Thursday, October 2, 2025

 







1990 களில் உங்கள் ரா.பி யனும் அம்பி நாகராஜனும் எம்.வி.வி யைப் பார்க்க கும்பகோணம் சென்றோம். அவரது வீட்டிற்கு சென்றவுடன் பனியன் அணிந்தபடி வாசலுக்கு வந்தார் எம் வி வி.

என் பெயர் ராகவபிரியன் என்றவுடன் புருவங்களை உயர்த்தினார். அம்பி நாகராஜன் பவ்யமாய் கையெடுத்துக் கும்பிட்டான். இருவரும் சட் டென அவரின் முன் நமஸ்கரித்தோம்.
அடடா இதெல்லாம் என்ன.. எழுந்திருங்க. எனச் சொல்லிவிட்டு.
காதுகளைப் படிச்சிட்டீங்களான்னு கேட்டார்.
ஆமாம் என்றேன் நான்.
முருகா...முருகா... இந்தக் கொழந்தைகளுக்கு நல்ல புத்திய கொடுக்கக்கூடாதா என முணுமுணுத்தது காதில் விழுந்தது.
ரெண்டு பேரும் வேலை எதாவது பார்க்கறீங்களா என்றார்.
ஆமாம். ரயில்வேயில எனச் சொன்னவுடன். போங்க போய் ஒங்க வேலைய ஒழுங்கா பார்த்து குடும்பத்தப் பாருங்க.
சொல்லிவிட்டு விருட் டென உள்ளே போய் விட்டார்.
அவரின் அடுத்த சொல்லாத வார்த்தை இன்னமும் என் காதில் தொங்கிக் கொண்டிருக்கிறது..
எழுதறாங்களாம்... எழுத்த...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...