வரலெட்சுமி விரதம் குடும்ப வழக்கமில்லை என சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அனைவரும் பணக்காரர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். சிலர் வயதானவர்களைக் கண்டால் வெறுப்பார்கள். அவர்களின் இளமை நிரந்தரமென நினைத்துக் கொண்டிருப்பார்கள். பணக்காரர்களும் அப்படித்தான். பணம் நிரந்தரமென ஆணவம் கொண்டு ஏழைகளை அலட்சியப் படுத்துவார்கள்.. பணக் கோட்டைக்குள் திருடர்கள் உடும்பின் இடுப்பில் கயிறு கட்டிக்கூட எவ்வளவு உயரமான மதில் சுவரையும் தாண்டி உள்ளே குதித்து கஜானாவைக் காலிசெய்துவிடும் அபாயம் எப்போதும் உண்டு.

பத்ரஸ்ரவஸ் எனும் அரசன் ஆகச் சிறந்த அரங்க பக்தன். ஆனால் அவனின் மனைவி அதாவது ராஜமாதா நித்ய இளமையோடிருந்தாள். பணத் திமிரும் இளமைத் திமிரும் பார்வையைக் குடுடாக்கக் கூடியது. இதைக் கவனித்த அரங்கன் மஹாலெக்ஷ்மியை ஒரு மூதாட்டியின் வேடத்துடன் அரண்மனைக்கு அனுப்புகிறான். ராஜமாதாவிற்கு பணமும் இளமையும் பார்வையை மறைத்ததால் மஹாலெக்ஷ்மியை அடையாளம் காணவியலவில்லை. அருவருப்புடன் தன்னைக் காண வந்த நிதியரசியை விரட்டிவிடுகிறாள். முதுமையை சகிக்கவியலாமல் சிலர் செய்யும் அநீதி தொடங்கிய நாள்தான் அன்று.
அந்த ராஜமாதாவின் மகள் சரச்சந்திரிகா ஒரு மூதாட்டி தன் அன்னையால் அவமானப் படுத்தப்பட்டதை ஒப்புக்கொள்ளவியலவில்லை. உடனே அந்த மூதாட்டியை உபசரித்து வணங்கி தன் அம்மா செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கிறாள். இன்றும் கூட சில ராஜாக்கள் தங்கள் அரசவை மந்திரி ஒருவர் ஏதோ ஒரு பெயரை அவையில் உச்சரித்தற்குக்கூட மன்னிப்புக் கேட்பதைப் போல.
மஹாலெக்ஷ்மி மகிழ்ந்து சரச்சந்திரிகாவின் குடும்பத்திற்க்கு செல்வ வளமையை ஏற்படுத்தித் தருக்கிறாள். அதே சமயம் முதியோரை அவமானப் படுத்திய பணமும் இளமையும் உருவாக்கிய திமிர் பிடித்த ராஜமாதாவின் ராஜ்ஜியம் தொலைந்து போகிறது. ஆணவ நகைக் கடைகளைத்தான் கள்வர்கள் கொள்ளையடிக்கத் துணிவார்கள். ராஜமாதாவும் அரசனும் வறுமையில் வீழ்கிறார்கள்.
சரத்சந்திரிகா உடனே தன் பெற்றோர்களுக்கு ஒரு தங்கக்குடம் நிறைய பொற்காசுகளை அனுப்பி வைக்கிறாள். முதியோரை பணத் திமிரால் அவமானம் செய்த அந்த ஏழை ராஜமாதா அளவற்ற ஆவலுடன் தங்கக் குடத்தைத் திறக்கிறாள். ஆனால் உள்ளே பொற்காசுகள் கரித்துண்டுகளாய் கிடக்கின்றன.. தான் ஜெயித்த கட்சியை அவமானம் செய்து கட்சி தாவி பதவி கிடைத்தாலும் கொள்ளையடிக்க முடியாதென்பது உணர்ந்த போது கையில் கிடைக்கப்போவது கரித்துண்டுகள் தான் என்பதை ராஜமாத உணர்ந்தாள்.
வேறு வழியின்றி மனமுடைந்து மகளிடம் தஞ்சமடைகிறார்கள் தம்பதிகள்.. அவர்களுக்கு சரச்சந்திரிகா வரலெட்சுமி விரதத்தை போதிக்கிறாள். போதிமரத்தடியில் போதனை கேட்டவர்கள் ஞானம் அடைகிறார்கள் இந்த ராஜ தம்பதிகளும் செய்த தவறை உணர்ந்ததால் மீண்டும் ராஜ்ஜியம் அடைகிறார்கள்.. ஆகையால் மஹாலெட்சுமியை வீட்டிற்கு வரவழைத்து விரதமிருந்தால் அளவற்ற செல்வத்தை அள்ளி அள்ளி வழங்குவாள்..
இருந்தாலும் ஏழ்மை என்பது அவமானம் அல்ல..ஏழ்மையானவர்களை இளமையை இளமையிலேயே இழந்தவர்களை பணம் அவமானப்படுத்துவதை நாம் இன்னமும் பார்க்கலாம். எந்த மானுடம் ஏழ்மையை பணத்திமிரால் இளமையின் கர்வத்தால் அவமானப்படுத்துகிறதோ அவனை தரித்திரம் பீடிக்கும் என்பது நிச்சயம். அதைப் போக்க வேண்டுமெனில் வரலெட்சுமி விரதம் இருப்பது ஒன்றுதான் ஒரே உபாயம்..
தத்யானுபவனோ திரிவினாம்பு தாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்கிசிசெள விஷண்னே..
துஷ்கர்ம கரம மபனீய சிராய தூரம்..
நாராயண ப்ரணயி நீ நய நாம்புவாஹா..
ஒரு ஏழையை பணத் திமிரால் அவமானம் செய்ததால் ஏழையாகி நிற்கும் என் மேல் மஹாலெக்ஷ்மியே உன் கருணை எனும் காற்றின் துணையுடன் பணமழை பெய்யட்டும்.. ஏழ்மையெனும் கோடை வெப்பம் இனி என் இல்லத்தைத் தொடாதிருக்கட்டும்.. என்பது ஆதிசங்கரர் மஹாகவியின் சிரஞ்சீவி வரிகள்..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
திருமகள் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog