Posts

Showing posts from November, 2021
  திருவரங்க திருமன்றாட்டம்....1 மனதின் கனத்த பொழுதுகள் செலுத்தும் திசைகளை கால்களால் தடுக்க முடிவதில்லை...தன்னிச்சையாய் அலைந்து திரிந்து முடிவில் பெரும்பாலான மனித கால்கள் தங்கள் நடையை முடிவுக்குக் கொண்டு வருமிடம் கோவில் என்பதை மறுப்பது ஆகக் கடினம்...குபேரனின் பூஜைக்கான மலர் தருவித்தலின் தாமதம் யஷனின் காதல் மனத்தின் கனம் என்பதறிந்து சபிக்கப்பட்ட யஷன் மேகத்தை தூதுவிடும் கவிதை வரிகள் மிகுந்த பாரம் சுமப்பவைகள்...காளிதாசனின் கால்கள் யஷனின் கால்களுக்குள் புகுந்து வடக்கு நோக்கி மேகப் பார்வையுடன் நடப்பதின் மேலதிக கனம் இந்த அரங்கனடிமையின் கால்களை உரக்கடையில் கொணர்ந்து சேர்த்ததை எங்ஙணமுரைப்பது? தொடர் மழையும் அதன் நம்பமுடியா தாக்கங்களும் விவசாயிகளின் வாழ்வை மூழ்கடிக்கும் முயற்சியில் பாதி வெற்றி பெற்றுவிட்டதைக் காண முடியும்...இக் கொடிய கணங்களில் எங்கள் வயலில் களையெடுக்கப்பட்ட பின்னான அவசியத் தேவையான யூரியா உரம் சென்னையில் தொடர்வண்டி காத்திருப்புக் கிடங்கில் கிடப்பதாகக் கேட்ட செய்தியும் நிற்காத மழையின் சப்தமும் அரங்கனின் உடல் நிறம் தாங்கித் தவழ்ந்து கொண்டிருக்கும் மேகங்களின் மேல் காளிதாசனின் கவி...