Wednesday, August 22, 2018

Pseudo secularism

இந்துமதம் சார்ந்த நம்பிக்கைகளால் புண்படுவதென்பது இந்து மதத்திற்கு வாடிக்கையான ஒன்றுதான்...அதனால்தான் அது இன்னமும் அசைக்க முடியாமல் கெட்டிப்பட்டுக்கொண்டே இருக்கிறது...வேற்று மதங்களில் இதுபோன்ற சகிப்புத் தன்மையைப் பார்ப்பது கடினம்...இப்போது மட்டுமல்ல...எப்போதுமே ஒரு கவிஞரோ எழுத்தாளரோ பிரபலமாக வேண்டுமென்றால் மதம் சார்ந்த நம்பிக்கைகளை புண்படுத்தி எழுதினால் பணமும் புகழும் எளிதில் கிடைத்துவிடுகிறது..சாலமன் ருஸ்டியும் தஸ்லிமா நஸ்‌ரீனும்...ஒரு மதத்தை அதன் மூடநம்பிக்கைகளை எழுத்தில் வடித்துவிட்டு பட்ட பாடுகள் நாமறிவோம்...ஆனால் இந்து மதத்தைப்பற்றி அதன் மூட நம்பிக்கைகளைப்பற்றி அதிகமாக கவலைப்படும் எழுத்தாளர்களோ கவிகளோ...அதே நிலைப்பாட்டை மற்ற மதங்களின் மூட நம்பிக்கைக்களில் மீதும் சடங்குகளின் மீதும் எடுக்கிறார்களா என்ற கேள்விக்கான பதில் ஒரு கேலியான புன்சிரிப்பை அவர்களின் இதழ்களிலேயே கொணரும் என்பதுதான் நிஜம்..பெண் எனும் படைப்பின் ரகசியங்கள் அந்த பிரம்மனுக்கே புதிராகும்...பெண்ணிய எழுத்தாளர்கள் கூட அவர்களின் உடற்கூறுகளை பட்டவர்த்தனமாக பொதுவெளியில் எழுதத் தயங்கும் கருத்தியல்களை இந்துப் பெண் தெய்வங்களின் மேல் திணிப்பதென்பது ஒரு மதத்தின் மேல் நம்பிக்கைவைத்திருப்பவர்களின் மனங்களை காயப்படுத்தும் செயல்தானே தவிர...விளம்பர யுக்திதானே தவிர வேறொன்றுமில்லை எனப் புறந்தள்ளிவிட முடியாது...ஒரு கவி இதே போல் வேறு மதங்களின் பெண்தெய்வங்களைக் கொச்சைப்படுத்தி எழுதிவிட்டு பிறகு அவருக்கான பின் தொடர்வோர் எண்ணிக்கையை எண்ணிக்கொண்டிருக்கவும் முடியாது...அது தான் நிஜம்...ஒரு குறிப்பிட்ட கவி தன் மீதான விமர்சனத்திற்கே சகிப்புத் தன்மை காட்டமுடியாதவர் எப்படி ஒரு மதத்தின் நம்பிக்கைகளைக் காயப்படுத்தும் உரிமைகோரமுடியும்..கருத்துச் சுதந்திரம் என்பது மற்றவரின் படுக்கையறை ரகசியங்களை எட்டிப்பார்த்து அதை விமர்சிப்பதல்ல...அதற்காக அது போல் ஒரு படைப்பை வைத்து படைப்பாளியை மிரட்டுவதற்கும் யாருக்கும் உரிமையில்லை...போகட்டும்..நமது ராமானுஜர் போல 120 ஆண்டுகள் வாழ்ந்த கபீர் [1398-1518] காசி மா நகரில் ஒரு பிராமணவிதவைத் தாயின் புதல்வனாகப்பிறந்து இஸ்லாமியர்களால் வளர்க்கப்பட்டவர்...இன்னமும் அவருடைய தத்துவங்கள் உலகளாவிய அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறது...அவரது "நுட்பமாக நெய்யப்பட்ட போர்வை" என்ற கவிதை காலம் கடந்தும் சகிப்புத் தன்மையை மக்களிடம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் எடுத்துச்சென்று சேவையாற்றி...புகழ்பெற்றிருக்கிறது...அவரின் இன்னொரு இந்தியில் எழுதப்பட்ட ஆங்கில மொழியாக்கம் பெற்ற கவிதையை தமிழில் என்னளவில் தருகிறேன்...
என்னுள் சூரியனும் சந்திரனும்
தினமும் சுற்றுகிறார்கள்..
என்னால் அவர்களை
உங்களுக்குக் காட்ட முடியாது...
உங்களுள்ளும் தான்...
சுற்றுகிறார்கள்..
அவர்களை நான் பார்க்கிறேன்..
காய்ப்பதற்காகப் பூக்கும் செடி
காய்த்த பின்
அந்த அழகிய பூவை
உதிர்க்கும் விலையைத் தருகிறது..
உன் வாழ்வில்
பூரிப்பின் பூ பூக்கும்..
நீ விளைந்தவன் எனில்
அப்பூவை
விலையாகத் தரவேண்டும்..
அனுபவங்களின்
திண்ணைப்பள்ளிக்கூடம்தான் மதம்...
முழுதாகக் கற்றவன்
குருவாகிறான்..
அவனின் மொழி மெளனம்..
அரைகுறையாகக் கற்றவன்
ஆசிரியராகி
தினமும்
எதையாவது யாருக்காகவாவது
போதித்துக்கொண்டேயிருக்கிறான்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...