இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் நிகழ்வு வரம் எனல் ஒருவகையில் ஒப்பமுடியுமெனினும் ஒரு புத்தகம் வெளியிடல் என்பது தற்காலச் சூழலில் ஒரு உலக யுத்தத்திற்கான ஒத்திகையாகிவிடுவது சாபமெனலாம்...பிடிபடாத நீண்ட வாசிப்பின் மிச்சவானில் மீந்திருக்கும் மேகத்தின் கருப்புப் பக்கங்களில் எதிர்தெரிவது அகதா கிறிஸ்தியின் முதல் இலக்கிய முயற்சி..1910 ல் தனது இருபது வயதில் ஒரு நாவல் எழுதி தனக்கான ஒரு புனைப்பெயரையும்.. மோனொ சில்லபா.. என்று சூட்டிக்கொண்டு ஒவ்வொரு பதிப்பகமாக ஏறி இறங்குகிறார்...சும ார் நான்கு ஆண்டுகள் ஆறு நாவல்கள் நிறைய சிறுகதைகள்..வெவ்வேறு புனைப்பெயர்கள்...ஆனால் அவரது படைப்புகளை வெளியிட எந்தப் பதிப்பகமும் அப்போது முன்வரவில்லை...காகிதக் கத்தைகளில் வெளிக்கொணர முடியாத எதோ ஒரு புதிர் அவரையும் அவரது படைப்புகளையும் மூடியிருந்தது...முதலாம் உலகப்போர் துவங்குகிறது...அவரின் படைப்பாக்கங்கள் தீவிர மாற்றங்களை உட்கொள்கிறது...அவிழ முடியாத புதிர்கள் கருக்கொள்கின்றன... தனது முதல் நாவலான பாலைவனத்தின் பனித்துளி சீந்துவாரில்லாமல் காய்ந்துவிட்டதின் காயங்களைச் சுமந்து ..இன்னமும் புதிரான...அடுத்தப் பத்தாண்டுகள்...