Saturday, August 4, 2018

கு[எ]றும்புகள்

எங்கள் கொல்லைப்புறத்தின்
துளசி மண்டிக்கிடந்த
கிணற்றடியைத்தான்
தளமாக்கினோம்...
அது ஈரமாகவே இருக்கும்...
பல்துலக்கிய எச்சில்கள்
குளித்துக் காய்ந்த சோப்பு நுரைகள்..
கொடித் துணிகளின் ஈரச் சொட்டுக்கள்..
சேந்துவாளியின் தாம்புக் கயிறு..
கன்னத்தில் கைவைத்து யோசித்தபடியிருக்கும்
எங்கள் வீட்டுப்பூனை..
மைபூச பயன்பட்ட தூரிகை..
இத்தனையும் இன்று மதியம் காணோம்..
காவிரிக்காண வழிபாட்டில்
அனைவரும் சென்றுவிட...
கொல்லை காய்ந்து கிடந்தது...
நிலவின் தரை காட்டும் புகைப்படமாய்..
நான்கு கட்டெறும்புகள்
ஒன்றன்பின் ஒன்றாய்..
வளைந்தும் கலைந்தும் சேர்ந்தும்
தளம் முழுவதும் அலைந்துகொண்டிருந்தன..
கண்டிப்பாக எதையோ தேடியலைகின்றன...
நொடிப்போதும் தாமதிக்காமல்
நேற்றிரவு நான் எழுதியிருந்த
பின் நவீன கவிதைக் காகிதத்தை
ஓடிச் சென்று
அவைகளின் வழியில் வைத்தேன்..
சட் டென்று திரும்பிய எறும்புகள்
காணாமல் போயிருந்தன...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...