பின் நவீனம் என்றொரு
------------------------------------
பைசாசம்..
------------------
------------------------------------
பைசாசம்..
------------------
எவ்வளவு தான் அறிவார்ந்த பிரபலமான காத்திரமான படைப்பெனினும் அதை பலமுறை படித்தாலோ மீண்டும் மீண்டும் படிக்க நேர்ந்தாலோ ஒருவிதமான அலுப்பை இலக்கிய நுகர்வோர்களால் தவிர்க்கமுடியாது...புதுக் கவிதையிலிருந்து நவீனக் கவிதைக்கு இயற்றமிழ் தாவியபோது எழுந்த அதிர்வின் கணங்கள் இன்னமும் உணரப்படுகின்றன...நவீனம் என்றால் இக்கணமென்றும் சொல்லலாம்...பின் நவீனமெனில் இக்கணத்தின் விளிம்புகளில் அமர்ந்து ஆழமறியா வெளியொன்றில் குதிக்கத் தயாராவதெனவும் கொள்ளலாம்...புதுக் கவிதையிலிருந்து நவீனத்தை வேறுபடுத்தும் காரணிகளின் அடுக்குகளில் அழுக்குகள் தேங்கிக்கிடப்பதால்...புத்தம் புதியதொரு வடிவமைப்பை இயற்றமிழ் அணிய வேண்டிய காலம் இதென அறியக்கூடலாம்...அதன் பொருட்டு ஆழமறியாமல் கண்மூடித்தனமான குதித்தல் பைசாசத்தின் குணமாகும்...காரணிகளின் அழுக்குகளைக் களைய மயிற்பீலிகளைக்கொண்டு வருடிக்கொண்டிருத்தல் நவீனக் கவிதையை வருத்துவதாகவே முடியும்...
இந்த முன்னெடுத்தலின் கிறுக்கல்களில் நுழைந்து வெளிவந்த பைசாசத்தின் தனித்துவ தத்துவ வெளியின் நடனமொன்றை உங்கள் பார்வை மேடைகளில் இப்போது நிகழ்த்தும் இக்கவிதை....
இந்த முன்னெடுத்தலின் கிறுக்கல்களில் நுழைந்து வெளிவந்த பைசாசத்தின் தனித்துவ தத்துவ வெளியின் நடனமொன்றை உங்கள் பார்வை மேடைகளில் இப்போது நிகழ்த்தும் இக்கவிதை....
நாற்றங்கால் பத்தைகளை
சேற்றில் சுமந்து
வரப்பு நோக்கி வீசுகிறாய்..
பத்தை விழுந்த இடமெங்கும்
இந்திரனின் வெள்ளையானையின்
மிதவைக்கூழுக்கான
பிளிறல் சப்தம்..
சேற்றில் சுமந்து
வரப்பு நோக்கி வீசுகிறாய்..
பத்தை விழுந்த இடமெங்கும்
இந்திரனின் வெள்ளையானையின்
மிதவைக்கூழுக்கான
பிளிறல் சப்தம்..
அந்தச் சந்தடியில்
இரு சக்கர வாகனத்தில்
மாட்டியிருந்த
தலைகவசமென
உன் செருக்கு
என் உடையெங்கும்
சேறாய் மாட்டிக்கிடக்கும்..
இரு சக்கர வாகனத்தில்
மாட்டியிருந்த
தலைகவசமென
உன் செருக்கு
என் உடையெங்கும்
சேறாய் மாட்டிக்கிடக்கும்..
பிருதிவிராஜன் நீ..
இந்த நாற்றங்காலை
உன் வாழ்வில் நடுவதற்காக
தலைகவசம்
கட்டிக் கிடக்கும்
பின்னிருக்கையில்
அமரச் சொல்கிறாய்..
உன் வாழ்வில் நடுவதற்காக
தலைகவசம்
கட்டிக் கிடக்கும்
பின்னிருக்கையில்
அமரச் சொல்கிறாய்..
காயக் கிளர்துனர் வடித்தப் புளிப்பாய்
உன் புரவியின் கால்கள்
காற்றிழக்கையில்
கடத்தல் அரிது...
வாழ்வின் வெளி கடத்தல்
அரிதினும் அரிது...
ராகவபிரியன்
உன் புரவியின் கால்கள்
காற்றிழக்கையில்
கடத்தல் அரிது...
வாழ்வின் வெளி கடத்தல்
அரிதினும் அரிது...
ராகவபிரியன்

No comments:
Post a Comment