கிளிஞ்சல்கள் எனும் சினிமாபடம் சமூக ஒற்றுமை யின்மையை வாழைப் பழத்திற்குள் ஒளித்து வைத்த மருந்து போல் கொடுக்கப்பட்ட ஒன்று. கல்லூரி செல்லும் அவசரத்தில் ஈரத்தலையுடன் வரும் பூர்ணிமாவிற்கு ஜுரம் வந்துவிடுமோ எனும் அக்கரையை மோகன் காட்டுவது மானுட நிஜ அக்கரையுணர்வைக் கொச்சைப்படுத்துவதாக அமைந்திருந்தது. ஈரத் தலையைத் துவட்டாமல் காதலி வருவதை காதலன் ரசிக்கத்தான் செய்திருப்பான். பிறகு ட்ரையர் கொண்டு உலர்த்த முடியுமா எனும் உங்கள் கேள்வி மானுட அக்கரைக்கான அளவு கோலுக்கு விடப்பட்ட சவால். அதுமட்டுமல்ல உண்மைக் காதலன் காதலியின் ஈரத் தலையை விசிறி விசிறியே காயவைத்துவிடுவான் என்று கூட சினிமா உண்மைக் காதலை உருவகப் படுத்திக் காட்டும். அவ்வளவு வலிமை மிக்க ஊடகம் அது.

அதில் மோகன் இந்து மதத்தில் நம்பிக்கையுள்ள குடும்பத்துப் பையன். பூர்ணிமா ஜெயராம் கிறிஸ்துவப் பெண்.. தனது காதல் நிறைவேறப் போவதில்லை என்பது தெரிந்தவுடன் ஆணியை உள்ளங்கையில் தானே அடித்துக்கொண்ட பெண் ஏசய்யாவாய் காதலுக்காக மதத்தைத் தியாகம் செய்வதாய் காட்டப்ப்பட்டிருக்கும். இங்கே மதம் மாற்றும் உத்தியான மருந்து கிறிஸ்தவம் நிஜம் என்றும் இந்துமதம் போலி அல்லது பொய் என்றுமான கருத்தை கேப்ஸ்யூலுக்குள் வைத்துத் தரப்பட்ட வாழைப்பழம்.
இது போன்ற சினிமா படங்களால் கடந்த ஐம்பது ஆண்டுகளாய் தொடர்ந்து உள் நாட்டுத் தாக்குதலுக்கு உள்ளானது இந்து மதம் . அதையும் மீறி ஐனூறு ஆண்டுகளாய் வெளி நாட்டு தாக்குதல்களையும் இதுவரை தாங்கி மரணமின்றி வீறு நடை போடுகிறது நமது இந்துமதம். அப்படியான இந்து மதத்தை வீட்டில் வைத்துவிட்டு கிளிஞ்சல்கள் போன்ற சினிமாவைப் பார்க்கலாம் தவறில்லை. ஆனால் அதே சினிமாவை கிறிஸ்துவர்கள் தங்கள் மதத்தை தங்களின் தோலில் சிலுவையாக அணிந்து கொண்டுதான் பார்த்தார்கள்..
FCRA வை எதிர்ப்பவர்களின் சட்டைப் பைகளில் கிடப்பவை அவர்களின் மதமும் அபரிமிதமான பணமும் தான்.. ஆனால் நடு நிலை எனப் பேசும் இந்துகளின் சட்டைப் பைகள் மட்டும் அல்ல அவர்களின் வழிபாட்டுத் தளங்களும் கலாச்சாரப் பொருண்மையும் அவர்களின் கண்ணெதிரிலேயே கொள்ளை போவதை அறியாமல் இருப்பதுதான் இன்றைய பேரவலம்..
மதம்மாற்றுக் கும்பல் நீங்கள் கடலில் மூழ்கி எடுத்துவந்த வலம்புரி சங்கைப் பிடுங்கிக் கொண்டு விட்டதை நீங்கள் இன்னும் உணரவே இல்லை. அவர்கள் உங்களிடம் கிளிஞ்சல்கள் கோர்த்த மாலையை விலைக்கு விற்று உங்கள் வீட்டின் நிலைப் படிகளில் உங்கள் கைகளைக் கொண்டே மாட்ட வைத்து விட்டிருக்கிறார்கள்.. இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டால் நீங்கள் மதமாற்றும் உத்தியை உணர்ந்து கொள்வீர்கள்.. அந்த உணர்வு குருதியில் கலந்த எவரும் தன் மதத்தை வீட்டில் வைத்துவிட்டு வெளியில் வரத் தயங்குவார்கள்.
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog