Thursday, October 2, 2025

 







அன்பு இலக்கிய நண்பர் திரு ரமேஷ் பிரேதனின் மறைவு அதிர்வைத் தருகிறது. உங்கள் ரா. பி மீண்டும் எழுத வந்த 2010 இன் இறுதி வருடங்களில் ஒருமுறை என்னை கைபேசியில் அழைத்தார். அன்று ஜான் பால் சார்த்தர் என்ற ப்ரெஞ்ச் இலக்கிய மேதையின் கவிதை ஒன்றை என்னளவில் தமிழில் தந்திருந்தேன். அழைத்தவர் மொழிபெயர்ப்பும் மொழிமாற்றமும் மொழியாக்கமும் இல்லை என்றால் இது என்னவென வகைமைப் படுத்துவீர்களென்றார்.
நான் சார்த்தரின் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அப்படியே தமிழ்ப்படுத்தவில்லை. மாறாக அவர் உபயோகித்திருந்த உருவகங்களை உவமைகளை தமிழ் மரபுசார் கவிதைக் கூறுகளில் இருந்து எடுத்தாண்டிருக்கிறேன். கவிதையின் ப்ராண்ஸ் தேச ஆன்மா தமிழ் பேசினால் எப்படி இருக்குமோ அதை என்னளவில் செய்திருக்கிறேன் என்றவுடன்.
நான் இதை எதிர்பார்க்க வில்லை. இருந்தாலும் உங்களின் புதிய உத்தி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.
அடுத்த சில நொடிகளில் என் முக நூல் பதிவில் ஜான் பால் சார்த்தர் இல்லை ழீன் பால் சார்த்த..ர் என்று திருத்திவிடுங்கள் எனப் பதிவிட்டார். நானும் என் பதிவை திருத்திவிட்டேன்.
உலக கவிகளின் ஆங்கில மொழியில் இருக்கும் பிரசித்தி பெற்ற கவிதைகளை என்னளவில் தமிழில் தந்திருக்கிறேன். இனி தமிழின் பிரபல கவிஞர்களின் உலகப் புகழ் பெற்ற கவிதைகளை என்னளவில் இந்திய ஆங்கிலத்தில் தர முயன்று வருகிறேன். அதில் முதல் கவிதையாக நான் தேர்வு செய்து வைத்திருந்தது நண்பர் ரமேஷ் பிரேதனின் கவிதை தான். அதையும் அவரிடம் தெரிவித்து விட எண்ணி இருந்த இப்பொழுது நீண்டு கொண்டிருந்த வேளையில் அவரின் மறைவு பேரதிர்வைத் தந்துவிட்டது.
தமிழின் பின் நவீனத்துவத்தில் புரட்சி வகைமையைப் புகுத்திய தங்களின் எழுத்துக்கள் காலத்தை வென்று நிற்கும். போய் வாருங்கள் நண்பரே.
இதோ உங்கள் படைப்பின் என்னளவிளான ஆங்கில வடிவம். வானிலிருந்தாலும் உங்கள் வாசிப்பின் கண்கள் உறங்காதென்பதால் இதையும் வாசித்து விடுவீர்கள்..
Unexpectedly, a wonder unfolds:
Once in a decade, this is happening..
Yes...someone is now born to read me.
The knowledge, clarity, the meter, and metaphors
reflecting me in the kaleidoscope of Ramesh
Yeah, in a different form, and yeah, in reappearing mode.
When my readers reading me my body taking a shape
as a man, as a woman, as a totally different
human soul which is something wholly new.
The body in which my breath is alive
In my writings there is no single sex, no static voice;
and i am always nude.
Where as...it is the reader who put my dress.
The breath and body of my writings
created a new when every time a reader
reading them.
There is no death for my written body
But death is definite for my human body
It is not an exploration but a reality.
Yes i may die. But there is no death for my writings...
Ramesh predan in Tamil

No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...