூட்டமாகக் கூடி ம...
Image
  காஞ்சியின் சுற்றுப்புறவியல் கவலை தருகிறது. நிறைய ஏரிகள் தூர்க்கப்பட்டு குடியிருப்பு மனைகளாக உருமாற்றப்படுகின்றன. ரியல் எஸ்டேட் அதாவது மெய்ப்பேட்டையியல் அதன் ஆக்டோபஸ் கைகளை காஞ்சியைச் சுற்றி நீட்டிக்கொண்டே இருக்கின்றன. காஞ்சியின் புராதன சின்னங்கள் அதன் கவனிப்பை தொலைத்துவிட்டு சீரிளமைத் திறமிழந்து நிற்பது அவமானமாய் இருக்கிறது. மணிமேகலை காஞ்சியில் வசித்த பிள்ளையார் பாளையம் எனப்படும் பகுதியில் பிக்குணிக்கோலத்துப் பெருந்தெரு அடைதலும், ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க்குறு மாக்களும்” எனும் சீத்தளைச் சாத்தனாரின் வரிகளைப்போல பிக்குணிக் கோலத்துடன் கையில் பிட்சை பாத்திரம் ஏந்தி நிறைய ஏழைகளும் பார்வையற்றோரும் வயதானவர்களும் இன்னபிற வீட்டுணவு இல்லாதோரும் குழுமுகிறார்கள்.. அங்கே மணிமேகலையின் அமுதசுரபியென தினமும் காலையிலும் மாலையிலும் தெருவோர சிற்றுண்டி வண்டிகள் தரும் சுவைமிகு உணவுண்டு பின் பசியாறி மீந்த உணவை கெட்டிப்பட்டு ஓடவியலாமல் நிற்கும் சாக்கடையில் எறிந்துவிடுகிறார்கள்.. சாக்கடையின் முகப்பில் தப்பித்துக் கிடக்கும் உணவுகளைத் தின்ன மாடுகளும் ஒரு சில குதிரைகளும் தெரு நாய்களும் சின்னதாய் உணவுத் த...
Image
  கடல் பறவையொன்று தன் அழகையும் ஆளுமையையும் ஓயாத கனவு அலைகளையும் சுமந்தபடி பள்ளி நோக்கி சிறகடிக்கத் தொடங்கிய தேவ வேளை அது.. ஒரு தலை காதல் முட்டாள் மீனுக்கான வலையில் கத்தியைச் செருகி ஆலாவிற்கு வீசியதில் கடல் பரப்பெங்கும் அதன் கனவு றெக்கைகளும் பச்சை ரத்தமும் அலைகளோடு எல்லோரின் இதயக் கரைகளிலும் மோதி மோதி திரும்பிக்கொண்டிருக்கின்றன. பள்ளிக் குழந்தையின் பாடப் புத்தகங்களின் நடுவில் கத்தி செருகும் மாபெரும் மடத்தனம் போதிக்கும் கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டுமென கச்சத்தீவு வரை கூவும் வன்முறையின் கடல்காற்று சுழன்று சுழன்று அழுகையில் போலி முற்போக்கு கண்களில் ஈரப் பதம் ஒரு சதவீதம் கூட காணப்படவில்லை.. அந்த முட்டாள் கொலைவாளை அலைகளில் கழுவி கஞ்சா இலைகளால் துடைத்துக் கொண்டிருக்கிறான்.. கொலையாளிகளும் போதை வியாபாரிகளும் முற்போக்கு முட்டாள்களும் சுற்றி நின்று அந்தக் கயவனை காப்பாற்றத் துடிப்பதைத்தான் கடலன்னையால் பொறுத்துக் கொள்ளவே இயலவில்லை.. எந்த ராட்சச வேளையில் தனுஷ் கோடியை விழுங்கியது போல் இந்தக் கயமையை சுனாமியென எழுந்து கடலன்னை விழுங்கப் போகிறாளோ..? ராகவபிரியன்
Image
  இலக்கிய வலதுசாரிகள்..5 உடல் நிலை நலிவடைந்திந்திருந்த கடந்த பத்து நாட்களாக எழுத்தும் எண்ணங்களும் ஒரு மூலையில் குத்துக்காலிட்டு தலைகவிழ்ந்து அமர்ந்துகொண்டு படுத்தின. பண்டைய தமிழிலக்கியங்களை ஆங்கிலப்படுத்த ஏற்றிருந்த மீந்த புனித கடமை அவ்வப்போது நெற்றியைத் தொட்டுப் பார்த்து இன்னமும் சுரம் விடவில்லை எனச் சொல்லிவிட்டு அருகில் அமர்ந்து கொண்டு உறங்கவியலாமல் செய்தது. நினைவற்று படுக்கையில் கிடக்கிறேன். எழுத்தின் பழைய நினைவுகள் இமைகளை திறந்தும் மூடவும் செய்து சில காட்சிகளை விரித்துக் காட்டிவிட்டு மீண்டும் சுருட்டி வைத்து விளையாட்டுக் காட்டுகையில் திரும்பிப் படுப்பது இயலாமல் போனது. ஒருகளித்த நிலையென்பது பேரவதையல்லவா... சட் டென மனைவி பகவத் கீதை புத்தகத்தை எடுத்து வந்து தலைக்கடியில் வைக்கிறாள். அதீத சுரம் தலையை தொங்கச் செய்கையில் கீதையின் அடர்ந்த புத்தக அணை கழுத்தின் நெகிழ்வுத் தன்மையைத் தக்கவைத்து மீண்டும் தலையை நிமிரச் செய்யுமென நம்புபவள் அவள். அந்த பாதி நினைவின் பொழுதில் கீதையை தமிழில் மொழிபெயர்த்த மாபெரும் பன்மொழி வித்தகர் ஸ்வாமினாத ஆத்ரேய சாஸ்திரிகள் மனதின் வெளியொன்றில் சாய்வு நாற்காலியில...
Image
  முதலில் வோட்டிங் மெஷின் மின்னணு முறையில் ஓட்டுக்களை பாஜகவிற்கு போடுவதாகச் சொன்னார்கள். பிறகு வோட்டிங் மெஷின்களை முன்பே தயார் செய்து இரும்பு அறைக்குள் அடுக்கி வைத்துவிடுகிறார்கள் என்றார்கள். பிறகு பிரேசிலில் இருந்து வந்து ஒருவர் அறுபத்து ஏழு ஓட்டுக்கள் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் விமானத்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பிரேசில் திரும்பிவிட்டதாக கதைத்தார்கள். பீகாரின் மக்கள் எதையும் காதுகொடுத்துக்கூட கேட்கவில்லை. இனி கேட்கப்போவதும் இல்லை. அவர்களின் உரத்தக் குரல் என்ன சொல்கிறதென புரிகிறதா...? நாளைய தமிழக மக்கள் மீண்டும் உயிர்பெற்று அரசியல் களத்தில் உலவும் பால கங்காதர திலகர் நரேந்திர மோடியையும் சர்தார் வல்லபாய் வல்லமையுடைத்த அமித்ஷாவையும் 239 தொகுதிகளிலும் வெல்ல வைக்கப்போகும் நாள் தொலைவில் இல்லை என்றுதான் உரத்துச் சொல்கிறார்கள்.. ராகவபிரியன் அன்று நித்திஷ் மோடிஜியிடம் என்ன சொன்னார் தெரியுமா... 243 லட்சியம் 243 ம் நிச்சயம்...என்பதுதான் அது..
Image
  பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம். தொலைக்காட்சியின் படக்காட்சிகள் உடல் வாதையையும் மீறிய மனவாதையின் காய்ச்சலை சுரமாணியின் பாதரச எல்லைகளையும் தாண்டி உடைத்துத் தெறிக்கச் செய்து விட்டது. தடுமாறி திக்கற்று தவித்த அறச்சீற்றம் கொட்டிய வார்த்தைச் சிதறல்களை இங்கே உங்களுக்காக பின் நவீன பாணியில் ... தில்லி செங்கோட்டையில் சிகப்பு வண்ணத்தை மனித உடல்சிதறற்களின் பிய்ந்து பீறிட்ட குருதியில் பூசியிருக்கிறான் ஒரு கயவன்... இதயமில்லாதவனின் இறுதியாத்திரைக்கு மகிழுந்துவை அவனின் மதம் கொடுத்தனுப்பியிருப்பதுதான் கொடுமை.. அவன் ஓட்டி வந்த மகிழுந்துவில் அவன் சுமந்து வந்திருந்த மதமும் தீரா மானுட வெறுப்பும் அவன் கொளுத்திய வெடியில் வெடித்துச் சிதறாமல் இருந்ததுதான் வியப்பு. அக்கொடியவனால் அப்பாவி உயிர்களும் அவர்களின் கனவுகளும் ஏன் ஒரு குழந்தையின் பால் போத்தலும் கூட வெடித்துத் தூள் தூளாகி குதுப்மினாரின் உச்சியில் குவிக்கப்பட்டிருப்பதால் இன்று அது தலைகுனிந்து நிற்கிறது.. இந்தியா ஒரு போதும் இதையொத்த வன்முறைக்கு ...