Friday, October 17, 2025

 




நேற்றைய எனது நகைச்சுவைக்கான பதிவை வாசகர்கள் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள் என நினைக்கவில்லை...ஒரு சிலர் நீங்கள் ஜெயமோகனுக்கும் சீனியர் என்பதற்கான ஆதாரங்களை பதிவேற்றுங்கள்...இல்லையேல் ஞானக் கூத்தன் கவிதையான அம்மாவின் பொய்கள் ல் வரும் இனி பொய்க்கு எங்கே போவேன்....எனச் சொல்லி சமாளித்துவிடுங்கள் என மறைமுகமாக எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கத் தொடங்கிவிட்டார்கள்...

அன்பு வாசக இலக்கியப் பங்காளிகளே இலக்கிய ரத்தத்தின் ரத்தமான வாசக உடன் பிறப்புக்களே...ஆன்மீக வாசக அன்பு நெஞ்சங்களே...
வாழ்வின் கொடிய இளமையின் திசையறியா கானகத்தில் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த பொழுதுகளில்...வறுமையெனும் விஷக் கதண்டுகள் என்னைத் துரத்தித் துரத்திக் கொட்டிக்கொண்டிருந்தன...அப்போதெல்லாம் திருவாரூர் மற்றும் வடபை இலக்கிய நண்பர்கள் கவிஞர் நிறைமகிழ்னன்... நீரை அத்திப்பூ...இந்திரஜித்...அம்பி நாகராஜன்..சிந்து பாஸ்கர்...சரவணத் தமிழன்...அடியார்க்கு நல்லான்...ராஜகுரு...இன்னும் எனது ஆசிரியர்கள் கவிஞர் பேராசிரியர் கண்ணன்...போன்றவர்கள் இலக்கியப் புகை போட்டு கதண்டுகளை மயக்கமுறச் செய்து ஒரு சில எனது கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்புவார்கள்...அப்படியான ஒரு தமிழ் இலக்கிய சரித்திர நிகழ்வில் இடம்பிடித்த நாள் தான்...17.05.80...உங்கள் ராகவபிரியனின் முதல் கவிதை உலகதிர மாலை முரசுவில் வெளி வந்த நாள்...காலக் கரையாண்களிடமிருந்தும் வறுமைக் கதண்டுகள் துரத்த குடிசைகளை மாற்றி மாற்றி ஓடிக்கொண்டிருந்த புயற்காலங்களில் இருந்தும் தப்பிப் பிழைத்த அப்படைப்பின் பிரதியையும் இன்னொரு பிரதியையும் இங்கே உங்களுக்காகத் தருகிறேன்...
இலக்கிய அன்னை தன் பிள்ளைகளிடம் அதுவும் தலைப் பிள்ளைகளிடம் பொய்களைச் சொல்லுவதுமில்லை...பொய்களுக்காக எங்கே போவேன் எனப் புலம்புவதுமில்லை...
நன்றியும் அன்பும்...உங்கள் ராகவபிரியன்



No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...