பால் கணக்கை காரைச் சுவற்றில் கரியுபகரணத்தால் சரியாகப் பதிவு செய்யும் அந்த நாள் அப்பாவழி பாட்டி சொன்னார்கள்... அன்றாட விடியல் நேர நடை பயின்றால் நன்மை நம்மை நாடி வருமென... அன்றிலிருந்து விடியும் முன்பே குந்தி கோலம் போடும் கூந்தலில் துண்டு சுற்றிய யுவதிகள்.... பொமரேணியன் இழுக்க தேங்கித் தேங்கி எத்தித் தத்தி நடக்கும் அரைக் கால்சட்டை தாத்தாக்கள்.. செய்தித் தாள்கள் தூவப்படாத இஞ்சித் தேனீர்கடைகள்.... நாற்கரச் சாலை புழுதி போர்த்திய ஆலமரத்தடியில் பிளாஸ்டராப்பாரிஸ் பொம்மை செய்த களைப்பு நீங்க போர்வை மூடி முயங்கி முணகும் வட மானில கலைஞர் தம்பதிகள்... அவர்கள் படைத்த அற்புத கடவுள் மற்றும் விலங்கு பொம்மைகள்.. எல்லாம் கடந்த பின்பும் நடந்து கொண்டே இருப்பவன் இன்னமும் ஓய்வாய் அமர சொந்தமாய் ஓரடி நிலமில்லை.. பாட்டி சொன்ன நன்மை என்பதன் நற்பொருள்தான் என்ன? ராகவபிரியன்
Posts
Showing posts from February, 2026
முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இங்கே முதலில் பதிவிட்டுவிடுகிறேன்.. பல் துலக்குகிறோமோ இல்லையோ எக்ஸ்ட்ரா லார்ஜ் என அச்சிடப்பட்ட பற்பசையைத்தானே தேர்ந்தெடுக்கிறோம்.. ஆனால் இப்பதிவு எக்ஸ்ட்ராவாக எதையும் கொண்டிருக்கவில்லை.. மரணமற்ற நிலை என்பதைத் தவிர. மரணமற்ற வாழ்வு எக்ஸ்ட்ரா தானே.. எட்செட்ரா இல்லையே.. போகட்டும்.. கீழே உள்ள பத்தி.. வேதங்களுக்கான ஆச்சாரியர் ஸ்ரீ ராமானுஜரின் பாஷ்யத்திலிருக்கும் ஒரு சில வரிகளைக் கொண்டது.அதில் ஆச்சாரியர் இப்படிச் சொல்கிறார்.. "இது போலவே மானுட வாழ்வும் அதன் தொடக்கத்தை உணராதது. வேதங்களைப் போல தொடக்கங்கள் அற்றதெனவும் அதைக் கூறலாம்.. மானுடம் மரணமற்ற வாழ்வையும் கொண்டுள்ளதெனின் அதுதான் நிஜம். ஆனால் எல்லா மானுடங்களும் மரணத்தை வெல்லவியலுமா எனில் இல்லையென்றே கூறுதல் தகும். அப்படியான மரணத்தை வென்று மரணமற்று வாழும் புகழ் வாழ்வு இன்னொரு பிறப்பற்றிருக்கிறது. எனினும் மீள்பிறப்புள்ள வேறொரு மானுடம் இந்த மரணமற்ற நிலையுடைய மானுடத்தை அனுபவித்துணர்தல் கடினம்.. இதைத் தான்...
A Sixty-Seventh Orbit: Notes from the Existential Ledger ------------------------------------------------------------- Birthday wishes— are not balloons, not sugar-script on melting cream— But they are entries in the damp ledger of existence. Sixty-seven revolutions around this cosmic not merely survival— but the faint graphite mark of having nudged society a millimeter to the left of silence. Thus, the tribe applauds. Thus, the species signs its receipt. Wishes are an existential fact. This is true. And yet— in the basement of metaphysics they are contraband, smuggled across the doctrine of negated meaning. Friedrich Nietzsche left us a hammer to test these idols— to ask whether gratitude is only a polished echo inside an empty cathedral. Once, in the culture of blue-lit walls, a single word— Thanks— was flung like a coin into the algorithmic fountain. That was a strategy. That was etiquette. That was my former self. But the law of metaphysical refusal whispers: even that lone s...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்பது இருத்தலிய நிஜத்தின் பதிவேடுகள்..அறுபத்தேழு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்ததற்காக மட்டுமல்ல.. சமூக வாழ்வியலில் ஏதோ ஒரு சிறு பங்களிப்பையாவது பதிவு செய்ய இயன்றததற்காகவும் தான் சக மானுடத்தின் வாழ்த்துக்கள் கிடைக்கின்றன. வாழ்த்துக்கள் இருத்தலிய நிஜம். இது மெய்.. ஆனால் மெய்யியலில் வாழ்த்துக்கள் என்பது இடு பொருள் மறுப்பின் தத்துவமாக பார்க்கப்படுகிறது. நீட்ஷே அதனால் தான் இருத்தலிய நிஜத்தின் அவசியம் பற்றிய தத்துவங்களை விட்டுச் சென்றிருக்கிறார்.. வாழ்த்துக்களுக்கு கடந்த ஆண்டுகளில் ஒரே பதிவின் மூலம் நன்றி எனும் ஒற்றை வார்த்தையை பதிவு செய்துவிடுவது முக நூல் பண்பாட்டுத் தளத்தின் உத்தியாக பார்க்கப்பட்டது. அதனால் உங்கள் ராகவபிரியனும் அதையே பின்பற்றினான். ஆனால் மெய்யியல் தத்துவத்தின் பொருள் மறுப்பின் விதி, இந்த ஒற்றை நன்றி எனும் வார்த்தையைக்கூட இருத்தலிய போதாமையை உணர்த்துவதாகக் கூறுகிறது.. ஜீன்பால் சாத்ரே இருத்தலியல் என்பது இருத்தலின் பயனைச் சொல்வதல்ல என்று சொல்லிச் சென்றது அதிர்வைத் தருகிறது.. வாழ்த்து என்பது இருத்தலிய நிஜத்தின் ஒப்புகை பதிவு. நன்றி என்பதே இருத்தலிய...
அன்பு நண்பர்களுக்கு அட்வான்ஸ் அறுபத்து ஏழாவது பிறந்த நாள் வணக்கங்கள். எதிர் வரும் உங்கள் ராகவபிரியன் தேஜஸ்வியின் அறுபத்து ஏழாவது பிறந்த நாளை முன்னிட்டு அனாமிகா ஆல்பபெட்ஸ் மூலம் வெளியிடப்பட்ட கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு புத்தகங்களின் பிடிஎப் [PDF] வேண்டுவோர்.. உங்கள் ராகவபிரியனின் கைபேசி எண் 9442536901 க்கு பிறந்த நாள் அன்பளிப்பாக ரூ 100 அனுப்பி உங்களின் இமெயில் முகவரியையும் அனுப்பித் தந்தால் உடன் பிடிஎப் [PDF] புத்தக வடிவம் என்றென்றும் நன்றியுடன் அனுப்பி வைக்கப்படும். தங்களின் மேலான ஆதரவை நாடும் அன்பன் ராகவபிரியன் அச்சுப் புத்தகங்கள் வேண்டுவோர் அனாமிகா ஆல்பபெட்ஸ் பதிப்பக நிறுவனர் எனது இலக்கிய அன்னை திருமதி லதா ராமகிருஷ்ணன் அவர்களை lathaa.r2010@gmail.com எனும் இமெயில் முகவரியில் தொடர்பு கொண்டு ரூ 270/ மற்றும் தபால் செலவு சேர்த்து ரூ 300/ அனுப்பித் தந்தால் புத்தகங்கள் உங்கள் முகவரி தேடி வாசற் கதவைத் தட்டும். எந்தப் புத்தகச் சந்தையிலும் உங்கள் ராகவபிரியன் தேஜஸ்வியின் புத்தகங்கள் கிடைக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகளாவிய வாசகர்களுக்கு உங்கள் ராகவபிரியனின் எழுத்...
காலையிலிருந்தே சுணக்கமெனும் ஆக்டோபஸ் இவனைச் சுற்றி நீந்திக்கொண்டிருந்தது.. அது தன் அத்துனை கரங்களையும் வளைத்து இவனை சாய்வு நாற்காலியில் சாய்த்துவிட்டு சுற்றிக்கொண்டிருந்தது.. இன்று சிவராத்திரி மற்றுமல்ல இந்தியா பாக்கிஸ்த்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் கூட.. காக்கையின் கூட்டில் தந்திரமாய் வளர்ந்து கூட்டையே கூகையின் கூடாக மாற்ற நினைத்து அதனால் துரத்தப்பட்ட கூகையையுடனான போட்டி நாள் இது.. இனி சாய்ந்திருத்தல் என்பது சவத்தின் இயல்பென உள் மனம் சொல்லத் தொடங்கியது.. சாய்ந்திருத்தல் அரங்கனின் வரம்.. ஓயாது இரவெல்லாம் விபூதி பூசி அலைவது சிவனின் விதி..இன்றோ சிவனின் எழுச்சி இரவான சிவராத்திரி.. காஞ்சியின் அத்துனை கோவில்களிலும் பக்தியின் எழுச்சி தூண்டப்பட்ட நாத்திக இருளகற்றும் புனிதப் பணியின் புண்ணியத் திருவிழா.. அதனால் பல்லாயிரக்கணக்கான மானுடக் கூட்டம் வீதிகளிலும் கோவில்களிலும் பக்தி மேலிட நெற்றியெல்லாம் விபூதி பூசிக்கொண்டு கூடிக்கொண்டே இருக்கிறது.. சில நாட்களாக வெஸ்ட் இண்டீஸின் இந்த உலகக் கோப்பையின் எழுச்சிப் போட்டிகள் இவனை சாய்வு நாற்காலியிலிருந்து மீளெழவியலாமல் செய்துகொண்டிருந்தது....
இவ்வாழ்வின் அதீத வெப்பத்தில் என் சாயங்காலங்கள் வியர்த்துக்கொண்டே இருக்கின்றன.. சட் டென பொட்டுப் பொட்டாய் நினைவெச்ச ஆலம் கட்டிகள் சில் சில் என வாழ்வின் ஏதோ ஒரு குளிர் நாளின் கண்மறைந்த மேகத்திலிருந்து குதித்து எப்போதாவது என் முற்றமெங்கும் மகிழ்வென கறையத் தொடங்கும்.. அன்றாட கஞ்சி பனிக்கான கிழிந்த கம்பளி பனைமட்டை விசிறி அனைத்தும் வெப்பம் கூடி கொதிக்கும் இப்போதில்.... அரிதான என் ஆலங்கட்டியுடன் காதல் வானில் சுற்றித் திரிந்த மேக நாட்களின் எண்ண மிச்சம் வேறு மின் கிட்டிலின் சுடு நீர் தொடக்கத்தின் பொட்டுப் பொட்டாய் முகிழ்த்து இதய மூடியில் மோதத் தொடங்குகிறது.. ஏழைக் குழந்தை வாங்க நினைத்த கரடி பொம்மையை கடைக்காரன் எவ்வளவு நாட்கள் தான் விற்காமலிருப்பான்.. ஆலங்கட்டி மேகங்கள் என் முற்றத்தின் மீது கரையாமல் நின்று பொழிய காற்றுக்காரன் எல்லா நாட்களிலும் அனுமதிப்பானா என்ன? ராகவபிரியன்
Across the square road’s entire body, the operational blood of vehicles has leaked and hardened into maps of wounds. From those stains, an incurable rot-smell rises— and inside that quarantined fragment, in a tea shop, Two aberrations meet: a dense-haired poet who obeys the shepherd’s invisible whistle, and a bald professor who has never learned the grammar of fear. Inside the teacup’s private cosmos, in the drifting foam-continents, The professor’s eyes wander, begging truth to surface like a drowning god. Meanwhile, the thick-haired lunatic poet inserts his forefinger into the cup and releases the tea drop by deliberate drop onto the earth— as though transfusing time into soil. Suddenly, he screams: This road is real. Death is real. Signs are real. But life is false. Poetry is false. The original is false— only the copy survives. At that exact fracture of a second, a lorry passes— dragging centuries under its wheels. Epics, caught in its turning teeth, are torn open. A particle...
நாற்கர சாலையின் உடலெங்கும் வாகனங்களின் இயங்கு இரத்தம் வழிந்த தடயங்கள் ஆங்காங்கே கிடக்கின்றன.. அதிலிருந்து தீராத முடை நாற்றம் வீசும் தனித்த பகுதியின் தேனீர்க் கடையில் சந்திக்கிறார்கள் மேய்ப்பனின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் அடர்முடி கவியும் எதற்கும் அஞ்சாத முடியிழந்த பேராசிரியரும்.. தேனீர்க் கோப்பைக்குள்ளான பிரபஞ்சத்தில் மிதக்கும் நுரைகளில் உண்மையைத் தேடியலைந்தன பேராசிரியரின் கண்கள்.. அக்கொடும் சூழலியப் போதில் அடர்முடிப் பைத்தியக் கவி கோப்பைக்குள் ஆள்காட்டி விரல் நுழைத்து ஒவ்வொரு சொட்டாய் நிலத்தில் சொட்டிக்கொண்டிருந்தான்.. திடீரென கத்தத் தொடங்கினான்... இந்த சாலை உண்மை.. மரணம் உண்மை.. குறிகள் உண்மை... ஆனால் வாழ்வு பொய் கவிதை பொய் அசல் பொய் ஆனால் நகல் உண்மை.. முடை நாற்றத்தை வாரியிறைத்தபடி அக்காலத்தின் துளியொன்றின் கடலில் சட் டென ஒரு லாரி கடந்து செல்கிறது... அதன் சக்கரத்தினடியில் சிக்குண்ட காவியங்கள் பிய்த்தெறியப் பட... மந்தையிலிருந்து பிரிந்த இனத் தலைமையை எதிர்த்து குடும்ப மன்னராட்சி தத்துவத்தைப் போதிக்கும் மகத்தான மார்க்ஸிய காவியப் பக்கத்தின் கிழிந்த தாளின் துகளொன்று சிந்திய தேனீர்ச...
என் மரணத்தின் நாளில் தூறிய சாரல் மழையில் நனைந்த என் புத்தகங்களை சிதையில் அடுக்குகிறீர்கள்.. செய்யுங்கள்.. அதற்கு முன் சிலவற்றைச் சொல்லிவிடுகிறேன்.. என் மரணத்தின் பின்னான பூத உடலின் முன் எவரும் என் கவிதைகளை வாசிக்கக் கூடாது.. என் உடல்மீது காவீர் நீர் ஊற்ற நீங்கள் லாக்கரில் இருந்து எடுத்து வந்த என் தங்கக் குடத்தை என்னுடன் சேர்த்துக் கொளுத்திவிடவேண்டும்.. என் அஸ்தியை கரைக்கப்போகும் கடற்கரை வரையான உங்கள் பயணத்திற்கு என் மகிழுந்துவை பயன்படுத்தக்கூடாது.. எனக்கு இதுவரை கொடுக்கப்படாத ராயல்டியை கேட்டுவாங்கி அதில் என் நீத்தார் நினைவு நாளைக் கொண்டாடக்கூடாது.. என் முக நூல் கணக்கில் எவரும் அஞ்சலிக் கவிதைகளை பதிவிடக்கூடாது.. என் சிதையில் வைக்க நீங்கள் வாங்கி வரப்போகும் சந்தனக் கட்டை ஒரு முறை அசல் தானா என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.. நகல் சந்தனக் கட்டைகளை சிதையில் சேர்த்து எனக்காக கண்ணீர் சிந்தினால் என் கட்டை வேகாது.. புரிந்து கொள்ளுங்கள்.. ராகவபிரியன்