பூமிதேவி பின் நவீன கவிதைகள்..2

நித்ய கர்மா கட்டாயம் செய்யப்படவேண்டிய ஒன்று. அதன் அதிமுக்கிய பகுதி காயத்திரி ஜபம்.. அந்த காயத்திரியை விட புனிதமானது வ்யாஹ்ருதி. வ்யாஹ்ருதியை அறிந்தவன் பிரம்மத்தை அறிந்தவனாகிறான்.. வ்யாஹ்ருதி எனும் மந்திரவியலின் சொற்பிறப்பியல்கள் வியப்பிற்கு உரியன. பூ புவஸ் சுவஸ் எனும் இந்த மூன்று சொற்களும் நான்கு வகையான பூ என்பது பூமி. புவஸ் என்பது வானம். சுவாஸ் எனில் இன்னொரு உலகம்.. இது வ்யாஹ்ருதி எனும் ஒரு சொல்லில் அடங்கிவிடுவது வியப்பின் உச்சம். அதனால் தான் காயத்திரி மந்திரத்திற்கும் மூத்த மந்திரச் சொல் வ்யாஹ்ருதி.. பூ எனும் முதல் எழுத்து பூமிதேவியைத்தான் உணர்த்துகிறது.. ப்ரணவம் எனும் ஓம் அரங்கனையே குறிக்கும் அற்புத சொற்பிறப்பியலின் ஊற்றுக்கண்.. இப்படியான வ்யாஹ்ருதியிலும் காயத்திரியிலும் முதலிடம் பெற்ற பூமிதேவியைப் பற்றி ஆச்சாரியன் நிகம்மாந்த மஹாதேசிகர் இரண்டாவது பாடலில் இப்படிப் பேசுகிறார்.. இதை தன்னளவில் தன்னடிமையை தமிழின் பின் நவீன கவிதை வடிவில் தரச் செய்தது அரங்கன் செயல்..


த்வாம் வ்யாஹ்ருதி:ப்ரதமத: ப்ரணவ: ப்ரியம் தே

ஸம்வேதயத்யகில மந்த்ர கண்ஸ தமேவ...

இத்தம் ப்ரதீத விபவா மிதரேஷ் விதநீம்

ஸ்தோதும் யதாவதவ நே க இவார்ஹதி த்வாம்..


காயத்திரிக்கும் முந்தய வ்யாஹ்ருதியும்

கடலும் மலையும் வெற்பும் வியப்பும்

மூச்சும் காற்றும் தோன்றும் முன்

தோன்றியவள் பூமித்தாய்..


ப்ரணவமும் மந்திரக் கூட்டங்களின்

சொல்லியல்களும் இயல்புகளும்

பிறக்கும் முன்பே பிறந்தவன்

அரங்கன்..அன்னையின் மீட்பன்..


பூம அன்னையையும்

அரங்கனையும்

கையற்றவைகளும் கூட

கைகூப்பித் தொழலாம்..

ஊர்வனவும் பறப்பனவும் ஐயறிவு

ஜீவிதங்களும் சக வுயிர்க்கு

உதவுவதால்..

உன்னைத் தொழ

தகுதி கொண்டவை..


இரு கைகளிருந்தும்

சக மானுடத்திற்கு

எவ்வகையினும் உதவாதவனுக்கு

உன்னைத் தொழ

ஏது அன்னையே தகுதி.. ?


ராகவபிரியன்



Comments

Popular posts from this blog