Wednesday, August 15, 2018

The time and shadow

யாருடைய காலச்சுடுசொல்லும்
மத்தகமேறாதபடி
முறக் காதுகளை அசைத்துக்கொண்டிருக்கிறது ஆனை..
பிணைத்தப் பாராட்டின் சங்கிலிகளை
இழுத்திழுத்து அசைத்தபடி
ஓசையெழுப்பி
அலட்சியமாய்
கால்மாற்றி கால் ஊன்றி
பாராட்டடிமையில்லையென
அவ்வப்போது
மண்டியிட்டும்
அற்ப மனிதனைவிட
உயரெமென அசைச்சொல்லில்
ஆடியபடி
நான்கு அடி வெண்பாவாய்
திகைப்பூட்டுகிறது ஆனை..
முகப்பட்டாமோ
முதுகுப்பட்டோ
தானே இறைத்துக்கொண்ட
புழுதி மண்ணோ
அதற்குச் சொந்தமில்லையென்பதை
வாய் திறந்து வாங்கும்
சோற்றுக் கவளங்களுக்காக
குருடர்கள் தடவும்
ஸ்பரிசங்களை பொருட்படுத்தாத
நின்று தூங்கும்
சாகசம் காட்டும் ஆனை..
ஆணைகளுக்குக் கட்டுப்படும் ஆனை
ஆணையிடுவதாயிருந்தால்
முதலையின் வாயில்
கால் மாட்டிக் கதறியிருந்திருக்க
வாய்ப்பேதுமில்லை...
அகப்பட்டுவிட்ட ஆனை
ஒரு சொல்லொணாத்துயரின் காலப்பிம்பம்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...