தென்திசை தவிர மூன்று
திசைகளில் கோபுரம்
என்றுதான் எழுந்திடும்
என்பதோர் கேள்வியுண்டு
யாரிடம் திருப்பணியை
எம்பெருமான் ஒப்படைத்து
பாரினை வியக்கவைப்பார்..
புதிர் நிறை திருவரங்கம்....
[ராகவபிரியன்]
திசைகளில் கோபுரம்
என்றுதான் எழுந்திடும்
என்பதோர் கேள்வியுண்டு
யாரிடம் திருப்பணியை
எம்பெருமான் ஒப்படைத்து
பாரினை வியக்கவைப்பார்..
புதிர் நிறை திருவரங்கம்....
[ராகவபிரியன்]
என்று எழுதவைத்த எம்பெருமான் திருவரங்கன் கடந்த ஒரு வார காலமாக திருவெள்ளறை வரவேண்டும்..வந்தென்னைச் சேவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டபடியே இருக்கும் ஒரு தவிப்பை உணர்ந்த வண்ணமிருந்தேன்..இன்று எந்தத் திட்டமிடலும் இன்றி எனது சகதர்மினியுடன் திருவெள்ளறை சென்று புண்டீரீகாஷப் பெருமாளையும் தாயாரையும் தரிசிக்கும் பேறு பெற்றேன்...
ஆதி திருவெள்ளறை...அடுத்து திருபைஞ்சீலி..ஜோதி ஆனைக்கா..கிளி காட்டிய திருவரங்கம்...என்ற ஒரு தொன்மையான வட்டார வழக்கு நிலவுகிறது...
சிபிச்சோழன் காலத்தில் வெண்மையான மலைமீது கட்டப்பட்ட பேரதிசயக் கோவில் இது வென்று வரலாறு கூறுகிறது...மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் எட்டாம் நூற்றாண்டின் சோழர்களால் விரிவுபடுத்தப்பட்ட கோவில்... தற்போது அதன் பாதியில் விடுபட்டு சிதைந்திருக்கும் ராஜகோபுரத்திற்கான திருப்பணிகளை கோவையைச் சேர்ந்த அன்பர் ஒருவர் தனியொருவராக முன்னெடுத்துச் செய்துகொண்டிருக்கிறார் என்ற செய்தி...அதிர்வைத் தந்தது...எப்படியும் அரங்கனின் மூன்று மீதமிருக்கும் ராஜகோபுரங்களை யார் மூலமாகவாது திருப்பணியைச் செய்ய வைத்துவிடுவான் ...வானளாவி நிற்கும் திருவரங்கனின் நான்கு கோபுரங்களையும் காண்போம்...நானும் அதைக் கண்டுவிட்டே கண் மூடுவேன் என நினைத்துக்கொண்டிருக்கும் இந்த திவ்ய நாட்களில்..நான்காவதாக திருவெள்ளறையின் வானளாவிய கோபுரத்தையும் தரிசிக்கும் பேறு பெற்றுவிடுவேன் என்பதும் இன்று எனக்குப் புரியவைத்த புண்டரீகாஷப் பெருமானின் திருவடிகளே சரணம்...மேலும் பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இங்கே மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்...அடியேன் ஆனந்தப் பரவசத்துடன் திருவெள்ளறையரங்கன் முன்னால் ஒரு சில திவ்ய பிரப்ந்தப் பாசுரங்களைப் பாடும் வாய்ப்பளித்து ஆசீர்வதமும் பெற்றேன்...ஒரு கூடுதல் செய்தியாக மணவாள மாமுனிகளுக்கு இங்கே தனிச் சந்நிதி..பக்தகோடிகள் அரங்கனின் கோபுரத் திருப்பணிக்கு அள்ளி அள்ளி வழங்கவேண்டுமென்பது அடியேனின் அன்புத் திருவுள்ளம்....
ராகவபிரியன்
ராகவபிரியன்


No comments:
Post a Comment