இலக்கிய வலதுசாரிகள்...3
அப்படியான இலக்கிய விமர்சன தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் பெரும்பாலும் பிராமண எழுத்தாளர்களே..தி.ஜா.ரா முதல் சுஜாதா வரை அன்று எங்கள் வட்டத்திற்குள் கிழித்தெறியப்படாத பிராமண எழுத்தாளர்களே இல்லை..
உதாரணத்திற்கு ஒரே ஒரு நாவல் இடைவெளி எழுதிய சம்பத் எனும் சம்பத் நாராயணன் அய்யங்கார் என்பதால் பட்ட இலக்கிய பாடுகளைச் சொல்லி மாளாது.
இடைவெளி நாவல் தமிழிலக்கிய கிளாஸிக் வரிசையில் சேர்க்கப்படவேண்டிய நாவல். அது மரணம் பற்றிய எண்ணப்படிமங்களை ப்ராய்டிய மனோதத்துவ ஆய்வுகளையும் விட ஆகச் சிறப்புடன் தமிழில் தன்னகத்தே கொண்டிருந்த நாவல். குறைவான வடிவெனினும் அதன் வாமன விஸ்வரூபத்தை இன்னமும் வேறெந்த தமிழிலக்கிய புதினங்களாலும் எட்டிப்பிடிக்க இயலவில்லை என்பதுதான் காலம் அழிக்கவியாலா நிஜம்.
சம்பத் நாராயணன் அய்யங்கார் என்பதால் அவரது படைப்புகள் தமிழிலக்கிய உலகில் இன்னமும் அவருக்கான இடத்தை பெற இயலாமல் தவிக்கிறது.
தமிழ் இலக்கியத்திற்கோர் இடைவெளி நாவல் என அடித்துச் சொல்லலாம்.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது
ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே என திருமூலர் சொல்லிச் சென்றுள்ளார்.
வலதுசாரிக்கும் போலி இடதுசாரி இலக்கியத்திற்கும் உள்ள இடைவெளி நீண்டுகொண்டே போகும் ஒரு இலக்கியப் புதிர் தான். தமிழில் வெற்று ப்ராமண எதிர்ப்பு ஒருக்காலும் இலக்கியமாகாது...
ஒரு முறை அசோகமித்திரன்... சம்பத் தன்னை முறைத்துப் பார்த்துக்கொண்டே கடந்து விட்டார் என எழுதியதைப் படித்ததாக நினைவு...
ஆமாம் தமிழிலக்கியத்தை வலதுசாரி எழுத்தால் எட்டவியலா உயரத்திற்கு எடுத்துச் சென்ற சம்பத் அய்யங்கார் இன்னமும் ஓரவஞ்சனையுள்ள தமிழ் புனைவுலகத்தை வானிலிருந்து முறைத்துப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்...
ராகவபிரியன்
No comments:
Post a Comment