Posts

Showing posts from November, 2026
Image
  இது முருகன் பெயரால் நிகழ்ந்த தனிப்பட்ட அநீதியும் அதற்கான வேலவனின் சூரசம்ஹாரமும். அதைத் தான் இப்போது பதிவு செய்யப் போகிறேன். வினை விதைத்தவன் வினையறுத்தே ஆகவேண்டும்.. அன்று எனது அலுவலகத்தில் பணியில் இருக்கிறேன். அது பாதுகாப்புப் பணியும் வணிகப் பணியும் உச்சமாக இருந்த நாள். எனது மேலதிகாரி திட்டமிட்டே ஆய்விற்கு வருகிறார்.. முகம் பார்க்க மார்பில் தாக்கினால் வீரம்.. மறைந்திருந்து குரல்வலையைக் கடிப்பது மிருகம். ஆம் ஒரு மிருக குணம் கொண்ட அதிகாரத்தின் தாக்குதல் நாள் அன்று.. அதாவது ஆம்புஷ் செக்.. கொரில்லா முறையான ஆய்வு. காரணம் எனது இணை அலுவலர்களுக்கு அந்த அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பை இவ்வெளியவன் ஏற்றது பிடிக்கவில்லை.. அவர்கள் வயது மற்றும் பணிமூப்பில் மூத்தவர்கள் எனினும் அந்த அலுவலகத்தில் இந்த எளியவனின் தலைமையின் கீழ் பணிபுரிய நேர்ந்தது துயரமென அடிக்கடி இவனின் காதுபடவே பேசுவார்கள்.. அவர்களால் மனதளவில் இவ்வெளியவனின் நியாயமான பதவி உயர்வை செரித்துக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ இயலவில்லை.. இவனை விட அவர்கள் அலுவலக ரீதியில் வலுவானவர்கள் என்பதை நிரூபிக்க நினைத்தார்கள்..அதன் விளைவு தான் இந்தக் கொரில்ல...
Image
  தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்....9 மகிழுந்துவின் மீள்ம உருண்டைகளை இயக்கும் காளைகளின் வாயிலிருந்து அசதியின் அதீத உழைப்புச் சுரண்டலின் இயந்திர வடிவெனினும் தசை நார்கள் வலுவிழக்கும் ஆபத்தின் மற்றும் இன்னபிற முடியாதெனும் வெளிப்பாட்டின் நுரைகள் காற்றில் பிசிறு பிசிறாக பறக்கத் தொடங்கின.. வாழ்வின் நிலங்களில் விளைச்சல் அற்றவை விபரீதமானவை விதிகளால் உருக்குலைந்தவையென எத்தனையோ சதுர கிமீட்டர்களைக் கடந்த பின்னும் தொய்வற்று பயணித்தல் என்பது விதிக்கப்பட்டிருப்பின் மட்டுமே சாத்தியமாகும்.. இயந்திரக் காளைகளுக்கும் இளைப்பாறுதல் தேவை.. வாழ்வின் நிலங்களில் ஒரு வேட்டியை விரித்து சற்று ஓய்வெடுக்கும் அளவிற்கான நிலங்கள் சாலையெங்கும் மல்லாக்காக கிடப்பதைக் கண்டதும் திசைதிருப்பும் சக்கரவடிவ மாணி ஆங்காங்கே காளைகளை அவிழ்த்துவிடும் உள்ளங்கை அரிப்பால்  நிறுத்தச் சொல்லி இடப்பெயர்தல்களுக்கான அறிகுறிகளை உசுப்புகையில் மீள்ம உருண்டைகள் தன் சுழலின் விட்டத்தைச் சுருக்கியும் நீட்டியும் தடுமாறத் தொடங்குகிறது.. மீள்ம உருண்டைகள் மட்டும் அல்ல.. மனமும் வேப்பூரின் நாற்கரச் சாலையில் மிதக்கையில் ஏனோ ஸ்ரீமதி எனும் அப்ப...
Image
  மனம் உதிர்ந்த பூவென வாடிக் கிடக்கிறது.. அதன் மீது புத்துணர்வு நீர்ச் சொட்டுக்களை வீசியும் பலனில்லை.. அதைச் சுற்றி சாக்கட்டியால் படம் வரைந்தும் அது மனம் போல் இல்லை.. சிறிது கிரிக்கெட் பார்த்தால் பூவிதழ்கள் வண்ணமிழப்பை தடுக்கலாம் அல்லவா.. தொலைக்காட்சிப் பெடியைத் திறந்தேன். விக்கெட் கீப்பிங்கில் ராகுல் இல்லை. மனப்பூவை கீப்பிங் கிளவுஸ் கைகளால் யாரோ கசக்கி எறிவது போல் இருந்தது.. நியூசிலாந்து முன்னூறுக்கும் மேற்பட்ட ஓட்டங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தது.. சேனல் மாற்றி புதிய தலைமுறை செய்திகளுக்குள் பூவை மீண்டும் மலரச் செய்யும் முயற்சி. அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்த செய்தி கிரைண்டருக்குள் மனப்பூ சுத்தமாக நசுங்கி சுக்கல் சுக்கலாகிப் போனது.. மீண்டும் சேனல் மாற்றி இந்திய மட்டையாட்டத்தைப் பார்த்து பூவிற்கு புத்துயிர் அளிக்க முயன்றேன்.. ம் கூம் முதல் ஓவரிலேயே ஹென்றி தன் அட்டகாசமான பந்துவீச்சால் ரோகித் கோலி அய்யரை ஆட்டமிழக்கச் செய்ய யாரோ உதிர்ந்த பூவின் மேல் இரக்கமே இல்லாமல் தனது பூட்ஸ் காலால் மிதித்துவிட்டுப் போனதை உணரமுடிந்தது.. என்ன செய்ய இன்று எதுவும் எழுதவியலாதெனும் மனப்பூவை நுகரும் ...
Image
  காஞ்சியின் வீதிகளில் இன்றைய மாலை நடைப்பயணம். கச்சபேஸ்வரர் கோவில் தாண்டி உதாசீன் பாவா மடம் நடுவில் ஒருவர் சட் டென தன் காலணிகளைக் கழற்றி விட்டு கும்பிடுகிறார்.. எனக்கு அதிர்ச்சி.. காஞ்சியில் ஒரு வயதானவர் என்னைக் கும்பிடும் அளவிற்கு என் புகழ் வளர்ந்துவிட்டதா.. கை தானாகவே சிகப்பு டி ஷர்ட் காலர் வரை சென்று விட்டது.. கொஞ்சம் சுற்றிப் பார்க்கிறேன்.. அருகில் இருந்த ஆவின் டீ மாஸ்டர் ஒரு ஸ்ல்யூட் வைக்கிறார்.. எதிரில் பைக்கில் வந்து கொண்டிருந்த நடுவயது தம்பதியர் பைக்கை நிறுத்திவிட்டுக் கும்பிடுகிறார்கள்.. வலப்பக்க பீங்கான் பொம்மைக் கடைக் கார முதிய பெண்மணி சட்டென எழுந்து அவர் பங்கிற்கு எனக்கு ஒரு கைக்கூப்பல்.. கொஞ்சம் தள்ளி மாலை நேர தள்ளுவண்டி நொறுக்குத் தீனிக் கடை. அதில் பேல்பூரி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவர்.. எச்சில் கையால் தலையில் அடித்துக் கொள்வதையும் பார்க்கிறேன்.. ஒரு நொடி.. வானில் ட்ரோனிலிருந்து யாரோ என்னைப் படம்பிடிப்பது போல் உணர்வு.. சாமி.. கொஞ்சம் இப்புடி வாங்க.. உங்கள போல சாமியார்ங்க நிர்வாகம் பண்ணனும்ங்க.. ஆனா ஒரு கயவாளிப் பய மடத்தோட எடத்த தானே எளுதிக்கிட்டு வூடும் கட்டிக்கிட்ட...
Image
  நாங்க காலேஜ் படிக்கறப்ப இந்த செல் போன் வாட்ஸப்லாம் இல்லீங்க.. என்னோட ப்ரெண்ட்ஸ் ரொம்ப பேரு ப்ரபோஸ் பண்றத்துக்கு மேத்தா கவிதையான 'ஒரு பூவைப் போல் நீ என்னை பாதித்திருக்கிறாய்' போன்ற வரிகளை கடுதாசியில எழுதி அத யார் மூலமாவது தாங்க குடுப்பாங்க.. எதுலயும் ஒரு டிஸ்டண்டஸ் மெயிண்டைன் பண்ணின காலம்ங்க அது.. பொண்ணுங்களே ப்ரில்லியண்ட் தான்.. அதுவும் ரொம்ப ப்ரில்லியண்ட் பொண்ணுங்களுக்கு ப்ரபோஸ் பண்ண மாட்டாங்க பசங்க.. ஆனா இப்ப நிலைமையே வேற.. நாற்பது வயசு கலெக்கட்ருக்கு ஒரு எம் எல் ஏ வாட்ஸப்ல நீ அழகா இருக்கன்னு சொல்ற அளவுக்கு காலம் மாறிப்போச்சு.. [ உண்மையா பொய்யான்னு தெரியாது..நீயூஸ் பார்த்துட்டுத்தான் சொல்றேன்] இதைத்தான் சமூக அவலம்னு நான் சொன்னா இந்த ஸ்ரீரங்கம் மாதவன் ஒத்துக்க மாட்டாரு.. இப்பல்லாம் திடீர்னு வர்றாரு... காணாம போயிறராறு..அதனால எப்பவோ பிபி ஷெல்லி சொன்ன சமூக அவலம் பத்தின இந்தக் கவிதைய என்னளவுல தமிழ்ல தரலாம்னு பார்த்தேன்.. ஆனா இப்ப மொழி மாத்தம் பண்ணினா அது ஏஐ யாலன்னு எல்லோரும் சொல்றதால அப்புடியே இங்லீஸ்லயெ தர்றேன்.. ஆனா இந்தக் கவிதைய படிச்சுட்டு நம்ம விஜய் ஆட்சியோட எம் எல் ஏக்கள்...
Image
  கடந்த நாற்பதாண்டுகளாக திராவிட இயக்கம் தமிழ் இலக்கியத்தை மெல்லச் சுரண்டிக்கொண்டிருந்தது.. பழனி முருகனின் நவபாஷாண சிலையைச் சுரண்டி சுரண்டி இப்போது போலியான முருகனின் சிலையொன்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுபோலத்தான் போலி இலக்கியப் புத்தகங்களை மெல்ல மெல்ல தமிழக நூலகங்களில் செருகிவிட்டார்கள்.. பல எழுத்தாள சமூக அடுக்குகள் போலிகளால் நிரம்பிக் கிடக்கின்றன.. பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களால் அளிக்கப்பட்ட தமிழிலக்கிய சேவை தொடர்ந்து புறக்கணிப்பிற்கு உள்ளானதால் நிகழ் கேவலத் திணிப்பு சாத்தியமாகிப் போனது.. திஜானகிராமன் அய்யர் என்பதால் ஞானபீடத்திற்கு பரிந்துரை செய்யப்படவில்லை.. அது போல லசரா விற்கு பிராமணர் என்பதால் சாகித்ய அகாடமி கொடுக்கப்படவே இல்லை.. சுஜாதா பாலகுமாரன் போன்ற எழுத்தாளுமைகளின் சாதனைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டன.. இப்போதும் கூட ஒரு எழுத்தாளர் பிராமணர் என அறிய வந்தால் அவர் மீது சேறுபூச திராவிட போலி இலக்கிய இயக்கங்கள் தயங்கியதே இல்லை.. அறிவுலக கயமைத் தனம் இப்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்த பின்பும் கூட திமுக சார்ந்த பிரபல எழுத்தாளர்கள் மெளனமாக இருப்பது முழு பூசணியை சோற்றுக...
Image
  நிறைய துவக்குகள் கடல் பரப்பு வெளியில் தள்ளப்பட்டுவிட்டன.. 1. தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்..[ இன்னும் இரண்டு பதிவுகளில் முடித்துவிட எண்ணி இரண்டு முறை காஞ்சி டு திருச்சி மகிழுந்து பயணம்] 2. கீதைச் சொல்லும் கதை சொல்லியும்... [ ஆன்மீக பின் நவீனஅபுனைவு கட்டுரைகள்] 3.பூமிதேவி பின் நவீன கவிதைகள்..[ ஆச்சாரியர் நிகம்மாந்த மஹா தேசிகரின் பூஸ்துதியின் சம்ஸ்கிருத பாடல்களை என்னளவில் பின் நவீனத்துவ மேலைக்கவித்துவம் கலந்த தமிழ்ப்படுத்தும் முயற்சி] 4.ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6. 5. இந்திய கிராமிய பொருளாதார வெற்றி..[ மைக்ரோ எகனாமிக்ஸ் கூறுகளை உள்ளடக்கிய பொருளாதார கட்டுரைகள்..] 6. மேஜிக்கல் ரியலிஸ்டிக் ரியலிச கதைகள்.. இத்துனை நாவாய்களையும் இழுத்து கரையில் போலார்டுகளில் பிணைத்துக் கட்டியாகிவிட்டது.. இனி தொடங்குதல் அவ்வளவு சுலபம் அல்ல... ஈவெரா அறிவுலக ஊழல் தந்த அதிர்வு முழுமுதற் காரணி.. எனினும் எழுத்து மீன்களை வாசக அறிவுப்பசியாற பிடித்து வரவேண்டிய கடமையால் கட்டவிழுந்தே ஆக வேண்டும்.. அதுவரை சுருக்கு வலையைத் தடை செய்தாலும் மடி வலை அல்லது நிலைவலையை மற்றும் அதன் முடிச்சுக்களை இறுக்கிக் ...
Image
  நீண்ட காலக்கயிறொன்றின் மேல் நடக்கையில் சமன்பாட்டிற்கான பிரம்பென பாண்டவ தூதப் பெருமாள் ஏறக்குறைய முடிவின் எல்லையை கால்கள் தொடப்போகும் இச்சமயத்தின் இன்று சற்றுமுன் இவ்வெளிய பக்தனிடம் அரங்கனின் சப்தங்களுடன் சில வார்த்தைகள் பேசிய பொழுதின் கனம் கைபேசியின் சுயமியில் பதிவான பாண்டவ தூதப் பெருமாளின் கோபுரமென உங்களின் பார்வைத் திரையில் கிடத்தப்பட இங்கே பதிவிடப்படுகிறது....ராகவபிரியன் தேஜஸ்வி