முதலில் நீங்கள் யாரென்று கேட்பார்கள். அடுத்ததாக உங்களுக்கு இலக்கியம் தெரியுமா என்று வினவுவார்கள். பிறகு உங்கள் எழுத்தில் வாசிப்பனுவம் கூட கிட்டவில்லை என்பார்கள். நீங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பீர்கள். உங்களுக்கான லைக் விழாமல் இலக்கிய அதிகாரத்தால் அரசியல் செய்வார்கள். நீங்கள் அப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தால் உங்கள் எழுத்தில் எழுத்துப் பிழைகள் நிறைய தெரிகிறதென்பார்கள். உங்கள் எழுத்து நகல் என்று நகைப்பார்கள். அதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்தால் உங்களை மீண்டும் யார் என்று கேட்பார்கள். திடீரென நீங்கள் ஏதாவதொரு விருது வாங்கிவிடுவீர்கள். அது உங்கள் எழுத்திற்கு தரப்படவில்லை சிபாரிசால் கிடைத்தது என்பார்கள். அதையும் மீறி நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள். ஒரு நாள் நீங்கள் தமிழுக்கு நோபல் கொண்டு வந்து விடுவீர்கள்.
ராகவபிரியன்
No comments:
Post a Comment