ஒரு பனவனின் ஆன்மீக நினைவுகள்...தொடர்ச்சி... ஆச்சாரியன் தரிசனம் அனைவருக்கும் எளிதில் கிட்டிவிடாது என்று தழுதழுத்த குரலில் சொன்ன பட்டர்... ஆச்சாரியன் சிறுவனாய் இருக்கும் போது ஒரு காலட்சேபத்திற்கு கதை கேட்க அவரின் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்..அப்போது அவருக்கு நான்கு வயதுதான் இருக்கும்..அந்தக் குழந்தையின் முகத்தில் இருந்த பிரம்மதேஜஸ் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது..கலாட்சேபம் செய்பவர் பகவத் கீதையை சொல்லிக்கொண்டிருந்தார்..அதில் அர்ஜுனன் ஏன் போர் செய்ய வேண்டும் என்ற பரமாத்மாவின் நியாயங்களைத் தவறாக சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்ட குழந்தை ஆச்சார்யன்...அரங்கனின் அவதாரம் அல்லவா...மெல்ல மேடையில் ஏறி... அகீர்தம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேவ்யயாம் ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாத திரிச்யதே... என்ற மேற்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல அங்கிருந்தவர்கள் வெலவெலத்துப்போகிறார்கள்.. ஒருவனை நீண்ட காலம் இகழ்ச்சியாக நடத்துபவர்கள்...யுத்தத்தைச் சந்தித்தே ஆகவேண்டும்...இகழ்ச்சி என்பது மரணத்திற்குச் சமமாகும்..என்றெல்லாம் பகவத் கீதையின் இந்தச் ஸ்லோகத்திற்கு மழலை மாறாத பாஷ்யத்தை எடுத்துச் சொல்கிறார் குழந்தை ஆச...