Posts

Showing posts from March, 2019

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: காளத்தி நாதரை தரிசிக்க அதிகம் காத்திருக்க வேண்டியத...

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: காளத்தி நாதரை தரிசிக்க அதிகம் காத்திருக்க வேண்டியத... : காளத்தி நாதரை தரிசிக்க அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை..திருப்பதிக்கு வரும் அதே அளவு கூட்டம் காலஹஸ்திக்கும் வருகிறது...ஆனால் தேக்கப்படுவத...
Image
காளத்தி நாதரை தரிசிக்க அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை..திருப்பதிக்கு வரும் அதே அளவு கூட்டம் காலஹஸ்திக்கும் வருகிறது...ஆனால் தேக்கப்படுவதில்லை..பக்தியின் வியாபாரம் தவிர்த்த நிஜம் இது..வரிசையில் வரும்போதே அர்ச்சனைத் தட்டுத் தேங்காயை உடைத்து விடுகிறார்கள்..அதை உடைத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அர்ச்சகர்..என் முகத்தை ஒருதரம் பார்த்தார்..நான் பிரபலமென்று அவருக்குத் தெரியாதென நினைத்திருந்தேன்..மொட்டை வேறு அடித்திருக்கிறேன்..என் முக நூல் பதிவுகளை காளஹஸ்தி வரை படித்திருக்க வாய்ப்பில்லையென எண்ணி இறுமாந்திருந்தேன்..ஆனால் அர்ச்சகர் மீண்டும் ஒருமுறை என் முகத்தைப் பார்த்தார்..இந்த முறை அவர் கண்களிலிருந்து வெளிப்பட்ட அக்னியை என்னால் படிக்க முடிந்தது...விறுவிறு என அவ்விடத்தைவிட்டு அகன்று போனார்..என் பின்னால் கூட்டம் தேங்கத் தொடங்கியது...என் எதிரே வரிசையின் வெற்றிடம் இழுக்கத் தொடங்க நான் அமைதியிழந்தேன்..உடனே ஒரு பிராமணரல்லாத சிப்பந்தி எனக்கடுத்திருந்தவரின் தேங்காயை வாங்கி உடைக்க இப்போது வரிசையில் நான் ஒதுக்கப்பட்டேன்..இது தீண்டாமையில்லையா..?மராட்டிய தயாபவாரின் தலித்திலக்கிய கவிதையொன்று நினைவில் வர....
கபில தீர்த்தம் என்ற இடத்தில் ஒரு மலையருவி உள்ளது...முன்பு திருப்பதிக்கு நடந்து வருபவர்கள் அங்குதான் குளித்து கபிலர் வணங்கிய லிங்க உரூபமான சிவபெருமானை வணங்கி பின் ஏழுமலையானைத் தரிசித்திருக்கவேண்டும்..கோவிலுள் செல்லும் முன்பே மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள வசதியாகப் பூங்கா ஒன்றும் இருக்கிறது..அருகில் பாதிமுடிவடைந்த நிலையில் ஒரு தேர் நின்றுகொண்டிருக்க எதிரே நம்மாழ்வார் சந்நிதி..உள் நுழைந்து நம்மாழ்வார் பாசுரம் ஒன்றை உரத்தக் குரலில் சொன்னவுடன் பட்டர் துளசி பிரசாதத்தைக் கையில் திணித்து நனவுலகிற்கு எனையழைத்து வந்தார்..செய்மோர் ஸ்மித் பின் நவீன கவிதைகளை எப்படியணுக வேண்டுமென்பதை அட்டகாசமாகச் சொல்லியிருப்பார்...பின் நவீனக் கவிதைகளைப் புரிந்துகொள்ள முயலக்கூடாது...நம்மாழ்வார் எப்படி நாலாயிரம் பாடல்களையும் கூரத்தாழ்வாருக்குக் காட்டிக்கொடுத்தார் என்று மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் பக்தியிலக்கியமென்று நம்புகிறோமோ ......அதே போல் பின் நவீனக் கவிதையைப் பின் நவீனமென நம்பவேண்டுமென்று சொல்லும் செய்மோர்..அதைப் புரிந்துகொள்ள முயலும் போது கருத்துத் திணித்தல் எனும் கடின மொழிக்கூற்றையும்.. நமது வாடிக்கையா...
18.03.2019 அன்று விடியல் நான்கு மணிக்கெல்லாம் ஸ்ரீனிவாசம் எதிரே உள்ள நெடுஞ்சாலையை மிகச் சுலபமாகத் தாண்டி தள்ளுவண்டியில் தரப்பட்ட மிகத் தரமான விலைமலிவான தேனீர் அருந்திவிட்டு தானாகக் கூவியழைத்த முச்சக்கர தானியங்கி ஊர்தியில் திணித்துக்கொண்டோம்..ஒரு யதார்த்த நிகழ்வாய் ஊர்தி ஒட்டுனர் வழியில் நின்ற இன்னும் இருவரை ஏற்றிகொண்டு திருப்பதியின் எல்லாச் சாலைகளையும் சுற்றிக் காண்பித்தார்..நாங்களும் மாந்திரீகத்திற்கு ஆட்பட்டவராய் கொஞ்சம் நகர்ந்து இடம் கொடுக்க ...ஆகச் சிறந்த ஆந்திராவின் மருத்துவமனைகள் அங்கிருப்பதாக மாந்திரீக யதார்த்த வாதம் செய்து...பெருமைப்பட்டுக்கொண்டே நடுவில் ஏறிய இருவரையும் இறக்கிவிட்டுவிட்டு எங்களை அலிபெறி அதாவது திருப்பதிமலையடிவாரத்தில் இறக்கிவிட்டார்... வாகனங்களைத் தவிர்த்து நடந்து மலையேறுவதென்பது ஒரு தனித்த பக்தியின் தெய்வீக நடப்பின் நிஜம்..பண்டைய தமிழர்கள் காசிமுதல் ராமேஸ்வரம் வரை நடந்தே போயிருக்கிறார்கள்..நமது ராமானுஜர் கூட திருப்பதி மலையை எந்த வசதியுமற்ற பாதுகாப்பற்ற அபாயங்கள் நிறைந்த அந்நாட்களில் தினம் மூன்று முறை நடந்து ஏறி வழிபாடுகளைச் செம்மைப்படுத்தியதாக வரலாறு பேசுக...

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..எனது திருப்பதி பயண அன...

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..எனது திருப்பதி பயண அன... : அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..எனது திருப்பதி பயண அனுபவங்களை விரைவில் பதிகிறேன்..முன் கூட்டியே முன்பதிவு செய்த இருக்கையில் பயணித்ததால் என்னு...
Image
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..எனது திருப்பதி பயண அனுபவங்களை விரைவில் பதிகிறேன்..முன் கூட்டியே முன்பதிவு செய்த இருக்கையில் பயணித்ததால் என்னுடன் மூன்றாவது முறையாக டெரிடாவும் வந்தார்..அவர் சொல்கிறார்...பின் நவீனம் என்பது நம்பவைக்கும் புனைவெழுத்தாம்..மாயூரம் வேத நாயகம் பிள்ளையின் முதல் நாவலை அத்தனை வாசகர்களும் உண்மையான நிகழ்வின் பிரதியென்றே எண்ணியிருந்ததாகப் படித்திருக்கிறேன்..ஆனால் நவீனத்தில் அது புனைவென்று சொல்லி உண்மையை சாதுர்யமாக மறைத்துவிட முடிகிறது...பின் நவீன கவிதைகள் புனைவ ின் பெயரால் ஒரு கவிஞனோ எழுத்தாளுமையோ தன் அதிகாரத்தை வாசகன் மேல் செலுத்துவதென்பது அந்த வாசகனை அந்தப் பிரதியிலிருந்து விலகி நிற்க வைத்துவிடுகிறதென்பதே என் அனுபவ நிஜம்...இருந்தாலும் வலிமைமிக்க பின் நவீனக் கவிதையால் ஒரு கவிஞனால் வாசகனிடம் நெருங்கிவிட முடியுமென்று நான் நம்புவதால் இந்தப் பின் நவீன கவிதையை இங்கே பதிவிடுகிறேன்..பின்னூட்டங்களோ விருப்பங்களோ எதுவுமற்றிருப்பின் இதன் வெற்றி ஊர்வலம் தொடங்கிவிட்டதென்றே அறிக...வணக்கங்களுடன்...அன்பன்...ராகவபிரியன் மலையேறி வந்து முடியிறக்கியானது.. மீந்தச் சிறு உச்சிக் கற்றைக...
Image
ஆன்மீக நிகழ்வுகள் ஆயிரமாயிரமாண்டுகளாய் நிகழ்ந்த வண்ணமுள்ள நம் திருவரங்கத்தின் ஆதி பிரம்மோத்ஸவமான பங்குனித் திரு நாளின் இரண்டாம் நாள் திருவரங்கன் ஜீயபுரம் எழுந்தருளுவார்...இன்றும் இதோ எழுந்தருளியிருக்கிறார்..தெய்வ பக்தியென்பதியென்பது யதார்த்த அனுபவ நிஜம்..அந்த நிகழ்வின் காரண கர்த்தாவான அரங்கன் புரிந்த அற்புதங்கள் வரலாறாகி அந்த வரலாற்றை தலைமுறை தலைமுறைகளாக கொண்டு சேர்க்க நிகழ்த்தப்படும் நிகழ்வுகளே திருவிழாக்களும் உத்ஸவங்களும்...எப்படி பின் நவீனத்திற்கு ராஜம் அய்யர் பங்களிப்புகள் மற்றக்கப்பட்டதோ அப்படி பின் நவீன யுகத்தின் கோவில் திருவிழாக்களின் ஆதி தொடக்க நிகழ்வுகள் மறக்கப்பட்டுவிட்டன.. அகண்ட காவிரியாய் குடகிலிருந்து குதித்தோடிவரும் ஆறு முக்கம்பூ என்ற இடத்தில் இரண்டு ஆறுகளாய்ப் பிரிந்து சில ஆயிரமாண்டுகட்கு முன்பு மணப்பாறை வரையும் பல சிற்றாறுகளாய் ஓடியிருந்திருக்க வேண்டும்..நடு நடுவே சில தீவுகளும் தீபகற்பங்களும் சிற்றூர்களாய் இருந்தவிடத்து இன்றும் கூட ஒரு சிறிய தீப கற்பமாய்த் திகழும் ஜீயபுரத்தில் ஒரு மூதாட்டியும் அரங்க பக்தனான சின்னஞ்சிறுவனும் வசித்து வந்தது நிஜம்..கரைபுரண்ட காவிரி பங்...
Image
தனது நாடகங்களில் பிரச்சாரத் தன்மையில்லாத அழகியலோடு கூடிய பூச்சற்ற உண்மைகளை ...அதுவும் அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வியல் அவலங்களை எந்தக் கம்யூனிஸ பள்ளிக்கும் செல்லாமல் தனது எழுத்தின் வலிமையால் மட்டுமே சாத்தியமாக்கிக் காட்டிய பெர்டோல் பெரெக்ட் உலக இலக்கியங்களின் சிறப்பியல்புகள் என்பது கருத்துத் திணித்தல் இல்லை என்று உரக்க முழக்கமிட்டவர்.. அவர் தனது நாடான ஜெர்மனியின் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளைச் சகிக்காமல் எழுத்துச் சாட்டையால் ஆதிக்க மனப்பான்மையுள்ள அத்தனை பேரின் முதுகி லும் ஒரு கோடாவது ரத்தச் சிவப்பில் போடாமல் விடவில்லை.. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தந்திர அரசியலுக்கு உடன்பட்ட அதிகாரமிக்க குழுவொன்று பெரெக்டையும் இன்னும் அந்நாளில் பிரபலமாயிருந்த 20 நபர்களையும் விசாரனைக்கு வரச் சொல்லி உத்தரவிட...மற்றவர்கள் தயங்க நிஜமான சிம்மமாய் அவர்கள் முன் தோன்றி...ஆங்கிலம் தெரியாதென ஜெர்மானிய மொழியில் கேள்விகளுக்குப் பதிலளித்து...அட்டகாசமான நகைச்சுவையுடன்...தான் கம்யூனிஸ்ட் இல்லை என கர்ஜித்தவர்...அவரின் பதில்களை மொழிபெயர்த்தவர்..அவரின் ஆங்கில அறிவைக் கண்டு வியந்து...தனது மொழ...
எனக்கென நிறைய இருக்கிறது உங்களுக்கெனவும் தான்.. நடுவில் இல்லாமையென்பதென்ன...? சிற்றுண்டி எடுத்த பின்னும் கோவில் பிரசாதத்திற்காக நிறைந்த நிறைய கைகள் நீள்கின்றன.. இரவுப் பட்டினிக்குப் பின்னான காலைத்தேனீரகங்கள் மொய்க்கப்படுகின்றன.. திடீரென குடி தண்ணீருக்கான காலிகுடங்கள்கூட நடுச்சாலைகளில் நினைவிழந்தபடி வரிசையில் நீள்கின்றன.. எதுவோ இல்லையென்பதை எப்படியோ நினைவுபடுத்துகிறார்கள்... வேலை காலியில்லை சோலைகளில் பூக்களில்லை தானியங்கி பணப்பெட்டிகளில் பணமில்லை.. அங்கே காவலாளி தூங்குவதுமில்லை.. பீர் குடுவையில் ஊற்றப்படுகையில் நுரை வருவதில்லை.. இப்போதெல்லாம் போதையும் வருவதில்லை.. வாழ்விற்கான போராட்டங்களில் உயிரில்லை.. நெகிழிக்குப்பைகள் கொட்டப்படாத... சாக்கடைகள் கலக்காத... காவிரியில்லை.. எனக்கான சின்னமின்னும் ஒதுக்கப்படவில்லை இல்லை இல்லை இல்லை... ஆனால் எதுவோ இருக்கிறது... வாக்காளர் அடையாள அட்டையிருக்கிறது.. வாக்கு வங்கிகள் இருக்கின்றன.. அந்த வங்கிகளுக்கான தானியங்கி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. இந்தியா இருக்கிறது... எனக்கும் அதற்கும் நிறைய எதிரிகளும் இருக்கிறார்கள்.. பாராளுமன்றம...