ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6/13


நம் வாழ்வை மிருகங்களாக்கினாய் நீ

நாம் இப்போது காடுகளில் திரிகிறோம்..

பள்ளிக் கூடத்தில் என் வேட்டையின்

அறிவின் மானொன்றை நீ கவ்வியிழுக்கிறாய்..

எனக்கு முன் உதித்த உன் பற்கள் மட்டும்

ஏன் அதீத கூராய் உன் தாடையின் தசைகளில்

பிறப்பெடுத்திருக்கிறது..

மீனும் ஆமையும் பன்றியும் ஏன் நாயும் கூட

கடவுளின் முகமென மாறும்.. ஆயினும் 

கரடிமுகக் கடவுளெனும் உன் சுயப்பிகடனத்தால் 

பற்றிய நம் வாழ்வின் காட்டுத்தீயை

வானிலிருந்து கொட்டும் நீரெதுவினாலும்

அணைக்கவியலவில்லை..

உன் தம்பித் தேனீக்கள் சேகரித்து சேமித்த

தேனடைகளை கலைக்கும் உன் மிருக குணம்

வாழ்வின் காடுகளெங்கும் எதைச் சிதைக்க அலைகிறது?

காடுகளின் கயமையைப் போர்த்தியிருக்கும்

மிருகங்களுக்கான அப்பனின் சரணாலயத்தின் 

உனக்கு மட்டுமான பாதுகாப்பைத் திருடிக்கொண்ட நீ

உன்னை சிங்கமென சொல்லிக்கொள்கிறாய்..

கரடியும் சிறுத்தைகளும் இன்னபிற மிருகங்களும்

பசித்தால் ஊருக்குள் இரவில் புகுவது நியாயம்..

ஆனால் வாழ்வின் பகலிலேயே இரை தேடி

அலையும்  நீ சரணாலயத்திலிருந்து தப்பி

மானுஷ மன வீதிகளில் 

அநியாயமாய்அலையத் தொடங்கிவிட்டாய்..

மிருகங்களைப் பிடிக்க வைக்கப்பட்ட 

காலவிதியின் கூண்டு நீ அலையும் பாதையில்

உன் கண்ணுக்குப் புலப்படாமல் பதிக்கப்பட்டுவிட்டது..

அகப்படுதல் என்பது அன்பின் கரங்களுக்கானது..

மிருகங்கள் பிடிக்கப்படுகின்றன.. 

அல்லது வேட்டையாடப்படுகின்றன..

ஆனால் நாளை நீ அகப்படப்போவது 

உனக்கு நீயே வைத்துக்கொண்ட வளைக்கவியலா

பொறியின் இரும்புக் கம்பிகளுக்குள்..


ராகவபிரியன்


Comments

Popular posts from this blog