Posts

Showing posts from October, 2026
Image
  ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்.. பாகம் 6/18 இந்த எறும்பிற்கு இன்றைக்கான பருக்கை பெரும் கனமாகிவிட்டது.. மழைக்கால பெருவெள்ளத்தில் நீந்தவியலா கால்களில் பட்ட ஒற்றை சோற்றுப் பருக்கைக்கான காயங்கள் வலிக்கிறது.. மெல்ல உந்தி பருக்கையைத் தூக்குகையில் எத்துனை எத்துனை வாய்கள் பங்கிற்கான போராட்டத்தில் எல்லாப் பக்கமும் இழுக்கின்றன.. இந்த எறும்பின் மீளவியலா பசித்த காலத்தைப் பிடுங்கிவிட்டால் புற்று திரும்பும் பற்றைத் துறந்தாக வேண்டும்.. எந்நேரமும் எனக்கு முன்பிறந்த கனத்த மானுட கட்டை விரலொன்று அவனின் பருக்கைப் பொழுதில் அறியாமல் ஊர்ந்ததால் இவ்வுடல் தேய்த்து ஆன்ம விடுதலைத் தரக் கூடலாம்.. இருப்பினும்.. எனக்கான காலத்தின் இப்பருக்கை காய்ந்து இழுக்குமளவு இலகுவாகும்.. அதையென் புற்றிற்கு நொண்டி நொண்டி நகர்த்திச் செல்லும் வரை என் பிடியையும் ஏன் என் பிராணனையும் கூட விட்டுவிடுவதாய் உத்தேசமில்லை.. ராகவபிரியன் தேஜஸ்வி...
Image
  ஓளவை நாவல் மரமடியில் உதிர்பழ தேர்வில் குனிந்து நிமிர்கிறாள்.. அவளின் உடல் தாங்கும் கைத்தடி எந்நேரமும் உடையக்கூடலாம்.. உச்சியின் முருகன் பத்து நாவற்கனிகளையே கையில் வைத்திருக்கிறான்.. மூத்த தெய்வீக ஆதிமுதல் தமிழ்ப்பெண் கவி பத்திலொன்று எனக்குண்டா என வினவுகிறாள்.. உச்சி முருகன் உடையா நாவலும் உயர் அரசாங்க உத்தியோகமும் அரிதிலும் அரிது ஓளவையே.. பட்டியலின போட்டியாளருக்கு நான்கு பிற்படுத்தப்பட்டவர்க்கு ஐந்து அனைவருக்குமான மீதம் ஒன்று என்னிடமிருப்பதோ பத்து உனக்கேது பழம்..? அதிர்ந்த ஓளவை உடல் கனத்தை கைத்தடிக்கு நகர்த்துகிறாள்.. உடைந்தது கைத்தடி மட்டுமல்ல..
Image
  இந்திய கிராமிய பொருளாதார வெற்றி...1 பின் நவீன இந்தியக் கிராமப் பொருளாதாரமும் மேலைநாட்டுக் கிராமப் பொருளாதாரமும் இரட்டை ஜடையிலிருந்து இலகுவாகப் பிரிக்கவியலும் பின்னல் கால்கள் போன்றவை.. இந்தியக் கிராமத்தில் வறுமை என்பது பணமின்மை மட்டுமல்ல அதையும் தாண்டி நிலமின்மை, சாதி, கடன், உழைப்பின் மதிப்பின்மை ஆகியவற்றின் வரலாற்றுத் தொகுப்பு. ஆனால் இத் தொகுப்பிற்குள் தான் ஆயிரமாண்டு கலாச்சாரப் புதையல் பாதுகாப்பாய் இருக்கிறது.. மேலைநாட்டுக் கிராமங்களில் செழிப்பு என்பது விடுதலையின் முழுமையான முகமென அரிதாரம் பூசப்பட்டு வெகுஜன ஊடகங்கள் மூலம் இந்தியப் பார்வைகளில் புகுத்தப்படுவது பொருளாதார கொரில்லா யுத்தம்.. மேலை நாட்டு பொருளாதார இயந்திரம், சந்தை, பெருநிறுவனம் ஆகியவை கண்ணுக்குப் புலப்படாத இரும்புக் கை மாயாவியின் கரத்தில் இருக்கும் சாட்டை போன்றதெனில் அதுதான் நிஜம்.. நோபல் பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் விடுதலையின் வளர்ச்சி எனும் நூலில்..அதாவது டெவலப்மெண்ட் ஆப் ப்ரீடம் எனும் நூலில் பொருளாதார வளர்ச்சி தனிமனித விடுதலை என்கிறார். அவரின் பொருளாதாரம் மைக்ரோ பொருளாதார கூறுகளை உள்ளடக்கியது.. தனி ம...
Image
  ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்...பாகம் 6/17 கால்கள் நடக்கத் தொடங்கிய காலமது.. தண்டவாள ஓர முட்செடிகளை வெட்டிவர அழைத்துச் செல்வான் அண்ணன்..  நவீன கழிப்பறையற்ற அந்தகால  ஓடும் புகைவண்டிப் பெட்டியிலிருந்து பறந்து விழும் பயணி நரகல் துளியொன்று.. அதைத் தடுக்கும் மேல் சட்டைக்கு  வழியற்ற ரயில் கரையில் இவனின் காலேறி இறங்குமொரு  கட்டு விரியன் பாம்பு.. காட்டுக் கருவேல முள்குத்தி ரேகையழிந்த உள்ளங்கை வழி கொப்பளிக்கும் குருதி குடித்த விறகுகள்  ரத்தபந்தப் பாசப்புகையை  பசித்த வீடெங்கும் நிரப்பும்... அத்தனைப் புகையையும் இழுத்துக் கொண்டு திணறித் தவிக்கும் இவனின் ஈரலறைகள்.. ஆனால் சமையலறையில் மெல்ல மெல்லத் தவழ்ந்து வடித்த அத்துனை சோற்றையும்  உறிஞ்சும் அதிகார அண்ணனின்  அகடு அட்டைகள்.. முந்தியொரு காலத்தில் மூத்தவன் சொல் சக்கரத்தால்  கைவண்டிகளை கனக் கச்சிதமாகச் செய்வான்.. அதை இளைவன்  இழுத்தாக வேண்டும்.. வண்டி வாழ்வுச்சாலை  ஏற்ற இறக்கம்  கண்டு குடை சாய்ந்த குரூரப் பொழுதில்  மூத்தவனின் உறக்கம் கலைந்தால் முதுகு ஒடிந்து நெம்பியிழுக்கும் நுகத்தட...
Image
  THE NIRVANA OF A REJECTED POET --------------------------------------- I sought Nirvana in the ancient silence of the Upanishads, where the self dissolves like a drop of rain forgetting the geography of the ocean.... The sages called it liberation... the death of desire... the extinction of the little tyrant called I... the final eviction of the tenant from the house of suffering.... But who would teach Nirvana to a Tamil poet..... whose words had been evicted from the houses of recognition.......? My poems stood outside the doors of literary conferences... holding their torn manuscripts like beggars holding empty alms bowls.... The critics passed by.... Their eyes performed a perfect philosophy of non-attachment.... No prize.... no applause.... no trembling hand.... to receive the unwelcome child from the labour of my mind.. And I asked Ranga... of my loneliness... Is rejection another name for renunciation.... Is humiliation merely the ego... being strangled by invisible hands....
Image
  கீதைச் சொல்லும் கதை சொல்லியும்..5 மனம் கனத்துப் போகிறது மாலை நேரங்களில்.. சாலைச் சுமைதாங்கிக் கல்லின் மேல் யாரோ மலையை ஏற்றி வைத்த கனம். கைகால் முகம் கழுவி விபூதி பூசி காஞ்சி சாலைகளில் நடந்தாக வேண்டும்.. முதலில் கச்சி ஏகம்பன் கோவில் சாலையின் முச்சந்தி வரும்..அங்கிருக்கும் கைவிடப்பட்ட பள்ளிக் கூடத்திலிருந்து ஒரு கை நீளும்.. கன்னத்தில் பளாரென அறையும்.. ஏதோ ஒரு குழந்தையை யாரோ ஒரு ஆசிரியர் அறைந்திருக்க வேண்டும்.. அந்தக் குழந்தையின் சாபம் பள்ளி இடிந்து கிடக்கிறது.. அந்த குழந்தை வாங்கிய அடியின் கனம் மோதியதால் மனதின் கனம் சற்று குறையும்.. பள்ளியின் உச்சி மாடத்தில் ஒரு மான் ஒரு மாது ஒரு மானுடன் வில்லுடன் இருக்கும் பொம்மை பூச்சுதிர்ந்து மீளுயிருக்காக மன்றாடிக்கொண்டிருக்கும்.. அடுத்ததாக ரேணுகா தேவி கோவில் திரும்பும் நாற்சந்தி.. உயரமான வீடொன்று அங்கிருக்கும்..அவ்வீட்டு வாசலில் சரக்கொன்றை மரம். அதன் மேல் ஓரங்குல புழுதி படர்ந்திருக்கும்.. சதா பாதம் சுமக்கும் ஸ்லிப்பரின் முனையின் புழுதியடர்வு..குனிந்து அணிந்திருக்கும் ஸ்லிப்பரை நோக்க மனதின் பாரம் மெல்ல உருகத் தொடங்கும்.. அடுத்தாக காமாட்சி அம்மன...
Image
  வறுமையில் செம்மை.. சிறுகதை.. ------------------------------- [ இந்தக் கதை தொன்னூறுகளில் உதயம் பத்திரிகைக்காக எழுதியது.. அதன் நகல் கிடைக்கவில்லை.. நினைவிலிருந்து இப்போது மீண்டும் எழுதியிருக்கிறேன்.. விஜயதசமிக்காகவும்... உலகளாவிய வாசகர்களுக்காகவும்..] பாலுவின் பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் ஏறினார். பாலுவிற்கு பயம் தொற்றிக் கொண்டது. அவனிடம் டிக்கெட் இல்லை. ஆனால் இரண்டு பேண்ட் பாக்கெட்களிலும் தங்கத் தாலி வில்லைகள் இருக்கின்றன. ஒரு பாக்கெட்டில் எப்படியும் இருபது இருக்கும்.. ஒரு வில்லை நாலு கிராம். அப்படியென்றால் என்பது கிராம் எவ்வளவு இருக்குமென கணக்குப் போட்டான்.. இதயம் வேகமாய் துடிக்கத் தொடங்கியது.. மனக் கணக்கை நிறுத்தினான்.. இதய வேகம் சீரானது. மதியம் வயலில் இருந்து சாப்பிட குடிசைக்கு வரும் போது தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தாக வேண்டும்..அப்போது சாலையோரம் இந்தத் தங்கத் தாலி வில்லைகள் கிடைத்தன.. இரண்டு நெகிழிப் பைகளில் ரோஸ்கலர் பேப்பர் சுற்றிக் கிடந்தன.. குடிசைக்கு வந்துவிட்டான்..தங்கத் தாலி வில்லைகளை கையில் வாங்கிய நிலவழகிக்கு முகமெல்லாம் சிரிப்பு.. அய்யா.. அய்யனாருக்கு பொங்...
Image
  கோடிகளில் மாதவருவாய் வரும். ஆனாலும் உபரி வருமானம் தேடுவான் சாமான்யன்.. உபரி வருமானம் நியாயமான முறையில் எப்படி வரும்.. அதிக உழைப்பை அளித்தால் உபரி வருமானம் கண்டிப்பாக வரும்.. ஆனால் லஞ்சம் வட்டி வருமானம் முறைகேடுகளில் ஈடுபடுவது ஏமாற்றி சம்பாதித்தல் மற்றும் இன்னபிறவும்... உபரி வருமானம் எனும் சொற்பிறப்பியலின் ஊற்றுக்கண்.. இப்படித்தான் போதிய மாத வருமானம் வருகையில் நேர்மையாய் உபரி வருமானம் சம்பாதிக்கும் ஆசையில் ஒரு அம்பாஸிடார் கார் வாங்கி வாடகைக்கு விட்டது.. முதலில் நட்பாய் பழகிய ஓட்டுனர் ஆறே மாதத்தில் கடுமையான கடன் சுமையில் தள்ளிவிட்டார். போதிய மாதவருமானம் கடனடைக்கவே போதாமல் போனது.. அது மட்டுமல்ல.. ஒவ்வொரு ஆயுத பூஜையிலும் கார் நிறுத்தம் நடத்தும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.. அது ஒட்டுனரின் உபரி வருமானம் என்பது புரியாமல் போனது. கடைசீயில் அம்பாஸிடாரை கடனக்கு ஓட்டிச் சென்றுவிட்டார்கள் நிதி நிறுவனத்தார்.. அதன் விளைவு..போதிய மாத வருமானம் தரும் அலுவலகத்தின் ஆயுத பூஜையில் கலந்து கொள்ளவும் இயலாமல் போனது. உபரி வருமானம் என்பது அதிகார வர்கத்தினருக்கும் பணக்காரர்களுக்கும் அரசியல் பிழைப்பாளர்கள...
Image
  கீதைச் சொல்லும் கதை சொல்லியும்...4 காலம் காலாற நடந்து கொண்டிருக்கையில் மானுடனை சுழற்காற்றுக்குள் சிக்க வைக்கலாம்..கணுக்கால் அளவு நீரோடும் தெள்ளிய வாழ்வின் நதியில் இறங்குகையில் பெருவெடிப்பினால் பிரளய வெள்ளம் உருட்டி உருட்டி அவனை புரட்டியும் போடலாம்.. ஒரு முடிவின் விளிம்பிளிருந்து உள் குதித்தல் தெய்வச் செயல். வெளியேற்றப்படுதல் விதியின் எச்சச் செயல்.. அக்காலத்துளியின் கடுமை மீறி மீண்டு வருதல் அல்லது சுழல் மீறியும் பிரளயத்தின் வேகம் தாண்டியும் உயிர்த்திருத்தல் வாழ்வதிசயம். அதிசயங்கள் எப்படி சாத்தியமாகின்றன. சாதாரண வாடிக்கை நிகழ்வு விபரீதமாகி அதில் சிக்கித் தவிக்கையில் ஒரு கரம் நீளம்.. ஒரு பாதம் இன்னொரு அடியெடுத்து நம்மை நோக்கி வரும்.. ஒரு குடை விரியும்.. ஒரு வாகன ஓட்டி அருகில் வந்து ஏறிக்கொள்ளச் சொல்வார்.. நேற்று சட் டென கனமழை காஞ்சியில். பெயர்த்திகள் நடன ஒத்திகைக்காக நடனக்கூடத்திற்குச் சென்றிருக்கிறார்கள்.. மனமெங்கும் தெளிவற்ற பயம்.. இருசக்கர வாகனங்களின் சுழற்சக்தி காஞ்சி வீதிகளில் பெருமழையில் பொய்த்துப் போகின்றன.. நொடியில் இடுப்பு வரை கூட அதிவேகத்தில் சாக்கடை கலந்த மழை நீர் வெள்ளம...
Image
  ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6/16 முகத்தின் மீது முஷ்ட்டி யொன்று ஓங்கி குத்திவிட்டுப் போகிறது.. அதன் வலிமையையும் விரல்களில் மோதிரமிருந்தா என்பதையும் மற்றும் விரல்களை மடக்கி  முஷ்ட்டி நீண்டதன் காரணிகளையும் ஆய்ந்து கொண்டிக்கத் தேவையில்லை.. முகம் அப்பிக் கிடந்த நறுமணப் பூச்சை அலகால் ஒரு சாகசப் பறவை கொத்திக் கொத்தி உதிர்க்கிறது.. உதிர்க்கட்டும்.. அதன் கால் நகங்களின் கூர்மையையும் சிறகுகளின் சக்தியையும் மற்றும்  அது முன்பு அமர்ந்திருந்த மரக்கிளையின் தாவரவியல் பெயர்களையும்  ஆய்வதால் கன்னத்துக் குருதி நின்றுவிடப் போவதில்லை.. ஒன்று மட்டும் நிச்சயம்.. முஷ்டிகளாலும் கூரிய அலகுகளாலும் உலகறிந்த ஒரு முகத்திலிருந்து அதன் நிரந்தர புன்னகையை உயிர் உள்ள வரை...  பிடுங்கியெறிய வியலாது.. அது மட்டுமல்ல... அந்த முகம் மரணித்தப் பின்னும் அதன் நெற்றியில் மீந்திருக்கும்  விபூதி பட்டையின் நடுவில் பதிக்கப்பட்ட  வட்ட வடிவ ஒற்றை நாணயத்தையும் கூட.... ராகவபிரியன் தேஜஸ்வி..
Image
  கொலு சாக்லேட்.....சிறுகதை -------------------------------------- நம்மாத்துல ஏம்மா கொலு வைக்கறதில்ல.. மூத்த தங்கை கேட்டாள்.. அம்மாவின் மடியில் எனது நான்காவது தங்கை. பிறந்து பத்து நாட்கள் ஓடிவிட்டது.. நம்மாத்துல வழக்கம் இல்லடா.. எதுக்குக் கேக்கற.. இல்லம்மா.. விசாலமாத்துல அந்த மாமி நேக்கு சுண்டல் தரமாட்டேன்னுட்டா.. ஏன்.. தீர்ந்து போச்சுன்னு சொல்லிட்டா..ஆனா பேசின்ல நெறைய சுண்டல் இருந்துதும்மா... என் இன்னொரு தங்கையின் கையிலிருந்து கொண்டைக் கடலைச் சுண்டல் பருப்பில் இரண்டு எடுத்துக் கொடுத்தேன். தங்கை அழத் தொடங்கிவிட்டாள்.. நாங்கள் ஆறு குழந்தைகளும் ஒவ்வொரு வீட்டிலும் கொலு பார்க்கப் போவோம்.. ஆனால் நான் உள்ளே செல்ல மாட்டேன். மற்ற குழந்தைகளுக்கு கரண்டியில் அள்ளப்படும் சுண்டல் எங்கள் முறை வருகையில் ஸ்பூனாக மாறிவிடும்..அறியாத வயதிலேயே அவமானம் தன் உருவத்தைக் காட்டிக் கொடுத்தது அப்போதே எனக்கு.. இப்போது அம்மாவிடம்.. ஏம்மா பாட்டி நெறைய பொம்மை வச்சிருக்காளே.. அதெல்லாம் எடுத்துண்டு வந்து கொலு வைக்கலாமா.. கேட்டுவிட்டேன்.. என் பாட்டி வீட்டில் ஐந்தடி உயர நான்கடி நீள ஆறு அடி அகல பழைய பர்மா தேக்குப் பெட...