ஒரு பெளர்ணமியைத் திருடத் திட்டமிட்டேன்..
என் கைகளைக் கொஞ்சம் நீட்டி
வானம் தொட்டேன்..
கிரணங்கள் வழிந்து மறைவிடம் தெரிய
பயம் நடுக்கம் தந்தது...
இரண்டு கைகளாலும் சேர்த்துப்பிடித்து
சட்டைக்குள் வைத்துக்கொண்டேன்
ஓர் நாள் போதும்..
அன்று யாராலும் நிலாச்சோறு சாப்பிட முடியாது...
கிணறுகளை எட்டிப்பார்த்து
வாளியில் நிலாவை அள்ள முடியாது..
அல்லி மலர்கள் மலரும் வேலையை ஒரு நாள் ஒத்திப்போடுவதைக் காணலாம்..
கருக்கலில் காவிரிக்கரையில்
மலம் கழிக்க வருபவர்கள்
புதர்கள் தேடியலைய வேண்டிய தில்லை.
நிமித்தக் காரன் தலைச்சன் பிள்ளைமண்டையோட்டை
பயமின்றி தோண்டியெடுக்கலாம்..
சுவர் தாண்டி சின்ன வீட்டின் சுவரேறிக் குதிக்கையில்
முண்டாசுக்காண துண்டு தேவையில்லை..
ஒரே ஒரு நாள் மட்டும்
அந்தப் பெளர்ணமி என்னோடு
இருந்துவிட்டுப் போகட்டுமே..
அட என்ன இது...
என் சட்டைப் பைக்குள்
யாரோ கையை விடுகிறார்கள்....
நீட்டிய கையை எப்படிச் சுருக்குவது...?
ராகவபிரியன்
என் கைகளைக் கொஞ்சம் நீட்டி
வானம் தொட்டேன்..
கிரணங்கள் வழிந்து மறைவிடம் தெரிய
பயம் நடுக்கம் தந்தது...
இரண்டு கைகளாலும் சேர்த்துப்பிடித்து
சட்டைக்குள் வைத்துக்கொண்டேன்
ஓர் நாள் போதும்..
அன்று யாராலும் நிலாச்சோறு சாப்பிட முடியாது...
கிணறுகளை எட்டிப்பார்த்து
வாளியில் நிலாவை அள்ள முடியாது..
அல்லி மலர்கள் மலரும் வேலையை ஒரு நாள் ஒத்திப்போடுவதைக் காணலாம்..
கருக்கலில் காவிரிக்கரையில்
மலம் கழிக்க வருபவர்கள்
புதர்கள் தேடியலைய வேண்டிய தில்லை.
நிமித்தக் காரன் தலைச்சன் பிள்ளைமண்டையோட்டை
பயமின்றி தோண்டியெடுக்கலாம்..
சுவர் தாண்டி சின்ன வீட்டின் சுவரேறிக் குதிக்கையில்
முண்டாசுக்காண துண்டு தேவையில்லை..
ஒரே ஒரு நாள் மட்டும்
அந்தப் பெளர்ணமி என்னோடு
இருந்துவிட்டுப் போகட்டுமே..
அட என்ன இது...
என் சட்டைப் பைக்குள்
யாரோ கையை விடுகிறார்கள்....
நீட்டிய கையை எப்படிச் சுருக்குவது...?
ராகவபிரியன்

No comments:
Post a Comment