முந்திரிப் பொங்கல்...சிறுகதை.. பொங்கல் அன்று உத்தியோகம் அவனுக்கு. அதுவும் மனித வாடையற்ற அத்துவானக் காட்டின் நடுவில் இருக்கும் ஒரு தொடர்வண்டி நிலையத்தில். சக ஊழியர்கள் அவன் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவனென்பதால் அவனை டூட்டியில் விட்டுவிட்டு திருனெல்வேலி நாகர் கோவில் எனும் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள்.. அது கைபேசி உடலுடன் ஒட்டப்படாத காலம். தொலைக்காட்சிப் பெட்டி என்ற சொல்கூட வழக்கில் இல்லாத நகர்த்த கடினமான காலமது..காட்டிற்குள் தனித்து விடப்பட்ட ஒரு மானின் மருண்ட பார்வையுடன் நிலையத்தைச் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான். நேற்றிரவிலிருந்து அவன் பணியில் இருக்கிறான். விடியல் பனிச்சூழலும் பசியும் நகர்த்தவியலா நேரமும் அவன் தோளில் தேனீர் அருந்தியாக வேண்டிய சுமையை ஏற்றத் தொடங்கியது. சுமைகள் நாவிலிருந்து தோளில் ஏறுகையில் ஒருபோதும் சறுக்குவதில்லை.. நிலையத்தின் அருகில் இருப்பது ஒரே ஒரு தேனீர் கடை.. அது காலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிவரைதான் இயங்கும். மாலையிலும் அப்படித்தான். வேறு வழியில்லாமல் அங்கே அவன் தேனீர் அருந்தும் போது அதில் கலந்திருக்கும் எருக்கஞ்செடியின் காய்ந்த குச்சிகள் வ...
Popular posts from this blog
ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்…பாகம் 5 1. பள்ளிக் கூரை தொடும் பெதும்பையின் ஊதும்பைகள் அந்தப் பள்ளி வளாகத்தின் கதவில் நெகிழித் துணியின் வண்ண வடிவமைப்பில் சந்தனப் பேழையொன்று குழந்தைகளை உள்வரச் சொல்லி பவ்யமாய் நீள்கிறது அன்புத்தாயின் கரமுடன்.. பெற்றோரும் குழந்தைகளும் அலுவலக அறையில் தொங்கும் வண்ண ஊதும்பைகளில் ஈர்ப்புடன் சட் டென தாவி ஏறி தங்களை நிரப்பிக்கொள்கிறார்கள்.. அவர்களையும் மீறி அவர்களுடனும் குழந்தையுடனும் மேலெழுகிறது வண்ண வண்ண நம்பிக்கை வளிக்கூடுகள்.. தாயின் கரமென வாஞ்சையுடன் நீளும் பள்ளியின் கை நகங்களெங்கும் அப்பியிருக்கும் சாயமிழந்து மூடிக்கிடக்கும் மூலதன கட்டணப் பூச்சுகளைச் சுட்டிக் காட்டுகிறாள் முன் மழலையர் வகுப்பில் சேரப்போகும் மழலைப் பெதும்பை. பற்கள் உதிர்ந்த வயோதிக பொக்கைவாய்ச் சிரிப்புடன் கோட்டோவியக் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுக்கள் வரையப்பெற்ற சுவரில் காந்தி அவருக்கான அத்தனை உயரத்தில் இன்னமும் கருப்பு வெள்ளையில் வெகுளியாகத்தான் தொங்கிக்கொண்டிருக்கிறார். ...
ராகவபிரியனின் நகைச்சுவைக் கதைகள் விரைவில் புஸ்தகா மூலம் அச்சில்.. முன் பதிவு செய்வோர் இப்போதே ரூ 500/ 9442536901 எனும் எண்ணிற்கு அனுப்பி விவரங்களை முகவரியுடன் இதே எண் வாட்ஸப்பில் அனுப்பினால் விரைவில் ஏற்கனவே அச்சில் வெளிவந்த ராகவபிரியனின் மேலும் சில புத்தகங்களுடன் உங்களுக்கு வந்து சேரும்.. நன்றியும் அன்பும்...உங்கள் ராகவபிரியன்

Comments
Post a Comment