என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வதானால் அதிகாரபூர்வமாகச் செய்யுங்கள். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.. ராகவபிரியனின் படைப்புகளைத் தடை செய்தால் அவருக்கு நாளை நோபல் கிடைக்க வழி செய்கிறீர்கள் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.. மிக்க நன்றியும் அன்பும்.. ராகவபிரியன்..
Posts
Showing posts from 2025
தமிழிலக்கிய ஆபரேசன் செந்தூரம்...4 தன் வாழ்விடக் காட்டிலிருந்து தப்பிய புலி நள்ளிரவில் மானுடக் குடியிருப்புகளில் பசியின் வரலாற்றை உறுமியபடி இரை தேடி அலைகிறது.. உடும்பின் இடுப்பில் நூலேணியைக் கட்டி கோட்டை மதிலேறிக் குதிக்க வந்த வரலாற்றுத் திருடன் புலிக்குப் பயந்து பம்மத் தொடங்குகிறான்.. இரவின் நிசப்தத்தில் ஒலிக்கும் விதவிதமான பல்குரல் ஒலிகளுக்குப் பயப்படாத குடுகுடுப்பைக்காரன் புலிப்பாதை மசானத்தில் தலைச்சன் பிள்ளை மண்டையோட்டை தோண்டத் தொடங்குகிறான்.. அவனின் குழிபறிக்கும் மண்வெட்டிச் சப்தத்தில் திராவிட வரலாறு ஒலிக்கத் தொடங்க புலியும் உடும்பும் தலைச்சன் பிள்ளைப் பிணமும் பயந்து நடுங்கத் தொடங்கின.. அந்த நிசப்த வரலாற்று அருவப் பொழுதுகளில் எரிந்த கட்சி எரியாத கட்சி விரசப்பாட்டின் சிற்றிண்பம் துய்க்க வாடிக்கையாய்ச் செல்லும் முண்டாசு சுற்றிய பெருந்தலைகள் பம்மிப்பம்மி பயமின்றி நடக்கும் பின் நவீன பிந்தைய காலணி காலங்களில் தங்கள் மனைவிகளை ஒருபோதும் உடன் அழைத்துச் செல்வதில்லை.. போகட்டும்.. மானற்ற காடுகளைத் துறந்த புலி சேவல் கிடைத்தாலும் சமாதானமாகிவிடுவதை மூடிய மின்சுற்று படக்கருவிகள் இப்போது பத்த...
தமிழிலக்கிய ஆபரேசன் செந்தூரம்..3. பாரதி தனது ஐந்து வயதிற்குள்ளாகவே தனது தாயை இழக்கிறான். அவன் மீது தாயன்பு காட்டும் அத்துனை பொருட்களிடமும் அதாவது மானுடம் இயற்கை பறப்பன ஊர்வன அனைத்திலும் தன் தாயைப் பார்க்கிறான்.. இங்கே ஈடிபஸ் காம்ளெக்ஸ் என எதிர்வினையாற்றுபவர்கள் பாரதி சிறுவயதில் பிராமணரல்லாத ஒரு சிறுமியிடம் காதல் கொண்டிருந்தார் அதுவும் எட்டு அல்லது ஒன்பது வயதில் என பதிவு செய்கிறார்கள்.. இது மிகவும் கண்டிக்கத்தக்க கீழ்த்தரமான உள்நோக்கம் கொண்ட பிராமண வெறுப்பை விதைக்கும் பதிவு.. பாரதியின் சுயசரிதையில் பாரதி இப்படிச் சொல்கிறார்.. ஆங்கோர் கன்னியை பத்துபிராயத்தில் ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினேன்.. பாரதி வணங்கியது சிறுவயதிலிருந்தே தன் தாயாக பாவித்த அந்த ஆதிபராசக்தியைத் தான் என்பதை கவிஞர் மீரா தொகுத்த பாரதீயம் என்ற கட்டுரை தொகுப்பில் திரு டாக்டர். சி. கனகசபாபதியின் கட்டுரையில் காண இயலும்.. பாரதியின் சமகால சினிமா படத்திலும் இதுபோன்ற பிராமண வெறுப்பு காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது..அதற்கு பாரதியின் வேறு தலைப்பிலுள்ள பாடலுக்கு இளையராஜா இசைவேறு அமைத்திருக்கிறார்.. இது இன்றைய அதீஸ்ட் இடதுசாரி ப...
தமிழிலக்கிய ஆப்பரேசன் செந்தூரம்...2 பாரதியின் பாட்டிற்கு முருகனே நேரில் வந்ததாக தமிழ்த் தென்றல் திரு.வி.க வே சொல்லியிருக்கிறார்... பாரதி புதுவையில் கனகலிங்கத்திற்கு பூணுல் அணிவித்ததால் அவர் இடதுசாரி எனவும் இன்றைய அதீஸ்ட்களின் அரசாங்கத்தைத் தூக்கிப் பிடிக்க பாரதியை மேற்கோள் காட்டும் இலக்கிய வன்மத்தை இப்போது பூர்ண சந்திர தீபக்கனலாக கக்கிக்கொண்டிருக்கிறார்கள்.. இந்த கடவுள் மறுப்பு அரசாங்கத்திற்கு ஜால்ரா தட்டும் இடதுசாரி அதீஸ்ட் இலக்கிய கர்த்தாக்கள் உலக மஹாகவியின் ஆன்மீக தேசீய சிந்தனைகளை சுருக்கி சுருக்குப்பைக்குள் வைத்து இடுப்பில் செருக்கிகொண்டு விட்டதாக எழுதுவதால் பாரதியின் முண்டாசின் வண்ணம் ஒரு போதும் மங்கிவிடாது.. உங்கள் பொய் இலக்கிய குப்பைகளோடு இந்த இந்து எதிர்ப்பு அரசும் நாளை பரம்குன்றத்தின் தீபத் தூணில் எரியும் அக்னியில் நெய்யாக வார்க்கப்படப்போவது நிஜம்.. பாரதியே சொல்கிறார்...அடியார் பலரிங்குளரே அவரை [ இந்த பெரியாரிஸ்ட் ஆட்சியின் பிடியிலிருந்து 2026லாவது] விடுவித்தருள்வாய்...என... அப்போது இந்தப் பாட்டை நாட்டைக் குறிஞ்சியில் தமிழ் நாடே பாடப்போவது நிஜம்.. ராகவபிரியன் ஒரு சோற்று ...
இன்றைய விஜய்யின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடாகவே தெரிந்தது. அது மட்டுமல்ல ஐஆர்எஸ் படித்தும் அதிகாரப் பசி போதாமையால் நடிகர் கூட்டத்தைக் கண்டு மேலதிக அதிகாரம் தின்ன நினைத்து சேர்ந்திருக்கும் திரு அருள்ராஜ் அவர்களின் உரை மிக மிக அபத்தமாக இருந்தது. இந்தக் கூட்டத்திற்கு முன்பு வரை அதாவது பாண்டி கூட்டம் வரை விஜயின் பேச்சிலும் அவரைத் தவறாக வழி நடத்தும் நிர்வாகிகளின் பேச்சிலும் இவ்வளவு ஆணவம் தெறிக்கவில்லை...இப்போது மட்டும் ஏன் எனப் புரியவில்லை.. செங்கோட்டையன் அரசியல் பழிவாங்க சேராத இடம் சேர்ந்திருக்கிறாரோ எனும் சந்தேகம் ஊர்ஜிதமாவது போல் புரிந்துகொள்ள முடிகிறது..செங்கோல் என்பது நீதி வழுவாத ஆட்சியின் அடையாளம் எனும் குறியிடு இப்போது உங்களுக்கு நாங்கள் நிரந்தர அடிமைகள் எனக் காட்டும் அடையாளமாகி நீண்ட காலங்கள் ஆகிவிட்டன.. எம்ஜியாரும் விஜயகாந்தும் அரசியலுக்கு வருவதற்கு முன்னும் கூட அவர்களைத் தேடி வந்தவர்கள் அத்துனை பேருக்கும்உணவளித்தவர்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல்..ஆனால் விஜய்யைக் காணக் கூடும் கூட்டம் பச்சைத் தண்ணீர் கூட கிடைக்காமல் சுருண்டு விழுவதை எங்கு போய் சொல்வது.. சினிமா வருமாணம் ஆண்ட...
சில காட்டுப்பூனைகள் கண்களை மூடிக்கொண்டதும் உலகம் இருளில் மூழ்கிவிடுவதாக கற்பித்துக்கொல்லும் போதில் சில வெளிச்சங்களை எலிகளின் மீது பாய்ச்ச வேண்டியிருக்கிறது...எழுபதுகளின் இறுதியில் என்பதுகளின் தொடக்கத்தில் நானும் கட்டுமானத் தொழில் இதழின் இன்றைய ஆசிரியர் சிந்து பாஸ்கரும்[விஜய பாஸ்கர்] மறைந்த மரியாதைக்குரிய சரவணத்தமிழன் அவர்களின் ஆசியோடு நடத்திக்கொண்டிருந்த கையெழுத்துப்பத்திரிகை உதயம்..அதன் பின் அட்டை...சிந்து பாஸ்கரின் அன்றைய ஓவியம் எனது கவிதைக்கு...இப்போது பூனைகளின் கண்திறப்பதற்காக....அப்போதைய பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அனுப்பிய சிறுகதையைப்பற்றிய செய்தியில் உதயத்தின் ஆசிரியர் என்ற முறையில் எனது தலையங்கத்தில்...அன்பன்..ராகவபிரியன்
தமிழிலக்கிய ஆப்பரேஷன் செந்தூரம்..1 ------------------------------------------------------ தமிழின் சமகால புகழ்பெற்ற பின் நவீன இடதுசாரி இலக்கிய எழுத்தாளர் இப்படிச் சொல்கிறார்.. இந்த எளியவனுக்கு[ உங்கள் ராகவபிரியனுக்கு] இலக்கியமும் தெரியாது அரசியலும் தெரியாது என்று போகிற போக்கில் புழுதிவாரித் தூற்றிவிட்டுப் போகிறார்.. காடு வாவா என அழைக்கும் இவனின் காலமிது. எழுத்திலிருந்து விலகியிருந்த காலங்களின் பிரளயத்தீயின் வெப்பம் உணர்ந்தவன். அது மானுட சிதையின் சில மணி நேரத்தில் ஆறிவிடக்கூடிய பொய்யுடல் தின்னும் வெப்பத்தைவிட அளவு நீர்த்துவிடாத நீறு பூக்காத சூடுடையதென்பதை அனுபவத்தில் உணர்ந்தவன்.. இந்த எளியவனுக்கு எழுத்துலகில் எவருடனும் போட்டியில்லை. எவர்மீதும் இவனுக்கு எழுத்துப்பொறாமையோ புகழின் பொறாமையோ இல்லை. இவனுக்கு எந்த விருதோ பரிசோ ஏன் எழுத்தின் மீதான வருமானமோ தேவையே இல்லை... இவன் அதற்காக எழுதுபவனும் அல்ல.. போகட்டும்..இலக்கியம் பற்றிய நுனிப்புல் மேய்ச்சலைக் கொஞ்சம் அசையிடுவோம்.. பிரஞ்சுப் புரட்சியின் விளைவாக ஆன்சியன் ரிஜிம் ஆதரவாளர்கள் அன்றைய பிரான்சு நாட்டின் ஜனாதிபதி சிம்மாசனத்தின் வலப்புறம்...
HATRED IS BLUE AND UNFINISHED From the day I could see things through my Brahmin eyes The entire world around me shedding Brahmin hatred.. This glitch between casteism is nothing less than that of Antisemitism between Muslims and Jews.. One father and son suddenly open fire on innocent jews in Australia... Kangaroos jumped with shock and terror They could not understand the algorithm between Antisemitism and Brahmin hatred. The entire world always becomes silent on knowing the fact that All terrorists are Muslims. In Tamil and English, and in almost all languages We poets, write poems But could not count the Antisemitism and Brahmin hatred Today in Australia, we poets are counting Bodies instead of similes and metaphors. This incident will also be forgotten soon. Tomorrow, another incident of cutting the sacred thread of a Brahmin Or shooting an innocent jew will definitely happen. Certainly, that tomorrow will arrive. And we poets will write poems on pseudo-secularism. and tell ...
திராவிடவியல் என்பது நமது பண்டைய தமிழர் பண்பாட்டுவியலில் இருந்து இந்தத் தலைமுறையை விலகிச்செல்ல வற்புறுத்துகிறது..மார்கழியின் முக்கியத்துவத்தை அந்தப் பாரம்பரிய தமிழரின் பண்பாட்டு நீட்சியை ஆங்கில வருட இறுதியாண்டென்றும் இந்து தெய்வீக பணிகளைவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான முக்கியத்துவமளித்தும் சிதைக்கிறது. இன்றைய தலைமுறை மார்கழி விடியலில் உறக்கத்திற்கு முக்கியம் தரவேண்டுமென கற்பிக்கப்படுகிறது. திராவிடவியல் இன்றைய தலைமுறைத் தமிழர் பண்பாட்டைச் சிதைத்து ஆங்கில மற்றும் இஸ்லாமிய கலப்பு வாழ்வுமுறையைப் புகுத்தும் உத்திகளை வலிமையாக பின்பற்றுகிறது.. தமிழக வீட்டு வாசல்களெங்கும் விடியலில் ஆக்கிரமித்திருக்கும் பிருமாண்ட வண்ணக் கோலங்கள் சுருக்கப்பட்டுவிட்டன. தெருவில் குப்பை தின்னும் மாடுகளின் சாண வாசம் மனித மலத்தின் வாசத்துடன் இணைந்து வீசுவது பண்பாட்டுவியல் சிதைவின் வாசமாகிப் போனது. அதன் பொருட்டே பரங்கி பூசணி பூக்களுக்கான பீடங்களாகும் மாட்டுச் சாண உருண்டைகள் தமிழர் கைகளால் இப்போது தொடப்படுவதேயில்லை.. விடியலில் குளித்து நீண்ட கேசத்தின் ஈரம் சொட்டும் தலையில் துண்டு சுற்றி கோலமிடும் பெண்களைக் காண...
இலக்கிய வலதுசாரிகள்..7 [ சங்க காலம் ] காஞ்சியின் அருகில் கூரம் என்றொரு குக்கிராமம்..ஆனால் ஆன்மீக வரலாற்றில் அழிக்கவியலா இடம் பெற்ற புண்ணிய பூமி..வைணவ புரட்சித் துறவி ராமானுஜரின் அத்யந்த சிஷ்யர் பிறந்த ஊர் இது. இந்த அரங்கனின் ஆதியடிமையின் பெயர் கூரத்தாழ்வான். அவரின் ஊர் தான் கூரம். கூரத்தின் பூமிப்பதிவுகள் தாமல் என்ற ஊரில்தான் செய்யப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகம் தாமலில் தான் இருக்கிறது. தாமல் என்ற பெயர் வித்தியாசமாக இருக்க அவ்வூருக்குச் செல்ல நேர்ந்தது. அங்கிருக்கும் வெகுமக்கள் கூடியிருந்த தேனீர் கடையொன்றில் இவ்வூரின் பெயருக்கான பொருளென்ன என வினவ நேர்ந்தது.. பாரம்பரிய பெருமை பேச்சில் சுகம் காணும் முதிய தாமல் மண்ணின் வெகுமக்களில் மூத்த வயோதிகப் பெரியவர் ஒருவர் சொன்னது இதுதான். தாமற்பல்கண்ணனார் என்று இங்கே கல்வெட்டில் ஒரு பெயர் செதுக்கப்பட்டு இருப்பதாகச் சொல்ல வியப்பில் தேனீர் தொண்டையில் சிக்கிக்கொண்டது. தாமற்பல்கண்ணனார் என்பவர் பிராமணர் என்று புற நானூற்றுப் பாடலில் சொல்லியிருப்பதாக வேறு அவர் கூடுதல் தகவல் சொல்லிவிட்டு பாமர முகபாவத்தை மாற்றிவிடாமல் தேனீரைச் சுவைக்கத்தொடங்கினார்....