இதற்கு முன் அறிமுகமற்றவர்களிடையே சுவரொன்றைக் கட்டவியலுமா. நதியின் குறுக்கே நிற்கும் நாணல் புதர் இடம் வலமாய் நீரோட்டத்தை திசைதிருப்ப முடியுமா.. இதுபோன்ற கேள்விகளுக்கு இல்லை எனும் பதில் தருவோர் வாசகர்கள்.. ஆம் முடியும் என பதிலுரைப்போர் இலக்கிய கர்த்தாக்கள்.. 1980ல் ஒரு உலக இலக்கிய இருண்ட நாள்..ருஷ்ய ஸ்டாலினின் ஆதரவாளரான ஹில்மேன் ஒரு நேர்மையற்ற எழுத்தாளர் என மேரி மெகார்த்தி எனும் இலக்கிய விமரிசகர் குற்றம் சாட்டுகிறார். விமர்சனத்தை எதிர்கொள்ளும் திராணியோ திறமையோ அற்றவர்கள் தங்கள் தொழிலில் உச்சம் தொடுவது கடினம் தானே.. தன் மீது அவதூறு பரப்பிவிட்டதாக மேரி மெகார்த்தி எனும் பெண் இலக்கிய விமரிசகர் மீது வழக்குத் தொடுக்கிறார். அவர் இழப்பீடாக கேட்ட தொகை சில மில்லியன் டாலர்கள். அது மட்டுமல்ல.. மேரி மெகார்த்தி ஸ்டாலினை எதிர்க்கும் எதிர் இலக்கிய முகாமைச் சேர்ந்தவர்.. விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ளவியலாத ஹில்மேன் 1984ல் இறந்து போகிறார். வழக்கும் தள்ளுபடியாகிறது. நம் செந்தமிழ் நாட்டில் பாரதி ஷெல்லியைக் காப்பியடித்தாகச் சொன்ன இலக்கிய பிராமண எதிர்ப்பாளர்கள் நிறைய இருந்தார்கள்..இன்றும் இருக்கிறார்கள்..இ...
Posts
Showing posts from January, 2026
உன் ஆணவச் சிரிப்பை என் தொடர்வண்டியின் ஜன்னலோரம் நின்று நிகழ்த்திக் காட்டுகிறாய்... உன் சிரிப்பிலிருந்து உதிர்கிறது பின்பக்கம் பாதரசம் பூசப்பட்ட கண்ணாடி.. மெல்ல நகரத்தொடங்கிய காலத்தின் மெளன தொடர்வண்டியை துரத்தியபடி ஓடி வருகிறாய்.. நான் அமர்ந்திருப்பது வரலாற்றின் வண்டி.. அதில் நீ பயணிக்க வேண்டுமெனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.. இதோ வண்டி நகரத்தொடங்கிவிட்டது.. ஓடும்வண்டியில் தொற்றி ஏற உனக்கு அனுமதியில்லை... தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதால் வண்டி மட்டுமல்ல வரலாற்று மாடு கூட மண்டியிடாது.. திடீரென தும்பறுத்து கையில் கண்ணாடியுடன் நடைமேடையில் என் வண்டியை ஏன் துரத்துகிறாய்.. உன் தொடர் எதிர்ஓட்டத்தின் மூச்சு முட்டும் அச்சிறும் அப்போதில் ஒரு முறை உன் முகத்தைப் பார்த்துக்கொள்.. உன் சிரிப்பிற்கான என் வழுக்கை வரலாற்றின் எச்சம்.. என் மூதாதையரின் பரம்பரைச் சொத்து அது.. நீ ஏன் பொறாமைப் படுகிறாய்..? உன் எழுத்துக்களில் உன் தலைமுடியின் அடர்த்திகூட இல்லையே.. என்ன செய்வது..? போகட்டும்.. இதோ வரலாற்றின் அடுத்த வண்டிக்காக காத்திருப்போரை பயணச் சீட்டு பரிசோதகர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்... ந...
சாதீய அடையாளம் தமிழ் எழுத்தோடும் எழுத்தாளனோடும் ஒட்டியே பிறக்கிறது. குறிப்பிட்ட ஒரு அடையாள முத்திரை தவிர்த்த மற்ற அடையாள சின்னங்களைத் தாங்கி வெளியேகும் படைப்புகளும் படைப்புத் தளங்களும் உலகளாவிய அங்கீகார தராசில் நிறுத்தப்படுகிறது. பூணூல் வெளித் தெரியும் எழுத்துக்கள் அங்கீகார தராசுத் தட்டின் மேசையில் அடுக்கப்படுவதே இல்லை. ஆயினும் வேறு மதச் சின்னங்கள் வலிந்து அணிவிக்கப்பட்ட எழுத்துக்களுக்கு எந்தத் தராசிலும் ஏறி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. பூணூல் அணிந்த எழுத்துக்கள் பெரும்பாலும் பகடிக்காகவே பயன்படுத்தப்படுகிறது. சில நேரம் பகடிக் காயாகவும் தான். அப்படி பகடிக்காயாக பயன்படுத்தப்பட்ட பிராமண எழுத்து ஏதாவதொன்று சிறு உத்தரணி அளவு துளி நன்மையை தன் உள்ளங்கையில் எப்போதாவது ஏந்துகிறது. ஆனால் அச்சிறு துளியைக் கூட உறிஞ்சவிடாத சமகால போலி முற்போக்கு இலக்கியம் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ப்ராமண எழுத்தாளனிடமிருந்து அதைப் பிடுங்கி தான் உட்கொள்ள துடியாய்த் துடிக்கிறது. போகட்டும். பூணூல் வெளித்தெரியும் எழுத்து உஞ்சவிருத்தி செய்தாவது பிழைக்க வேண்டி இலக்கிய வெளியெங்கும் வலம் வந்தாலும் ஒரு பிரதி...
அது 1982 ம் வருடம். பிகாம் முடித்துவிட்டு வேலையில்லா பட்டதாரியாய் கோவில் காளையென வீதிகளில் திரிந்துகொண்டிருந்த காலம். உதயம் கையெழுத்துப் பிரதி மாத இதழ் ஆசிரியர் என்ற தகுதியும் ஒன்றிரண்டு கவிதைகள் நாளிதழ்களில் வெளிவந்திருந்த இறுமாப்பும் திமிள்களாய் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டிருந்த பொழுதுகள்..கூர்த்த கொம்புகளில் எவராவது புல் சுற்றிவிடுவார்கள் பசியாறலாம் என்றலைந்த அலட்சியமான நாட்கள்.. இவனின் திறமைமீது நம்பிக்கை கொண்ட திருவாரூர் கலைக்கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஹூசைன் இவனிடம் சிபாரிசு கடிதம் கொடுத்து சென்னைக்கு அனுப்புகிறார். யாரிடம் தெரியுமா.. ?ஒருதலை ராகம் தயாரிப்பாளர் இப்ராஹிம் அவர்களிடம் தான். அதுபோது நம்பிக்கை இமயமலை போன்சாய் வடிவில் இருந்தாலும் இவன் கையில் வாங்கியவுடன் தன் உயரத்தைத் தானே மீறத் தொடங்கியது. கடிதத்தில் அடுத்த படத்திற்கு பாடல் எழுத இச்சிறுவனை பயன்படுத்திக்கொள்ளுமாறு எழுதியிருக்கிறார்...அது கண்ணதாசன் எனும் பாட்டுப்பகலவன் மறைந்த சினிமா வானின் சாயங்காலப் பொழுதின் சிவப்பு நாட்கள்.. இப்ராஹிம் அவர்களின் முகவரியில் கால் வைக்கிறான்.. இவனின் கிழிந்த சட்டைப் பையி...
நேற்று காஞ்சியில் காய்கறி வாங்கச் சென்றாக வேண்டியிருந்தது. திருச்சியில் நான் பிரபலம் என்பதால் காய்கறிக் கடைகளில் கூடியிருக்கும் வாடிக்கையாளர்கள் சட் டென விலகி பக்கத்துக் கடைக்குச் சென்றுவிடுவார்கள்.. தெனாலிராமனைத் தெரியாத விஜயநகர காய்கறி கடை எதாவது இருக்கிறதா என்ன.. ஆனால் காஞ்சியில் இருந்தது. நேற்று காஞ்சி காய்கறிகடையில் கூட்டம் அப்பிக்கொண்டிருந்தது.. கொஞ்ச நேரம் தள்ளி நின்றுகொண்டிருந்தேன். காய்கறிக் கடைக்காரர்..அய்யா ஏன் தள்ளி நின்று கொண்டிருக்கிறீர்கள்.. உ..ரா.பி.. வெண்டைக்காய் முனை உடைத்துப் பொருக்கி எடுக்க வேண்டும்.. கூட்டம் குறையட்டும்..அதான்.. கா. க.. ஐயா முனை உடைத்து காய் வாங்க அனுமதி இல்லை..வேறு கடை பாருங்கள்.. சொல்லிவிட்டு கொஞ்சம் கூட கருணையின்றி விரட்டினார். ஒரு பிரபலம் காய் வாங்க வந்ததை ரீல்ஸ் எடுத்துப் போட்டால் போதுமே.. கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கலாமே... அவரின் அறியாமை வியப்பில் ஆழ்த்த.. உ.ரா.பி.. என்னைத் தெரியவில்லையா.. கா.க...சொல்லுங்கள் ஐயா.. இங்கே கூட்டம் அதிகம்..பொருக்கி எடுக்க வழியில்லை. என் கடையில் காய் புதிது..கனி புதிது.. சுவை மிக்க நவகாய்கள் என்னாளும் ...
Crown Transfer... Short story.. On a winter day, there was a skirmish between two groups on a cricket ground. The dispute centers on who should lead the team in this crucial league match. One of the group members, an all-rounder in that group, came to his captain and tapped him on his shoulder and said..K is the fittest person for planning and maneuvering the match at this level of competition. And the win is assured. K was tall, fit, and from a wealthy family, too. His face was so terrorizing and the opposite team would gift the wickets even before taking guard. K was wearing a white cricket wicket-keeper costume and was presumed to be the captain of the team. The group member also told so many encapsulating stories about his skill to change the course of the game and get the desired results. But the captain, who was wearing a crown, thought for a minute about his past heroics with the team management to get to this place. No one in the group could have known about his kneeling...
முந்திரிப் பொங்கல்...சிறுகதை.. பொங்கல் அன்று உத்தியோகம் அவனுக்கு. அதுவும் மனித வாடையற்ற அத்துவானக் காட்டின் நடுவில் இருக்கும் ஒரு தொடர்வண்டி நிலையத்தில். சக ஊழியர்கள் அவன் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவனென்பதால் அவனை டூட்டியில் விட்டுவிட்டு திருனெல்வேலி நாகர் கோவில் எனும் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள்.. அது கைபேசி உடலுடன் ஒட்டப்படாத காலம். தொலைக்காட்சிப் பெட்டி என்ற சொல்கூட வழக்கில் இல்லாத நகர்த்த கடினமான காலமது..காட்டிற்குள் தனித்து விடப்பட்ட ஒரு மானின் மருண்ட பார்வையுடன் நிலையத்தைச் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான். நேற்றிரவிலிருந்து அவன் பணியில் இருக்கிறான். விடியல் பனிச்சூழலும் பசியும் நகர்த்தவியலா நேரமும் அவன் தோளில் தேனீர் அருந்தியாக வேண்டிய சுமையை ஏற்றத் தொடங்கியது. சுமைகள் நாவிலிருந்து தோளில் ஏறுகையில் ஒருபோதும் சறுக்குவதில்லை.. நிலையத்தின் அருகில் இருப்பது ஒரே ஒரு தேனீர் கடை.. அது காலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிவரைதான் இயங்கும். மாலையிலும் அப்படித்தான். வேறு வழியில்லாமல் அங்கே அவன் தேனீர் அருந்தும் போது அதில் கலந்திருக்கும் எருக்கஞ்செடியின் காய்ந்த குச்சிகள் வ...
இந்துக்களின் போகிப் பண்டிகையை பொங்கல் கொண்டாட்டங்களை 16 ம் நூற்றாண்டிலேயே அப்போதைய முஸ்லீம் ஆட்சியாளர்கள் நசுக்கத் தொடங்கினார்கள்.. அக்பர் தீன் இலாகி என்ற மதச்சார்பின்மையைக் கடைபிடித்தார் எனும் பொய்யை வரலாறாக்கி நம்ப வைத்த கயமையை இந்த போகியிலாவது தீக்கிரையாக்குவோம்.. அன்றைய அக்பர் காலத்தில் தான் அவரது மகனான ஜஹாங்கீருடன் ஒன்றாக படிக்க வைக்கப்பட்டான் அக்பரின் பாலியல் அடிமையாக விற்கப்பட்டு மதம் மாற்றப்பட்ட ஏழைத்தாயின் மகனான துல்லா பட்டி எனும் பஞ்சாபின் ராபின்ஹூட். அந்த வீரமிகு இந்துப் போராளி இந்துக்களின் அறுவடைக் கொண்டாட்டங்களான லோரி திருவிழாவை நியாயமற்ற வரிவிதிப்பால் நசுக்கிய அக்பரை எதிர்த்துப் போரிட்டான். அது மட்டுமல்ல ஏழை இந்தியப் பெண் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக முஸ்லீம் மன்னர்களுக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப் பட்ட கொடுமையை எதிர்த்து கொரில்லா போரிட்டு ஜஹாங்கீரையே சிறை பிடித்தான். பிறகு ஜஹாங்கீர் தன் சகோதரன் மட்டுமல்ல தன் பால்ய நண்பனும் கூட என்பதால் முகிழ்த்த தீராத பாசத்தின் மிச்சத்தால் விளைந்த கருணை இதயம் சொன்னதால் விடுதலை செய்தான். போராளிகள் எப்போதும் தங்கள் இதயத்தில் த...
பொங்கல்ன்னாவே சிக்ஸ்டீஸ் கிட்ஸுங்களுக்கு அதாவது என்னைப் போன்ற கிழங்களுக்கு எய்ட்டீஸ்ல பண்ண காதல் ஞாபகத்துக்கு வந்துடும்.. அப்பெல்லாம் லவ் ஈஸ் பார் த ரிச் அண்ட் நாட் ஃபார் த அனெம்ப்ளாய்ட் ன்னு எதோ ஒரு படத்துல வர்ற வசனம் லவ் பண்ற பொண்ணப் பார்க்கறப்பெல்லாம் மனசுல ஓடும்.. உடனே நான் தலை குனிஞ்சுடுவேன்.. பஸ்ல காலேஜ்க்குப் போகும் போது தான். காலேஜ் ஸ்டாப்பிங்கல இறங்கறவரைக்கும் நான் பார்க்கும் போதெல்லாம் என்னோட லவ்வரும் தலை குனிஞ்சிண்டே தான் வருவா.. இந்த அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்..ங்கறத எங்க லவ் லைப்ல காலேஜ் முடியறவரைக்கும் நடக்கவே இல்லைங்க... அதாங்க எய்ட்டீஸ் லவ்வோட தெய்வீகம்.. அப்போதாங்க தமிழ் நாட்ல தெலுங்கு தெரியாமயே மரோசரித்ராவ பார்த்து புல்லரித்து காதலித்த டைம்.. பெண்கள் சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சாலும் பாவாடை தாவணி செயின்ல மாட்டிடும்ங்கறதால சைக்கிள்ல வந்த ஒரு தேவதையைக்கூட அப்ப நாங்க எங்க ஊர்ல பார்க்கலீங்க.. ஆனா பாருங்க..ஒரு நாள் அதுதாங்க.. போகிக்கு மொத நாள்..என்னோட தேவதை சைக்கிள்ல காலேஜ்க்குப் போறத பார்த்தேங்க..எய்ட்டீஸ்ல ஒரு சாதாரண அனெம்ப்ளாய்ட் ஏழைக் காதலனுக்கு அமைஞ்ச ரேர் அமெங்...