கரூரில் இறந்தது பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் தான்.
நேரலை நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படுகையில் பிம்பங்களை திணித்தல் கடினம்..
எழுத்தும் அப்படித்தான். வாசகர்களும் பொதுமக்களும் அனைத்து காட்சிகளையும் மீண்டும் மீண்டும் வெகுஜன ஊடகங்களில் நினைவேந்தல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். எதையாவது எழுத்தென்று எழுதி ஏஐ ல் நேரலை நிகழ்வியல் காட்சிகளில் பதிவான மனத் திரையில் வலிந்து திணிக்கும் கலை அவர்களுக்கு இன்னும் கைவரப் பெறவில்லை.
மனசாட்சி உள்ள மானுட நல்வாழ்விற்கான எழுத்துச் சேவையெனும் புனிதப் பணியில் உள்ளவர்கள் ஒரு தலை பட்சமாக அறிக்கை அளிப்பது நிகழ்வியலின் சகிக்கவியலா மாபெரும் துயரம்.. எழுத்தெனும் அழிப்பானால் நிஜங்களை ஒருபோதும் அழித்துவிட இயலாது.
எழுத்தெனும் முகமூடி அணிந்து அரசியல் விதியாலோ இல்லை சதியாலோ இறந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆன்மாவும் அதிகார பசியாலும் இலவச வீடு மற்றும் விருதுகளெனும் எலும்புத் துண்டிற்காக கொலையுண்ட ஜீவித தமிழ் எழுத்தின் ஆன்மாவும் நிச்சயம் அவர்களை மன்னிக்காது.
ராகவபிரியன்
"The mind is the friend of the conditioned soul, and his enemy as well." (Verse 5 of Chapter 6) Bagavath Gita
No comments:
Post a Comment