Thursday, September 27, 2018

சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பவன் ஒருபோதும் தனது முதல் கவிதையை எழுதிவிடமுடியாது என்றெழுதிய உம்பர்ட் ஈகோ இரண்டே இரண்டு கவிதைகள் தான் எழுதியிருக்கிறார்..வாழ் நாள் முழுதும் இரண்டு இடங்களில் மாறி மாறி வசித்த ஈகோ ஏறக்குறைய எழுபதாயிரம் புத்தகங்களைச் சேமித்திருக்கிறார்...கத்தோலிக்க வழிபாட்டு முறையையும் கடவுளின் இருப்பையும் கடுமையாகச் சாடிய ஈகோ புனைவுலகின் மீதும் தீராத கோபம் கொண்டிருந்தது வரலாறு..எலியட்டிலிருந்து இன்றைய நவீன கவிஞர்களின் கவிதைகளை சதா குறை கூறிக்கொண்டிருந்த ஈகோ எந்தக் கவிதையையும் கவிதையென ஏற்றுக்கொள்ளவில்லை..நீங்கள் ஏன் கவிதையையும் கடவுளையும் நம்ப மறுக்கிறீர்கள் என்று தொடர்ந்து கேள்வியெழுப்பியவர்களை ..எல்லாக் கவிஞர்களுமே மோசமான கவிதையைத்தான் எழுதுகிறார்கள்..அதைவிட மோசமானவர்கள் அதை வெளியிடுகிறார்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவரைக் காப்பாற்ற எந்தச் சர்ச்சும் முன்வரவில்லை...குழந்தை இலக்கியத்தில் ஓரளவு வெற்றிபெற்ற ஈகோ தனது ஈகோவை விட்டுக் கொடுக்கமுடியாத்தால்..ஆகச் சிறந்த நாவலான...ரோஜா என்பது பெயர்...என்பதை இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படைப்பாக கொடையளித்திருந்தும்..எந்த உலகளாவிய பரிசிற்கும் விருதுக்கும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது விடுவிக்க முடியாத இலக்கியப் புதிர்..எனில்..அது மிகையில்லை...அவரைப்பற்றிய ஒரு கவிதையை இங்கே என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
அப்பொழுது
குதிரைகளை
கலப்பையில் கட்டியுழுதார்கள்..
இப்போதோ அடிமாடுகளைத்தான்..
வறுமையுச்சப் பொழுதுகளில்
குடிசையின் மீதான
சூரியன் தன் செங்கதிர்களை
மறைத்துக்கொள்கிறான்..
நிலத்தையும் புலத்தையும்
இயற்கையையும்
கடவுள் இல்லையென
மறுத்தவன்
எழுத்தையும் அதன் ஆற்றலையும்
யாரிடமிருந்து பெற்றான்..
குழந்தையை நேசித்தெழுதியவன்
கடவுள் இல்லையென்பதைக்
குழந்தைகளுக்குச் சொல்லட்டும்..
பிறகு ஏன்
தன் இல்லக்கோவிலில்
தன் குழந்தைகளை
அவன்
காலணிகளுடன் அனுமதிப்பதில்லை..
குதிரையும்
உழவும்
இயற்கையும்
அடிமாடுகளும்
கடவுள் இல்லையெனில்
படைப்பவனும்
கடவுள் இல்லையென்கிறேன்..
ஆமென்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...