தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்...7
விழுப்புரத்தின் ஆரியபவன் தேசிய நெடுஞ்சாலையோரம் சற்று கூனிக்குறுகியே நிற்பது போலிருக்கும். விழுப்புரம் எனும் ஊர் ஆன்மீகப் புனிதத்தை இன்றளவும் தமிழகமெங்கும் வீசிக்கொண்டிருக்கச் செய்யும் அற்புதங்கள் நிகழ்த்திய மஹாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதரித்த ஊர். ஆனால் திராவிடம் எனும் பெயர் ஆரிய எனும் பெயரின் விரோதத்தை ஊற்றி முளையிலேயே பட்டுப்போகச் செய்யப்பட்ட பெயர். அப்பெயர் தாங்கிய எந்த நிறுவனமும் இப்போது தலைகுனிந்தே நிற்பதை இத்தலைமுறையினர் காணக்கூடும்.
தேனீரின் தயாரிப்பு முறைமைகளின் தாழ்வாரங்களின் பண்டைய பாறாங்கற்கள் பெயர்க்கப்பட்டு பளிங்குக் கற்கள் பொருத்தப்பட்டிருப்பதால் மொய்க்கும் ஈக்களின் கால்கள் வழுக்கும் என்பதாலோ இல்லை சிறகுகள் சிக்கிக் கொள்ளும் என்பதாலோ ஆரியபவனின் தொன்ம தேய்மானமற்ற தேனீர் தயாரிக்கும் தாழ்வாரங்களில் ஈயற்ற சுகாதார சுகந்தம் மகிழுந்துக்களை நிறுத்திவிடச் செய்துவிடுவது நிகழ் நகரும் தமிழ் மாந்தர்களை நின்று போகச் செய்யும் கலாச்சார உத்தி.. அப்படியான பார்வை வேகத்தடையில் ஏறி இறங்கிய மகிழுந்துவின் மீள்ம உருண்டைகள் தானாகவே தும்பை நுகத்தடியில் கட்டிக்கொண்டு வைக்கோல் மேயும் ஓய்வின் பொழுதுகளை தேடிக்கண்டடைந்துவிட்டன. வேகமாய் நகரும் மாந்தர் சிலர் தேனீர் தேவையில்லையெனினும் நின்று செல்வது உத்தியின் வெற்றியன்றி வேறென்ன..?
அத்தேனீரகத்தின் தேனீர் தயாரிப்பாளர் ஒரு பெண். சீருடையணிந்த பணியாளர்கள் பரிமாறும் உணவகங்களின் உணவில் சுவை குறைபாடுகளை வாடிக்கையாளர்கள் பொருட்படுத்துவதில்லை. சீருடையற்ற சீரற்ற அழுக்கு வெளித்தெரியப் பரிமாறப்படும் உணவுகளில் இல்லாத முடித் துணுக்குகள் உருவப்பட்டு உணவு நிராகரிக்கப்படும் கலாச்சார பரிமாண யுகத்தில் சீருடையணிந்து தலையில் முடியுதிர்ந்தாலும் உணவில் விழாதெனும் குறியீட்டுத் தொப்பியணிந்து ஊசலாடா புன்னகையை வீசியபடியே தேனீர் தயாரிக்கையில் இரண்டு தேனீருக்கான உத்தரவு பிறப்பிக்க வேண்டியதானது நாவின் சுவை சுற்றுச் சூழலின் உந்துசக்தியினாலும் உசுப்பப்படக்கூடுமென்பதைப் புரியவைத்தது.
மாற்றப்பட்ட எதுவும் மாறிக்கொண்டிருப்பதும்
நாளைய மாற்றங்களுக்கான விதைகள்
என மனக்குறிப்பேற்றில் வரிகளைப் பதிவு செய்தபடியிருக்கையில் அத்தேனீர் தயாரிப்பு நிபுணப் பெண் பணிவுகளை பரிமாறும் கைகளில் தேக்கி தேனீர்க் குவளையைத் தருகிறாள். ஒரு துளி நாவில் கால்வைக்க சட்டென சுவையறியும் நரம்புகளில் இளையராஜாவின் இசையில் உதித்த பூங்காற்று திரும்புமா எனும் பாடல் இசையின் சுவையும் தேனீர்ச் சுவையும் இணைந்து ஆடி மகிழ்விக்கும் நர்த்தனங்களை தயாரிக்கத் தொடங்கிவிட்டன.
கிராமத்தின் அக்ரஹாரத்து வீடுகளில் காலையில் தேனீர் அருந்துகையில் சரஸ்வதியின் படத்திற்கு இசை ரோஜாக்கள் கோர்த்த மாலையை அணிவிக்கையில் மனதின் தெய்வீகம் விழித்தெழச்செய்யும் அரிய உணர்வூட்டலின் தொகுப்பை கைகளில் ஏந்துவது போலான மோகனராகப் பாடலொன்று இப்போதெல்லாம் கைபேசியின் வழி ஒலிக்கச் செய்யும் கலாச்சாரம் சற்று தேய்ந்திருந்தாலும் தெய்வீகப் பூச்சால் சரிசெய்யப்பட்டு காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இரண்டாவது துளி உள்ளிறங்குகையிலும் சூடு தேயாத தேனீர் தயாரிக்கும் நுட்பம் புகுத்தப்பட்ட தேனீரின் சுவை மோகன ராகம் ஒளடவ ராகம் என்பதை தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டுச் சொல்லியது. ஒரு திரவத் துளி நாவில் இருக்கையில் தலையில் குட்டு விழுகையில் புரையேறும் மானுட உடலின் கூறு சற்றே கலைக்கப்பட எம்பாட்டை விரும்புமா என சிவாஜியின் ஆனந்தக் கண்ணீர் முகம் தேனீர்க் குவளையின் பிம்பத்தில் படிந்திருந்ததைப் படிக்க முடிந்தது. ஒளடவ ராகத்திற்கு ஐந்து ஸ்வரங்கள் என்பது அற்புதமான தேனீர் தயாரிப்பு நுட்பங்களைக் கண்டடைவது போன்ற சிக்கலான ஒன்றென்பதும் புரிந்தது. நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் என கசாப்பு வெட்டும் கருவியால் ராகத்தைச் சிரிப்பிற்காக வெட்டும் கவுண்டமணி நகைச்சுவைக் காட்சி சட்டென மனதில் வர நிஜம்மாகவே புரையே இருமல் சில தேனீர்ச் சொட்டுக்களை விசிறி வெளியில் கொட்டியது.
நாளைய தேனீர் தயாரிப்பாளர் அணியப்போகும் உடையில் மாற்றம் என்பது மடிசார் அணிந்து ஆரியபவனில் தேனீர் தயாரிப்புப்பெண் தேனீர் தரப்போகும் கலாச்சார மதிப்பேற்றம் பெறப்போகும் தொன்ம கலாச்சார தேய்மான தேனீரகமொன்றில் ஊன்றப்பட்ட விதை இனி முளைத்து கிளைவிடுத்து ஆல்போல் தழைத்து அருகு போல் வேருண்ற வேண்டுமென எண்ணியபடியே மீள்ம உருண்டைகளை விழிக்கச் செய்ய அவை மீண்டும் உருளத்தொடங்கிவிட்டன...
ராகவபிரியன்
Comments
Post a Comment