அருகருகே மரபுடைமை எச்சம் என்பதையும் ஆங்கில லெகசி என்பதையும் கிடத்துங்கள். மெல்லிய இழையொன்றால் இரண்டிற்குமான இடைவெளி இழை மின்னல் உங்கள் கண்களை கூசக்காணலாம். 1990 ல் உங்கள் ரா. பி கடினமாக ஓடிவந்து எம்பி உயரம் ஒன்றைத் தாண்டிக் குதித்தான். அது முதன் முதலாக அரசு கல்லூரிகளில் பேராசியராகும் கனவிற்கான அரசாங்கம் நிர்ணயித்த கீழே மெத்தையற்ற உயரத்தாண்டுதல் இலக்கு. அது அதுவரையிலான அப்பாவி ஏழை பிராமணன் ஒருவன் திராவிட கொடுங்கோல் மைதானத்தில் தாண்டவியலா உச்சம். எங்கள் மெலிந்த கால்கள் கொண்ட குடும்பத்தின் மரபுடைமை எச்சமாக அவ்வுயரம் இன்னமும் தாண்டவியலா உச்சியிலேயே உட்கார்ந்திருக்கிறது. நிஜம் என்னவெனில் உங்கள் ரா.பி. க்கு மாநில அரசுக் கல்லூரிகளில் வகுப்பெடுக்கும் வாய்ப்பு இறுதி வரை கடந்த முப்பதாண்டுகள் தாண்டிய போலி திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கொடுக்கப்படவே இல்லை. பொய் வரலாறு புணையப்பட்ட ஏமாற்று சமூக நீதி இடஒதுக்கீட்டு அவலம் ஆங்கிலேயர்களால் ஊன்றப்பட்டது. அதன் மெல்லிய அறுபடப்போகும் ஆணிவேர் செயற்கை திராவிட அமிலம் ஊற்றி வளர்க்கும் போலி சமூகநீதி பார்த்தனீய வீழ்ந்துவிட்ட வெள்ளாமை. தரம் எனும் நீரூற்றாத ...
Posts
Showing posts from September, 2025
கைபேசியில் முன்பதிவு செய்கையில் இரண்டு நெருஞ்சி கொத்துகள் நடு மற்றும் மேல் படுக்கையென ஆள் காட்டி விரலில் தைத்துவிடுகின்றன.. பயணித்தாக வேண்டிய கட்டாயம் துரத்த குழந்தைகளை மேல் படுக்கை ஏணியில் ஏற்றி விட்டு நடுவில் தொங்கும் முட்படுக்கையில் தவிக்கிறது தாய்மை.. கீழ்படுக்கை வென்று வந்த கிழவர்கள் பயணச் சாதனைச் சால்வையை இழுத்துப் போர்த்தியபடி மனிதம் இறந்து போகும் கால நொடிகளின் முகத்தை மூடிக்கொள்கிறார்கள்.. பயணச்சீட்டுப் பரிசோதகர் ஒரு பிடி மெளனத்தை வாயில் வைத்துக் குதப்பியபடி தலைகுனிந்து ஆயுதங்களை ஒப்படைத்துவிட்ட அறப் போராளியென தவிக்கத் தொடங்குகிறார். மேல் படுக்கை குழந்தை புரண்டு விளிம்பு வரை வருகிறது.. உறக்கமற்று சதா ஆடிக்கொண்டிருக்கும் தாய்மை ஊஞ்சல் சட் டென கைவிரித்து ஏந்திக் கொள்கிறது.. தொடர் வண்டியின் ஓடும் சப்தம் இதயச் சப்தங்களை நிணம் சிதைக்கும் கத்தியால் துண்டு துண்டாய் வெட்டிக் குவிக்கிறது.,, பயணம் முடியும் வரை தோளில் குழந்தையுடன் தொடர்வண்டிப் பெட்டியில் மேகங்களில் ஊரும் நிலவென நடந்து கொண்டிருக்கும் தாய்மை.. விலை கொடுத்து வாங்கப்பட்ட உறக்கமுடனான பயணப் படுக்கையில் உறங்கவியலாவிடில் தூ...
பக்தியின் காலம் ஒரு தொடர் வண்டி. என் ஆன்மீகப் பயணத்தில் சற்று கண்ணயர்ந்து விட்டிருக்கிறேன் நான். திரவரங்க வீதிகளைச் சுற்றிக்கொண்டிருந்தவனை நொடிப்போதில் காஞ்சிமா நகரில் கொண்டுவிட்டுவிட்டது காலம். இதோ இப்போது காஞ்சியின் வீதிகளில் காமாட்சியைச் சுற்றிக் கொண்டிருக்கிறேன். பக்தி என்பது வாழ்வமைப்பின் வீடு மாற்றும் செயல் அல்ல. பக்தி என்பது சைவத்திலிருந்து வைணவத்திற்கோ இல்லைக் கோவிலைச் சுற்றுவதிலிருந்து வீதி சுற்றுவதோ இல்லை. பக்தியை பழகுவதும் விளையாட்டைப் பழகுவதும் வெவ்வேறானவை. விளையாட்டுத் திடலைச் சுற்றிய கால்கள் விரைவில் வீடடைய விரும்பும். கோவிலைச் சுற்றும் கால்கள் இறைவனை அடையத்தான் ஓடும். திருவரங்கனைச் சுற்றியவனை காமாட்சியைச் சுற்ற வைத்தவன் வரதன். காமாட்சியும் பெருந்தேவியும் அரங்க நாயகியும் இவனுக்கு ஒன்றுதான். ஆனால் திருவரங்கனைச் சுற்றுவதும் காஞ்சியைச் சுற்றுவதும் வித்தியாசமானவை. பக்தியின் கலிடியாஸ்கோப் சுற்றிக்கொண்டிருக்கையில் காஞ்சியையோ இல்லை அரங்கத்தையோ அவ்வளவு எளிதில் சுற்றுதல் என்பது இயலாது. திருவரங்கனைச் சுற்றும் போதெல்லாம் மனம் இலகுவாகி அரங்கன் கருமேகமென நெடுஉரு கொண்டு உரையாடி ...
என் தோட்டத்தின் அபூர்வ மலரொன்றைச் சுற்றி ஊடொலி கிளப்பியபடி சுற்றித் திரிந்திருக்கிறதொரு மரண வன்சித் திதலீ.. கனமற்ற அதன் கால்களின் ஸ்பரிசம்பட அப்பூவின் மரணம் அப்போதே நிகழ்வது ஆற்றொணா துயரம்.. என் வாழ்வில் இதுவரைக் காணா பேரதிர்வின் காரணி வன்சியின் வசீகரங்கள் உருவப்பட்டே ஆகவேண்டும்.. மரணத் திதலி என்னைச் சுற்ற மகிழ்வு மிஞ்சும்.... என்னையே சுற்றிக் கொண்டிருத்தலென்பதுதான் காலக்கொடுமை.. அத்திதலீயின் சிறகு ஓவியங்கள் பற்றியெரியும் சிதையின் சாம்பல் வழியும் தாழியின் குயவச் சக்கர கோட்டோவியங்கள்.. வன்சி திதலீயின் பூவிதழ் அமர்வைக் கொண்டாடுவோரின் நயணக் கரங்களின் நகக்கீறல் வளைவுகள் மெல்லிதழிலும் வசீகர மார்பிலும் நகர்ந்து சென்ற உவர்வு நத்தையின் வழித் தடங்கள்.. அவ்வந்தகத் துழாவல் வழித் தடங்களில் கிடக்கும் மகிழ்வின் தடுப்புச் சுவர்களில் வன்சிகள் அமர்ந்து வண்ணச் சிறகை சுழற்றுவதில்லை.. எவ்வீட்டுக்குள்ளும் புகுந்து புறப்படும் மரண வன்சிகள் சுற்றித் திரிந்தால் துக்கச் செய்தி துரத்திக்கொண்டிருக்குமென.. சொல்லிச் சென்றவன் சோதிடனல்ல.. உலகச் சோலையின் அத்தனை மலரிலும் ஏதாவதொரு மரண திதலீ எப்போதேனும் அமர்ந்தே ...
உலகக் கவிகளின் துளித்தேன் உன் உள்ளங்கையில் நேபாளம் பற்றி எரிகிறது. 2008ல் உருக்கி சாம்பலாக்கிய மன்னராட்சி மகுடம் மீளுருவாக்கத்திற்கு ஒத்திகை பார்க்கிறது. மாணவ எழுச்சிக் குவியலின் நடுவில் நேபாளத்து இமயச் சிகரங்கள் சிக்கித் தவிக்கின்றன. சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டதால் சாமாணியனின் நொடி முள் நகர்வு நிறுத்தப்படுகிறது. கைபேசியிலிருந்து மீண்ட பார்வை துப்பாக்கியின் வழி பாராளுமன்றத்தையும் ஜென் இசட் எனும் வார்த்தைகளின் மீதும் பதியவைக்கப்படுகிறது. அமைதியை சுட்டெரித்த சாம்பலைக் குழைத்து ஜன நாயக நாற்காலியை வார்த்து அதன் மேல் உருக்கிய மகுடத்தில் முலாம் பூசும் உலைகளமாய் மாறிப்போனது காத்மண்டு வீதிகள்..மன்னர் ரானா வின் வம்ச அரசாட்சி முடிவிற்கு வந்த போதில் மோகன் கொய்ராலா எனும் நேபாள கவி இப்படி எழுதுகிறார்...ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இக் கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன். இது மொழியாக்கமோ மொழிபெயர்ப்போ மொழிமாற்றமோ இல்லை... மன்னரின் கோபப்பார்வைக்குப் பயந்த நேபாளிகள் உயர் சிகரங்களின் செங்குத்தான சரிவுகளில் பூத்துக் குலுங்கும் ஆர்கிட் மலரிதழ் தடுப்புகளினூடே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.. இதோ பனி...
வாழ்வின் அந்திமத்தில் இதுவரை கால்வைக்காத பெரும் நகரொன்றின் கடைவீதிக்குச் செல்லுதல் திணிக்கப்பட்டுவிட்டது. கொள்முதலெனும் கலை கைவரப்பெற்றவர்கள் ஏதுமற்ற குகையில் கூட சில மூலிகைகளை உருவி வந்துவிடுவார்கள். வழமையான கொள்முதற் இடங்களில் வாங்கும் பட்டியலின் மனனம் அவசியமற்றது. கால்களும் சக்கரங்களும் இருப்பிட அட்ச ரேகை தீர்க்க ரேகை கணிப்புகளை நுட்பமாக அலசி அணிச்சையாய் நம்மைக் கொண்டு சேர்த்துவிடுவது வாடிக்கையியலின் பரிணாம வளர்ச்சி. காஞ்சியின் எல்லா வீதிகளிலும் விடிந்தவுடனேயே சில சிற்றுண்டித் தள்ளுவண்டிகள் குறிப்பிட்ட சில கால இட இடைவெளிகளை நிரப்பத் தொடங்கிவிடுகின்றன., நீராகாரங்கள் இடம்பெயர்ந்து பழைய தயிர் சோறுகளுடன் புறப்பட்ட மானுட வாழ்வியலின் கோவணம் தொல்பொருட்த்துறையால் இனி அகழ்ன்றெடுத்தே ஆகவேண்டும்.. இன்றைய காஞ்சியின் அகன்ற வீதிகளின் போக்குவரத்து நெரிசலின் அடர்வை அளவிடுதலென்பது இயலாது. நிகழ் வாழ்வியலின் அவசரம் உந்தித் தள்ள விடியலிலேயே அடர்ந்து கொண்டு அது கெட்டிப் படுவது சுற்றியிருக்கும் தொழிற்சாலை வெளியேற்றி உள்வாங்கும் மனிதவள மேம்பாட்டியிலின் விகிதாச்சார ரசயான கழிவு. ஆங்கே ஆயத்தச் சிற்று...
விரிந்து கிடந்த கல்லூரி மைதானமெங்கும் கலாச்சார பார்வைக் கூழாங்கற்கள் குத்திட்டு நிற்கையில்.. கைகோர்த்தபடி காதலியுடன் காளிகோயில் நோக்கி நடக்காதே... பார் உடன் வரும் சாமுண்டியின் சூலத்திலிருந்து சொட்டும் சண்ட முண்டா தலைகளின் குருதி கூழாங்கற்களைச் சிவப்பாக்குகிறது.. யாருமற்ற புதர் மண்டிய திடலெங்கும் பார்வைப் புதர்கள் ஒளியூடுருவவியாலா அடர்கொண்டு மண்டியிருக்கையில் அவ்விடத்தில் காதலியுடன் தனிமையில் உறவாடாதே... உரத்த உறவுச் சப்த காந்தர்வ தாத் இசையொலி சாதிவெறியனின் அரிவாளொன்றையோ இலையெனின் கூட்டுப் பலாத்காரக் குழுஒன்றையோ இழுத்து வந்து கூழாங்கல்லில் சிவப்பைக் கொட்டிச் சென்றுவிடலாம்.. வறண்டு கிடக்கும் அகண்ட ஆறொன்றின் மணற் தரையில் பார்வை எல்லைகளைத் தாண்டிய வெளிப் படுகையதில் காதலியுடன் சாயம்கால உரையாடல் நிகழ்த்துதல் மாபெரும் மடத்தனம். என நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.. அவ்விடப் புதைமணற் குழிகளில் தான் புலைய மாடன் திரெளபதி அம்மன் கால பைரவன் மகிஷி அட்டங்கம்மா இன்னும் பல தெய்வீக சுடு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.. இலக்கியங்களை நம்பி எதிர்காலத் துணையின் கைரேகைகளை வருடிக் கொண்டிராதே.. நிகழ் கா...
வில்லியம் எஸ் பாரோஸ் எனும் புகழ் பெற்ற இலக்கிய மேதை தனது இரண்டாவது மனைவியை கொலை செய்தவர் என்பதால் இலக்கிய வரலாற்றில் தனதான இடத்தை இழந்து நிற்கிறார். முதல் மனைவி இவரை விவாகரத்து செய்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. இவர் பதினெட்டு நாவல்கள் ஆறு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் நான்கு கட்டுரைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். வாழ்வியலின் இந்திய கலாச்சார அறம் அமெரிக்கக் கலாச்சார வாழ்வியல் அறத்தின் நேரெதிர் முனை. இருந்தாலும் சக உயிரொன்றை கொலை செய்வதோ அல்லது தற்கொலைக்குத் தூண்டுவதோ உலகலாவிய மானுட அறம் மீறிய செயலாகத்தான் பார்க்கப்படுகிறது. இவர் தனது இரண்டாவது மனைவி ஜோவான் வால்மரைக் கொலைசெய்து விடுகிறார். விசாரணையின் போது தான் மிதமிஞ்சிய போதையில் இருந்ததாகவும் துப்பாக்கியால் வில்லியம் டெல் ஸ்டெண்ட் எனும் பயிற்சி செய்கையில் துப்பாக்கி தவறி மேசையில் விழுந்து தானாகவே டிரிகர் உந்தப்பட்டு குண்டு பாய்ந்து வால்மர் இறந்துவிட்டதாகச் சொல்லி தப்பிக்கும் முயற்சி செய்திருக்கிறார். இருந்தாலும் இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வில்லியம் டெல் ஸ்டண்ட் என்பது இம்சை அரசன் படத்தில் ...
நீண்ட இலக்கிய இடைவெளிக்கு முன் இறுதியாக 1992 ல் பாபு. எஸ். ராஜகோபாலன் என்ற பெயரில் எனது கவிதை ஒன்று ஜனரஞ்சக இதழொன்றில் வெளியானது. பிறகான வாழ்வின் ஓய்வற்ற தொடர் சூறாவளி எழுத்துலகில் இருந்தும் இலக்கிய உலகில் இருந்தும் சற்றி தள்ளி ஆனால் ஒட்டியே அமைந்த இன்னொரு பாதையில் பயணிக்க வைத்து விட்டது. வாழ்வையே சூறாடி நிர்மூலம் ஆக்கிக்கொண்டிருந்த இரக்கமற்ற அப்புயல் வலுவிழந்தாலும் இன்னமும் முற்றிலும் அகன்று கரை கடந்துவிடவில்லை. ஆனாலும் 2014 முதல் மீண்டும் எழுத்துலகப் பாதையில் இணைந்து பயணிக்கும் வாய்ப்பை முக நூலும் ஒரு சில இணைய இதழ்களும் சிற்றிதழ்களும் மாத வார இதழ்களும் வழங்கத் தொடங்கின. 1992லிருந்து 2014 வரையிலான இடைப்பட்ட இடைவெளியில் நடந்த சில நிகழ்வுகள் இவனால் கவனிக்கப்படவில்லை. இவனின் தவறுதான் அது. அதனால் ஒரு சில பதிவுகள் தவறாகவும் தேவையற்றும் எனது முக நூல் சுவரில் அவ்வப்போது பதிவு செய்ய வேண்டியதாகிப் போனது. அவைகளை இனம் கண்டு உண்மை தெரிந்து அல்லது கண்டு கொண்டு..ஒவ்வொன்றாக நீக்கத் தொடங்கிவிட்டேன். இலக்கியம் தனிப்பட்ட வாழ்வின் வெளிவராத பக்கங்களைப் பற்றிக் கவலை கொண்டேதே இல்லை. இருந்தாலும் தனிப...
உலகக் கவிகளின் துளித்தேன் உன் உள்ளங்கையில் ஆலிவரையோ கிராண்டொ எனும் அர்ஜெண்டைனாவின் சர்ரியலிச கவியின் இரண்டு கவிதைகளை எதார்த்தமாய் படிக்க நேர்ந்தது.. சட் டென தூரத்து மரத்தில் இரண்டு கிளிகள் அலகுரசும் சப்தம் அலறலென செவியறைய பார்வை அவ்விடம் பதிவது போல கவிதை வரிகள் பார்வையைப் பிடுங்கிக்கொண்டன. அவர் அர்ஜெண்டைனாவின் இருபதாம் நூற்றாண்டு அவண்ட் கெரேட் அதாவது முன்னோடிக் கவிகளில் ஒருவர். அறுபத்து ஏழு வயது வரை இந்தப் பெயர் கண்ணில் படாதது இனிப்புக் கடையில் திருனெல்வேலி அல்வா பொட்டலம் கண்ணில் பட்டாலும் மைசூர்பா வாங்குவது போன்று பார்வைச் சுவரின் அப்பால் கிடந்தது நெருடல் தந்தது.. அவரின் சர்ரியலிச முன்னோடி இயக்கம் பாப்லா நெரூடா போன்றோரை ஈர்த்ததில் வியப்பொன்றும் இல்லை என லத்தீன் அமெரிக்க இலக்கிய வரலாறு பேசுவதைப் படித்ததும் வெட்க மாஸ்க்கை கண் வரை சிறிது மேலேற்ற வேண்டியதானது. கிராண்டொ மார்ட்டின் பியாரோ எனும் இலக்கிய விமர்சன இயக்கம் ஒன்றையும் அவர் நிறுவி இலக்கியத்திற்கான அழிக்கவியலா பங்களிப்பைச் செய்திருக்கிறார். கவனிக்கப்படாத கற்கோட்டைகள் காலத்தை வென்று வாழ்ந்தால் அது அதன் பின்னான தலைமுறைப் பார்வை...
My Thanks to Museindia Magazine and to the great eminent literary critic, Smt. Vijaya Bhanu Kote, ISSN: 0975-1815 YOUR SPACE Poetry TO THE HYPNOTIZED WRITER Your creations are void and ridiculous and are not against the co-writer but thee.. And the rest of your life, your eyes will have no vision, but only blindness. The writing world needs appreciation, O Naysayer No future for thee.. I say... Thy writing Is cruel and broken the moral barriers? You, Naysayer The stones you throw at an innocent human have no bones Your writing of duotone colours prohibiting thy enthrone and speaks volumes of thy bozos.. Thy ridiculous Is the writing terror frightening your co-writer By wrenching his forty-five-year-old nonstop fruit-yielding creative trees Your daring, unquestioned, miserable act will also put you in the same coffin beside him. Remember... Now speak, O Naysayer, with the gentle voice, the truth about your literary colleague and thee... Regain your melted vision and see his stat...