Monday, October 27, 2025




ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 5

ஓடித்து வீசப்பட்ட ஆங்கிலேய சட்டம் எழுதிய கையிலிருந்து போலி மதச்சார்பின்மை எனும் வெட்டி வீசிய கூரிய நகம் மீண்டும் முளைத்து குழந்தைகளின்மகிழ்வு முகத்தைக் கீறத்தொடங்கியிருக்கிறது.
கவிதை வார்த்தை சுடு செங்கற்களால் இலக்கிய அதிகாரம் அடுக்கி சமாதிகளைப் பூசும்
கொத்தன் ஒருவன் பிணத்தின் கழற்றவியலா வைர மோதிரமொன்றை உருவி அணிந்து கொண்டு
தன் மட்டைத் திராவல் கருவியை தூர வீசியெறிகிறான்.
மாளிகைகளைக் கட்ட அவனின் கைகளுக்கு நீளம் போதாததால் சமாதிகளைக் கட்டிவிட்டு விரல்களுக்கு மோதிரம் தேடி துழாவிக்கொண்டிருக்கிறான்.
அவன் வீசியெறிந்த திராவல் கருவி
குழந்தைகளின் தீபாவளி உடையணியும் சுதந்திரத்தை பறிக்க சதா எதையாவது தேய்த்துக்கொண்டிருக்கும்
கண்ணீர் குழைத்த சிமெண்டெடுத்து
சமாதி கட்டும் தொழிலறிந்த
விரல்களற்ற அதிகாரகக் கொத்தனின் காலடியில் போய் விழுகிறது.
விரல்களற்ற முகவருடல் அன்பை மூளைவரை எடுத்துச் செல்வதில்லை.
வெற்று உள்ளங்கையில் சிக்கிய அதிகாரம்
நிலைக்காமல் வழுக்கி விழத்தான் செய்யும்.
மழலைகளின் மகிழ்ச்சியை பிடுங்கித் தின்றபின் அமரும் அதிகாரக் கொத்தனின்
அரியணையின் சலவைக் கற்கள் எப்படிப் பதிப்பித்தாலும் பிடிப்பிழந்து
உருளத்தான் போகிறது.
குழந்தைகளின் உடையணியும் மகிழ்வின் குரல்வளையைக் கடிக்கும் சிங்கங்கள்
இப்போதும் போலி மதச்சார்பின்மை பேசும்
கல்வியின் காட்டில் தான் சுற்றித் திரிகின்றன.
அவைகள் உறுமினாலும் இலக்கியச் சப்தம் எதிரொலிக்குமென மழலையர் பள்ளியில்
போதிக்கப்படுவதுதான் மிருக வேடிக்கை.
இதோ தேர்தல் முயலொன்று அதன் வாடிக்கை நாளுக்காக வன்மமுடன் காத்திருக்கிறது.
தீபாவளியின் அடுத்த பள்ளி நாளில் மஞ்சள் தடவிய வண்ண உடையணிந்து வந்த குழந்தைகளின் மேல் தொடுக்கப்பட்ட பாய்ச்சல் சிங்கம்
நாளை தலைகுப்புற குதிக்கப் போவது
தன் பிம்பம் காட்டும்
தோல்விக் கிணறொன்றில் தான் என்பதறியாமல்
ஆணவப்பிடறியை சிலுப்பிக் காட்டுகிறது.
போகட்டும்.
காவிரி பெண்ணை பாலாறு மற்றும் பரணியின் படித்துறைகளில் ஒட்டகங்கள் குளிப்பாட்ட
தனித்துறைகளை கட்ட ஆணையிட்டு மகிழும்
இலக்கியக் கொத்தன்
உயிர் நீருக்காக நாளை அதன் திமிலைப் பிளந்து
தண்ணீர் குடிக்கட்டும்.
பள்ளிக்கூடக் குழந்தைகளின் தீபாவளி உடையணியும் உரிமையைப் பறிக்கும் அதிகாரத்தை
குழந்தைகளின் பிஞ்சு உடல்மேல் காட்டும் கொத்தன் தன் உடலை ஒரு நாள் தேசியப் பெருஞ்சுவருக்குள் திணித்துக்கொண்டு
சிமெண்ட் பூச்செடுத்து பூசிக்கொள்ளப்போவது நிஜம்.
அடுத்த தீபாவளியன்று இலக்கிய அதிகாரக் கொத்தனார்கள்
கோவிலில் தன் குழந்தைகளுடன் இந்துப் பண்டிகையை கொண்டாடிக் களிக்கப்போவது திண்ணம்.
குழந்தைகள்
தீபாவளிக்குப் பின்னான முதல் பள்ளி நாளில்
மஞ்சள் தடவிய புத்தாடையணிந்து வர
அனுமதிக்கும் ஆணையில்
கையெழுத்திடும் கொத்தனின் கரத்திலிருந்த
பிண மோதிரங்கள் பிடுங்கப்படப் போவதென்பதும் நிஜம்.
ராகவபிரியன்.

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...