நம் முன்னோர்கள் இந்தப் பூமியில் தான் எத்தனையோ யுகங்களுக்கும் முன் வாழ்ந்தார்கள்.. பூமியைப் பெண் என்று எல்லா இலக்கியங்களும் பேசுகின்றன. பூமிப் பெண் நிகரற்ற அழகுகொண்டவள் என்பது மறுக்க முடியாதது. அப்படியான அழகு நிறை பூமிப்பெண்ணை இரண்யாட்சகன் எனும் ராட்சஷன் கடலுக்கடியில் எடுத்துச் சென்றுவிடுகிறான்.. பெண்ணைக் கவர்ந்து செல்லும் எவனும் அரக்க குலத்தையும் அரக்க குணத்தையும் கொண்டவனாகத்தான் இருப்பான். பெண்மையைத் தவறாக பேசுபனும் ராட்சஷன் தான்.

அழகெல்லாம் பூரணமாய் உருக்கொண்ட பூமிப்பெண் திருவரங்கனின் மனைவி. பெரியபிராட்டி அரங்கநாயகியின் சகோதரி.. கடலுக்கடியில் தூக்கிச் செல்லப்பட்ட பூமியின் அலறல்கள் இன்றும்கூட அலைகளாய் கரையிலும் நம் மனதிலும் ஓயாது மோதிக்கொண்டே இருக்கின்றன. அன்று அண்டசராசரங்கள் கிடுகிடுக்க வைத்த ஊழித்தாண்டவ அலறலால் கொதித்தெழுந்த அரங்கன் யக்ஞவராக அவதாரம் எடுக்கிறான். தன் முகத்தின் நீண்ட தந்தப் பற்களால் பூமிதேவியைக் காப்பாற்றி மீட்டெடுக்கிறான். அதனால் தான் இன்றும் நம் பூமித்தாயின் குழந்தைகளான நாமும் கோடானுகோடி உயிரினங்களும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..
புனிதமெல்லாம் நதியாகவும் கடலாகவும் மலைகளாகவும் அருவிகளாகவும் மின்னும் ஆபரணங்களாக அணிந்திருக்கும் அன்னை பூமிபிராட்டியின் மேல் முப்பத்து மூன்று பாடல்களை ஆச்சார்யன் நிகம்மாந்த மஹாதேசிகர் இந்திய இலக்கியத்திற்கு கொடையாக அருளிச் செய்திருக்கிறார்..
அரங்கனின் ஆசிபெற்று உங்கள் அனைவரின் பேராதரவையும் பெற்று ஒவ்வொரு சம்ஸ்கிருத பாடலையும் இவ்வெளியவன் தன்னளவில் தமிழ் மொழியில் ஆக்கித் தரலாம் எனும் முயற்சியில் ஆகப் பணிவாகப் புகுந்திருக்கிறான். அப்படியான ஓர் எண்னம் பாண்டவ தூதப் பெருமாள் சன்னிதியில் இவ்வளியவனின் மனதில் உதிக்கச் செய்தது அரங்கனின் செயல் என்பதில் சந்தேகமில்லை.. இருப்பினும் உங்களின் பேராதரவு இந்த இலக்கிய ஆக்கத்திற்கான முயற்சிக்குக் கிடைக்குமா? ஆம் எனில் உங்கள் ஆதரவை பணிவன்புடன் தெரிவிக்க வேண்டுகிறேன்..
அரங்கனின் ஆசிகளும் ஆச்சாரியனின் திருவடி தீர்த்தப் பிரசாதமும் உங்கள் பேராதரவும் சித்திக்கட்டும்..
ரெங்கா..ரெங்கா...ரெங்கா..
அடியேன் தாஸன்..
ராகவபிரியன் தேஜஸ்வி.

Comments

Popular posts from this blog