திருவரங்க மோகனமித திவ்ய மயக்குகள்…4 அரங்கனின் மொழி அர்த்தங்கள் நிறைந்தவை…ஒரு சொல் ஆழ்கடலின் ஆழம் தொடும் அடர்வு கொண்டது…அரங்கனுடன் உரையாடுதல் என்பது அரங்கனின் சொற்களை உள்வாங்குதல் மட்டுமே…அவனின் மொழியில் பதிலுரைத்தல் என்பது மானுட சக்திக்கும் அப்பாற்பட்டது…அரங்கனுடன் முனிபுங்கவர்கள் தவசீலர்கள் பக்திமான்கள் உரையாடியிருப்பதை மானுடம் உணர்ந்தே இருக்கிறது…. இவ்வெளிய பக்தன் கடந்த சில இரவுகளில் அரங்கனின் தெய்வீகச் சொற்களை செவிமடுக்க நேர்கிறது…ஒவ்வொரு சொல்லும் கடல்பரப்பில் விழுந்து அர்த்தம் நோக்கி நீந்தத் தொடங்கும்…அச்சொற்கள் செவி வழி மனத்தரை அடையுமுன்பே அர்த்தக் கடலின் வேக ஓட்டம் சொற்சில்லை எங்கோ இழுத்துச் சென்று கரைத்துவிடும்…எஞ்சிய ஒன்றோ இல்லை இரண்டோ சொற்களுக்கும் அர்த்தம் தேடித்தான் இவ்வெளியவன் அரங்கன் முன் நின்று கொண்டிருக்கிறான்… எதிரே திருவரங்க மோகனமித திவ்ய ரூபம் காட்டிடும் துத்தை மரத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான்…பார்வையும் நாளும் சாயத் தொடங்க ஆதவக் கிரணவழி துத்தை மரமிடை நரசிம்ம முகம் காட்டுகிறான் அரங்கன்…உடல்மொழி நடைமொழி பாவனைமொழி முகமாற்றுமொழி என எத்தனையோ எழுத்துருக்களற்ற மொழ...
Posts
Showing posts from 2024
From time immemorial Little Krishna comes back to our Hindu traditional houses during every august/september... putting one flour childish foot in front and another at back from the door to Pooja room wending on His way playing the divine flute... He is invisibly tall like His teachings and dark like His magics... His arrival marks the stirring joyous cream of butter from the life's suffering buttermilk... The twisted and rounded crunchy snacks salty and sweety marked out the pain from pleasure... and vice versa.. The fruits and flowers with camphor circles offered in front of Him ... definitely eliminate the rotating death from real life... Every Janmashtami Krishna peeped beyond His curtains will smile and bless the power of peace and prosperity... He answers not only the question of His existence but also the ambiguous human existentialism... Ragavapriyan Thejeswi
திருவரங்க மோகனமித திவ்ய மயக்குகள்…3 அனுதினமும் தொடக்கம் கண்டாக வேண்டும்…தொடங்க வேண்டுமெனில் அரங்கனைப் பார்த்தாக வேண்டும்…அரங்கனைப் பார்க்க கோவில் செல்வது தானே வழக்கம்…கோவிலின் முன்பே கண்விழிக்கும் வரம் அரங்கன் தந்திருந்தால் மட்டற்ற மகிழ்வுடன் எந்நாளையும் எக்காரியத்தையும் தொடங்கலாம்…. இதோ நாள் தொடங்கி நீண்ட நேரமாகிவிட்டது….இன்னமும் கோவில் கதவுகள் திறக்கப்படவில்லை…பக்தன் நிற்கிறான்…நடக்கிறான்…அமர்கிறான்…ஆழ்மனதில் அழுகிறான்…அவனின் இயக்கம் தேங்கி நிற்க…நாள் நகர்ந்துகொண்டே இருக்கிறது… ஒரு முறை அரங்கனிடம் கேட்கிறான்…பக்தர்கள் உன்னைப் பார்க்க எவ்வளவு துன்பங்களை கடக்கிறார்கள்…இவ்வெளிய பக்தனும் கூட உன்னைக் காணவியலாமல் ஏமாந்து திரும்பிய சுற்றுக்கள் நிஜம் தானே.. அரங்கன் சொல்கிறான்…பக்தர்களை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்…என் அர்ச்சையின் முன் ஒரு நொடி பக்தன் முகம் தென்பட்டால் என் அர்ச்சை குளிரும்…அதனால் தான் தரிசனம் தேடி பக்தர்கள் கூட்டம் என்னை குளிர்விக்க கோவில்களில் குவிகிறார்கள்…உனக்கோ என் அர்ச்சை முன்பு விழிக்கும் வரம் தந்திருக்கிறேன்…எதிரே நில்…என் அர்ச்சையின் உக்கிரம் தணிய நின்று கொ...
பார்வை எனும் சிட்டொன்றை கூண்டிலிருந்து விடுவிக்கிறேன்... சுற்றியிருக்கும் எல்லாவற்றின் மேலும் அமர்ந்து மூக்கு சொறிந்துவிட்டு பறந்துவிடுகிறதது... இரு மாணவர்கள் அடித்துக் கொள்கிறார்கள்... அச் சண்டையில் அமர்ந்து சிறகடிக்கிறது... ஒருவன் கொல்லப்படுகிறான்... அப்பிஞ்சு சவத்தின் மீதும் கூசாமல் அலகு தேய்கிறது... கஞ்சாப் புகையினூடே பறக்கையில் அதன் சிறகுகள் போதை மீறுகின்றன... சற்றே காற்றில் தடுமாற்ற நடனமிட்டு டாஸ்மாக் கடையின் பெயர்பலகையில் எச்சமிடுகிறது... ஏழைக் கும்பலொன்று தீச்சட்டியும் காவடியுமாய் ஊர்ந்து செல்ல தேக்கப்பட்ட வாகன ஓட்டியின் தலையருகில் தாழப்பறக்கிறது... பணக்காரர்கள் அலகுகுத்திக்கொள்வதில்லையெனும் நிஜத்தின் வான் நோக்கி தன் பறத்தலை செருகியபடி யோசிக்கிறது... கும்பாபிஷேகங்களில் கருடனைத் தேடுபவர்களை சிட்டுக்கள் பொருட்படுத்துவதில்லை... திருவிழாவில் தொலைந்த குழந்தையைத் தேடும் தாயென அங்குமிங்கும் அலையும் சிட்டு கைபேசி கோபுரக் கதிர்களால் பறத்தல் தொலைத்து மரணித்துக் கிடக்கிறது.... உறைந்த கைபேசி பெட்டிகளுக்குள்தான்.... சின்னச் சின்ன சிட்டுப் பார்வைகள் புதைவதற்கோ புதைப்பதற்கோ அ...
யக் ஞோபவீதம் பரமம் பவித்ரம்… சிறுகதை இரு சக்கரவாகனத்தை நிறுத்த இடமில்லை…காவிரியின் துறைக்கான நுழைவு மண்டபமெங்கும் குப்பைக் கூளங்களின் குவிப்பும் அது தந்த ஒருவித துர் நாற்றமும் நுழைவையும் நுகர்வையும் தடுக்கும்…உடலெல்லாம் வியர்வையுடன் விபூதிப் பட்டைகள் உடம்புடன் பலர் ஆங்காங்கே அமர்ந்திருக்கிறார்கள்..அவர்கள் முன்னால் சிறு சிறு கூட்டம் அமைதியாய் நேர்த்தியாய் சந்திரனைச் சுற்றிய நட்சத்திரங்களைப் போல வெற்றுடம்புடன் ஒளிர்வுகளை உதிர்க்கும்… ஒரு நொடி கண்கள் இமையை மூடித் திறக்கும்… இங்க வாங்கோ என ஒரு வாத்யார் வாஞ்சையுடன் அழைக்கிறார்…அவர் முன் இருப்பவர்கள் சட்டையைச் சுழற்றி அருகில் வைத்திருக்கிறார்கள்…கூடையோ மஞ்சள் பையோ தேங்காய் வாழைப்பழம் வெற்றிலைப் பாக்குடன் மடங்கி காலோரம் பதுங்கிக் கிடக்கும்…எதிரே தாம்பாளம் பித்தளை எவர்சில்வர் ஏன் பாக்குமட்டைத் தாம்பாளம் கூட ஆனால் கோள்களைப் போன்ற வட்ட வடிவில் தான் கிடத்தப்பட்டிருக்கும்…அதன் மேல் பஞ்சபாத்திர உத்தரணி பித்தளை வெண்கலம் நன்றாக பளிச் சென்றும் பாசிபிடித்தும் விதவிதமான வண்ணங்களில் இளித்து நிற்கும்…ஒரு சிலர் முன்னால் வெள்ளி பஞ்சபாத்திர உத்தரணி பளி...
பள்ளிச் சதங்கைகள்.. சிறு கதை… எவராலும் அணுக முடியாத மலையுச்சியின் ஆபத்தான மறைவிடத்திற்கு சதாம் ஹுசைனும் யாமினியும் வந்தார்கள்… இன்னமும் அமரவோ தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவோ இருவரும் தயாராக இல்லை… “இப்ப என்னதான் ஒன்னோட கண்டிஷன்…சொல்லு…”எனக் காட்டமாகவே கேட்டான் சதாம்.. மலையேறியதில் மூச்சு வாங்கினாலும் அவனின் பேச்சில் வீச்சமெதுவுமில்லை… “அதான் நாம சந்திச்ச மொத நாள்ளேர்ந்து இதோ இப்ப வரைக்கும் சொல்லிண்டிருக்கேனே…பள்ளி வாசல்ல என்னோட பரத நாட்டியத்தை அரங்கேற்றனும்…அரங்கேற்றம் முடிஞ்ச அடுத்த நொடி நீ என்னோட கழுத்துல தாலி கட்டிடலாம்…” யாமினி சதாமை விட வேகமாகவே மலையேறியிருந்தாலும் அவளுக்கு மூச்சு வாங்கவில்லை…ஆனால் பேச்சின் வீச்சு கொஞ்சமும் குறையவில்லை… “தாலி கட்டற வழக்கமெல்லாம் எங்க மதத்துல கெடையாது…யாமி…புரிஞ்சுக்கோ…வேணும்னா மொதல்ல ஒங்க கோவிலுக்குப் போவோம்…அங்க ஒனக்கு தாலி கட்டறேன்…எங்க மத வழக்கப்படி கருகமணி மாலையில பிறை வச்ச டாலர் தான் தங்க கம்பியில கட்டி போட்ருப்பாங்க…எல்லா கல்யாணமான லேடீஸும் போட்ருப்பாங்களா தெரியாது…அது ஒரு பிரச்சனையில்ல யாமினி…பள்ளி வாசல்ல மட்டுமில்ல…ஒரு முஸ்லீம் தெரு...